Thursday, July 25, 2013

The General - உலக சினிமா

****************************************முன் குறிப்பு************************************************

என்னை மிகவும் கவர்ந்த உலக சினிமா திரைப்படங்களை பற்றிய விமர்சனத்தை 'சாகும் முன் காண வேண்டிய உலக சினிமா' என்ற பகுதியில் எழுதி வருகிறேன். என்னைப் போன்ற உலக சினிமா பைத்தியங்களுக்காக.

*********************************************************************************************************

சமீபத்தில் 'மின்னல் வரிகள்' பால கணேஷ் சார், முகநூலில் பகிர்ந்த Buster Keaton வீடியோ என் கண்ணில் சிக்க, என் கல்லூரியில் நான் பார்த்த 'The General' படம் நினைவிற்கு வந்தது. என் நண்பன் ஒரு நாள் என்னிடம் 'கமலோட பேட்டி ஒன்னு ஹிந்துல பார்த்தேன், அவரு யாரோ Buster Keaton மற்றும் Peter Sellers னு ரெண்டு பேர பத்தி ரொம்ப புகழ்ந்து பேசி இருக்காரு' என்று சொன்னான். உடனே IMDB துணையுடன் இருவரையும் அடையாளம் கண்டு கொண்டு, நான் முதலில் பார்த்த படம் தான் இது.அமெரிக்காவில் வடக்கு மற்றும் தெற்கு பகுதிகளுக்கு இடையில் போர் நடந்த 1890களில் கதை நடப்பதாக துவங்கும். ஜானி(Buster Keaton) ரயில்வே பொறியாளராக பணி செய்வதால் அவன் சேவை மக்களுக்கு தேவை என்று அவனை ராணுவத்தில் சேர்த்துக்கொள்ள அதிகாரிகள் மறுத்து விடுவர். அவன் ராணுவத்தில் சேரவே முயற்சிக்காமல் பொய் சொல்வது போல் சந்தர்ப்பமும் சூழ்நிலையம் அவனுக்கு எதிராக செயல்பட, அவன் காதலி அவனை விட்டு பிரிந்திடுவாள். எதிரிகளின் சதியால் இவன் வேலை செய்யும் ரயிலான 'The General' கடத்தப் படும், ஒற்றை ஆளாக அவர்களை வேறு ஒரு ரயில் என்ஜினில் துரத்திக் கொண்டு எதிரி நாடு வரை சென்ற பிறகுதான் அவன் காதலி மட்டும் அந்த ரயிலில் சிக்கியது அவனுக்கு தெரியவரும்.எதிரிகளின் ரகசியத் திட்டத்தையும் அறிந்து கொள்கிறான். அவன் காதலியை மீட்டு, அவன் தாய் நாடு திரும்பி எப்படி எதிரிகளின் சதியை முறியடிக்கிறான் என்பதே கதை. படத்தில் நான் ரசித்தவை: 

ஜானி  புகை வண்டி ரயில் என்ஜினுடன் போராடும் காட்சிகள் அசத்தலாக, நகைச்சுவையாக இருக்கும். 


முதல் பாதியில் ஜானி பெரும் படையுடன் ரயிலில் துரத்துவதாகவே எதிரிகள் நினைத்து பயந்து கடத்திய ரயிலில் வேகமாக செல்லும் காட்சிகள் மிகவும் இயல்பாக சித்தரிக்கப் பட்டு இருக்கும்.இரண்டாம் பாதியில் ஜானி தாய் நாடு திரும்பக் கூடாது என்று, முதல் பாதியில் அவன் துரத்திய அதே கும்பல், இம்முறை அவனை துரத்துவது போல் காட்சி வருவது படத்திற்கு சிறப்பு. 

வசனமே இன்றி அந்த ரயில் ஓட்டத்தில் நம்மை பயணிக்க வைக்கும் பின்னணி இசை படத்திற்கு பெரும் பலம். 

திரையில் நடித்தது மட்டுமின்றி, கதை எழுதியதிலும், இயக்கியதிலும் Buster Keatonனுக்கு பங்கு உண்டு. 

வசனம் இல்லாத ஊமைப் படம் என்றால்,முழு நீள நகைச்சுவை படமாகத்தான் இருக்க வேண்டும் என்று என்னுள் இருந்த எண்ணத்தை மாற்றிய இந்த படம் தான், பேசாத ஊமைப் படங்களின் வரிசையில் என்றுமே நான் முதல் இடத்தில வைப்பது. 

*******************************************************************************************************

ஆண்டு              : 1926
மொழி                : ஆங்கிலம் (ஊமைப் படம்) 
என் மதிப்பீடு   : 4.7/5 

மேலும் விபரங்களுக்கு IMDB

*******************************************************************************************************

12 comments:

 1. பஸ்டர் கீட்டன் செய்கிற சாகசங்கள் கலந்த நகைச்சுவை நடிப்பு எனக்கு மிகமிகப் பிடிக்கும். யூ டியூப் மூலம் துண்டு துண்டாக அவரது படங்களின் காட்சிகளை கலெக்ட் செய்து தொகுத்து வைத்திருக்கிறேன். படமாகப் பார்த்ததில்லை இதுவரை. படிச்சு ரசிச்சதை அழகா நீ பகிர்ந்திருக்கறதப் பாத்ததுமே உடனே படம் பாத்தாகணும்னு முடிவு பண்ணிட்டேன். ம்ம்ம்... தயாராயிரும்! ஹி... ஹி...!

  ReplyDelete
  Replies
  1. எல்லாம் தயார் :) ...ஹி ஹி.... மிக்க நன்றி சார்...

   Delete
 2. முதல் இடத்தில வைப்பது என்றால் பார்த்திட வேண்டும் ஆவலை தூண்டி விட்டீர்கள்... நன்றி...

  ReplyDelete
 3. பார்க்க வேண்டும் போல் உள்ளது... உன்னிடம் வாங்கிய படங்களே பெண்டிங்... வாட் டு டூ... எனி ஐடியா

  ReplyDelete
  Replies
  1. ஒரே வழி தான்... உங்க internet இணைப்புக்கு ரெண்டு நாள் லீவு விட்டுடுங்க... தானா படம் பார்ப்பிங்க...

   Delete
 4. எனக்கு தமிழ் படமே புரியாது. இதுல, உலக சினிமாவா?! இது நமக்கு ஒத்து வராத டாபிக். அடுத்த பதிவுக்கு வரேன். பை

  ReplyDelete
  Replies
  1. ஹா ஹா ஹா ... இது ஊமை படம் அக்கா ... உங்கள் பெயர குழந்தைகளுக்கு நீங்க கதை சொல்ல உதவும் :)

   Delete
 5. ஒரு சிறந்த படம் பற்றிய விமர்சனத்திற்கு நன்றி...... கணேஷ் தந்திருந்த சுட்டி மூலம் காணொளி பார்த்தேன்..

  இந்தப்படத்தினையும் பார்க்க முயல்கிறேன்....

  நன்றி.

  ReplyDelete
  Replies
  1. மிக்க நன்றி . படம் பார்த்துட்டு மறக்காம கருத்து சொல்லுங்க

   Delete

 6. Buster Keaton பற்றி தற்போதுதான் அறிகிறேன்... விமர்சனமே படம் பார்க்க தூண்டுகிறது.

  ReplyDelete
  Replies
  1. உமது விதிகளின்படி நான் தங்களுக்கு மறுமொழி இடக் கூடாது அல்லவா ... ஹா ஹா ஹா

   Delete