******************************************முன்னறிவிப்பு :******************************************
இக்கதையில் வரும் சம்பவங்கள், வயது வரம்புக்கு உட்பட்டது என்பதால், இருபத்து ஒன்று வயதை கடந்த, பக்குவப்பட்ட மனம் கொண்டவர்கள் மட்டும் மேலே படிக்க தொடரவும்.
******************************************************************************************************
திரையில் சில வெள்ளையர்கள் பேசிக்கொண்டிருக்க, அதை சில இந்தியர்கள் உற்று நோக்க, அதில் ஒருவனின் கைபேசி 'கருப்பு தான் எனக்கு பிடிச்ச கலரு' என்று பாடத் தொடங்க சட்டென்று அதன் வாயை மூடினான். ஒருவர் அவனைக் கண்டு மொறைக்க, இவன் சற்று தலை தாழ்த்தினான், இவன் மேனேஜர் போல் தெரிந்தது. அந்த வெள்ளைக்கார அம்மணி தொடர்ந்து பேச, இவன் மட்டும் தன் கைபேசியில் எதையோ அடித்து கொண்டிருந்தான், வாங்க என்னவென்று நெருங்கி பார்க்கலாம்.அவன் அடையாள அட்டையில் மாதவன் என்று பெயர் அச்சிட்டு இருந்தது. நவீன சாம்சங் காலக்சி கைபேசி, அதில் குறுந்தகவல்கள் குவிந்துக்கொண்டிருந்தன.
'நான் ஒரு கான் கால்ல இருக்கேன். அப்பறம் பேசறேன்' என்றான் இவன்.
'இப்பவே பேசணும், தப்பு நடந்துடுச்சுன்னு தோணுது :( ' என்றாள் அவள். தேவி என்று பெயர் இருந்தது, அவளாகத்தான் இருக்க வேண்டும்.
'என்னன்னு msg பண்ணு' என்றான் இவன்.
'இன்னையோட நாற்பத்து அஞ்சாவது நாள், ரொம்ப தள்ளுது, பயமா இருக்கு :( ' என்றாள் அவள்.
'கவலைப் படாதே, அப்படியெல்லாம் ஒன்னும் ஆகி இருக்காது, நம்ம கவனமாத்தான் இருந்தோம்' என்றான் இவன்.
'இல்ல நான் googleல search பண்ணினேன். ரப்பர்ல சில சமயம் ஓட்ட இருக்குமாம், ஒரு சொட்டு போதுமாம். அப்படி ஆயிருந்தா என்ன செய்றது?' என்றாள் அவள்.
'அப்படியெல்லாம் ஒன்னும் நடக்காது, நான் நைட் வீட்டுக்கு வந்துட்டு பேசுறேன்' என்றான் இவன்.
'ஹ்ம்ம்... :( '
மாதவன் சென்ற மாதம் நடந்ததை எண்ணினான், அந்த அம்மணி பேசுவது அவன் காதில் இப்பொழுது நுழையவில்லை. அவனுக்கு அந்த நாள் கூட நியாபகம் இருக்கிறது, எப்படி மறக்க முடியும். ஜூன் மாதம் பத்தாம் தேதி, அவன் காதலி தேவி அவன் கைபேசிக்கு விடியற்காலை ஐந்து மணிக்கு அழைத்தாள், முதல் அழைப்பை அவனால் எடுக்க முடியவில்லை, கண்கள் இருகின, இரண்டாவது அழைப்பில் மூளை விழித்தது, அவன் இரவு ஒரு மணி வரை அவளிடம் பேசி பின் தான் தூங்கச் சென்றான், இருப்பினும் அவள் அழைத்தது அவனுக்கு ஆச்சரியமாக இருந்தது.மூன்றாவது அழைப்பில் எடுத்து பேசினான், 'வீட்ல எல்லாரும் திருப்பதி போறாங்க, ராத்திரி தான் வருவாங்க, உடனே கிளம்பி வா' என்று செய்தி வாசிப்பது போல் வேகமாக சொல்லி முடித்தாள் தேவி.
அவன் நிதானிக்க கொஞ்சம் நேரம் ஆகியது, அவனுள் ஒரு எட்சை தோன்றியது, பல நாள் மனதில் கட்டிய கோட்டைக்குள் செல்ல சாவி கிடைத்து விட்டது, துயில் கலைந்து, விரைந்து புறப்பட்டான். மாதவனுக்கு திருமணதிற்கு முன் உடல் உறவு கொள்ள வேண்டும் என்பது, அவனுக்கு மீசை எட்டி பார்த்த போது தோன்றிய ஆசை.அவன் காசுகொடுத்து கிடைக்கும் உடல் உறவு பக்கம் இதுவரை சென்றதில்லை, நோய்கள் வந்துவிடுமோ என்ற அச்சத்தால். இன்று அவனுள் இருந்த காம பசி பூர்த்தி அடையும் நாள், வழியில் ஒரு இருபத்து நான்கு மணி நேர மருந்து கடையில் அதை வாங்கிக் கொண்டுதான் சென்றான்.
மாதவன்-தேவி பதினெட்டு மாதங்களாக காதலித்து கொண்டிருக்கும் இளம் ஜோடி, இதுவரை ஆள் இல்லா திரையரங்கில் சில நிமிட முத்தம் மட்டும் தான், ஆனால் இன்று இருவர் மட்டும், தனி வீட்டில், தனிமையில். நேர் எதிரே அமர்ந்து இருந்தாலும், அவள் தரையையே பார்த்துக்கொண்டிருந்தாள், இந்தத் தருணம் அவளால் அவனை பார்க்க முடியவில்லை, அவள் முகத்தில் ரத்த நாடிகள் வழக்கத்துக்கு மாறாக ரத்தம் கொண்டு சேர்க்க, அவள் முகம் சிவந்து இருந்தது. மாதவன் அவள் அருகில் சென்று, அவளை தொட்டு தூக்கி, அந்த அறைக்குள் அழைத்துச் சென்று கதவை சாத்தினான். அந்த முதல் பகலை பற்றி அவர்கள் பேசாத நாள் இல்லை. அடுத்த பத்து நாட்கள் இந்த இன்பம் சூழ்ந்தாலும், நாட்கள் செல்ல,தேவி தன் மாத விலக்கு தாமதமாக, இளமை வேகத்தில் அவள் செய்த செயலை எண்ணி கவலைக்கொண்டாள், மாதவனிடம் புலம்பி கொட்டினாள்.
வீடு திரும்பி மாதவன் எவ்வளவோ சமாதானம் சொல்லினாலும்,அதை ஏற்கும் நிலையில் தேவி இல்லை. 'ஓ' என்று அழத்தொடங்கினாள், என்ன செய்வது என்று தெரியாமல் தவித்தான் மாதவன். 'எந்த டாக்டரிடம் அழைத்துச் செல்வது? என்னன்னு சொல்றது? கருவ கலைக்கணுமா ?' என்று பல கேள்விகள் அவன் மூளையை கசக்கின. அவன் திருட்டுத் தனமாக வாலிப வயதில் பார்த்த ஆங்கிலப்படம் அவன் நினைவில் வர, திடீரென்று அவனுக்கு ஒரு யோசனை தோன்றியது. அவளுக்கு தைரியமாக சமாதானம் சொல்லினான், இன்று இரவு ஒரு முடிவு தெரிந்துவிடும் என்று கைபேசியை வைத்து விட்டு, அதே மருந்துக் கடைக்கு சென்றான். எதையோ விசாரித்து வாங்கினான். தேவியின் தெருவுக்கு சென்று, அவள் வீட்டு சுவரினுள் அந்த பார்சலை எறிந்துவிட்டு, அந்த தெருமுனைக்கு சென்று அவள் கைபேசிக்கு அழைப்பு விடுத்தான்.
'உங்க வீட்டு வாசல்ல ஒரு கவர் இருக்கு, அதுல ஒரு டெஸ்ட் கார்ட் இருக்கு, அத வச்சி urine டெஸ்ட் பண்ணா,கன்பார்ம் பண்ணிடலாம். அதுலயே instructions இருக்கும்' என்றான். அவளும் அதை எடுத்துக் கொண்டு தன்னை சோதிக்க சென்றாள், மாதவன் ஒரு சிகரெட்டை பத்தவைத்து அந்த தெரு முனையிலேயே நின்று, 'கன்பார்ம் ஆயிட்டா,கல்யாணம் எல்லாம் செய்ய முடியாது. யாரிடம் இந்த டாக்டர்களை பற்றி விசாரிப்பது? கண்ணனிடமா? இல்லை அவன் ஓட்டை வாய், ஊர் மொத்தம் பரப்பிடுவான். அக்காவிடம்? திட்டுவாள், இருந்தாலும் அவளிடம் சரணடைவதுதான் சிறப்பு' என்று தன்னுள் எண்ணி நான்கு சிகரெட்டுகளை ஊதித் தள்ளி விட்டான். 'அந்த டெஸ்ட் நெகடிவ்' என்று தேவி தகவல் சொல்லியவுடன், காற்றில் பறந்து, நடு ரோட்டில் நடனமாடி, எல்லையில்லா மகிழ்சிக்கொண்டான். அவனுக்கு தெரியவில்லை, அடுத்த காட்சி வரைதான் அவன் மகிழ்ச்சியென்று, பாவம்.
வீடு திரும்பி தன் கைபேசியை பார்த்தான், தேவியிடம் இருந்து வந்த குறுந்தகவல், அவனை பூமிக்கு இழுத்தது.
'இருந்தாலும் எனக்கு ஏன் நாள் தள்ளுது, என் மனசுக்கு சரியாப் படல :(' , அதே சோகம் மீண்டும் சூழ்ந்தது. மாதவன் சோகப் படம் என்றாலே பர்க்கமாட்டன், அவன் வாழ்விலே சோகம் என்றவுடன் அவனுக்கு தேவி மேல் வெறுப்பு தான் வந்தது.
'அதுதான் டெஸ்ட் நெகடிவ் ஆயிடுச்சு இல்ல, ஏன் கவல படற? இது வேற எதாவது பிரச்சனையா இருக்கும்' என்றான் சலிப்புடன்.
'இல்ல நான் googleல சர்ச் பண்ணேன், இந்த டெஸ்ட் கார்ட் எல்லாம் 100% சரியா கன்பார்ம் பண்ணாதாம்' என்றாள் கவலையுடன்.
'முதல்ல இந்த google searchஅ ஒழிக்கணும்' என்று தன்னுள் முணுமுணுத்தான் மாதவன். மீண்டும் அதே அழுகை ஓசை, இதற்கு ஒரு முடிவு கட்டவேண்டும் என்று தீர்மானித்த மாதவன், மறுநாள் காலை தன் அக்காவின் வீட்டிற்கு சென்றான்.அவன் மாமாவும், குழந்தையும் வெளியே சென்றவுடன் அவன் அக்காவிடம்,தன் சுருக்கு பையை அவிழ்த்தான்.
'என்ன காரியம் பண்ணிட்டடா மாதவா' என்று அவன் அக்கா தன் தலை மேல் கை வைத்தபடி கீழே அமர்ந்தாள், 'மொதல்ல நம்ம அப்பா இந்த காதல எத்துக்குவாரான்னு யோசிச்சியா? கொஞ்சம் கவனமா இருந்திருக்கணும். இப்படி அநியாயமா அந்த பொண்ணு வாழ்கையில விளையாடிட்ட, இது வெளிய தெரிஞ்சா ஊர் வாய மூடவே முடியாது.' என்று அவன் தலையில் ஓங்கி கொட்டினாள்.
'ஆஅ...'என்று தன் தலையை தேய்த்துக்கொண்டே 'உன் பிரண்டு சீதா ஒரு gynecologist தன, அவ கிட்ட சொல்லி, கொஞ்சம் ராகிசியமா டெஸ்ட் பண்ண சொல்லேன்' என்று கெஞ்சினான்.
'சரி நான் அவ கிட்ட பேசறேன். அவ கன்பார்ம் பண்ணிட்டா என்னடா செய்யப் போற?' என்று கவலையுடன் அவள் கேட்க ' கருவ கலைக்கறது தான் ஒரே வழி' என்று உறுதியாக சொன்னான்.
அவன் அக்கா முகத்தில் ஒரு ஏமாற்றம் தெரிந்தது, 'அப்படியெல்லாம் செய்யாத, ஒரு கருவும் ஒரு உசிரு தான், உங்க தப்புக்கு அத ஏன் பலி ஆக்க போற. அந்த கருவ கலச்சா அந்த பொண்ணு உடம்பு எவளோ வலி தாங்கனும் தெரியுமா, நரக வேதனை. நம்ம அம்மா உனக்கு அப்பறம் ஒரு கரு உருவானப்ப, அப்பா பேச்ச கேட்டு அத கலைச்சி, இன்னைக்கு வரைக்கும் அம்மாவோட உடம்பு நார்மல் ஆகவே இல்ல. அந்த தப்ப நீயும் பண்ணிடாத. ஒழுங்கா அந்த பொண்ண கல்யாணம் பண்ணிக்கோ, என்னைக்கு இருந்தாலும் அவ தான் உன் பொண்டாட்டின்னு சொன்ன இல்ல, அத இன்னைக்கே செய்.....' என்று அவள் முடிக்கும் முன், 'மொதல்ல சீதா கிட்ட பேசிட்டு சொல்லு, அப்பறம் இதெல்லாம் யோசிக்கலாம்' என்று கூறி அலுவலகம் புறப்பட்டான்.
மாதவன் குடும்பம்,குழந்தை என்ற சராசரி வாழ்க்கைக்குள் செல்ல விருப்பம் இல்லாதவன். அவன் கனவுகளே வேறு, அதிகம் சம்பாதித்து, உலகம் முழுவதும் சுற்ற வேண்டும்.செல்ல வேண்டிய இடங்கள் என்று ஒரு பெரிய பட்டியலே வைத்துள்ளான். எல்லா இடங்களுக்கும் சென்று, ஒரு முப்பது வயதில் தான் திருமணம் என்ற கொள்கையுடன் இருப்பவன். இன்று அவன் அவசரத்தில் நிதானம் இழந்தது அவன் வாழ்க்கைப் பாதையையே மாற்றி விடுமோ என்ற அச்சம் அவனை வாட்டியது. எல்லாம் தன் கையை மீறி செல்வது போன்ற ஒரு உணர்வு அவனுள் வந்தது, குடும்பத்துடன் எல்லா தொடர்பும் துண்டிக்க படும், யாரை சாட்சி போட அழைப்பது? எந்த இடத்தில வீடு பார்ப்பது? வீட்டுக்கு அட்வான்ஸ் கொடுக்க கூட காசு இல்லையே, என்ன செய்வது? என் வருமானம் ஒரு குடும்பம் நடத்த போதுமா?என்று அவன் எண்ணங்கள் பல படங்கள் கிறுக்கத் தொடங்கின.
அவன் அக்காவிடம் இருந்து அழைப்பு வந்தது, நாளை காலை பத்து மணிக்கு அவள் தோழி கீதா வருவதாக சம்மதித்து இருப்பதாக சொன்னாள். இவன் தேவியிடம் பேசி அவளை சமாதானப் படுத்தினாலும், அவன் அச்சம் அதிகமாகி, காதல் மாயையில் இருந்தவன் முதல் முறையாக குடும்பம், சமூகம் என்று சிந்திக்கத் தொடங்கினான், அவன் தந்தை அவனை வளர்க்க பட்ட கஷ்டங்கள் அவன் கண் முன் வந்தது, அவன் தந்தையிடம் அன்பு வெளிப்படையாக காட்டியது இல்லை, அவரும் அப்படித்தான், இருப்பினும் அவர்களது பந்தம் நெருக்கமானது. காதலுக்காக தன் தந்தையை பிரிய வேண்டுமா என்று அவன் மனம் கேள்வி எழுப்பும் சமயம் அவன் கண்ணில் தானாக நீர் கசிந்தது.
அன்று காலை தேவியை தன் வண்டியில் அழைத்துச் சென்றான், இருவரும் எதுவும் பேசவில்லை, வழக்கம் போல் அவனை இறுக்கி கட்டிக்கொள்ளவும் இல்லை, அந்த இடைவெளி சொல்லியது அவர்களின் இன்னல்களை.அக்காவின் தோழியும் அவன் அக்காவும் நடையில் காப்பி அருந்திக் கொண்டிருந்தனர், இவர்கள் வந்தவுடன், அவன் அக்கா தேவிக்கு எதாவது வேண்டுமா என்று ஒரு பேச்சுக்கு கேட்க, அவள் வேண்டாம் என்று மறுக்க, டாக்டர் சீதா அவளை ஒரு அறைக்குள் அழைத்துச் சென்றாள்.
மாதவனின் உள்ளங்கை வியர்வையால் நனைந்து இருப்பதை அவன் அக்கா கவனித்தவுடன் அவன் வெளியே சென்று, தன் சிகரெட்டை பற்ற வைத்தான்.ஐந்தாவது சிகரெட் காற்றில் கலக்க, பொறுமையின்றி,அந்த அறைக்குள் சென்று விடலாம் என்று வீட்டின் உள்ளே சென்றான்.
அவன் அக்கா வேகமாக ஒரு துண்டுடன், அவள் பழைய சல்வார் ஒன்றை மடித்து, அதனுள் எதோ வெள்ளையாக மறைத்து வைத்து, அந்த அறைக்குள் கொடுக்க, தேவியின் கை அதை வாங்க, அந்த அறை பூட்டப்பட்டது. மாதவன் குழப்பத்துடன் திரும்பியபோது டாக்டர் சீதா சோபாவில் அமர்ந்து இவனை பார்த்துக் கொண்டிருந்தாள், ஒரு கண்டிப்பான பார்வை அது.
அவன் கைபேசி துடித்தது, தேவியிடம் இருந்து ஒரு குறுந்தகவல், 'I got my periods :) :) :) ' , அதைக் கண்டவுடன், பாளையில் நீரைக் கண்டவன் போல அவன் மனம் துள்ளியது, இருப்பினும் ஒரு குழப்பம். டாக்டர் சீதா அவனை முறைத்த படி 'இனிமேலாவது கன்ட்ரோலா இருடா. அவளுக்கு PCOSனு நினைக்கிறேன், ஒரு நாள் ஹாஸ்பிடல் போய் டெஸ்ட் எடுக்க சொல்லு' என்று சொல்லிச் சென்றாள்.
மாதவன் பின் வண்டியில், அவன் அக்காவின் பழைய சல்வார் அணிந்து புதுப் பொலிவுடன், அவனை கட்டி இறுக்கி அமர்ந்த தேவி, 'PCOSனா என்னன்னு googleல சர்ச் பண்ணனும்' என்றாள், 'இந்த googleல கண்டுபிடிச்சது யாருடா?' என்று தன் பற்களை கடித்தான் மாதவன்.
Tweet | ||
ஹா ஹா... நான் கூட PCOS என்றால் என்ன என்று கூகிளில் தேடினேன்...
ReplyDeleteஹா ஹா ... முதல் வருகைக்கு மிக்க நன்றி
Deleteநல்ல கதை.
ReplyDeleteமிக்க நன்றி வெங்கட் சார்
Deleteஅலெர்ட்டா இருடா ஆறுமுகங்கிறது தான் மெசேஜா இந்த கதையில??
ReplyDeleteஎன்ன ஆகுமோன்ற ஒரு எதிர்பார்ப்பு கடைசி குறுந்தகவல் வர்ற வரைக்கும் இருந்தது..
எதுக்கும் ஜாக்கிரதையாவே இருங்க ;-)
ஹா ஹா ஹா அண்ணே நீங்க நல்லவரா கெட்டவரா
Delete//அலெர்ட்டா இருடா ஆறுமுகம் // செம
Deleteகதையை ரசித்து பாராட்டிய தங்களுக்கு மிக்க நன்றி
சூப்பர் கதை.. நடையும், எடுத்துக்கொண்ட தீமும் அருமை.. வாழ்த்துக்கள்
ReplyDeleteமகிழ்ச்சியுடன் பாராட்டி, ஊக்கப் படுத்திய நண்பர் ராம் குமாருக்கு கோடான கோடி நன்றிகள்
DeleteGoogle Search என்று தலைப்பு வைத்திருக்கலாமோ...?!!
ReplyDeleteஹா ஹா ... இப்படித்தான் அண்ணே, தனுஷ் நடிச்ச பொல்லாதவன் படத்த பார்த்துட்டு 'பல்சர்'னு பேரு வச்சி இருக்கலாம்னு நினைத்தேன்.
Deleteஇது கதைதானே?! நல்லா இருக்கு.
ReplyDeleteஆம்... கற்பனைக் கதை.. மிக்க நன்றி :)
Deleteஇந்த font படிக்க வசதியாக இருக்கிறதா சகோ ?
மறதி ஒரு தேசிய வியாதின்னு யாரோ சொன்னாங்க ,
ReplyDeleteஅதே மாதிரி இந்த கூகுள் சர்ச் ஒரு இண்டர்நேசனல் வியாதி ..! அடியேனுக்கும் அந்த வியாதி உண்டு.
ரெண்டு வரில சொல்ற விசயத்த இருநூறு வரிகள்ள சுவராஸ்யமா சொல்றதுக்கும் ஒரு தெறம வேணும் ...! உமக்கு இருக்கப்பா ...!
//அதே மாதிரி இந்த கூகுள் சர்ச் ஒரு இண்டர்நேசனல் வியாதி ..!// அடடா ....
Deleteரசித்து பாராட்டிய ஜீவனுக்கு என் மனமார்ந்த நன்றிகள்
Arumai.. :) naanum PCOS na yenna nu google thedinen... :D
ReplyDelete