நேரமின்மையால் வலைப் பக்கம் சில நாட்களாக வர இயலவில்லை. பதிவர் திருவிழா நெருங்கும் சமயத்தில் ஒரு மாநகரப் பேருந்து எனக்கு கற்றுத் தந்த வாழ்க்கைத் தத்துவத்தை இங்கே பகிர்கிறேன்.
T151
நான் வசிப்பது கிழக்கு தாம்பரம், என் அலுவலகம் இருப்பது சென்னை சிறுசேரி IT பூங்கா (கேளம்பாக்கம் மிக அருகில்). தாம்பரத்தில் இருந்து கேளம்பாக்கம் செல்ல, மேடவாக்கம் வழியே சோழிங்கநல்லூர் கடந்து தான் செல்ல வேண்டும். சோழிங்கநல்லூர் - மேடவாக்கத்தில் இருந்து வரும் சாலையும், ECRஇல் இருந்து வரும் சாலையும், OMRஇல் சங்கமிக்கும் நெரிசல் மிகுந்த இடம்.
என் வீட்டில் இருந்து சிறுசேரியில் உள்ள அலுவலகம் செல்ல இரண்டு வழிகள் உண்டு
1) நேர் பேருந்து T151 பிடித்து செல்வது
2) C51 அல்லது T51 பிடித்து சோழிங்கநல்லூர் சென்று, அங்கிருந்து கேளம்பாக்கம் நோக்கி செல்லும் பேருந்தில் ஏறிச் செல்வது.
முதல் வழி சற்று சுலபம், ஏறி அமர்ந்து அலுப்பின்றி செல்லலாம். இரண்டாவது வழி இடையில் இறங்கி, சற்று நடந்து, வெய்யிலில் காத்திருந்து அடுத்த பேருந்து பிடிக்க வேண்டும்.
முதல் வழியில் பேருந்துகள் மிக மிகக் குறைவு, ஒரு மணி நேரத்துக்கு ஒன்று தான். இரண்டாம் வழியில் ஐந்து நிமிடத்திற்கு ஒரு பேருந்து. சென்னை வெய்யிலின் குளுமையால், நான் தேர்ந்தெடுப்பது முதல் வழி தான்.
சம்பவம் ஒன்று
ஒரு நாள் இப்படித் தான், எப்பொழுதும் 12 10க்கு வரும் T151க்காக, என் பேருந்து நிலையத்தில் நின்றுகொண்டிருந்தேன். பல பேருந்துகள் என்னைக் கடந்தாலும், நான் காத்திருந்த பேருந்து சற்று தொலைவில் வருவது தெரிந்தது. என் பேருந்து நிலையம் நெருங்க, ஏற்கனவே ஒரு T51 அங்கு நின்றிருக்க, அந்த T151 வேகமாக நிற்காமல் கடந்து சென்று என் நம்பிக்கையை உடைத்தது.
சம்பவம் இரண்டு
மற்றொரு நாள், பல T51கள் என்னைக் கடந்த போதும் மனம் தளராமல் காத்திருந்தேன். 1 30க்கு அலுவலகத்தில் இருக்க வேண்டும். 12 40 ஆகியும் T151 வாராத காரணத்தால், T51 இல் ஏறி, சோழிங்கநல்லூரில் இறங்கி, இரண்டாவது பேருந்து பிடிக்க சாலையை கடக்க , என் பின்னே வந்த T151 என்னைக் கடந்தது.
வாழ்க்கை பல வினோத வழிகளில் பல அறிய பாடங்களை புகட்டுகிறது என்று அந்த இரண்டு சம்பவமும் எனக்கு உணர்த்தின. என் வாழ்வில் என்ன நிகழ்ந்தாலும் அதைக் பகிர எனக்கு ஒரு தளம் இருப்பதும் அதைத் தவறாமல் படிக்கவும் சில நண்பர்கள் இருக்கின்றனர் என்பதும் இந்த வாழ்க்கைக்கு தெரியாதோ?
பதிவர் திருவிழா
இன்னும் சில தினங்களே உள்ளது, நம் பதிவுலக தோழமைகள் சங்கமிக்க.
சிறப்பு பேச்சாளர் பாமரன் பற்றி மெட்ராஸ் பவன் வெளியிட்ட செய்தி படிக்க இங்கு சொடுக்கவும்.
புத்தகப் பிரியர்களுக்கு, வாராந்திர ஆலோசனைக் கூட்டம் நடக்க இடம் தரும் டிஸ்கவரி புக் பேலஸின் விற்பனை நிலையம் பதிவர் சந்திப்பு நிகழும் அரங்கில் பத்து சதவீதம் சிறப்பு தள்ளுபடியுடன் இயங்கவுள்ளது.வேண்டிய புத்தகங்களை மின்னஞ்சல் செய்து முன் பதிவு செய்து கொள்ளும் வசதியும் உண்டு.
மின்னஞ்சல் : discoverybookpalace@gmail.com
சேட்டைக்காரன்,சதீஸ் சங்கவி,மோகன் குமார்,யாமிதாஷா ஆகிய பதிவர்களின் புத்தக வெளியீடும் உறுதி செய்யப்பட்டுள்ளது.
இது மட்டும் இன்றி நாட்டியம், இசை, நாடகம் என பதிவர்களின் கலை நிகழ்ச்சிகளும் அரங்கேற உள்ளன.
கோவை ஆவி தானே இயற்றி பாட இருக்கும் பதிவர் கீதம் பற்றி படிக்க/கேட்க இங்கு சொடுக்கவும்.
இதுவரை முகம் காட்டாத, சில முகமுடிப் பதிவர்கள் தம் இயற் பெயரில் வலம் வரப் போவாதாக உளவுத் துறை செய்திகள் வந்துள்ளது. பதிவர்களே உஷார்! முகமுடிகளைக் கிழிக்கும் திறமை உங்களுடையது.
வாழ்வில் மறக்க முடியாத ஒரு நாளாக இந்த செப்டம்பர் ஒன்று அமையும் என்ற நம்பிக்கையுடன் காத்திருக்கிறேன்.
இன்னும் மூன்று நாட்களே.....
இன்னும் மூன்று நாட்களே.....
Tweet | ||
நன்றி ரூபக்..
ReplyDeleteT51 சொல்லும் குறியீடு என்ன என்பதை ஞாயிறன்று சொல்கிறேன்..
ReplyDeleteஹா ஹா ஹா. சந்திக்க ஆவலுடன்
Deleteநிஜமாவே பஸ் மேட்டர் எனக்கு புரியலீங்களே!
ReplyDeleteகிடைக்கிறது கிடைக்காம இருக்காது, கிடைக்காம இருப்பது கிடைக்காது.
Deleteசீக்கிரம் மகிழுந்து வாங்குங்க.
ReplyDeleteஉங்கள் ஆசியில் விரைவில் நடுக்குமா பாப்போம்
Deleteஇது போன்ற அனுபவங்கள் சென்னையில் சகஜம்.
ReplyDeleteவிழாவில் சந்திப்போம்.
விழா பற்றிய கவன்ட் டவுன் கடிகாரம் என் பதிவில்
அழகான கடிகாரம் ... ஆவலுடன் காத்திருக்கிறேன்
DeleteThis comment has been removed by the author.
ReplyDeleteவாழ்க்கை தத்துவத்தை தளத்தில் கக்கிய தம்புரான் ரூபக்குக்கு நன்றி ...!
ReplyDelete//சில முகமுடிப் பதிவர்கள் //
அது யாருப்பா ...? தாடி வச்சுருப்பாங்களோ ...?
அங்கதான் தெரியுமுங்க :)
Delete