Wednesday, July 17, 2013

ஊர்சுற்றல் - மெட்ராஸ் டு தனுஷ்கோடி via குற்றாலம்.

இதுவரை அரை ட்ரௌசருடன் பயணம் செய்த நான் (டெல்லி வரை நம்ம ட்ரௌசர் போய் இருக்கு), முதல் முறை முழு கால் சட்டையுடன் தாம்பரம் ரயில் நிலையத்தில் என் பயணத்தை தொடங்கினேன். எப்பொழுதும் தனிமையில் பயணிக்கும் எனக்கு துணை வரும் சுஜாதாவை இம்முறை நிராகரித்தேன், என்னுடன் என் நண்பன் வருவதால், அவன் எழும்பூரில் ரயில் ஏறி தன்னிடம் அடையாள அட்டை இல்லாததால், என் வருகைக்காக TTEயுடன் ஆவலாக காத்திருந்தான். அந்த ரணகளத்தில் கூட, பெயர் பட்டியலை 'F' 20 டு 25 க்காக ஆராய்ந்த எனக்கு ஏமாற்றம் தான். அது எப்படி சார் படத்துல மட்டும் நல்ல அழகான அக்காங்க எல்லாம் ட்ரைன்ல வர்றாங்க, நிஜத்துல வெறும் ஆன்ட்டிக்களும் பாட்டிக்களும் தான் வராங்க.

தனுஷ்கோடி வங்காள வரிகுடா
பயணக் குழு
காலை ஒன்பது மணிக்கு நெல்லை எக்ஸ்பிரஸ், திருநெல்வேலி சந்திப்பில் முதல் பிளாட்பாரத்தில் தரை தட்டியது. நண்பன் வீடு சென்றவுடன் தான் தெரிந்தது நான் அதை மறந்தது. நீங்க எல்லா பயணத்திலும் எதையாவது மறக்கலாம், ஆனால் நான் என்னுடைய எல்லா பயணத்திலும் ஒன்றை மட்டும் தான் மறப்பது வழக்கம். Tooth brush! அங்கிருந்து கிளம்பி நெல்லை ஜங்ஷன் அருகில் இருக்கும் பாரதி பவனில் சிற்றுண்டி முடித்து விட்டு, மணி முத்தாறு அருவி நோக்கி பயணித்தோம். சென்ற ஆண்டு இதே நேரத்தில் மணி முத்தாறு சென்றிருந்த சமயம் எங்க வீட்டு ஷவரில் வருவதை விட குறைவான நீர் அருவியில் வழிந்தது பெரும் ஏமாற்றம், பின் வண்டியை பான தீர்த்த அருவி நோக்கி செலுத்தினோம்.இம்முறை மணி முத்தாறு ஏமாற்றினால் செல்ல பான தீர்த்தமும் இல்லை என்ற அச்சத்துடன் தான் சென்றோம். புலிகளை மனிதர்களிடம் இருந்து காக்க அது மக்கள் பார்வையில் இருந்து மூடப்பட்டதாக கேள்விப்பட்டேன்.


மணி முத்தாறு அருவி - சென்ற ஆண்டு
ஓட்டுனர் அருகில் நான் தான் இருந்தேன், திடீரென்று 'தண்ணி வச்சிருந்தா குடிசிடுங்க தம்பி' ஏன் இவர் இப்படி சொன்னார் என்று யோசிப்பதற்குள் 'செக் போஸ்ட்ல பாட்டில் பார்த்தா வாங்கிட்டு தர மாட்டாங்க' என்றார். நாங்கள் எல்லோரும் அக்மார்க் தங்க கம்பிகள்..சி.. தம்பிகள் என்று புரியவைத்துவிட்டேன். செக் போஸ்டில் எங்கள் பைகளை ஆட்டி ஆட்டி சோதித்த காவலரின் திறமையை கண்டு வியந்தேன்.

மணி முத்தாறு அருவி - இம்முறை
மணி முத்தாறு இம்முறை ஏமாற்ற வில்லை, அருவியில் நீர் நன்றாக கொட்டியது. நாகலாபுரம், கோனே என்று தனிமையில் அருவிகளை ரசித்து குளித்த எனக்கு அந்த கூட்டத்தில் கொஞ்சம் இயல்பாக இருக்கமுடியாதது வருத்தம்.

அங்கிருந்து குற்றாலம் நோக்கி புறப்பட்டோம், பழைய குற்றாலம் சென்றால் கூட்டம் குறைவாக இருக்கும் என்று அங்கு சென்றோம், நீர் பெருக்கெடுத்து ஓட, மக்கள் கூட்டமும் அலை மோத, குளிக்க லைன் நிற்பதைக் கண்டு நொந்து, போட்டோவாச்சு எடுக்கலாம் என்று சென்றால், காவல் துறை விரட்டியது.

பழைய குற்றாலம்
எண்ணெய் மசாஜ் செய்து கொண்டு லைனில் நின்று குளிக்க சென்ற என் நண்பன், அவன் அருகில் இருந்த குடிமகன் கத்த, காவல் துறை தடியால் இவனை அடிக்க ஓடி வந்துவிட்டான். இப்படி வரிசையில் நின்று, சில நிமிடங்கள் மட்டுமே குளிக்க முடிவதற்கு என்ன காரணம், மக்கள் தொகை பெருக்கமா இல்லை வெளி ஊர்களில் இருந்து குற்றாலத்தின் மேல் என்னைப் போல் மோகம் கொண்டு வரும் மக்களா?

பழைய குற்றாலம்
அங்கிருந்து ஐந்தருவி சென்றோம் , மாலை ஆறு மணி தாண்டியதால் கூட்டம் குறைவு, லைன் இல்லை என்று நிம்மதியாக குளிக்கச் சென்றேன். என்ன ஒரு அடி! அடிச்சது போலீஸ் இல்லைங்க, அந்த அருவி தான், குளிர்ந்த தூய்மையான நீர், 'குளிச்சா குற்றாலம் ' என்று என் நண்பன் பாட்டு பாட, எங்கள் உள்ளாச குளியல் இனிதே அரங்கேறியது.

அங்கிருந்து புறப்பட்டு, அடம் பிடித்து பார்டர் பரோட்டா சாப்பிட செங்கோட்டை சென்றோம். சாப்பாடு பற்றிய கருத்துகள் தனி பதிவாக வரும் என்பதை தாழ்மையுடன் தெரிவித்துக் கொள்கிறேன்.

பின் நெல்லை திரும்பி, பல குழப்பங்களுக்கு பின் ராமேஸ்வரம் நோக்கி பயணிக்க தொடங்கினோம். மதுரை சென்று அங்கிருந்து ராமேஸ்வரம் பேருந்து பிடிப்பதுதான் திட்டம். மூவர் அமரும் சீட்டில், கால் நீட்டி தூங்கி, மூன்று மணி நேரத்தில் மதுரை வந்தோம். மதுரையை ஏன் தூங்காநகரம் என்று சொல்லுகிறர்கள் என்று அன்றுதான் உணர்ந்தேன், நடு ராத்திரி 2:30 மணி, மக்கள் கூட்டம் எறும்புகள் போல் சுறுசுறுப்பாக இருந்த பெரியார் பேருந்து நிலையம். கூட்டத்தை கண்டு உடன் வந்த வடக்கு நண்பர்கள் அஞ்ச, வேறு வழி இன்றி டாக்ஸி பிடித்து ராமேஸ்வரம் சென்றோம். அம்மாவசை என்பதால், கோவிலில் கூட்டம் அதிகம் என்று ஓட்டுனர் சொல்ல, நேராக தனுஷ்கோடி தேடி சென்றோம்.

பாம்பன் பாலம்
சென்ற ஆண்டு சீனு எழுதிய பதிவுகளை படித்து எழுந்த ஆர்வம், தனுஷ்கோடி பற்றி அவர் எழுதியதை படியுங்களேன் நாடோடி எக்ஸ்பிரஸ் - தனுஷ்கோடி .அழகாக எழுதி இருப்பார், அதை விட நன்றாக தனுஷ்கோடி பற்றி எழுத முடியும் என்று எனக்கு நம்பிக்கை இல்லை.அந்த வண்டியை மறைத்த நாங்கள்
ஒரு மீன் பாடி வண்டியை மாற்றி அமைத்த லாரி போன்ற வாகனத்தில், இருபத்து ஐந்து பேர் தொற்றிக்கொள்ள, நாங்கள் பின்னால் அமர்ந்து, மணலிலும் கடல் நீரிலும் மாறி மாறி சென்ற பயண அனுபவத்தை என்றும் மறக்க முடியாது. ஒரு ரோலர் கோஸ்டரில் கூட அத்தனை த்ரில் கண்டதில்லை. அந்த வண்டி பாதி வழியில் நிற்க, அந்த நேரத்தில் ஒரு நாடகம் அரங்கேற்றி(படங்கள் கீழே), பின் வாகனத்தை தள்ளி ஸ்டார்ட் செய்து, ஒரே குஷி தாங்க.
பழுதாகி நின்ற வண்டி
தீவிரவாதிகளாக மாறிய எம் நண்பர்கள்
கடல் உப்பு காற்றும், வெய்யிலும் உடலை அறிக்க, குளிக்க நல்ல நீர் தேடி அலைந்தோம். முன்னாள் குற்றாலத்தில் உள்ளாசக் குளியல் நினைவிற்கு வர, இன்றோ நல்ல தண்ணீர் கிடைக்க தனுஷ்கோடியில் இருந்து ராமநாதபுரம் வரை வந்துவிட்டோம். எங்கள் விடா முயற்சியால் ஒரு கண்மாயை கண்டு பிடித்தோம், அங்கு தான் சார் தனிமை கிட்டியது. புதுப்பிக்க பட்டு, ஆற்று மணல் மெத்து மெத்து என இருக்க, நீர் சில்லென்று இருக்க, ஒரு ஆனந்த குளியல் போட்டதில் ஆனந்தம், பரமானந்தம், பேரானந்தம். அட, ஆனந்த குளியல் தெரியாதா உங்களுக்கு?

ஆனந்தக் குளியல் ! இங்குதான்.
மீண்டும் மதுரை வழியே நெல்லை திரும்பினோம். நெல்லையை அடுத்த பதிவில் சுற்றுவோம். டாட்டா...

பின் குறிப்பு:
நான் எழுதிய சென்ற பதிவு dash boardஇல் தெரியாத காரணத்தால் அதன் இணைப்பை இங்கே பகிர்கிறேன்.காதலிக்கு எழுத நினைத்த காதல்கடிதம்

22 comments:

 1. பயண அனுபவம் படிக்க இனிமையாக இருந்தது!

  ReplyDelete
  Replies
  1. முதலில் வருகை தந்து பாராட்டிய தங்களுக்கு மிக்க நன்றி :)

   Delete
 2. ரசிக்க வைக்கும் பயண அனுபவம்... தொடர்க...

  ReplyDelete
 3. அடுத்த முறை செல்லும் போது வழியே திண்டுக்கல் என்னும் ஊர் இருப்பதை மறக்க வேண்டாம்...! ஹிஹி...

  ReplyDelete
  Replies
  1. திண்டுக்கல் ரயில் நிலையத்தில் என் காலை படித்த பொழுது தங்கள் நினைவுகள் தான்... போதிய நேரமில்லை, அடுத்த முறை திண்டுக்கல் தலப்பாக்கட்டியில் தங்களுடன் உணவருந்துவேன் என்று எண்ணுகிறேன் :)

   Delete
 4. பயண அனுபவம் படங்களுடன் படிக்கையில் மேலும் சுவாரஸ்யம்!

  ReplyDelete
  Replies
  1. படங்களுடன் பயணத்தை ரசித்த கணேஷ் சாருக்கு நன்றி

   Delete
 5. சீனு தான் முன்னோடியாஆஆஆ. சீனுக்கு ஒரு சிச்யன் சிக்கியாச்சு டோய்... தலப்பாகட்டில நமக்கு பில் தனபாலன் அண்ணாச்சி தருவாருன்ற முக்கிய சமாசாரத்த சொல்ல மறந்துட்டியேஏஏஏஏ.,.

  ReplyDelete
  Replies
  1. ஆமாம் சார்...நான் முதலில் வாசித்த தமிழ் பதிவு அதுதான்...

   தனபாலன் நம்மல திண்டுக்கல்ல பில் கட்ட விடுவாரா என்ன... அவர்தான் விருந்தோம்பல கரைச்சி குடிச்சி, கடைபிடிப்பவராச்சே....

   Delete
 6. பார்டர் பரோட்டா பற்றிய பதிவை விரைவில் எதிர்பார்கிறேன்..

  நல்ல அருமையான பயண அனுபவம் ரூபக், இது போன்ற பயணங்கள் வருடம் முழுவதும் வாய்த்தாலும் சலிக்காமல் சுற்றுவதற்கு தயார், விரைவில் நாங்களும் குற்றாலும் செல்கிறோம், அந்த பயண நாளை தான் எதிர்பார்த்துள்ளோம்...

  தனுஷ்கோடி.. அப்பா என்ன ஒரு அமைதியான ரம்யமான அதே நேரத்தில் ஒரு மிகப் பெரும் அழிவை சந்தித்த இடம்...

  மீண்டும் அந்த இடத்திற்கு ஒருமுறை செல்ல வேண்டும்... அங்கே நமக்கு தெரியாத விஷயங்கள் இன்னும் பல உள்ளன...

  ReplyDelete
  Replies
  1. //பார்டர் பரோட்டா பற்றிய பதிவை விரைவில் எதிர்பார்கிறேன்..// விரைவில் தயாராகிவிடும்

   தனுஷ்கோடி தனிமையில் சென்று அந்த அமைதியை ரசிக்க வேண்டிய இடம், டெம்போ காரர்கள் படுத்திய அவசரத்தில் எதையும் முழுமையாக பார்க்க முடியாதது வருத்தம்.

   உங்கள் குற்றாலம் பயணம், கூட்டமின்றி சிறப்பாய் அமைய வாழ்த்துக்கள் :)

   Delete
 7. F 20-25

  நீங்க போன ூர் அப்படி. காசி ராமேஸ்வரம் னு போயிட்டு கண்ணுக்கழகாபொண்ணுங்கள எதிர்பார்க்கலாமா.. தப்பில்லே?

  ReplyDelete
  Replies
  1. சென்னைல இருந்து நெல்லை போற ட்ரைன்ல இதக்கூட எதிர் பார்க்கலன்னா?

   Delete
 8. நான் என்னுடைய எல்லா பயணத்திலும் ஒன்றை மட்டும் தான் மறப்பது வழக்கம் Tooth brush!
  >>
  டெய்லியும் அந்த வேலையை செய்யுறவங்களுக்கு மறக்காது. ஆனா, போகும் ஊருல நான் நல்லவனாக்கும்ன்ற சீன் போட நினைக்குற ஆளுங்களுக்கு இப்படிதான் மறக்கும்.

  ReplyDelete
  Replies
  1. ஹா ஹா. சகோ என் காலை வார ஆரம்பித்து விட்டீரே... சபாஷ் !

   font size மாற்றி publish செய்வதில் பிரச்சனை இருந்ததால், வழக்கம் போல் default font இல் வெளியிடவேண்டிய கட்டாயம். விரைவில் சரி செய்கிறேன....

   Delete
 9. //அது எப்படி சார் படத்துல மட்டும் நல்ல அழகான அக்காங்க எல்லாம் ட்ரைன்ல வர்றாங்க, நிஜத்துல வெறும் ஆன்ட்டிக்களும் பாட்டிக்களும் தான் வராங்க.//

  இதே மாதிரி ஏதாவது ஒரு பொண்ணும் சொல்லிருக்கும் ...! அங்கிள்ஸ் மட்டுமே வாராங்கன்னு ...!

  ReplyDelete
  Replies
  1. //இதே மாதிரி ஏதாவது ஒரு பொண்ணும் சொல்லிருக்கும் ...! அங்கிள்ஸ் மட்டுமே வாராங்கன்னு ...!// அப்படி சொன்ன பொன்னயாச்சு கண்ணுல காட்டுங்கையா....

   Delete
 10. நல்ல பயணக் கட்டுரை... படங்களும் நன்று. தொடரட்டும் பயணங்கள்.....

  ReplyDelete
  Replies
  1. மிக்க நன்றி வெங்கட் சார்...

   Delete
 11. நல்ல இடம் குற்றாலம் தொடரட்டும் பயணக்கட்டுரை.

  ReplyDelete
  Replies
  1. தங்கள் ஆதரவுடன் பயணக் கட்டுரைகளும் தொடரும்

   Delete