Monday, July 1, 2013

ஆண்பாவம் - உலக சினிமா

****************************************முன் குறிப்பு************************************************
என்னை மிகவும் கவர்ந்த உலக சினிமா திரைப்படங்களை பற்றிய விமர்சனத்தை'சாகும் முன் காண வேண்டிய உலக சினிமா' என்ற பகுதியில் எழுதி வருகிறேன். என்னைப் போன்ற உலக சினிமா பைத்தியங்களுக்காக.
*********************************************************************************************************
சமீபத்தில் வெளிவந்த ஒரு தமிழ் திரைப்படத்தில், திரைக்கதையை நகைச்சுவைக்காக  கஷ்டப்பட்டு வளர்ப்பதை பார்த்து நொந்து, பிறரை கேளி செய்வதே நகைச்சுவை என்று இருக்கும் இந்த நிலைப்பாட்டை கண்டு வருந்தி, தமிழில் வெளி வந்த உண்மையான முழு நீள நகைச்சுவை படங்களின் பட்டியலை யோசித்தேன், முதலில் மனதில் தோன்றியது இந்தப் படமே.  

பாக்யராஜின் நிழலில் இருந்து பிரிந்த பாண்டியராஜன், கன்னி ராசி என்ற படத்தில் இயக்குனராக அறிமுகமாகி, பின் தானே இயக்கி நடித்த படம் ஆண்பாவம். இளவட்டம் முதல் பெரிசுகள் வரை அனைவரையும் வயிறு வலிக்கும் அளவிற்கு சிரிக்க வைக்கும் முழு நீள நகைச்சுவைப்படம். தமிழ் சினிமாவின் பாதையையே மாற்றிய ஒரு புது முயற்சி என்றும் சொல்லலாம்.

கிராமத்தில் புதிதாய் திரையரங்கம் நிறுவும் வி.கே. ராமசாமியின் மகன்களான பெரிய பாண்டி, சின்ன பாண்டி இருவரும் திருமண ஆசை கொள்ள, அவர் பெரிய பாண்டியை பெண் பார்க்க அனுப்ப, பெரிய பாண்டி ஊர் மாறி சென்று வேறு பெண்ணை பார்த்து அவள் மேல் காதல் கொள்ள, அதனை தொடர்ந்து நிகழும் சிக்கல்களை நகைச்சுவையாகச் சொல்வதே படம்.

'வந்தனம் வந்தனம்' என்று இளையராஜாவின் இசையில் சினிமாவின் பெருமையை சொல்லும் பாடலும், எப்பொழுது காதலியுடன் சண்டை வந்தாலும் 'காதல் கசக்குதையா' என்று மனம் பாடும் பாடலும், என்னை யாரவது பாடு என்று தொல்லை செய்தால் நான் பாடும் முதல் பாடல் 'என்னைப் பாட சொல்லாதே' என்ற பாடலும்,  மனதில் நின்றவை.

படத்தில் நான் ரசித்தவை:

ஆரம்ப காட்சியில் படப் பெட்டி வருவதற்காக காத்திருக்கும் போது, நிகழும் வசனங்கள், அந்த காலக்கட்டத்தில் சினிமாவின் மேல் மக்களுக்கு இருந்த மோகத்தை சொல்லும்.

'முட்டுதா?'...'முட்டல'....'முட்டுதா?'...'முட்டல'....'முட்டுதா?'...'முட்டிடுச்சி'.... என்று வரும் எவர்கிரீன்   காமெடி சீன் யாருமே மறக்க முடியாது.  


'எங்க அம்மாவ மட்டும் நீ கட்டிகுட்ட, உங்க அம்மாவ நான் கட்றதுல என்ன தப்பு?' என்று பாண்டியராஜன் 'கொல்லங்குடி' கருப்பாயியை வைத்து செய்யும் நையாண்டிகள் அட்டகாசம்.

வி.கே.ராமசாமியின் இயல்பான நடிப்பும், ஜனகராஜின் சைட் காமெடி ட்ராக்கும் படத்திற்கு பலம். 


தாவணியில் வலம் வரும் இரு கதாநாயகிகள், ரேவதி மற்றும் சீதாவை பார்த்துக்கொண்டே இருக்கலாம். சீதாவை தமிழ் சினிமாவிற்கு அறிமுகம் செய்த பெருமை இந்த படத்திற்கே சேரும்.

இறுதியில் ஒரு சின்ன திருப்பமும், ஒரு ஓட்டமும் கொண்டதோடு நிறுத்தி விடும், இயக்குனரின் துணிச்சலுக்கு கிடைத்து பரிசு ஒரு பெரிய ஹிட்.

இன்று வரை நான் எத்தனை முறை இந்த படத்தை பார்த்தேன் என்று கணக்கே இல்லை, இன்னும் எத்தனை ஆண்டுகள் கழித்து பார்த்தாலும், முதல் முறை பார்ப்பது போல் சிரிக்கத்தான் செய்வென், நீங்க எப்படி?
  
*****************************************************************************************
ஆண்டு : 1985
மொழி : தமிழ்
என் மதிப்பீடு : 4.8/5
*****************************************************************************************

16 comments:

  1. உங்களுக்கும் இயக்குனராகும் தகுதியை வளர்த்து வருகிறீர்கள்.

    ReplyDelete
    Replies
    1. ஹா ஹா. ஏதோ நான் ரசித்த படங்களை பற்றி எழுதிவருகிறேன், 'இயக்குனர்' எல்லாம் சொல்லி வம்புல மாட்டி விடாதிங்க.

      முதல் வருகைக்கு மிக்க நன்றி ..

      Delete
  2. எத்தனை முறை பார்த்தாலும் அலுக்காத படம்...

    யாராரோ காதலிச்சி உருப்படல... ஒன்னும் சரிப்படல...
    வாழ்க்கையிலே என்றும் சுகப்படல...
    காதலை படமெடுத்தா ஓடுமுங்க...
    தியேட்டரிலே சனம் கூடுமுங்க...
    தேவதாஸ் அவன் பார்வதி அம்பிகாபதி அமராவதி...
    கதையைக்கேளு...! முடிவைப்பாரு...!!
    கடைசியில் சேராம வாழாம செத்தாங்க...!!!

    காதல் கசக்குதைய்யா...
    வரவரகாதல் கசக்குதைய்யா...
    மனம் தான் லவ்வு லவ்வுன்னு அடிக்கும்...
    லபோன்னு தான் துடிக்கும்...
    தோத்துப்போனா துடிக்கும்...
    பைத்தியம் பிடிக்கும்...
    காதல் கசக்குதைய்யா...
    வரவர காதல் கசக்குதைய்யா...


    அப்படிப் பாடி காதல் கடிதம் எழுதாம இருக்கக் கூடாது... ஹிஹி...

    "ஆண்பாவம்" ரசனைக்கு வாழ்த்துக்கள்...

    ReplyDelete
    Replies
    1. காதல் கசக்கினாலும் சீனு தரும் பரிசுகள் இனிக்க்கிரதே ...ஹி ஹி ... விரைவில் காதல் கடிதம் வெளியாகும்...
      மிக்க நன்றி D.D.

      Delete
  3. யாருமே எதிர்பாராத கிளைமாக்ஸ் படத்தின் மிகப்பெரிய பலம்... பூர்ணம் விசுவநாதன் தெருமுனையில் வரும்போது கூரை மேலிருந்து மாணவன் கொடுக்கும் சிக்னல், ரேடியோ ரிப்பேர் செய்ததும் பாண்டியராஜன் பேட்டரியை பாக்கெட்டில் போட்டுகொள்ளும் காட்சி என ரசிக்கவைக்கும் காட்சிகள் ஏராளம்..

    ReplyDelete
    Replies
    1. எல்லா காட்சிகளுமே படத்தில் ரசிக்கும் படி இருப்பதே படத்தின் சிறப்பு . கருத்துரைக்கு மிக்க நன்றி ஸ்கூல் பையன்

      Delete
  4. ஆன் பாவம் எத்தனை தடவ பார்த்தாலும் சலிக்காத படம் எனக்கு பிடித்த நடிகர் வி.கே ராமசாமி செம்ம. ஜனகராஜ் உசிலமணி காமெடி {அதுல்ல என்ன தொழில் ரகசியம்னா} அத இப்ப நினச்சாலும் சிரிப்பு தான் போங்க

    ReplyDelete
    Replies
    1. ரசித்து சிரித்துக் கொண்டே கருத்துரையிட்ட சக்கர கட்டிக்கு என் மனமார்ந்த நன்றிகள்

      Delete
  5. ஆண் பாவத்தை உலக சினிமாவுடன் ஒப்பிட்டு எழுதியது சிறப்பு ரூபக், எனக்கு மிகவும் பிடித்த படம், ஆனால் ஒரு முறை கூட முதலில் இருந்தோ அல்லது முழுவதுமாகவோ பார்த்தது இல்லை
    :-)

    சிறந்த நகைச்சுவை படம் என்ற வரிசையில் நான் முதலாவதாகக் கருதுவது தில்லுமுல்லு, ரஜினியின் நடிப்பு கேபியின் இயக்கம் விசுவின் வசனம் அற்புதம்

    ReplyDelete
    Replies
    1. படத்தை முழுமையாக பாருங்க சீனு.

      தில்லுமுல்லுவும் சிறந்த நாகைச்சுவை படம், இதில் மாற்று கருத்து இல்லை. இருப்பினும் முத்திரை பதித்த K.B. , ரஜினி என்று பல பெரும் தலைகள் அந்த படத்தில் அசத்தி இருப்பர், ஆனால் பாண்டியராஜன் தன் இரண்டாவது படத்திலேயே கலக்கியதனால், என் வரிசையில் இந்த படம் மேலேறி விட்டது.

      Delete
  6. படத்தோட தொடக்கத்துல ஊர் மக்கள்லாம் அவுங்கவுங்க வீட்ல இருந்து படம் பார்க்க தியேட்டர்க்கு கிளம்பரத காட்டுவாங்க.... அதுல ஒரு வீட்ல ஒரு கணவன் மனைவி அப்புறம் அவுங்க கைக்குழந்தை கிளம்பிட்டு இருப்பாங்க... கணவன் கைக்குழந்தையை வச்சுகிட்டு வாசல்ல நிப்பாரு, மனைவி வீட்ட பூட்டிகிட்டே கணவன்கிட்ட கோப்பாங்க...

    "ஏங்க, குழந்தைக்கு எல்லாம் எடுத்து வச்சுகிட்டிங்களா...?"

    "எல்லாம் எடுத்து வச்சாச்சுடி... சீக்கிரம் வா படம் போட்ற போறங்க..."

    "குழந்தைக்கு பால்..."

    "அதத்தான் எல்லாத்தையும் நானே குடிச்சுட்டனே..."

    "அது இல்லங்க.... நான் சொல்றது புட்டிபால்..."

    "ம்ம்ம்... அது எடுத்து வச்சாச்சுடி... சீக்கிரம் வா..."


    எத்தனை பேர்க்கு இந்த் adult joke புரிஞ்சுருக்கும்னு தெரியல....

    தொடக்கத்துல வர அந்த underwear joke - classic...

    ReplyDelete
  7. ம்ம்ம் .. ஆண் பாவம் எத்தனை முறை பார்த்தாலும் சலிப்பு தட்டாது நண்பா ...
    நினைவுகளை பின்னோக்கி சுழற்றுவதும் ஒரு சுகம்தான்

    ReplyDelete
    Replies
    1. கருத்துரைக்கு மிக்க நன்றி நண்பரே

      Delete
  8. பாண்டியராஜன் ஒருவருடன் பேசும் சீனில் குச்சியை இநதக் காது வழியா விட்டு அநதக் காது வழியால்ல எடுத்தாங்க. அதான் காது கேக்காது என்கிற டயலாக் டெலிவரி உட்பட நிறைய இடங்களை ரசித்துச் சிரித்திருக்கிறேன். ரேவதியின் நடிப்பும் மனம் கவர்ந்த விஷயம். சலிக்காத வண்ணம் திரைக்கதை அமைத்து இயக்கிய பாண்டியராஜனையும் மனம் நிறையப் பாராட்டலாம். இப்போது பார்த்தாலும் ரசிக்க வைக்கிற படம்தான். ஆனால் இதை உலக சினிமா என்கிற உயரத்துக்கு நீ தூக்கியதில் எனக்கு சற்றும் உடன்பாடில்லை ரூபக். ஸாரி!

    ReplyDelete
    Replies
    1. ஹ்ம்..... இது என் பார்வையில் என்னை பாதித்த சினிமா சார். உங்கள் கருத்தை நீங்க சொல்லரிங்க, இதுக்கு எதுக்கு ஸாரி எல்லாம்...

      Delete
  9. ஆண் பாவம் எத்தனை முறை பார்த்தாலும் சலிப்பு தட்டாது நண்பா ...
    நினைவுகளை பின்னோக்கி சுழற்றுவதும் ஒரு சுகம்தான்

    ReplyDelete