Wednesday, July 31, 2013

தேன் மிட்டாய் - ஜூலை 2013

கடிதாசி  

நம்ம சீனுவுக்கு எதோ சக்தி இருக்குங்க, அவர் காதல் கடிதம் பரிசு போட்டி துவக்கி சில நாட்களில், தந்தி சேவையை நிறுத்திட்டாங்க.  இருப்பினும் சமீபத்தில் 'இலங்கை தமிழர் பிரச்சனைக்காக' நம் முதல்வர் எழுதிய கடிதத்திற்கு பிரதமர் பதில் கடிதம் எழுதினார் என்று செய்தி ஒன்று கேட்டேன். இவங்களுக்கு கால் பண்ண காசு இல்லையா என்ன? அவசர தீர்வுகள் காண அழைத்து பேச மாட்டார்களா, இன்னும் கடிதம் எழுதிக் கொண்டு... முடியல.   

அம்மா புராணம் 

விவேக் காணாமல் போனாரா என்று கேட்கும் அளவிற்கு அவருக்கு திரைப்பட வாய்ப்புகள் குறைந்து விட, அவர் பல திரையரங்குகளில் படம் துவங்கும் முன் ஒரு வெள்ளைக்காரனுடன், காமடியாக (?), அம்மாப் புராணம் பாடிக் கொண்டிருக்கிறார். ஏழு மணி படத்திற்கு, 6 40க்கே செல்லும் என்னைப் போன்ற திறமைசாலிகளுக்கு மட்டுமே இந்த பாக்கியம் கிட்டும்..  

மரியான் - நல்ல போலீஸ் 

முதல் நாள் முதல் காட்சி பார்ப்பது என்று முடிவாகி, முந்தைய தினம் பெய்த மழையால் சாலைகளில் ஓடும் ஓடைகளைக் கடந்து, வாகன வெள்ளத்தில் நீந்தி, அவசர அவசரமாக AGS OMR நோக்கி சென்று கொண்டிருந்தேன். சோழிங்கநல்லூரில் வழக்கமாக வலது புறம் திரும்புவதை தடுத்து, இடது புறம் சென்று, wipro அம்மணிகளை தரிசித்த பின் தான் U turn எடுக்க வேண்டும் என்று காவல் துறை விதிகளை மாற்றி இருந்தது. 10 30க்கு படம், மணி 10 05,  சோலிங்கநல்லூர் சந்திப்பை நெருங்கிய போழுது மஞ்சள் விளக்கு மின்ன, அருகில் ஒரு லாரி முக்கியபடி சாலையை கடக்க, சிவப்பு வண்ணம் மாறியது. அந்த லாரியுடனே கடந்து விடலாம் என்று நான் நகர, போக்கு வரத்து காவல் துறையிடம் சிக்கினேன். 'என்ன நீங்க அப்படியே வந்தா, ரோட் கிராஸ் பண்றவுங்க, எப்படி போவாங்க', ஐம்பதா  நூறா என்று என் மனம் கணக்கு போட,'அடுத்த முறை இப்படி செய்யாதிங்க,போங்க' என்றார்.நல்ல போலீஸ்!  
இந்த மாத க்ரஷ் - பார்வதி!  

முகநூலில் ரசித்த படம் 
(லைக் ஏதும் போடாமலேயே சுட்டு விட்டேன் )

ஒரு பொறியியல் மாணவனின் பார்வையில் வாழ்க்கை. (பொறியியலில் அரியர் வைத்தவர்களாலே மட்டும் இதை எளிதில் புரிந்து கொள்ள முடியும்)   
டிஸ்கவரி புக் பேலஸ்


பதிவர் திருவிழா குறித்த வாராந்திர ஆலோசனைக் கூட்டத்தில் கலந்து கொள்ள டிஸ்கவரி புக் பேலஸ் சென்றிருந்த பொழுது காவல் துறை எனது மற்றும் ஆரூர் மூனா செந்தில் அவர்களின் வண்டியை 'No Parking' ஏரியாவில் நிறுத்தியதாக தூக்கியது குறித்து கணேஷ் சார் எழுதிய பதிவு இங்கு சொடுக்கவும்.

இதில் நான் மட்டும் காவல் துறை வாகனத்தில் வண்டியை மீட்க சென்றேன், அரூர் மூனா செந்தில், KRP செந்திலுடன் இரு சக்கர வண்டியில் எங்கள் முன் கே.கே. நகர் காவல் நிலையம் சென்றார். அந்த காவல் துறை வாகனத்தில் சென்ற பொழுது என்ன ஒரு ராஜ மரியாதை, என்னைப் பார்பவர்கள் கண்ணில் பயம் இருந்தது. மற்றொருவன் வண்டியை தூக்க, நான் போலீஸ் என்று நினைத்து அவன் என்னிடம் வந்து 'சார்' என்று கெஞ்சினான், என் அருகில் வண்டியை ஒட்டிய நிஜ போலீசிடம் அவனை நான் செலுத்தினாலும், என் மனதில் ஒரு எண்ணம் தோன்றியது  'ஏன் நம்ம  IPS படிச்சு ஒரு வால்டர் வெற்றிவேலாவோ இல்ல சேதுபதியாவோ இல்ல அன்புச் செல்வனாவோ  இல்ல ராகவனாவோ இல்ல  ஈஸ்வரசிங்கமாவோ ஆகக்கூடாது?'    

தமிழ் இனி !

ஒரு பிரபல கைபேசி விற்பனை நிலையத்தில் (பேர் சொல்ல மாட்டேன்) கதவில் இருந்த அறிவிப்பு.

Please                                                                     தயவு செய்து 
remove your                                                          உங்கள் காலனிகளை
footwear outside                                                  வெளியே விடவும்.              

பின் ஒரு நல்லவர் சுட்டிக் காட்ட அந்த பிழை திருத்தப் பட்டது. நான் அவன் இல்லிங்கோ!

திருமதி தமிழ்! 

நேற்று வெளியான தந்தியில் பார்த்து, இதயம் துடிக்க மறுத்த செய்தி.

 
டச் குழாய் 

சில நாட்கள் முன்பு தொலைக்காட்சியில் பார்த்து வியந்த விளம்பரம் ஒன்று. இதுவரை சென்ஸர் மூலம் செயல் பட்ட குழாய்களை மட்டும் கண்டுள்ளோம், இப்பொழுது டெல்டா என்ற நிறுவனம், தொட்டால் நீர் வரும், மீண்டும் தொட்டால் நீர் வராமல் மூடிக்கொள்ளும் குழாய்களை அறிமுகம் செய்துள்ளனர். அந்த முப்பது நொடி வீடியோவை கீழே இணைத்துள்ளேன்.
குறும் படம்

அலுவலக நண்பரான சுரேஷ் நடித்து இயக்கிய த்ரில் குறும்படம் சாவி, நேரம் கிடைப்பின் பார்த்து ரசியுங்கள்.   

பதிவர் திருவிழா 

பதிவர் திருவிழா பற்றிய தகவல்களை அறிய தமிழ் வலைப்பதிவர்கள் குழுமத்தில் பாலோயராக  தொடருங்கள்.

36 comments:

 1. ஏன் நம்ம IPS படிச்சு ஒரு வால்டர் வெற்றிவேலாவோ இல்ல சேதுபதியாவோ இல்ல அன்புச் செல்வனாவோ இல்ல ராகவனாவோ இல்ல ஈஸ்வரசிங்கமாவோ ஆகக்கூடாது?' //

  அடடா உடனே போலீசுல சேர்ந்துருங்க, கள்ள துப்பாக்கி வேணும்னா நானே வாங்கி தாரேன், சூது கவ்வும் படத்தில் பிரம்மா மாதிரி உங்க இடுப்புல நீங்களே சுட்டுக்கலாம்.

  ReplyDelete
  Replies
  1. ஹா ஹா ஹா . அட நான் பலரை சுடனும்னு சொல்லுங்க சார் .
   முதல் வருகைக்கு மிக்க நன்றி

   Delete
 2. இதயம் துடிக்க மறுத்த செய்தி உட்பட தேன் மிட்டாய் நல்ல சுவை... விரைவில் (சிங்கம்) ஆசை நிறைவேற வாழ்த்துக்கள்... உடம்பை தேத்துங்க...! ஹிஹி

  டச் குழாய் இன்று மிகவும் தேவை தான்...

  ReplyDelete
  Replies
  1. //உடம்பை தேத்துங்க...!// அடுத்த கட்டம் ஜிம்மில் சேருவதுதான்

   Delete
 3. தேன் மிட்டாய் நல்ல சுவை.....

  ஐ.பி.எஸ்..... கனவு மெய்ப்பட வாழ்த்துகள்......

  ReplyDelete
  Replies
  1. அது பகல் கனவு . மிக்க நன்றி சார்

   Delete
 4. குறும்படம் பார்த்தேன்....

  நல்ல முயற்சி.... ராகேஷ் - ஷேகர்! ரசித்தேன்....

  ReplyDelete
  Replies

  1. மிக்க நன்றி சார் , நண்பர் சுரேஷ் நிச்சயம் மகிழ்வார்

   Delete
  2. எனது நண்பர் தனசேகரரிடம்
   உங்கள் பதிவை காண்பிக்கிறேன்!!
   மிக்க நன்றி ; உங்கள் வாழ்த்துகளுக்கு !!!

   Delete
 5. நிறைய விஷயங்கள் சுவாரசியம்

  ReplyDelete
  Replies
  1. மிக்க நன்றி முரளிதரன்

   Delete
 6. ஹலோ, நாங்களும் இஞ்சினியர் தாம்பா.. :) சர்க்யூட்சூப்பர்.

  ReplyDelete
  Replies
  1. யோவ் இதெல்லாம் அநியாயத்துக்கு அநியாயம்யா... கைய கால வச்சிக்கிட்டு சும்மா இருக்க முடியல.... :-)

   Delete
  2. மீண்டும் உங்களை கருத்துரை வழியாக காண்பதில் மிக்க மகிழ்ச்சி

   Delete
 7. ஒரு குறுகிய காலத்துக்கு என் வால் பேப்பரிலும் பார்வதியே.. இப்போ மீண்டும் யார்னு உங்களுக்கே தெரியும். ஹிஹி.

  ReplyDelete
  Replies
  1. ஹா ஹா ... விரைவில் உங்கள் கைகள் குணமாகி, நஸ்ரியாவுடன் 'ஆவிப்பா'வாக வளம் வர வேண்டுகிறேன்

   Delete
 8. பதிவர் திருவிழா பற்றிய தகவல்களை அறிய தமிழ் வலைப்பதிவர்கள் குழுமத்தில் பாலோயராக தொடருங்கள்.
  >>
  தம்பி சொல்லிட்டா அப்பீல் ஏது?!

  ReplyDelete
  Replies
  1. இந்தத் தம்பி சொல்லை தட்டாத அக்காவிற்கு நன்றிகள் கோடி

   Delete
 9. தேன் மிட்டாய் சுவை தேன்!

  ReplyDelete
  Replies
  1. மிக்க நன்றி ஐயா. உங்கள் பயணம் சிறக்க வாழ்த்துக்கள்

   Delete
 10. நம்ம சீனுவுக்கு எதோ சக்தி இருக்குங்க, அவர் காதல் கடிதம் பரிசு போட்டி துவக்கி சில நாட்களில், தந்தி சேவையை நிறுத்திட்டாங்க.
  >>
  அடடா! இதான் உண்மையா?! இது எனக்கு தெரியாம போச்சே!!

  ReplyDelete
 11. - சில விஷயங்களைத் திருத்த முடியாது ரூபக். குடியிருக்கும் ஏரியாவை நிறையப் பேர் காலணின்னு எழுதற மாதிரி இவங்க காலனியாக்கிட்டாங்க. சில ஹோட்டல்கள்ல இப்பவும் நான் ‘ஆணியன் தோசை’ன்னு எழுதி வெச்சிருக்கறதப் பாத்துட்டு ‘எஸ்’ஸாயிடறேன். ஹா... ஹா...!

  - அந்தப் படத்தை முதல் நாள் முதல் காட்சி பாத்தப்பவே எதையும் தாங்கற இதயம் எங்களுக்கு வந்தாச்சுல்ல... ஹெஹ்ஹே...!

  - போலீசாகணும்னு ஆசைப்பட்டா முதல் தகுதியா பெரிய தொப்பையை வளர்த்துக்கணும். உனக்கு நாளாகும்னு நெனக்கிறேன். மீ ஆல்ரெடி ரெடி! ஹி... ஹி...!

  -என்னமோ போலேய்...! ஆவியைப் பா எழுத வெக்கற பொண்ணைப் பாத்ததுக்குப் பெறகு எனக்கு இந்தப் பார்வதியப் பாக்கவே பிடிக்கலயப்பேய்...!

  -சென்சார் மூலம் சினிமாதான் செயல்பட்டு திரைக்கு வரும். குழாய்கள் போல விஷயங்கள் செயல்படுவது சென்ஸர் காரணமாக என்றல்லவா இத்தனை நாள் நினைத்திருந்தேன்! என்ன பிழை யான் செய்தேன்!

  ReplyDelete
  Replies
  1. // போலீசாகணும்னு ஆசைப்பட்டா முதல் தகுதியா பெரிய தொப்பையை வளர்த்துக்கணும். உனக்கு நாளாகும்னு நெனக்கிறேன். மீ ஆல்ரெடி ரெடி// ஹா ஹா ஹா

   //சென்சார் மூலம் சினிமாதான் செயல்பட்டு திரைக்கு வரும். // திருத்திட்டேன் சார்

   கருத்துரைக்கு மனமார்ந்த நன்றி

   Delete
 12. தங்களை ஒரு தொடர்பதிவுக்கு அழைத்திருக்கிறேன். http://rajiyinkanavugal.blogspot.in/2013/08/blog-post.html இங்க வந்து சிறப்பிக்குமாறு வெற்றிலை, பாக்கு, பூ, பழம். இனிப்போடு ஒண்ணே முக்கா ரூபா பணமும் வச்சு கூப்பிடுறேன் சகோ!

  ReplyDelete
  Replies
  1. ஹா ஹா ஹா. அழைப்பை கண்டேன், விரைவில் எழுதுகிறேன். எனக்கு வெற்றிலை மற்றும் பாக்கு உதவாது, வேறு ஏதேனும் புதுவிதமாக தாருங்களேன் :)

   Delete
  2. அழைப்புக்கு வெற்றிலை, பாக்கு, பழம், பூ, இனிப்பு வச்சுதான் கூப்பிடுவாங்க. விசேஷத்தன்னிக்குதான் “பலமா” கவனிப்பாங்க.

   Delete
  3. அப்பா விசேஷம் என்னைக்குன்னு சொல்லுங்க, முதல் ஆளாக வந்துடறேன்

   Delete
 13. இனி நீங்க ரூபக் IPS, தான் தல...

  ReplyDelete
 14. நன்றி ருபக் நமது லிங்கை பகிர்ந்தமைக்கு!
  சாவி குறும்படத்தை இயக்கியது ; எனது நண்பர் தனசேகர்.
  உங்கள் ப்லொகில் உலக சினிமா பதிவில் ;
  நான் பார்த்த படங்களை
  பற்றி நீங்கள் அழுதுகிறீர்களா என்று
  ஒரு கண் எனக்கு எப்போதுமே உண்டு !!

  ReplyDelete
  Replies
  1. மிக்க நன்றி சுரேஷ் ...இது போன்ற ஆதரவு தொடர்ந்து கிடைக்க என் சினிமா விமர்சனம் தொடரும்

   Delete