Friday, August 30, 2013

தேன் மிட்டாய் - ஆகஸ்ட் 2013

மொய்ப் பணம் 

ஏனோ தெரியவில்லை இந்த மே முதல், மாதம் தவறாமல் போக்குவரத்து காவல் துறைக்கு மொய் வைப்பது வழக்கமாயிற்று. சென்னை புறவழிச் சாலையை நண்பருடன் சீருந்தில் கடந்து அம்பத்தூர் செல்வதற்காக பாலத்தில் இருந்து கீழே இறங்கியபோது, போக்குவரத்துக் காவல் எங்கள் சீருந்தை நிறுத்தியது.


'தம்பி இந்த சன் பிலிம் எல்லாம் எடுத்துடனும்...என்ன' என்றார் அந்த இன்ஸ்பெக்டர்.

'சார்... இது செமி transparent பிலிம், உள்ள இருப்பது நல்லா தெரியுது பாருங்க'  என்று நான் சொல்ல,

'எங்கப்பா. இந்த தம்பி மொகத்துல தாடி இருக்கா இல்லையானு கூட தெரியல' என்று அண்டப் புளுகு புளுகி நூறு ரூபாய் வாங்கி ரசிதும் தந்தார் அந்த உத்தமர்.  

எவரோ சிலர் செய்யும் தப்புக்கு இந்த சென்னை வெய்யில்ல சன் பிலிம் இல்லாம எல்லாரையும் வண்டி ஓட்டச் சொல்வது நியாயமா, மை லார்ட்?

ID கார்ட் 

ஒரு நாள் வேலை முடிந்து வீடு திரும்பியபோது, கன மழை, அவசரமாக நனைந்த ஷுவை கிழற்றி, என் இடுப்பில் தொங்கிய ID கார்டை எடுத்து கதவுக்கு நேராக காட்டினேன், கதவு திறக்க வில்லை.  இது அலுவலகம் இல்லை  என் வீட்டின் கதவு என்று எனக்கு உறைக்க இருபது வினாடிகள் தேவைப் பட்டது.      

இந்த அக்செஸ்(access) கார்ட் உடன் கூடிய ID கார்ட் பயன்படுத்தும் அலுவலகத்தில் வேலை செய்யும் என்னைப் போன்ற நண்பர்களுக்கு இது போன்ற சில பழக்கங்கள் தொற்றிக் கொள்வதைக் கண்டும் அனுபவித்தும் உள்ளேன்.


சுங்கச் சாவடியில் சீருந்து மெதுவாக ஊர்ந்து, ஐந்து நிமிடங்கள் கழித்து, கட்டணம் செலுத்தும் இடத்தை நெருங்கிய பொழுது, வண்டி ஓட்டுனர் தன் கையில் இருந்த பணத்தை வெளியே நீட்ட, நான் மட்டும் என் ID கார்டை நீட்டினேன். அலுவலக வாசலில் வண்டியை நிறுத்தி சோதனை செய்வதால் வந்த பழக்கம்.     

மருத்துவர் அய்யா 

மேடவாக்கம் பேருந்து நிலையம் அருகில் ஒரு மஞ்சள் நீராட்டு விழா விளம்பரப் பலகையில் 'மருத்துவர் அய்யா அவர்கள்' என்று இருந்தது. அட யாருடா இந்த மருத்துவர் என்று சிந்திக்கும் வேளையில் தான் அந்தப் பலகையில் அந்த கட்சியின் பெயர் தென்பட்டது.

அவர் MBBS படித்தவரா ,இல்லை  அது 'Doctorate' என்பதின் அவர்களுடைய தமிழாக்கமா என்று குழப்பம் இருந்தது. பின் அவர் MBBS படித்த மருத்துவர் என்பது 'மேடவாக்கம் மாஸ்ட்ரோ' என்று அழைக்கப் படும் ஒரு பிரபல பதிவரிடம் இருந்து தகவல் கிடைத்தது. என் தந்தை வாயிலாக இவர் தன் ஆரம்ப காலத்தில், திண்டிவனத்தில் மருத்துவ கிளினிக் வைத்திருந்த செய்தியும் அறிந்தேன். மருத்துவருக்கும் முனைவருக்கும் எத்தனை வித்யாசங்கள்.
 
எத்தனை பெரியார் வரினும், இந்த 'மஞ்சள் நீராட்டு விழா' ப்ளெக்ஸ் விளம்பரப் பலகை வைப்பதை இந்த மக்கள் விடப் போவதில்லையா? 

லைக் போடாமல் முகநூலில் சுட்டது 




ரசித்த ஆட்டோ வாசகம் :

வறுமையில் வாடாதே!
  வளமையில் ஆடாதே!


நண்பர் செல்வா பகிர்ந்த சிரிப்பு வெடி   

நாடாளுமன்றத்தில் பேசும் போது காங்கிரஸ் உறுப்பினர் ஒருவர் ஒரு கதை சொன்னாராம். “ஒரு மனிதன் இருந்தான். அவன் தன் மூன்று மகன்களிடம் ஒவ்வொருவருக்கும் ரூ.100 கொடுத்து ஒரு அறை முழுதும் நிறைக்குமாறு பொருள் வாங்கச் சொன்னானாம். ஒரு மகன் வைக்கோல் வாங்கி அறையில் வைத்தான்.; அறை நிறையவில்லை. அடுத்தவன் பஞ்சு வாங்கி வைத்தான் அறை நிறையவில்லை மூன்றாமவன் ஒரு ரூபாய்க்கு மெழுகுவர்த்தி வாங்கி அறையில் ஏற்றி வைத்தான். அறை முழுவதும் ஒளி நிறைந்தது”


அந்த உறுப்பினர் பின் சொன்னாராம் ”அந்த மூன்றாமவன் போலத்தான் நம் பிரதமர். அவர் பொறுப்பேற்றதும் நாட்டில் இருந்த இருள் நீங்கி ஒளி பரவி விட்டது”

பின் வரிசையிலிருந்து ஒரு குரல் எழுந்தது . . "மீதம் 99 ரூபாய் என்ன ஆச்சு...??? 

நம்ம ஆட்டோ 


சென்னையில் புதிதாய் மீட்டருடன், GPS பொறுத்தப்பட்டு துவங்கப்பட்டுள்ள ஒரு தனியார் ஆட்டோ நிறுவனம் தான் 'நம்ம ஆட்டோ'. மறந்துபோன 'பிரசவத்திற்கு இலவசம்' என்ற வழக்கத்தை மீண்டும் கொண்டு வந்துள்ளனர். 



இவர்களின் தாக்கமோ என்னமோ, தமிழக அரசு அணைத்து ஆட்டோக்களிலும் மீட்டர் பொறுத்த ஆணை பிரப்பித்துள்ளது. அக்டோபர் 15 முதல் 1.8km வரை 25 ரூபாய் மட்டுமே, அதைத் தாண்டினால் ஒரு கிலோ மீட்டருக்கு ரூபாய் 12 என்று கட்டணம் நிர்ணயிக்கப் பட்டுள்ளது.

இதுநாள் வரை ஆட்டோக்காரர்களின் அட்ராசிட்டியில் சிக்கித் தவித்த என்னைப் போன்றவர்களுக்கு இந்தச் செய்தி, கடற்கரையில் குடிநீர் கிடைத்தது போன்றது. 

கலர் மாயை:

சமீபத்தில் தேடித் பிடித்து பார்த்த இரண்டு படங்கள் 'மன்மத லீலை' மற்றும் 'மூன்று முடிச்சு'.

மன்மத லீலை வெளியான தேதி 25 பிப்ரவரி 1976 

மூன்று முடிச்சு வெளியான தேதி 22 அக்டோபர் 1976 

மன்மத லீலை வண்ணப் படமாகவும், மூன்று முடிச்சு கருப்பு வெள்ளைப் படமாகவும் இருந்தது.


 பின் நாளில் வெளியான படம் ஏன் கருப்பு வெள்ளையாக வந்தது என்ற இந்தச் சிறுவனின் அறியாமையை யாரேனும் தீர்த்து வையுங்களேன். 


பதிவுலக தோழமைகளே நம் விழா நடக்க இன்னும் ஒரு நாளே....

9 comments:

  1. தேன் மிட்டாய் இனித்தது. ஐடி கார்டு பழக்கம் தான் செம. அபுறாம் ஃப்ளெக்ஸ் பேனர் கலாச்சாரம் யோசிக்க வேண்டிய விசயம். 99 ரூபா மேட்டருக்கு தகவல் அறியும் உரிமைச் சட்டத்துக்கு போகலாமா?!

    ReplyDelete
  2. பின் நாளில் வெளியான படம் ஏன் கருப்பு வெள்ளையாக வந்தது என்ற இந்தச் சிறுவனின் அறியாமையை யாரேனும் தீர்த்து வையுங்களேன்.
    >>
    பட்ஜெட் காரணமா இருக்குமோ!!

    ReplyDelete
  3. பதிவுலக தோழமைகளே நம் விழா நடக்க இன்னும் ஒரு நாளே....
    >>
    48 மண்ண்ண்ண்ண்ண்ண்ண்ண்ண்ண்ண்ண்ண்ண்ணி நேரம் இருக்கே உங்களைலாம் பார்க்க!!

    ReplyDelete
  4. மன்மத லீலையை மக்கள் கலரில் ரசிக்கட்டும் என அதன் தயாரிப்பாளர் பொருட்செலவை பார்க்காமல் வெளியிட்டிருக்கலாம்.

    மூன்று முடிச்சில் கதை தான் நாயகன் என்பதால் கலருக்கு முக்கியத்துவம் கொடுக்காமல் இருந்திருக்கலாம்..

    ReplyDelete
  5. //சன் பிலிம் இல்லாம எல்லாரையும் வண்டி ஓட்டச் சொல்வது நியாயமா,//

    காரே இல்லாம பின்னாடி நடந்து வர்றவங்கள பாருங்க.. உங்கள சன் பிலிம் தானே எடுக்க சொன்னாங்க.. ரூல்ஸ் போட்டா பாலோ பண்ணுங்கப்பா..(தவிர, அம்மா ஆட்சியில சன்னா?? செல்லாது செல்லாது!!)

    ReplyDelete
  6. "நம்ம ஆட்டோ" க்கு வாழ்த்துகள்.. ஆட்டோ கட்டணம் சென்னையில சீர்படுத்தறது கொஞ்சம் கஷ்டம் தான்.. பார்ப்போம்..

    ReplyDelete
  7. ID கார்டு காமெடி என் வாழ்விலும் நடந்திருக்கு.. இங்க ஆபிசுக்கு மட்டும் தான் கார்டு.. அமெரிக்காவில் வீட்டு கதவுக்கும் கார்டு தான். அந்த கார்டை வெளியே கூட எடுக்க வேண்டாம். பர்சில் வைத்து பர்சை கதவுக்கு அருகே காண்பித்தால் திறந்து கொள்ளும். அலுவலகம் வீட்டு கதவை திறக்கும் ஞாபகத்தில் என் கார் கதவை பர்சை கொண்டு திறக்க முயற்சித்திருக்கிறேன். :-)

    ReplyDelete
  8. இது அலுவலகம் இல்லை என் வீட்டின் கதவு என்று எனக்கு உறைக்க இருபது வினாடிகள் தேவைப் பட்டது.

    பழக்க தோஷம் ..!

    ReplyDelete