Thursday, September 5, 2013

என் முதல் பதிவர் சந்திப்பு

பல தயக்கங்களுக்கு மத்தியில், பதிவர் திருவிழா நடத்தலாம் என்று முடிவாகி, அதற்கான ஆலோசனைக் கூட்டங்கள் நடக்கத் தொடங்கின. கே.கே. நகர் சிவன் பூங்காவில் நடந்த முதல் ஆலோசனைக் கூட்டத்தை என்னால் மறக்க முடியாது.

முதல் காரணம் கணேஷ் சார், சிவா, ஸ்கூல் பையன், அஞ்சா சிங்கம், அரசன், கவியாழி, KRP செந்தில், மதுமதி, புலவர் அய்யா, ஜெய், அரசன் போன்ற பெரும்பாலான பதிவர்களை நான் முதலில்  சந்தித்தது இங்குதான்.

இரண்டாவது காரணம் திருவிழாவிற்கு பிள்ளையார் சுழி போட்டு பணிகள் தொடங்கியதும் இங்குதான்.அதன்  பிறகு பெரும்பாலான ஆலோசனைக் கூடங்கள் நடந்தது டிஸ்கவரி புக் பேலஸில் தான். அழகாக திட்டங்கள் தீட்டப் பட்டு, குழுக்களாக பிரிந்து, விழாப் பணிகள் சிறப்பாக நடந்தன. 

ஆகஸ்ட் 31அன்று அலுவலகத்தில் விடுப்பு எடுத்து விட்டு, பதிவுலக தோழமைகளை காண அன்று அதிகாலையே வடபழனி வந்து விட்டேன். பதிவர்கள் தங்க வைக்கப் பட்ட விடுதிக்கு நான் வந்தவுடன் முதலில் நான் சந்தித்த பதிவர் ராஜபாட்டை என்ற பெயரில் பதிவு எழுதி வரும் ராஜா அவர்கள்.

சதீஷ் சங்கவி, உணவுலகம் சங்கரலிங்கம், கற்போம் பிரபு கிருஷ்ணா, இரவின் புன்னகை வெற்றிவேல், பிளாசபி பிரபாகரன் இவர்களின் முதல் அறிமுகம் கிடைத்தது. கோகுல், நக்கீரன், திண்டுக்கல் தனபாலன், குடந்தையூர் சரவணன், வீடு சுரேஷ் குமார், வெளங்காதவன் ஆகியாரையும் சனியன்றே சந்தித்தேன்.

பின்னர் தன் மனைவி  மகனுடன் வந்த 'தம்பி' சதீஷ் செல்லதுரை அவர்களின் அறிமுகமும் கிடைத்தது. தனக்கு  எந்த வகையிலும் சம்மந்தம் இல்லாத சந்திற்பிக்கு கணவனுக்காக வந்து கலந்து கொண்ட ரேவதி சதீஷ் அக்காவின் காதலும் அன்பும் என்னை பிரம்மிப்பில் ஆழ்த்தியது.

மாலை தமிழ் வாசி பிரகாஷ், கோவை நேரம் ஜீவா, அகிலா, எழில் மற்றும் கோவை ஆவி ஆகியோரை சந்தித்தேன்.  விழா அன்று காலை அடையாள அட்டை கொடுக்கும் பணியில் இருந்த பொழுது  தந்த அனைத்து பதிவர்களும் என்னைக் கடந்து சென்ற பொழுதும் என்னால் அவர்களுடன் பேசி புகைப் படம் எடுக்க முடியாமல் போனது வருத்தமே. 

நண்பர் ராம் குமார், பாசித், ராஜி அக்கா, ரஞ்சனி அம்மா, வெங்கட் நாகராஜ், சேட்டைக்காரன், கே.ஜி. கௌதமன், உண்மைத்தமிழன், ரமணி அய்யா, என்ற குறிப்பிட்ட சிலருடனே அறிமுகம் செய்து கொள்ள முடிந்தது.( நான் அறிமுகம் செய்து கொண்ட யாரேனும் பெயர் விடு பட்டிருந்தால், இந்தச் சிறுவனின் நியாபகத் திறனை மன்னியுங்கள்).

இந்தப் பதிவில், விழாவில் வந்து கலந்து கொண்டு விழாவை சிறப்பித்த அனைத்து தோழமைகளுக்கும் நன்றி சொல்கிறேன். மேலும் இந்த விழாவை சிறப்புற நடத்த தம் சொந்தப் பணிகளுக்கு மத்தியில் அயராது உழைத்த விழாக் குழுவினர்களுக்கு என் பாராட்டுக்கள்.

பல  வருடங்கள் கழித்து மேடையில், கண்மணி குணசேகரனிடம் இருந்து அந்த நினைவுப் பரிசை வாங்கிய அந்த நொடி மனம் கிங்பிஷர் ப்ளைட் ஏறி வானில் பறந்தது.

எந்த விழாவானாலும் குறைகளும் நிறைகளும் இருக்கத் தான் செய்யும். வாழ்ந்தாலும் ஏசும் தாழ்ந்தாலும் ஏசும்  உலகம் தானே இது. அம்மா செய்த சமையல் சுவையாக இல்லாவிடில் 'அம்மா நல்லா சமைக்கற, உப்பு மட்டும் கொஞ்சம் சேர்த்துக்கோ' என்பது போல் அன்புடன் ஆலோசனைகள் கூறினால் அம்மா அன்புடன் சமைக்க  ருசி கூடும்.

எத்தனையோ விஷயங்கள் மற்றும் அனுபவங்கள் எழுத இருப்பினும், எங்கும் பதிவர் திருவிழா பற்றிய பதிவுகளே இருப்பதால், என் பதிவை சுருக்கமாக முடித்துக்கொள்கிறேன். எனது பதிவுலக நட்புக்களைக் கூட்டிய இந்த தமிழ் வலைப் பதிவர் திருவிழா அடுத்த ஆண்டும் சிறப்புடன் பூக்கும் என்ற ஆவலுடன்.                                            

33 comments:

  1. //அம்மா செய்த சமையல் சுவையாக இல்லாவிடில் 'அம்மா நல்லா சமைக்கற, உப்பு மட்டும் கொஞ்சம் சேர்த்துக்கோ' என்பது போல் அன்புடன் ஆலோசனைகள் கூறினால் அம்மா அன்புடன் சமைக்க ருசி கூடும்.// சூப்பர் ரூபக்... இதை விட என்ன உதாரணம் வேண்டும்?

    ReplyDelete
  2. பதிவர் திருவிழாவுக்காக தாங்கள் உழைத்த உழைப்பு அளப்பற்கரியது.... இது நான் கண்கூடாக கண்டது....

    ReplyDelete
    Replies
    1. நம் வீட்டு விசேஷம், நமக்குள் ஏன் பெருமிதம்

      Delete
  3. இந்த தமிழ் வலைப் பதிவர் திருவிழா
    அடுத்த ஆண்டும் சிறப்புடன் பூக்கும் ... வாழ்த்துகள்..!

    ReplyDelete
    Replies
    1. தங்கள் வருகைக்கும் கருத்து பதிவிற்கும் மிக்க நன்றி

      Delete
  4. தங்களைச் சந்தித்ததில் மிக்க மகிழ்ச்சி
    செய்பவர்கள் அதிகம் பேசுவதில்லை
    குறைகளை பெரிதுபடுத்துவதுமில்லை
    அவர்கள் பார்வை எப்போதும் நிறைவை
    நோக்கியே இருக்கும்
    அதற்கு இந்தப் பதிவே சாட்சி
    உழைப்பிற்கும் பகிர்விற்கும்
    மனமார்ந்த நல் வாழ்த்துக்கள்

    ReplyDelete
    Replies
    1. தங்களை நேரில் சந்தித்ததில் மிக்க மகிழ்ச்சி ஐயா... தங்கள் வருகைக்கும் கருத்து பதிவிற்கும் மிக்க நன்றி

      Delete
  5. //வாழ்ந்தாலும் ஏசும் தாழ்ந்தாலும் ஏசும் //

    ஏசுவையே சிலுவையில் அறைந்த கூட்டம் பாஸ் இது, இவிங்கெல்லாம் எப்பவுமே இப்படித்தான் பாஸ்..அடி வாங்கறது நமக்கென்ன புதுசா.. சும்மா வாங்க பாஸ்!!

    ReplyDelete
    Replies
    1. ஹா ஹா ஹா... எதோ மனசு கேக்கல

      Delete
  6. பதிவர் திருவிழாவில் காணும் படங்களில் உங்களைப் பார்த்தவர்களுக்கே புரியும், இரவு கண்ணுறக்கம் இன்றி நீங்க உழைத்தது.

    நிறைய பேர் உழைத்திருந்தாலும் நீங்க, சீனு, அரசன் மூணு பெரும் இந்த திருவிழா மிகச் சிறப்பாய் நடந்ததற்கு ஒரு மிக முக்கிய காரணம். கலக்கீட்டீங்க.

    ReplyDelete
    Replies
    1. நீங்க தான் பாஸ்... மன உறுதியுடன் குணமாகிய கைகளுடன் வந்து சலிக்காது பதிவர்களின் வருகையை பதிவு செய்து... பதிவர் கீதம் இயற்றி அதை அருமையாக பாடி ...கலக்கீட்டீங்

      Delete
  7. எல்லா வேலைகளையும் செய்து விட்டு அமைதியாக ரசித்தது எனக்கு தெரியாமல் இல்லை... பாராட்டுக்கள் ராம்...

    ReplyDelete
    Replies
    1. தங்கள் அன்பிற்கு மிக்க நன்றி DD

      Delete
  8. கடைசியில் அம்மா சமையல் பற்றி இத்துடன் இணைத்து சொன்னது அழகு ரூபக் ...

    ReplyDelete
    Replies
    1. நிறைய சொல்லனும்னு தோணுச்சி... ஆனா எழுத விருப்பம் இல்ல .

      Delete
  9. விழாவை சிறப்புற நடத்திய விழாக் குழுவினர்களுக்கும் உங்களுக்கும் என் பாராட்டுக்கள்.

    ReplyDelete
    Replies
    1. தங்கள் அன்பிற்கு மிக்க நன்றி

      Delete
  10. தாங்கள் ஆற்றிய பணி சிறப்பானது வாழ்த்து!

    ReplyDelete
  11. தங்களை சந்தித்ததில் மிக்க மகிழ்ச்சி நண்பா. . .

    ReplyDelete
    Replies

    1. எனக்கும் சந்தோஷம் ... மீண்டும் சந்திக்கும் ஆசையுடன் காத்திருக்கிறேன்

      Delete
  12. அந்த நொடி மனம் கிங்பிஷர் ப்ளைட் ஏறி வானில் பறந்தது.
    >>
    அக்கா மகள் வேலை செய்யும் ஃப்ளைட் இருக்க , கிங் ஃபிஷர், அதும் ஊத்தி மூடிய ஒரு ஃப்ளைட் ஏறி போன உன் மனசை என்ன பண்ணலாம்!?

    ReplyDelete
    Replies
    1. அது ஒன்னும் இல்ல அக்கா... பள்ளியில அந்த பிளைட் Air Hostess பத்தி கேள்வி பட்ட போது, முதல் முறை விமானம் ஏறினால் அது கிங்பிஷர் தான் என்று மனம் எப்பொழுதோ முடிவு செய்தது...

      Delete
  13. சுருக்க சொன்னாலும் நறுக்குன்னு இருக்கு.
    சந்தித்ததில் மகிழ்ச்சி ரூபக்.
    கொஞ்ச நேரம் நின்னு உங்க வரவேற்பு பணிகளை பாத்துட்டே இருந்தேன்.எப்படி பண்றீங்கன்னு இல்ல,ஈடுபாட்டை ரசிச்சு பாத்துட்டு இருந்தேன்.பாராட்டுகள்.

    ReplyDelete
    Replies
    1. மிக்க நன்றி கோகுல். தங்களைச் சந்தித்ததில் மகிழ்ச்சி

      Delete
  14. உங்கள் முகத்தில் களைப்பு தெரியாமல் இருக்க புன்னகை போராடிக் கொண்டிருந்ததில் இருந்தே தங்களின் உழைப்பை உணர முடிந்தது. உங்களை சந்தித்ததில் மிக்க மகிழ்ச்சி நண்பா!

    ReplyDelete
    Replies
    1. தங்கள் முதல் வருகைக்கும் அன்பிற்கும் மிக்க நன்றி

      Delete
  15. ரூபக்... லேப்டாப்புகும், பேனருக்கும் நீங்கள் அலைந்த அலைச்சல் வெற்றியே....

    ReplyDelete
  16. மிகவும் தாமதமாக வந்து இந்தப் பதிவைப் படித்ததற்கு மன்னிக்கவும்.
    உங்களை நேரில் சந்தித்தது மிகவும் மகிழ்ச்சி. இனி உங்கள் பதிவுகளைத் தொடர்ந்து படிக்கிறேன்.

    ReplyDelete
    Replies
    1. தங்கள் அன்பிற்கு மிக்க நன்றி அம்மா

      Delete
  17. நானும் மிக தாமதமாத்தான் வந்திருக்கேன் இங்க. ஆனாலும் முதல் முறையா மெகா சந்திப்பில கலந்துக்கிட்டு, அதுக்கான உழைப்பைப் பெருமளவில வழங்கி நிறைய அறிமுகங்களை ஏற்படுத்திக்கிட்டதை நீ இங்க மகிழ்ச்சியோட பகிர்ந்திருக்கறதப் பாக்கறதுக்கே சந்தோஷமா இருக்கு! நீ மென்மேலும் வளர என் மனம் நிறைந்த நல்வாழ்த்துகள்1

    ReplyDelete
    Replies
    1. மிக்க நன்றி சார் :) நெடுநாள் கழிக்து தங்கள் பின்னூட்டை பார்ப்பதில் மகிழ்ச்சி

      Delete