Friday, February 28, 2014

தேன் மிட்டாய் - பிப்ரவரி 2014

தேன் மிட்டாய்

எனது வாழ்க்கையில் நடக்கும் சிறு சிறு சுவாரசியமான அனுபவங்களை 'தேன் மிட்டாய்' என்ற தலைப்பில் தொகுத்து எழுதிவருகின்றேன். தேன் மிட்டாய் என்னை குழந்தை பருவத்தில் மிகவும் கவர்ந்த இனிப்பு. நாகரீக மாற்றத்தில் அது காணாமல் போக, அதை நினைவு கூறும் வகையில் தான் இந்த தலைப்பை தேர்வு செய்தேன் என்பது குறிப்பிடத்தக்கது. 

அலுவலகத்தில் 'பாலா கேட்டரிங்' என்று ஒரு புதிய உணவகம் திறக்கப்பட்டது. அலுவலகத்தின் உள்ளிருக்கும் மற்ற உணவகங்களை விடவும் விலை சற்று மலிவு. ஒரு நாள் இங்கு உணவு வாங்கும் பொழுது ஒரு பச்சை வண்ண பிளாஸ்டிக் கவர் என்னைக் கவர்ந்தது. அருகில் சென்று பார்த்த பொழுது என் கண்ணை என்னாலே நம்பமுடியவில்லை. அதில் 'கோவில்பட்டி ஸ்நாக்ஸ்' என்று பதிந்து அதன் கீழ் 'தேன் மிட்டாய்' என்று எழுதியிருந்தது. விடுவேனா?. 15 ரூபாய் கொடுத்து அதை வாங்கிக்கொண்டேன். அதனுள் வெறும் 15 மிட்டாய்கள் மட்டுமே இருந்தாலும், சுவையில் குறைவில்லை.

Fog ரைடர்               

பிப்ரவரி முதல் வாரங்களில் சென்னையில் பின்பனி காலத்தின் தாக்கம் சற்று அதிகமாக இருந்த சமயத்தில் ஒரு நாள் அதிகாலை அலுவலகம் செல்ல வேண்டிய கட்டாயம். காலை நான்கு மணிக்கு என் ஸ்ப்ளென்டரை கிளப்பிக் கொண்டு அலுவலகம் நோக்கி நகரத் தொடங்கினேன். முழுக்கை சட்டை அணிந்திருந்தாலும், குளிர் என்னுள் ஊடுருவி தன் ஆற்றலை வெளிப்படுத்த தொடங்கியது. மெதுவாக சென்றால் அதிக நேரம் தாக்குப்பிடிக்க முடியாது என்ற எண்ணம் தோன்ற, என் வாகனத்தின் ஓட்டத்தை கூட்டினேன். OMRஐ அடைந்த பொழுது என் வயோதிக ஸ்ப்ளெண்டர் தன் நாடி நரம்புகளை இழுத்துப் பிடித்துக்கொண்டு 80 கிலோமீட்டர் வேகத்தை தொடும் சமயம், என் சுவாசக்காற்று வெள்ளைப் புகையாக மாறி எனது ஹெல்மெட் கண்ணாடியில் படிந்தது. 

இலவசப் பயணம்

என் அலவலகத்தில் இருந்து சிப்காட் பேருந்து நிலையம் சுமார் இரண்டு கிலோமீட்டர் தூரம் இருக்கும். இந்த தூரத்திற்கு ஷேர் ஆட்டோ கட்டணம் பதினைந்து ரூபாய் என்பதால், மாநகரப் பேருந்தில் செல்லும்போது யாரிடமாவது லிப்ட் கேட்டுகொண்டு செல்வது என் வழக்கம். காலை ஷிப்ட் முடிந்து வீடு திரும்பும் பொழுது, அலுவலக வாசலில் யாரிடமாவது லிப்ட் கேட்டுகொண்டு வரும் பொழுது, 'சோழிங்கநல்லூர் வரை போறிங்களா?' என்று கேட்பேன். பெரும்பாலானோர் இல்லை என்று சொல்ல சிப்காட் நுழைவாயிலில் இறங்கிக்கொள்வேன். 

ஒரு நாள் மாலை அலுவலக வாசலில் நெடுநேரம் காத்திருந்தும் வாகனங்கள் எதுவும் வரவில்லை. சற்று நேரம் கடந்து ஒரு ஹோண்டா ஆக்டிவா ஒட்டிக்கொண்டு வந்த ஆடவர் என்னை ஏற்றிக்கொண்டார். ஸ்கூட்டி ஆக்டிவா போன்ற வண்டிகளில் எனது கால்களை மடக்கி ஒட்கார முடியாத காரணத்தாலும், அவை வேகம் குறைவாக செல்லும் காரணத்தாலும் அந்த வாகனங்களில் நான் செல்வதை தவிர்த்து விடுவேன். அன்று வேறு வழியின்றி ஏறிக்கொண்டாலும், எனது வழக்கமான கேள்வியை கேட்காமலே சிப்காட் வாயிலில் இறங்கிவிடலாம் என்று முடிவுசெய்துகொண்டேன். அப்போது லிப்ட் கொடுத்த அண்ணாச்சி 'சோழிங்கநல்லூர் வரை போறேன் வரிங்களா?' என்று கேட்டு என்னை ஆச்சரியப்படுத்தினார்.

வேகம் இருக்கு மனிதனிடம் மனம் இருப்பதில்லை!
மனம் இருக்கும் மனிதனிடம் வேகம் இருப்பதில்லை!

ஒரு பிரபலத்தின் மர்மம்  

என்னுடன் அலுவலத்தில் பணிபுரியும் சக தோழன் ஒருவன், தன் கல்லூரி காலத்தில் இரு சக்கர வாகனத்தில் தன் நண்பனுடன் செல்லும்பொழுது நேர்ந்த விபத்தால், இரு சக்கர வண்டிகளில் பிறருடன் செல்லமாட்டான். ஆனால் என் மேல் அவனுக்கு எதோ நம்பிக்கை தோன்ற என்னுடன் வருவான். நாம் தான் பிறருக்கு ஆலோசனை வழங்குவதில் வல்லவர் ஆச்சே. எங்களுடன் பணியாற்றும் ஒரு பிரபலர் மெதுவாகவும் கவனமாகவும் வண்டி ஓட்டுவார், 'நான் இல்லாத சமயங்களில் நீ அவருடன் பயமின்றி போகலாம்' என்று அவனிடம் சொல்லி வைத்திருந்தேன். சில வாரங்கள் கடந்து, என்னிடம் வந்து அவன் 'நீ சொன்னேன்னு அவரோட போனா. அவர் பயங்கர வேகமா போராறே' என்று என்னிடம் கடிந்தான். நான் அவருடன் சென்றபொழுது அவர் அப்படி வேகமாகவே சென்றதுகிடையாதே என்று நான் அவரிடம் கேட்டபொழுது, அந்த பிரபலம் சொல்லிய பதில் 'நீ என்னுடன் போக்குவரத்து நெரிசல் மிகுந்த சாலையில் தான் வந்திருக்கிறாய்' என்று கூறி அவருக்கே உண்டான பாணியில் சிரித்தார். பூனை என்று நினைத்தால் அது புலியாக பாய்கிறதே!       

நெடுஞ்சாலை லாரிகள்

மார்ஜியானாவுடன் முதல் முறை நெடுஞ்சாலை சென்றபொழுது தான் சில போக்குவரத்து நெரிசல்களை ஓட்டுனராக சந்தித்த அனுபவம் நேர்ந்தது. பொதுவாக வேகம் குறைவாகவே செல்லும் லாரிகள் சில சாலையின் இடது புறமும் சில சாலையின் வலது புறமும் சென்று நெடுஞ்சாலையில் நெரிசலையையும் வாகன ஒட்டிகளுக்கு சிரமத்தையும் கொடுக்கின்றன. விதிமுறைப்படி கனரக மற்றும் மெதுவாக செல்லும் வாகனங்கள் சாலையின் இடது புறம் சென்றால், மற்றவர்களுக்கு நெடுஞ்சாலை பிரயாணம் கூடுதல் சுகம் தரும் என்பதில் ஐயம் இல்லை என்பதை உணர முடிந்தது.   

தினம் ஒரு சீலை 

சேலைகளை மறந்து மேற்கத்திய ஆடைகளுக்கு பெண்கள் மாறிவிட்ட இந்த காலத்தில், எங்கள் IT அலுவலகத்தில் தினமும் சேலை அணியும் பெண் ஒருவர் உள்ளார் என்றால் உங்களால் நம்ப முடியுமா? முதலில் என்னாலும் நம்பமுடியவில்லை தான். வலது தோள்பட்டையில் முந்தானை வருவது போல் அவர் வட நாட்டு பாணியில் சேலை அணிவதை வழக்கமாக கொண்டுள்ளார். கையெடுத்து கும்புடறேன் அம்மணி.    

கைபேசியும் நானும் 

என்ன மாயமோ மந்திரமோ தெரியல? இந்தக் கைபேசிகள் என்னிடம் படும் பாடு கொஞ்சநஞ்சம் அல்ல. என் முதல் கைபேசி சோனி k550i முதல் நடுவில் பயன்படுத்திய நோக்கியா கைபேசிகள் வரை என்னிடம் இருந்து பலத்த சேதம் அடையாமல் தப்பியது எதுவும் இல்லை. பெசிக் போன்களுக்கு தான் இந்த நிலைமை என்று நினைத்த எனக்கு நான் சமீபத்தில் வாங்கிய S3 கைதவறி கீழே விழுந்து அதன் திரையில் விரிசல் ஏற்பட்ட பொழுது, துக்கப் படுவதா இல்லை சிரிப்பதா என்றே தெரியவில்லை. 

திரையில் விரிசல் விழுந்தும் செம்மையாக பணியாற்றும் S3 மொபைலை பார்க்க விரும்புவர்கள் என்னை அணுகலாம். பார்வை கட்டணம் ஐம்பது ரூபாய் மட்டுமே. (கிளாஸ் மாத்த காசு தேவப்படுது மை லார்ட்)        

கட்டாயத் தேர்வு

சில பல அலுவலக காரணங்களுக்காக ஒரு தேர்வு எழுத வேண்டிய கட்டாயம் தோன்றியது. பணம் செலுத்தி NIITஇல் பதிவு செய்துகொண்டேன். தேர்விற்கு என்று படித்து மூன்று ஆண்டுகளுக்கு மேலாகவே, கொஞ்சம் தட்டுத்தடுமாறி உருண்டுப் புறண்டு படித்து தேர்வுக்கு தயாராகினேன். தேர்வில் தேறிவிட்டால் தேர்வுக்கு செலுத்திய கட்டணம் அலுவகத்தில் இருந்து கிடைத்து விடும். தேர்வு மையம் சென்றபொழுது அங்கு வழக்கத்துக்கு மாறாக கூட்டம் இருக்க காத்திருக்க வேண்டியிருந்தது. 'கணினியில் எழதப்படும் ஆன்லைன் தேர்வு என்பதால், ஆறு மணிக்கு மேல் உதவியாளர்கள் இருக்க மாட்டார்கள். தேர்வு இடையில் தடை பட்டால், மீண்டும் பணம் செலுத்தி தான் எழுத முடியும்' என்று அந்த அதிகாரி தெளிவாக சொல்லி பயமுறுத்தினார். ஆனால் அன்றுடன் எனக்கு தேர்வு முடிக்க வேண்டிய கடைசிநாள் என்பதால் 'துணிவே துணை' என்று தேர்வு எழுத தொடங்கினேன். மொத்த 64 கேள்விகளில்  முற்பத்து ஒன்றாவது கேள்விக்கு பதில் கொடுத்து விட்டு 'NEXT' கிளிக் செய்தால், திரை நகர மறுத்தது. 'அவர் சொன்னது போல் நடந்து விட்டதே, தேர்வு கட்டணம் அவ்வளவு தானா?' என்று என் இதயம் வேகமாக அடிக்கத் தொடங்கியது. 

அந்த திக் திக் நொடிகளில் அடுத்து நடந்தது என்ன என்பது அடுத்த தேன் மிட்டாயில். ஹி ஹி ஹி.           

22 comments:

  1. கடைசில சஸ்பென்சா....

    என்னுடைய karbonn மொபைல் தண்ணியில விழுந்தும் நல்லா வேலை செய்யுது... என்ன, ஸ்க்ரீன்ல நடுவுல ஒரு நீலக்கோடு மட்டும் வருது....

    ReplyDelete
    Replies
    1. ஹா ஹா ஹா. இதே போல் திரையில் விரிசல் கண்ட கைபேசியை என் நண்பர் ஒருவர் இன்றளவும் பயன்படுத்தி வருகிறார்

      Delete
  2. ஹோண்டா ஆக்டிவா வேகம் குறைவாகத் தான் ஓட்ட வேண்டும்... அம்மணிக்கு பாராட்டுக்கள்...

    தேர்வு மையத்தில் UPS இல்லையோ...?

    ReplyDelete
    Replies
    1. கரண்ட் எல்லாம் இருந்தது, ஆனா system stuck ஆயிடுச்சு அண்ணே.

      Delete
  3. எல்லா நிகழ்வுகளுமே சுவாரசியமாய் இருந்தது....

    ReplyDelete
    Replies
    1. வருகைக்கு மிக்க நன்றி :)

      Delete
  4. மார்ஜியானாவுடன் முதல் முறை நெடுஞ்சாலை// yov idhu enna kuriyeedaa ? enakku onnum vilangala...

    ReplyDelete
    Replies
    1. குறியீடு என்பது வெளியில் தெரியாத வரை யாருக்கும் அடி இல்லை :)

      Delete
  5. ரூபக் சேலை அம்மணிக்கு என் வணக்கத்தையும் தெரிவியுங்கள்.... வாழ்க சேலை ...

    ReplyDelete
  6. அடப்பாவி மொபைல உடச்சிடியா.. என கொடும ரூபக் இது.. ஆமா 'பிரபலர்' ன்ற வார்த்தை கொஞ்ச நாளைக்கு வழகொழிஞ்சு போயிருந்ததே \மீண்டுருச்சா...

    வண்டியில போகும் போது யாரும் லிப்ட் கேட்டா நானும் சோளிங்கநல்லூர் வரைக்கும் டிராப் பண்ணுவேன், ரோட்ல தனியா ஓட்டிட்டு போறது போர் :-)

    ReplyDelete
    Replies
    1. எங்கள் அலுவலகத்தில் எப்பொழுதும் ஒரே 'பிரபலர்' தான்.

      //சோளிங்கநல்லூர் வரைக்கும் டிராப் பண்ணுவேன், // நீங்க ரொம்ப நல்லவரு. உங்க பெருந்தன்மைய புடிக்காத அந்நிய சக்திகள் உங்கள இனி பைக் கொண்டுவர முடியாம பண்ணிட்டாங்களே.

      Delete
    2. பழைய மொபைல் மாதிரி நினைக்காதீங்க.. இப்போதைய டிஸ்ப்ளே அப்படியே கொஞ்சம் கொஞ்சமா பாசம் பிடித்தது போல் பரவி டிஸ்ப்ளே தெரியாத அளவு வந்துவிடும்..கவனம்!!

      Delete
    3. எனக்கு சமீபத்தில் கவனக் குறைவு தொத்திக்கொண்டு விட்டது :(

      Delete
  7. சேலை அம்மணி நான் இதுவரைக்கும் பார்த்ததில்லை

    ReplyDelete
    Replies
    1. வெளிய ரௌன்ட்ஸ் வந்தா தான் இதுபோன்ற காட்சிகளை பார்க்கமுடியும் :)

      Delete
    2. அந்த ஒரு பொண்ணையாவது விட்டு வைன்னு ரூபக் அலர்றது இங்க கேக்குது.. ;-)

      Delete
    3. அவங்களுக்கு திருமணம் ஆயிடுச்சே

      Delete
  8. தேன் மிட்டாயை எனக்காக வாங்கி வைக்கவும். அப்புறம் நான் அம்பது ரூபா ரெடி பண்ணி வைக்குறேன் உன் மொபைல் பார்க்க!!!

    ReplyDelete
    Replies
    1. ஒரு கையில் தேன் மிட்டாய், மறுகையில் ஐம்பது ரூபாய் :)

      Delete
  9. இனித்த தேன் மிட்டாய்.....

    என்ன நடந்தது என்பதை அடுத்த தேன்மிட்டாய் பகிர்வு வரை காத்திருந்து தான் தெரிந்து கொள்ள வேண்டுமா.... :(

    ReplyDelete
    Replies
    1. காத்திருப்பிலும் சுகமுண்டு அல்லவா ...ஹி ஹி ஹி

      Delete