Monday, July 15, 2013

காதலிக்கு எழுத நினைத்த காதல் கடிதம்

இனியவளே,

உன்னை நம் கல்லூரியில் முதல் நாள் சந்தித்த போதே உன் மேல் எனக்கு ஒரு இனம் புரியாத உணர்வு பிறந்தது, பின் நம் நட்பு வளர என் உணர்வு நேசமாக மாறியது. நீ என்னுடைய தோழியாக இருப்பதனாலோ என்னவோ என்னால் மனம் திறந்து உன்னிடம் இந்த நேசத்தை பற்றி பேச முடியவில்லை, நம் நட்பில் விரிசல் வந்து விடுமோ என்ற பயம் மறுபுறம். இந்த வேதனையை நம்ம சீனுவின் தோளில் கொட்டியபோது, அவர் 'உன் உணர்ச்சிகள ஒரு லெட்டர்ல கொட்டி அவ கிட்ட கொடுத்திடு, பொதச்சா தென்னமரம் ஒடச்சா சட்டினி' என்று சொன்னார். எனக்கும் இந்த முயற்சியில் விடை கிடைக்கும் என்ற நம்பிக்கையுடன் என் எண்ணங்களை இங்கு கிறுக்குகிறேன்.

எனக்கு கவிதை நடையில் எழுதும் ஆற்றல் இல்லை என்பது என் வீட்டு குப்பைத்தொட்டி நான் கசக்கிய காகிதங்களால் நிரம்பிய பின் தான் புரிந்தது. கவிதை வந்தால் தான் காதலா என்ன? என்னால் உன்னை மானே, தேனே என்றெல்லாம் கூப்பிட முடியவில்லை, என்றுமே நீ என் செல்லமான 'லூசு' தான். நீ என்னிடம் பல முறை 'தமிழ் எழுத்தில் தான் உணர்சிகளை சரியாக காட்ட முடியும்' என்று சொல்லி இருக்கிறாய், ஆகையால் நான்கு ஆண்டுகள் கழித்து, தமிழில் எழுத நான் எடுக்கும் விபரீத முயற்சி இது, வழக்கம் போல் பிழைகளை மட்டும் காணாமல், என் எண்ணத்தையும் படி

நம் கல்லூரி புழல் அருகில் இருக்கும் இரண்டாம் சிறை என்பது அனைவரும் அறிந்த உண்மை. ஆண்-பெண் பேசக் கூடாது என்ற சட்டம் நம்மை சில நாள் பேச விடாமல் பிரித்து வைத்ததாலும், நம்மை இணைத்தது செய்முறை வகுப்புகள் தான். வேதியியல் செய்முறை வகுப்பில் தான் நாம் முதன் முறை பேசியது, என் குறிப்பேட்டை என்னிடம் இருந்து பெற்றுச் சென்றாய், அதை திரும்ப பெற நான் உன்னிடம் பேசினேன். பெயர் வரிசையில் என் பெயருக்கு பின்னால் உன் பெயர் வருவதால், மற்ற செய்முறை வகுப்புகளில் விதி நம்மை ஒரே பாட்சில் போட்டது. அதற்குப் பின் என் எதிரில் வரும் போது உன் அழகிய புன்னகையால் என் நலம் விசாரித்து செல்வாயே அப்பொழுது கூட நீ எனக்கு அழகாகத் தெரியவில்லை, அந்தத் தருணம் வரும் வரை

நம் நட்பை அடுத்த கட்டத்துக்கு அழைத்துச் சென்றது Gmail தான், உனக்கு நினைவு இருக்கிறதா, நீ கல்லூரி விடுதி சென்று, மீண்டும் கல்லூரி இணைய மையம் வரும் முன், நான் என் வீடு சென்று லாகின் செய்து உனக்காக காத்திருப்பேன். பல நாள் லாகின் செய்ய நான் என் அண்ணனுடன் சண்டை போட்டதும் உண்டு. ஒரு நாள் என் வீட்டில் இணையம் வேலை செய்யாததால், அவசரமாக துணி கூட மாற்றாமல் ப்ரௌசிங் சென்டர் சென்று உனக்காக காத்துக்கொண்டு இருந்தேன், ஆனால் நீ அன்று ஆன்லைன் வரவே இல்லை. ஏமாற்றத்துடன் வீடு சென்ற எனக்குஅன்று இரவு உன்னிடம் இருந்து வந்த மன்னிப்பு மின்னஞ்சல், என்னை மிகவும் கவர்ந்தபொழுது கூட நீ எனக்கு அழகாகத் தெரியவில்லை, அந்தத் தருணம் வரும் வரை

இவ்வளவு பேசியும் உன் கைபேசி எண்ணை வாங்கவேண்டும் என்று எனக்கு  தோணியதில்லை. இரண்டாம் ஆண்டு, நாங்கள் சுற்றுலா சென்று திரும்பும் போது, நம் வகுப்பு குமார் உன் மீது இருந்த கோபத்தில், உன் கைபேசி எண்ணை என்னிடம் தந்து உன்னை வம்பிழுக்க சொன்னான். நண்பன் குமாருக்கு நன்றி சொல்ல நான் கடமை பட்டிருக்கிறேன், ஒரு வேளை அவன் இதை செய்யாமல் இருந்தால், நாம் இந்த அளவு நெருக்கமாக ஆகி இருக்க முடியாது. பக்கத்துக்கு வகுப்பு, வேறு ஆண்டு என்று பல பேர் நம் வகுப்பு நோக்கி உன்னை பார்க்க (சைட் அடிக்க) வருவதுண்டு, அப்பொழுது கூட நீ எனக்கு அழகாகத் தெரியவில்லை, அந்தத் தருணம் வரும் வரை

நீ கல்லூரி விடுதியில் இருந்ததால் உன் கைபேசியை சித்தி வீட்டிலேய விட்டுச் செல்வாய். வெள்ளிக்கிழமை வந்தால் போதும், பல நாள் கழித்து ரஜினி படம் அன்று இரவு வெளியாகப் போவது போன்ற உற்சாகம் எனக்கு பிறந்துவிடும். வீடு வந்து நீ எனக்கு அனுப்பும் குறுந்தகவல் வரும் வரை, எலும்பை பாதுகாக்கும் நாய் போல, என் கைபேசியை என் பார்வையிலேயே வைத்து காத்திருப்பேன். அளவே இல்லாமல் இரண்டு நாட்கள் வெறும் குறுந்தகவலுடன் நாம் கழித்தாலும், அந்த திங்கட் கிழமை காலை வந்தவுடன், இந்தியா பாகிஸ்தானுடன் படு தோல்வி அடைந்தால் வருவது போன்ற சோகமும் வெறுப்பும் என்னை தாக்கும். அடுத்த வெள்ளி வர மனம் ஏங்கும்பொழுது கூட நீ எனக்கு அழகாகத் தெரியவில்லை, அந்தத் தருணம் வரும் வரை

நம் நட்பு கொஞ்சம் கொஞ்சமா வளர்ந்து, கல்லூரி மூன்றாம் ஆண்டில் இருந்து கைபேசி மூலம் பேசத் தொடங்கினோம். பேசுவோம் பேசுவோம், சார்ஜ் காலியானால் சார்ஜ் போட்டு பேசுவோம், விடியும் வரை பாலன்சு தீரும் வரை பேசிக் கொண்டே இருப்போம். நம் கைபேசிகளுக்கு வாய் இருந்தால் கண்டிப்பா அழுதிருக்கும்! அவ்வளவு நேரம் பேசி விட்டாலும் அழைப்பை யார் துண்டிப்பது என்று நமக்குள் சண்டை வரும், அதில் எப்பொழுதும் நீ தான் வெல்வாய்.அழைப்பை துண்டித்த அடுத்த நொடியில் 'இந்த விசயத்தை சொல்லலையே' என்று என் மனம் துடிக்கும் போது தான்

உலகத்தின் கடைசி நாள் இன்று தானோ என்பது போல் 
பேசி பேசி தீர்த்த பின்னும் ஏதோ ஒன்று குறையுதே!!" 

என்ற பாடல் வரிகளின் அர்த்தம் புரிந்த பொழுதில் கூட நீ எனக்கு அழகாகத் தெரியவில்லை, அந்தத் தருணம் வரும் வரை.

திங்கள் முதல் வெள்ளி வரை கல்லூரியில் தினமும் சந்தித்தாலும்  நம்மால் பேச முடியாது, இருப்பினும் என்னுடன் பேசுவதற்காக நாணய தொலைபேசியில் இருந்து  என்னை அழைப்பாய்எல்லா முறையும் விடுதியை விட்டு  வீட்டுக்கு வா என்றுதான் நான் சண்டையிடுவேன். இறுதியாக கல்லூரி நான்காம் ஆண்டு விடுதியை நிரந்தரமா துறந்து வீட்டுக்கு வந்தாய், எங்கள் வீட்டில் புதிதாய் தொலைக்காட்சி வாங்கிய போது கூட எனக்கு அந்த அளவு  சந்தோஷம் வந்தது இல்லை.

நம் நட்பும் அடுத்த கட்டம் நோக்கி செல்லநான் தினமும் உன்னை வீடு வரை வந்து விடுவது வழக்கமானது. புழலில் இருந்து அசோக் பில்லர் வரை, நீ பேசுவதை கேட்டுக்கொண்டே மனம் செல்லும், வழக்கமாக எரிச்சலை உண்டாக்கும் போக்குவரத்து நெரிசலும் உன்னுடன் இருக்கையில் ஆனந்தமானது, எல்லா சந்திப்பிலும் சிகப்பு விளக்கு எறியாத என்று மனம் ஏங்கும். சன்னல் ஓரத்தில் நான் தான் உட்காருவேன் என்று அடம் பிடிப்பாயே, அந்த குழந்தைத் தனத்தில் கூட நீ எனக்கு அழகாகத் தெரியவில்லை, அந்தத் தருணம் வரும் வரை

உன்னுடன் ரசித்த அதே பயணத்தை தொடர்ந்து, நான் தனிமையில் வீடு திரும்பும் பொழுது தான் உன் சிறப்பை உணர்ந்தேன். நீயே என் வாழ்க்கை துணையாக இருந்தால் என் வாழ்க்கை எத்தனை மகிழ்ச்சியாக இருக்கும் என்று எண்ணத் தொடங்கினேன்.

கல்லூரி பேருந்து கட்டணம் செலுத்தியும் நீ என்னுடன் மாநகரப் பேருந்தில் வருவாய், அப்படி ஒரு நாள்உனக்கு ஜுரம் என்று நினைக்கிறேன், நீ என் தோள் மீது சாய்ந்து உறங்கி விட்டாய் - அந்த தருணம் வந்தது!! உலகின் பேரழிகியாக நீ எனக்கு தெரிந்தாய்!! அத்தருணம் என் மேல் நீ வைத்த நம்பிக்கை அழகாகத் தெரிந்தது, நம் நட்பு அழகாகத் தெரிந்தது, உன் மேல் காதல் கொண்டு, உன்னுடன் வாழ ஆசை கொண்டேன்

அடுத்த நாள், வழக்கம் போல் நான் இறுதி பெஞ்சில் அமர்ந்திருந்தேன், நீ உள்ளே நுழைந்தாய், சாம்பல் நிற சல்வார், மடிக்க பட்ட துப்பட்டா, சடை பின்னிய நீள கூந்தல், இதே போல் உன்னை முன் பல முறைக் கண்டதுண்டு, ஆனால் அன்றுதான் என்னுள் எதோ நிகழ்ந்தது, சொல்லத் தெரியவில்லை, என்னை சுண்டி இழுத்து விட்டது உன் அழகு, இந்த நொடியும் அந்த காட்சி என் மனத்தில் தோன்றி மறைகிறது.இருந்தாலும் உன்னுள் இருக்கும் எண்ணங்களை அறியாமல் இதை உன்னிடம் சொல்ல ஒரு தயக்கம், நீ என்னுடைய தோழியாக இருப்பதனாலோ என்னவோ என்னால் என் மனம் திறந்து உன்னிடம்  இந்த நேசத்தை பற்றி பேச முடியவில்லை, நம் நட்பில் விரிசல் வந்து விடுமோ என்ற பயம் மறுபுறம்.

வகுப்பில் உன் பின்னால் அமர்ந்து நான் பல நாள் ரசித்த உன் கூந்தலை, திடீரென்று ஒரு நாள் பாதியாக வெட்டி விட்டாய். நான் ரசித்ததை சொல்லி இருந்தால் ஒரு வேளை வெட்டியிருக்க மாட்டாயோ  என்று என் மனம் தவித்தது.இதே போல் என் காதலை சொல்லா விட்டால் என்ன நடக்குமோ என்ற பயம் வந்து விட்டது. 'ஒரு வேளை சொல்லி இருந்தால் அவள் சரி என்று சம்மதித்து இருப்பாளோ?'என்ற கேள்வியுடன் என் மொத்த வாழ்வையும் தொடர எனக்கு விருப்பம் இல்லாததால், இதோ  தைரியமாக என்  எழுத்தில் சொல்கிறேன்,

"நான் உன்னைக் காதலிக்கிறேன், உன்னுடன் வாழ ஆசைப்படுகிறேன்

சினிமாவில் சொல்வது போல், 'நம் வாழ்வு சிறப்பாக இருக்கும்' என்று நான் பொய் சொல்ல மாட்டேன்,'என்னுடன் வா வாழ்வது எப்படி என்று காட்டுகிறேன்' என்று ஏத்தியும் கூற மாட்டேன். என்னை புரிந்தவள் நீ, உன்னை நன்கு புரிந்தவன் நான், பல சண்டைகள் இருப்பினும், நீ இல்லாமல்  பேருந்தில் கூட பயணம் செய்யமுடியாத எனக்குநீ இல்லாத வாழ்க்கை பயணத்தை நினைத்து கூட பார்க்க முடியவில்லை. உனக்கும் என் மேல் ஒரு பிரியம் உண்டு என்பது எனக்கு தெரியும், இல்லை என்று மறுக்க மாட்டாய் என்ற நம்பிக்கையுடன்...  
என்றும் அன்புடன் 
ரூபக்

65 comments:

 1. ஆஹா அருமையாக கல்லூரிக்காதலை கடுதாசியில் அச்சாரம் இட்டாச்சு!மிகவும் அற்புதம் கடிதம் அந்தப்பாடல் வரிகள் இன்னும் சுருதி சேர்க்கின்றது கடித்ததுக்கு! போட்டியில் வெற்றி பெற நல்வாழ்த்துக்கள்.

  ReplyDelete
  Replies
  1. முதல் வருகைக்கும், மனமார்ந்து பாராட்டி வாழ்த்திய தங்கள் அன்புக்கும் என் நன்றிகள்.

   Delete
 2. கல்லூரி காதல்... நினைவுகளில் மட்டுமா? ரூபக்...

  ReplyDelete
  Replies
  1. அதுதான் உண்மைன்னு கீழ தீர்மானமே கொண்டுவந்துட்டாங்களே பிரகாஷ், சில கற்பனை கலந்த உண்மை...

   Delete
  2. உண்மைய ஒத்துக்கறவன் வீரன்.. நீ மாவீரன்யா!!

   Delete
  3. பல உண்மை கலந்த கற்பனை என்பது வேண்டுமானால் சரியாக இருக்கலாம்

   Delete
 3. //நீ இல்லாமல் பேருந்தில் கூட பயணம் செய்யமுடியாத எனக்கு, நீ இல்லாத வாழ்க்கை பயணத்தை நினைத்து கூட பார்க்க முடியவில்லை. //

  இந்த வரி வரும் வரை இதை ஒரு கற்பனைக் கடிதமென்றே நினைத்தேன். இவ்வாறான வரிகளை அனுபவிக்காமல் ஒருவன் எழுதுவது கடினம்.. போட்டியிலும் வாழ்க்கையிலும் வெற்றி பெற வாழ்த்துகள்.

  ReplyDelete
  Replies
  1. ஆவி சார் நீங்கள் துப்பறியும் புலி

   Delete
 4. //பொதச்சா தென்னமரம் ஒடச்சா சட்டினி' என்று சீனு. //

  சொல்லியிருப்பாரு.. அவரு பக்காவா டிரஸ் பண்ணின பிரேமானந்தாவாச்சே!!

  ReplyDelete
  Replies
  1. ஹா ஹா... அவர் சொன்ன மாதிரி நான் எழுதனது :)... அவருக்கும் இதுக்கும் சம்மந்தம் இல்ல (இப்படி சொன்னாத்தான் பரிசு கொடுப்பாரு..ஹி ஹி ஹி..)

   Delete
  2. //அவரு பக்காவா டிரஸ் பண்ணின பிரேமானந்தாவாச்சே!!//

   சொல்லவே இல்ல...!

   Delete
 5. //கவிதை நடையில் எழுதும் ஆற்றல் இல்லை என்பது என் வீட்டு குப்பைத்தொட்டி நான் கசக்கிய காகிதங்களால் நிரம்பிய பின் தான் புரிந்தது. //

  நான் மிகவும் ரசித்த வரிகள்..

  ReplyDelete
  Replies
  1. வரிகளை ரசித்து பாராட்டிய ஆவிக்கு நன்றி

   Delete
 6. //நான் உன்னைக் காதலிக்கிறேன், உன்னுடன் வாழ ஆசைப்படுகிறேன்" //

  அவிக படிப்பாங்களா..

  ReplyDelete
  Replies
  1. படிச்சாச்சு ...படிச்சாச்சு...

   Delete
 7. //சினிமாவில் சொல்வது போல், 'நம் வாழ்வு சிறப்பாக இருக்கும்' என்று நான் பொய் சொல்ல மாட்டேன்,'//

  எதார்த்த சினிமாக்கள் நிறைய வர ஆரம்பித்துவிட்ட இந்தக் காலத்தில் இந்த ஒரு வரி மட்டும் கொஞ்சம் க்ளிசே நிறைந்ததாய் தோன்றியது.

  ReplyDelete
  Replies
  1. நான் கல்லூரி பயின்ற காலக் கட்டத்தை மனதில் வைத்து எழுதிய கடிதம். ஒரு ஐந்து ஆண்டுகள் பின்னே செல்லுங்களேன் உங்கள் க்ளிசே பறக்குதான்னு பார்ப்போம்

   Delete
 8. மொத்தத்தில் நீங்க உங்க காதலி பின்னால் போன லேப், பஸ் எல்லா எடத்திலயும் எங்களையும் கூட கூட்டிட்டு போய்டீங்க.. அருமையா இருந்தது..


  "தேவைப்பட்டா சொல்லுங்க... தூக்கிருவோம்.."

  ReplyDelete
  Replies
  1. தங்கள் அன்பிற்கு நன்றி :) கோவை ஆவி துணை இருக்க பயமேன்....

   Delete
  2. ஆவி ஐ நீட் யுவர் ஹெல்ப்.. மறக்காம கார் எடுத்துட்டு வாங்க :-)

   Delete
  3. சீனுவுக்கு இல்லாத ஹெல்ப்பா.. இதோ வண்டிய ஸ்டார்ட் பண்ணியாச்சு..(காதல் கடிதப் போட்டி வைக்கும் போதே நினைச்சேன்..) ;-)

   Delete
  4. சம்போ சிவசம்போ சிவசிவ சம்போ...

   Delete
  5. //சம்போ சிவசம்போ சிவசிவ சம்போ...//

   ஸ்பை காதுல ரத்தம் ....!

   Delete
 9. //'ஒரு வேளை சொல்லி இருந்தால் அவள் சரி என்று சம்மதித்து இருப்பாளோ?'//

  காதல் வந்துவிட்டால் இப்படித்தான் குழப்பமான மனநிலை ஏற்படும் என்பது தெரிகிறது.....

  ReplyDelete
  Replies
  1. ஹ்ம்ம்... சகலமும் குழம்பும்...

   Delete
  2. ஸ்கூல் பையன் காதல் பற்றியெல்லாம் பேசலாமா என்று ஒரு விவாதம் வைக்க வேண்டும் :-)

   Delete
  3. ஆமா, வயசுக்கு மீறிய பேச்சா இருக்கே.. காலேஜ் வந்ததுக்கப்புறம் பேசினா ஓகே..

   Delete
 10. தோழியிடம் காதலைச்சொல்ல எவ்வளவு தயக்கம்.... அருமையான காதல் கடிதம்... போட்டியில் வெல்ல வாழ்த்துக்கள்....

  ReplyDelete
  Replies
  1. படித்து ரசித்து பாராட்டிய ஸ்கூல் பையனுக்கு என் நன்றிகள்

   Delete
 11. பொதச்சா தென்னமரம் ஒடச்சா சட்டினி
  -என்னா தத்துவார்த்தமான வரிகள்... புல்லரிக்க வெச்சுட்டியேப்பா சீனு!

  ReplyDelete
  Replies
  1. சத்தியமா நா இல்லீங்க எசமான்... எனக்கும் இதுக்கும் சம்மந்தமே கிடையாது :-)

   Delete
 12. நான் உன்னைக் காதலிக்கிறேன், உன்னுடன் வாழ ஆசைப்படுகிறேன். - இவ்ளவ் தான்ப்பா லவ் லெட்டர். குடுத்தமா, ரிசல்ட்டத் தெரிஞ்சுக்கிணமான்னு இருக்கோணும். மத்த விஷயங்கள்லாம் ரசனையோட அவ மடில படுத்துட்டே முதலிரவுல பேச வேண்டியதாக்கும்...! ஹி... ஹி..!

  ஆனாலும் நாங்க ரசிக்கறதுக்காக இங்கயே அழகா எழுதின உங்களுக்கு பாராட்டுகளும் வாழ்த்துகளும் ரூபக்!

  ReplyDelete
  Replies
  1. ஹா ஹா ... ரெமோ அப்படி சொன்னால் 'yes' சொல்லிடறாங்க.. நாங்க அப்படி சொன்னா அடி தான்....

   ரசித்து பாராட்டிய கணேஷ் சாருக்கு நன்றி

   Delete
 13. // என்னுடன் வா வாழ்வது எப்படி என்று காட்டுகிறேன்... ///

  அந்த தைரியம் / நம்பிக்கை வேண்டும்...

  ரசிக்க வைக்கும் யதார்த்தமான காதல் கடிதம், போட்டியில் வெற்றி பெறவும் (நிஜ வாழ்க்கையிலும்) எனது மனமார்ந்த நல்வாழ்த்துக்கள்...

  ReplyDelete
  Replies
  1. ஹா ஹா .. தங்கள் அன்பிற்கு நன்றி D.D.

   Delete
 14. இயல்பான என்ன ஓட்டத்துடன் ரசித்துப் படிக்க முடிந்தது ரூபக், நட்பை இருந்து காதலார்களாய் மாறியவர்கள் தான் அநேகம் பேர்... சீக்கிரம் உனது உண்மைக் காதல் (மக்களே நோட் தி பாயிண்ட்) வெற்றி பெற வாழ்த்துக்கள் :-)

  ReplyDelete
  Replies
  1. ஹா ஹா . மிக்க நன்றி சீனு :)

   Delete
 15. இந்த போட்டிக்கான காதல் கடிதங்களை எல்லாம் படிக்கும் போதும், வீம்புக்கு எழுத நினைக்கும் போதும் தான் தெரிகிறது, காதல் கடிதம் எழுதும் வயதை எல்லாம் நான் தாண்டி விட்டேன் என.. காதல்னா இப்படி ஃபீல் பண்ணணுமா? என்னமா கூவ வேண்டிருக்கு? ஓ காட்..

  ReplyDelete
 16. அட நானே ஒரு கடிதம் எழுதிட்டேன், உங்களால நிச்சயம் முடியும்... ராதாவையும் மாதவியையும் மனதில் நிறுத்தி எழுதிவிடுங்கள்

  ReplyDelete
 17. என்னப்பா எல்லோருக்குமே அந்த மீசையில்லா சக்கரையால் காதல் பைத்தியம் பிடித்து ஆட்டுகிறது.சீக்கிரம் ஒரு நல்ல புரியறமாதிரி கடிதம் எழுதிக் கொடுத்துடுங்க உங்களுக்கெல்லாம் புண்ணியமாப் போகும்

  ReplyDelete
 18. hmmm :) :) asusual asathal ;) vaazthukkal :) :)

  ReplyDelete
 19. அருமையா எழுதி இருக்கீங்கப்பா.. நேசம் மனதில் இருந்தால் தான் வெளிப்படும்போது அது பிறர் மனதில் நிலைத்து நிற்கவும் வழியாகிறது.... நேசத்துக்கு முதல் படி நட்பு என்று எழுதி இருக்கீங்க... நட்பின் தொடர்ச்சி காதலாகி... காதலின் கடைசிப்படி இருமனங்களின் இணைப்பான திருமணத்தில் முடியவேண்டும் என்பதே என் விருப்பமும்...

  அமைதியா உட்கார்ந்திருந்த ரூபக் மனதில் இத்தனை எண்ண அலைகளா?? நம்பவே முடியல என்னால ரூபக்....


  பிள்ளைகள் காலேஜ் செல்வது படிக்கத்தான் என்றாலும் இதுபோன்ற நிகழ்வுகள் சகஜமாகிவிட்டது இப்ப.... நட்பில் தொடங்கி... காதலில் தொடர வழி அமைக்க திண்டாடுவதும் தவிப்பதும் சொல திணறுவதும்... சொல்லப்போய் காதலிக்க எனக்கும் சம்மதமே என்றுச்சொன்னால் சரி.. வேறே மாதிரி போய்விட்டால் என்ன செய்வது? காதலையும் இழந்து நட்பையும் இழக்க நேரிடுமோ என்ற அச்சம் தான் அடுத்தப்படி தாண்டிட முடியாமல் ச்சீனு கிட்ட உபாயம் கேட்கச்சொல்லி இருக்கு...

  நம்ம ச்சீனு சளைக்காம நேர்மையா சொல்லிருன்னு சொன்னது சிறப்பு... ஆமாம் மனதில் எப்ப காதல் தோன்றியதோ அதை நேர்மையாக சொல்லிவிடுவதில் தாமதம் இருக்கவே கூடாது...

  மனதில் ஏற்படும் எண்ணங்களும் உணர்வுகளும் இங்க வரிகளில் கொட்டிக்கிடக்கிறதுப்பா ரூபம் உங்க முகம் முழுக்க சிரிப்பைப்பார்ப்பது போல் நேசம் நிறைந்த வரிகளை பார்க்கமுடிகிறது...


  எல்லோரையும்போல் நானும் அன்புடன் வாழ்த்துகிறேன்.. கற்பனை க்காதல் ரசிப்பதை விட உண்மைக்காதல் வரிகள் ரசனையானது.. ஏனெனில் அங்கே உள்ளம் பேசுவதால்....

  ஏக்கமும் காத்திருப்பும் சீக்கிரமே சுபமஸ்து சொல்லட்டும்பா..

  மிக அருமையான வரிகள் ரூபக் ராம்... வெற்றியோடு வாழ்க்கையில் இணைய மனம் நிறைந்த அன்பு வாழ்த்துகள்...

  ReplyDelete
  Replies
  1. என் முகநூல் அழைப்பை ஏற்று, என் பதிவை வாசித்து, மிகவும் அருமையான பின்னூட்டு வழங்கிய தங்களுக்கு எப்படி நன்றி சொல்வதென்றே தெரியவில்லை எனக்கு.

   //அமைதியா உட்கார்ந்திருந்த ரூபக் மனதில் இத்தனை எண்ண அலைகளா?? நம்பவே முடியல என்னால ரூபக்....// முதல் பார்வையில் என்னை கணிக்க முடியாது


   //மனதில் ஏற்படும் எண்ணங்களும் உணர்வுகளும் இங்க வரிகளில் கொட்டிக்கிடக்கிறதுப்பா ரூபம் உங்க முகம் முழுக்க சிரிப்பைப்பார்ப்பது போல் நேசம் நிறைந்த வரிகளை பார்க்கமுடிகிறது...// பெருமிதம் கொண்டேன்.....

   //மிக அருமையான வரிகள் ரூபக் ராம்... வெற்றியோடு வாழ்க்கையில் இணைய மனம் நிறைந்த அன்பு வாழ்த்துகள்...// தங்கள் அன்பிற்கு நான் அடிமையாகி விட்டேன்...

   Delete
 20. தலைப்பு மிகப்பொருத்தம் மட்டுமல்ல.. அற்புதமாக இருக்கிறது....

  ReplyDelete
 21. //பொதச்சா தென்னமரம் ஒடச்சா சட்டினி//

  பயபுள்ளைக்கு ஒடம்பெல்லாம் கிட்டினி ..! என்னாமா கக்குது தத்துவத்த ...!

  காதல சொல்லுறத்துக்கு பக்கு , பக்குன்னு பயந்துட்டே பக்குவமா சொல்லீட்டியே ரூ"பக்கு"...!

  ReplyDelete
  Replies
  1. //காதல சொல்லுறத்துக்கு பக்கு , பக்குன்னு பயந்துட்டே பக்குவமா சொல்லீட்டியே ரூ"பக்கு"...! // அண்ணே உங்களால மட்டும் எப்படி இப்படியெல்லாம் யோசிக்க முடியுது :)

   Delete
 22. அழகானதோர் கல்லூரி காதல் கதையை கண்முன் படம்பிடித்துக் காட்டி விட்டீர்கள்.போட்டியில் வெற்றி பெற வாழ்த்துகள். தங்களது காதல் கைகூடவும் இனிய வாழ்த்துகள்.

  ReplyDelete
  Replies
  1. தங்கள் அன்பிற்கு மிக்க நன்றி

   Delete
 23. உணர்ந்தவர்களால் மட்டுமே உணர்வு பூர்வமாக எழுதமுடியும் வாழ்த்துக்கள் உங்கள் காதல் வெற்றியடைய

  ReplyDelete
  Replies
  1. உணர்ந்து பாராட்டிய தங்களுக்கு மிக்க நன்றி

   Delete
 24. பிரியம் இருப்பதால் தானே பேசிகிட்டே இருந்திருக்காங்க... காதல் கல்யாணத்தில் முடிய வாழ்த்துக்கள்.

  ReplyDelete
  Replies
  1. அதுதான் எங்கள் ஆசையும்... தங்கள் அன்பிற்கு நன்றி

   Delete
 25. "அருமை போட்டியில் வெற்றிபெற வாழ்த்துக்கள்!!!"

  காதல் என்பது ஒருவகை உணர்வு அதை அழகாகவும் மிருதிவாகவும் கையாள்வதே சுகம் . இன்றைய காதலர்கள் எல்லாம் காமத்தைக் காதல் என்று புரிந்து வைத்துள்ளார்கள். காமம் வேறு காதல் வேறு. சீலேன்பது காமம் உணர்வென்பதே காதல். இன்றைய இளைஞர்களுக்கு காதல் உணர்வு என்பதைவிட காம உணர்வே மேலோங்கியிருக்கின்றது. காமத்தைக் காதலென தவறாக புரிந்துகொள்வதே காதல் பிரிவில் முடிகின்றது. இதற்க்கு காரணம் இன்றைய காட்சி ஊடகங்களின் வழிகாட்டுதலே.
  காதல் இருந்தால் எந்த மதமும் எந்த குறுக்கே நிற்காது அப்படி குறுக்கே நின்றாலும் காதலே ஜெயிக்கும்

  இன்றைய காதல் ஒருவித கவர்ச்சியால் உருவாகின்றது. அதில் காமமே பிரதானமாக இருக்கின்றது. இந்த வேறுபாட்டை இளைஞர்கள் புரிந்துகொள்ள வேண்டும்
  மேலை நாட்டில் இளைஞர்கள் காமம் காதல் இரண்டையும் அழகாக வேறுபடுத்தி பார்க்கின்றார்கள் உண்மையை அறிந்து புரிந்து கொள்கின்றார்கள். ஆகவே மேலைநாட்டினர் டேட்டிங் என்று சொல்வார்கள். எது காமம் எது காதல் என்பதில் நம் இளைஞர்களின் புரிதல் காட்சி ஊடகங்களால் பாழ்பட்டுக் கிடக்கின்றது. அத்தகைய இளைஞர்கள் மனதில் உள்ள நஞ்சை நீக்கி அவர்கள் வாழ்வில் உண்மையான காதலுடன் நல்வழியில் நடந்திட உதவிடும் வண்ணம் விழிப்புணர்வு செய்திடுவோம்.இல்லையேல் நம் மனிதவளத்தை வீணாக செய்துவிட்டு அரசியல் கட்சிகள் இந்தியத் திருநாட்டையே வெளிநாட்டு உள்நாட்டு சுயநல சக்திகளுக்கு விற்றுவிடுவார்கள் இந்தியா விலைபோகும் மீண்டும் நாம் அடிமை ஆவோம். காந்தி தேசமே விழித்தெழு!!!. உங்களால் முடியும்


  ReplyDelete
  Replies
  1. உண்மை தான்... காதல் காமம் இரண்டிற்கும் வித்யாசம் இன்றி, சண்டை முட்டிக்கொள்ள இங்கு பல பிரிவுகள் ஏற்படுகின்றன...

   Delete
 26. மனசுல உள்ளத அப்படியே தேங்காய் உடைச்சது மாதிரி சொல்லி இருக்கீங்க ரூபக் ... பாசிடிவ் பதில் இல்லைனா சொல்லுங்க தல சீனு தலைமையில பொண்ண தூக்கிடலாம் ...

  நல்ல எதார்த்த கடிதம், உணர்ச்சி வெளிப்பாடு அழகு ...

  ReplyDelete
  Replies
  1. ஹா ஹா... சீனு இருக்க பயமேன்.... மிக்க நன்றி அரசன்

   Delete
 27. இயல்பாய் இருக்கிறது. சொல்ல வந்த ஏக்கம் வரிகளில் அழகாய் வந்திருக்கிறது. வாழ்த்துகள்.

  ReplyDelete
  Replies
  1. மனம் திறந்து பாராட்டிய ஸ்ரீராம் சாருக்கு நன்றி

   Delete
 28. 'நீ எனக்கு அழகாகத் தெரியவில்லை, அந்தத் தருணம் வரும் வரை. என்று ஒவ்வொரு பாராவிலும் சொல்லிச் சொல்லி எப்ப அந்த தருணம் வந்தது என்று தவிக்க வைத்துவிட்டீர்களே, ரூபக்!

  நிச்சயம் உங்கள் காதல் வெல்லும்.
  போட்டியில் வெற்றி பெற வாழ்த்துக்கள்!

  ReplyDelete
  Replies
  1. உங்கள் அன்பிற்கு மிக்க நன்றி ... காதல் வென்று கல்யாணமாய் தொடர வேண்டும் என்பதே எங்கள் விருப்பம் :)

   Delete
 29. கடிதத்தில் வெளிப்படும் நேர்மை படித்து முடித்துப் பல கணங்கள் வரை தொக்கி நிற்கிறது. உங்கள் வரிகள் சிலவற்றை காபி அடித்திருந்தால் காதலை மெய்ப்படுத்தி இருக்கலாமே என்ற ஏக்கமும்.

  வாழ்த்துக்கள்.

  ReplyDelete
 30. wow sema kaditham pa.. .........


  ReplyDelete
 31. உலகத்தின் கடைசி நாள் இன்று தானோ என்பது போல்
  பேசி பேசி தீர்த்த பின்னும் ஏதோ ஒன்று குறையுதே!!
  மிகவும் புதிய விதமாய் இருந்தது உங்கள் கடிதம்.
  உங்கள் வாழ்கையில் வெற்றி பெற வாழ்த்துக்கள்.

  ReplyDelete