Monday, March 31, 2014

தேன் மிட்டாய் - மார்ச் 2014

என் வலைப் பெயரை நீங்கள் கவனித்திருந்தால் அது மாறியிருப்பதை உணரலாம். எனது வலையுலக வாழ்வில் ஒரு மாற்றம் தேவைப்பட்டது, புது உற்சாகம் பிறக்க 'கனவு மெய்ப்பட' என இயங்கிவந்த எனது தளம், இனி 'சேம்புலியன்' என்று இயங்கும். பெயர் மாற்றலாம் என்று முடிவு செய்துவிட்டு, யோசனைக்காக ஒரு பிரபல பதிவரை அணுகிய பொழுது, 'சேம்புலிபுரம்' என்னும் எனது கிராமத்தின் பெயரை டிங்கரிங் செய்து அவர் சூட்டிய பெயர் தான் 'சேம்புலியன்'.      

கட்டாயத் தேர்வு 

முந்தைய தேன் மிட்டாயின் தொடர்ச்சி,  மொத்த 64 கேள்விகளில் முற்பத்து ஒன்றாவது கேள்விக்கு பதில் கொடுத்து விட்டு 'NEXT' கிளிக் செய்தால், திரை நகர மறுத்தது. 'அவர் சொன்னது போல் நடந்து விட்டதே, தேர்வு கட்டணம் அவ்வளவு தானா?' என்று என் இதயம் வேகமாக அடிக்கத் தொடங்கியது.

உடனே அந்தத் தேர்வு அறையை விட்டு வெளியேறி, தேர்வு அதிகாரியை அழைத்தேன். அவர் உள்ளே வந்து இரண்டு முறை கிளிக் செய்ய முயன்றும், திரை மந்தமாக எந்த ஒரு மாற்றமும் காட்ட மறுத்தது. என்னிடம் 'எவளோ நேரமா இப்படி இருக்கு' என்று கேட்க, நான் 'ஐந்து நிமிஷமா' என்றேன்.  உடனே கணினியை ரீஸ்டார்ட் செய்தார். விண்டோஸ் லோகோ திரையில் உருபெறும் பொழுது எனது இதயம் வழக்கத்தை விட அதிக ரத்தத்தை வெளியேற்றிக் கொண்டிருந்தது. தேர்வு சாப்ட்வேரை லோட் செய்ய, விட்ட இடத்தில் இருந்து தேர்வு தொடர, செலுத்திய  கட்டணம் வீண் போகாது என்று என் மனமும்  ஆறுதல் அடைந்தது.           

ஓர் பிரபலம் 

பல நாட்கள் போராட்டத்திற்குப் பின் த்ரிஷ்யம் திரைப்படத்தை PVR திரையரங்கில் பார்த்துவிட்டு, இரவு பதினோறு மணியளவில் Skywalk மாலை விட்டு, என்னுடன் வந்திருந்த பிரபலத்துடன் வெளியேறினேன். படத்தின் பெருமைகளை பேசிக்கொண்டே நடந்தோம், வாசல் வந்தவுடன் முன்னே சென்ற ஒரு பெண் இடது புறம் திரும்ப அதுதான் வழி என்று நாங்களும் அப்படியே சென்றோம். ஆனால் அந்தக் பக்கம் வழி மூடப் பட்டிருந்தது, எங்களுக்கு முன் சென்ற பெண்ணையும் காணவில்லை. வந்த வழியே திரும்பி சாலையை நோக்கி செல்லும் பொழுது, 'இதுக்குத்தான் பொண்ணுங்க பின்னாடி போகக்கூடாது' என்று சொல்லி, தனது பாணியில் சிரித்தார் அந்த பிரபலம். 

பிரதான சாலையை நாங்கள் அடையும் பொழுது, வெள்ளை நிற சட்டை அணிந்து, நரைத்த முடியுடன் ஒருவர் ஆட்டோவை நிறுத்தி அதில் ஏறினார். என்னுடன் இருந்த பிரபலம் 'அவர்தான் சாருநிவேதிதா' என்று அவர் கேட்கும் படி சொல்ல அவரைக் கடந்து சென்றோம்.              

அழியும் பசுமை

நீங்கள் கீழேக் காணும் படம், பத்து ஆண்டுகளுக்கு முன், எனது கிராமத்தில் முப்போகம் நெல் விளைந்த வயல்வெளி. இன்று பிளாட் போடப்பட்டு பாலை நிலம் போல் காட்சி அளிக்கின்றது. இந்த நிலை தொடர்ந்தால் எதிர்காலத்தில் உணவுக்கு என்ன வழி?   



கல்வெட்டுக்கள் 

பல வரலாற்று சிறப்பு மிகுந்த இடங்களில் மக்கள் தம் பெயரையோ அல்லது காதல் ஜோடிகளின் பெயரை செதுக்கி வைத்திருப்பதை காணும் பொழுது, அவர்கள் பெயர் வரலாற்றில் நீங்க இடம் பிடிக்கவும் அவர்கள் காதல் சரித்திரக் காதலாகவும் மாற அவர்கள் அப்படிச் செய்கின்றனர் என்று என்னை நானே சமாதானம் செய்துகொள்வதுண்டு. ஆனால் எனது கிராமத்தையும் பக்கத்துக்கு கிராமத்தையும் பிரிக்கும் ஓடையின் மேல் அரசாங்கம் கட்டிய பாலத்தில்,(அந்த ஓடை வற்றிய பின் தான் பாலம் கட்டப் பட்டது என்பதை இங்கு சொல்ல வேண்டிய அவசியம் இல்லை) தன் பெயரை செதுக்கிய இவரை என்ன செய்வது, நியாயன்மார்களே!   



ஆட்டோ மீட்டர் 

ஒரு மாலை வேளையில் உஸ்மான் ரோட்டில் இருக்கும் போத்திஸ் எதிரில் சாலையைக் கடக்கும் பொழுது, ஆட்டோக்களை காவல் துறையினர் நிறுத்தி பிரயாணிகளிடம், 'ஆட்டோ மீட்டர் ஏறும் பொழுது போட்டாங்களா?' என்று விசாரித்துக்கொண்டிருந்தனர். 

பிரதான சாலையில் ஆட்டோ ஓட்டுபவர்கள் மீட்டர் போட்டு தான் ஓட்டுகின்றனர். எனது தெரு போன்ற உட்புறங்களில் யாருமே மீட்டர் போடுவதில்லை என்பது காவல் துறை அறியுமோ?  அவர்கள் ஏன் எங்கள் தெரு ஆட்டோ ஸ்டாண்டில் சோதனை செய்வதில்லை? இது எல்லாம் வெறும் கண்துடைப்பா?

கூலிங் கட்டணம்

நான் உண்ட கோழி எனது உணவுக் குழாயில் சிக்கித் தவிக்க, அதை அடக்கம் செய்ய ஒரு சோடாக் குடிக்க எனது தெருவில் இருக்கும் கடைக்குச் சென்றேன். சோடா இல்லாத காரணத்தால், ஸ்ப்ரைட் வாங்கினேன். 35 ரூபாய் கேட்டார் அந்தக் கடைக்காரர். பாட்டில் மேல் இருந்த mrpயை பார்த்தேன், 34 ரூபாய் என்றிருந்தது. 'ஏன் கூடுதல் கட்டணம்' என்று நான் கேட்க, 'கூலிங் சார்ஜ்' என்றார் அவர். 'நான் என் வீட்டிலேயே கூல் செய்து கொள்கின்றேன்' என்று சாதாரண பாட்டிலை 34 ரூபாய் கொடுத்து வாங்கினேன். பேருந்து நிறுத்தங்களில் பொதுவாக நடக்கும் இந்தக் 'கூலிங் கொள்ளை' நான் வசிக்கும் தெருவிலும் தொடங்கியிருப்பது வருத்தமே.           
    
இலவச இணைப்பு

அந்தக் கடையில் நிற்கும் பொழுது, ஒரு பிரபல தமிழ் வாரப் பத்திரிக்கையுடன் இலவசமாக ஒரு பாட்டில் தேங்காய் எண்ணெய் இணைத்திருப்பதைக் கண்டேன். சற்றே ஆச்சரியம் தான். இருப்பினும் இவர்கள் பத்திரிக்கையை படிக்க இலவசம் கொடுக்கும் பொழுது, எனது வலைக்கு பிரதிபலனின்றி வந்துப் படிக்கும் வாசகர்களை எண்ணி பெறுமை பட்டுக்கொண்டேன்.    

துக்க விசாரணை 

ஒரு இரங்கலுக்கு சென்றிருந்த பொழுது, அங்கு இறந்தவரின் உற்றார் உறவினர் அனைவரும் சோகத்தில் மூழ்கி இருக்க. ஒருவர் மட்டும் வாய் முழுவதும் பல்லாக  ஒரு மூலையில் சிலரின் நலம் விசாரித்துக்கொண்டிருந்தார்.   துக்க வீட்டில் சிலர் தைரியமாக இருப்பது தேவை தான், ஆனால் சற்று கூட அந்த மரணத்தின் பாதிப்பே இல்லாமல் எப்படி சிலாரல் இப்படி கேலியும் கிண்டலும் செய்ய  முடிகின்றது?  

Beat Officer

நான் மதியம் எனது அலுவலகம் செல்ல பேருந்து நிலையம் நோக்கி நடந்து செல்லும் பொழுது, திருவள்ளுவர் தெருவில், மெரூன் நிற பல்சரில், பெட்ரோல் டாங்க மீது 'Beat officer' என்று ஆங்கிலத்தில் எழுதிருக்க, அதன் மீது காக்கி நிற சீருடை அணிந்த ஒரு காவல் துறை அதிகாரி, 'Beat officer' என்று ஆங்கிலதில் பதியப்பட்ட ஒரு கருப்பு நிற மேலங்கி அணிந்து கம்பீரமாக இருந்தார். எனது மனதில் பலக் கேள்விகள் தோன்றிய பொழுதும் அவரிடம் சென்று வினவ அந்தச் சமயம் ஏனோ தோன்றவில்லை. இதே போல் ஒரு பீட் ஆபிசரை சோழிங்கநல்லூர் காவல் நிலையத்திற்கு வெளியிலும் கண்டேன். 

யார் சாமி இந்த பீட் ஆபீசர்? அறிந்தவர்கள் சொல்லுங்களேன்.      

ஸ்கை ப்ளூ துப்பட்டா 

பீட் ஆபிசரை கடந்து சென்று, இளங்கோவன் தெருவில் திரும்பினால், எனக்கு முன் ஒரு பெண் கருப்பு குடை பிடித்து நடந்து செல்வது தெரிந்தது. வெள்ளை நிற சல்வாருடன் நீல நிற துப்பாட்ட அணிந்திருந்த அவள் பின் இருந்து பார்க்க ஒரு தேவதை போலே காட்சியளித்தாள். அவளது முகத்தை காணவேண்டும் என்று ஆவல் என்னுள் தோன்ற, சுட்டெரிக்கும் மதிய வெய்யிலையும் பொருட்படுத்தாமல் அந்தப் பெண்ணின் குளிர்ச்சியில் நனைய, சற்று வேகமாக அடியெடுத்து வைக்க தொடங்கினேன். எனக்கும் அவளுக்கும் இருக்கும் இடைவெளி விரைவாக குறைந்து வரும் சமயம், அவள் பிரதான சாலையின் மிக அருகில் சென்றுவிட்டாள். அவளும் பேருந்து நிறுத்தத்தை நோக்கித் தான் செல்கிறாள் என்று என் மனதில் ஒரு இச்சை தோன்ற, அவளை முந்திக்கொண்டு பேருந்து நிலையம் செல்ல எனது வேகத்தை அதிகரித்தேன். அவளுக்கு மிக அருகில் செல்ல, அவளது சுழல் போன்ற கரிய கூந்தலும், அவளது காது ஜிமிக்கியும் அவள் நடைக்கேற்ப நடனமாட...    தொடரும்...              

22 comments:

  1. பெயரில் ஏற்பட்ட மாற்றம் வாழ்க்கையிலும் ஏற்பட வாழ்த்துக்கள்..

    ஏம்ப்பா ஏய் தேன்முட்டாய்ல தொடர் கத எழுதுற மொத ஆளு நீனாதான் இருப்ப.. எல்லாம் இந்த 'சில'ஆவிங்க சகவாசத்தால வார தொல்ல :-))))))

    ReplyDelete
    Replies
    1. நன்றி சீனு. //ஏம்ப்பா ஏய் தேன்முட்டாய்ல தொடர் கத எழுதுற மொத ஆளு நீனாதான் இருப்ப..// எங்க தொடர்ந்தா என்ன ?

      Delete
    2. எல்லாத்துக்கும் ஏம்பா ஆவிய இழுக்கறீங்க.. இது அவரா ஜிந்திச்சது..

      Delete
  2. செலுத்திய கட்டணம் வீண் போகாதாது சந்தோசம்... கல்வெட்டுக்கள் எங்கும் உண்டு...

    கூலிங் சார்ஜ் 1 ரூ அதிசயம்...! ஜிமிக்கி கை கொடுத்ததா...?@!

    ReplyDelete
    Replies
    1. //ஜிமிக்கி கை கொடுத்ததா.// அடுத்த தேன் மிட்டாயில் தெரிய வரும் ஹி ஹி ஹி

      Delete
  3. கூலிங் கொள்ளை எனது தெருவிலும் நடந்தது என்று வியப்பு ஏன்? உமது தெரு என்ன சந்திரமண்டலத்திலா இருக்கிறது? பூமிப் பந்தில்தானே ஐயா..! அந்த ப்ளூ துப்பட்டாக்காரியை பின் தொடர்ந்தீரே... அதைக் கண்ணுற்றால் நாலு அப்பு அப்புகிறவருக்குத் தான் ‘பீட்’ ஆபீசர் என்று பெயர். ஹி... ஹி... ஹி... புரிஞ்சுதோ? பின்னிருந்து பார்க்க தேவதைபோல் தெரியும் பெண்கள் முன்னேவந்து பார்க்க தேவலைபோல் கூட இல்லாமல் அசடு வழிந்த அனுபவம் இவ்விடமும் உண்டு ஸ்வாமீ...! புதிய பெயர் மேலும் ஏற்றம்தர என் நல்வாழ்த்துகள்.

    ReplyDelete
    Replies
    1. //அதைக் கண்ணுற்றால் நாலு அப்பு அப்புகிறவருக்குத் தான் ‘பீட்’ ஆபீசர் என்று பெயர். // ஹி ஹி ஹி . நானும் அப்படித்தான் நினைக்கிறன்

      Delete
  4. புதிய பெயர்.... நல்லா இருக்கு - ஏனோ மலையூர் மம்பட்டியான் நினைவுக்கு வருகிறது!

    தம்பி ரூபக், கணேஷ் வாத்யார் சொன்ன மாதிரி துப்பட்டா, தலைமுடி பார்த்து தேவதையோ என நினைத்து பின்னால் சென்றால் சரி வராது..... அவங்க தேவதையா இல்லை இல்லை தேவதையோட ஆயாவான்னு தெரிஞ்சுக்க, “excuse me madam, இது உங்க கர்ச்சீப்பா?” ந்னு குரல் கொடுத்தா போதும்! :))))

    //படிக்கும் வாசகர்களை எண்ணி பெறுமை பட்டுக்கொண்டேன். // இதுக்கு எருமை க்கு வர ரு தான் வரணுமோன்னு இந்த எருமைக்கு ஒரு சந்தேகம்!

    ReplyDelete
  5. அந்த ஸ்கை புளூ துப்பட்டா பற்றி ஆவி சொன்னது ஞாபகம் வருகிறது. அதுவும் இதுவும் வெவ்வேறாக இருக்க வேண்டும்...

    ReplyDelete
    Replies
    1. ரெண்டிற்கும் சம்மந்தம் இல்லை . இது எனது தனி அனுபவம் :P

      Delete
    2. ஸ்கூல், நான் சொன்ன மேட்டர சந்தைக்கு கொண்டு வந்துடுவீங்க போலிருக்கே!

      Delete
  6. எதிர்காலத்தில் உணவுக்கு என்ன வழி? // அதான் மாத்திரை இருக்கிறதே தோழர்

    ReplyDelete
    Replies
    1. என்ன மாத்திரை அது ? உங்கள் மருத்துவமனையில் உண்டோ ?

      Delete
  7. ஸ்கை புளு சூப்பர் ஜி ....

    ReplyDelete
    Replies
    1. //சூப்பர் // இதில் ஏதேனும் குறியீடு உள்ளதோ >

      Delete
  8. சேம்புலியான் பெயர் மாற்றம் அருமை! கூலிங் கொள்ளை எல்லா ஊரிலும் வந்துவிட்டது! சோழவரம் அருகே செம்புலி வரமா உங்கள் ஊர்? பகிர்வுக்கு நன்றி!

    ReplyDelete
    Replies
    1. காஞ்சிபுரம் மாவட்டம், செய்யூர் தாளுக்கா, இடைக்கழிநாடு ஊராட்சி, (கிழக்கு கடற்கறை சாலை) கடப்பாக்கம் அருகில் இருக்கும் சேம்புலிபுரம் எனது ஊர்

      Delete
  9. பெயர் வித்தியாமாய் உள்ளது. பெயர் மாற்ற உதவிய பிரபலம் யார் ?

    ReplyDelete
    Replies
    1. ஹா ஹா ஹா ....அவர் பிரபலப் பட விரும்பவில்லை ...

      Delete
    2. ஏன்னா, அவர் ஏற்கனவே பிரபலமான பதிவர் தான்.. இல்லையா?

      Delete
  10. இந்த தேன் மிட்டாய்க்கு இரண்டே வார்த்தை தான் - வொண்டர் வொண்டர்..

    ReplyDelete
  11. சேம்புலியன் என்று பார்த்ததும் முதலி புரியவில்லை....பின்னர் தங்கள் வலைத்தளம் பார்த்ததும்....புரிந்துவிட்டது! பேர் நன்றாகத்தான் இருக்கின்றது! வித்தியாசமாக!

    அதே போல கூலிங்க் கொள்ளை பாலுக்கும் உண்டு! எல்லா குளிர்பாங்களுக்கும் உண்டு!


    பிரதான சாலையில் ஆட்டோ ஓட்டுபவர்கள் மீட்டர் போட்டு தான் ஓட்டுகின்றனர். எனது தெரு போன்ற உட்புறங்களில் யாருமே மீட்டர் போடுவதில்லை என்பது காவல் துறை அறியுமோ? அவர்கள் ஏன் எங்கள் தெரு ஆட்டோ ஸ்டாண்டில் சோதனை செய்வதில்லை? இது எல்லாம் வெறும் கண்துடைப்பா//

    ஆமாங்க சின்னத் தெருல, சில ஏரியால எல்லாம் மீட்டர் ரேட் கிடையாது! அதே பகல் கொள்ளைதான்!

    தேன் மிட்டாய் தேனாகத்தான் முடிந்துள்ளது அதாங்க அந்த நீலக் கல்ர் துப்பட்டா.....ஆனா இப்படித் தொடரும் போட்டுட்டீங்களே!

    துளசிதரன், கீதா



    ReplyDelete