பல தயக்கங்களுக்கு மத்தியில், பதிவர் திருவிழா நடத்தலாம் என்று முடிவாகி, அதற்கான ஆலோசனைக் கூட்டங்கள் நடக்கத் தொடங்கின. கே.கே. நகர் சிவன் பூங்காவில் நடந்த முதல் ஆலோசனைக் கூட்டத்தை என்னால் மறக்க முடியாது.
முதல் காரணம் கணேஷ் சார், சிவா, ஸ்கூல் பையன், அஞ்சா சிங்கம், அரசன், கவியாழி, KRP செந்தில், மதுமதி, புலவர் அய்யா, ஜெய், அரசன் போன்ற பெரும்பாலான பதிவர்களை நான் முதலில் சந்தித்தது இங்குதான்.
இரண்டாவது காரணம் திருவிழாவிற்கு பிள்ளையார் சுழி போட்டு பணிகள் தொடங்கியதும் இங்குதான்.அதன் பிறகு பெரும்பாலான ஆலோசனைக் கூடங்கள் நடந்தது டிஸ்கவரி புக் பேலஸில் தான். அழகாக திட்டங்கள் தீட்டப் பட்டு, குழுக்களாக பிரிந்து, விழாப் பணிகள் சிறப்பாக நடந்தன.

ஆகஸ்ட் 31அன்று அலுவலகத்தில் விடுப்பு எடுத்து விட்டு, பதிவுலக தோழமைகளை காண அன்று அதிகாலையே வடபழனி வந்து விட்டேன். பதிவர்கள் தங்க வைக்கப் பட்ட விடுதிக்கு நான் வந்தவுடன் முதலில் நான் சந்தித்த பதிவர் ராஜபாட்டை என்ற பெயரில் பதிவு எழுதி வரும் ராஜா அவர்கள்.
சதீஷ் சங்கவி, உணவுலகம் சங்கரலிங்கம், கற்போம் பிரபு கிருஷ்ணா, இரவின் புன்னகை வெற்றிவேல், பிளாசபி பிரபாகரன் இவர்களின் முதல் அறிமுகம் கிடைத்தது. கோகுல், நக்கீரன், திண்டுக்கல் தனபாலன், குடந்தையூர் சரவணன், வீடு சுரேஷ் குமார், வெளங்காதவன் ஆகியாரையும் சனியன்றே சந்தித்தேன்.
பின்னர் தன் மனைவி மகனுடன் வந்த 'தம்பி' சதீஷ் செல்லதுரை அவர்களின் அறிமுகமும் கிடைத்தது. தனக்கு எந்த வகையிலும் சம்மந்தம் இல்லாத சந்திற்பிக்கு கணவனுக்காக வந்து கலந்து கொண்ட ரேவதி சதீஷ் அக்காவின் காதலும் அன்பும் என்னை பிரம்மிப்பில் ஆழ்த்தியது.

மாலை தமிழ் வாசி பிரகாஷ், கோவை நேரம் ஜீவா, அகிலா, எழில் மற்றும் கோவை ஆவி ஆகியோரை சந்தித்தேன். விழா அன்று காலை அடையாள அட்டை கொடுக்கும் பணியில் இருந்த பொழுது தந்த அனைத்து பதிவர்களும் என்னைக் கடந்து சென்ற பொழுதும் என்னால் அவர்களுடன் பேசி புகைப் படம் எடுக்க முடியாமல் போனது வருத்தமே.
நண்பர் ராம் குமார், பாசித், ராஜி அக்கா, ரஞ்சனி அம்மா, வெங்கட் நாகராஜ், சேட்டைக்காரன், கே.ஜி. கௌதமன், உண்மைத்தமிழன், ரமணி அய்யா, என்ற குறிப்பிட்ட சிலருடனே அறிமுகம் செய்து கொள்ள முடிந்தது.( நான் அறிமுகம் செய்து கொண்ட யாரேனும் பெயர் விடு பட்டிருந்தால், இந்தச் சிறுவனின் நியாபகத் திறனை மன்னியுங்கள்).
இந்தப் பதிவில், விழாவில் வந்து கலந்து கொண்டு விழாவை சிறப்பித்த அனைத்து தோழமைகளுக்கும் நன்றி சொல்கிறேன். மேலும் இந்த விழாவை சிறப்புற நடத்த தம் சொந்தப் பணிகளுக்கு மத்தியில் அயராது உழைத்த விழாக் குழுவினர்களுக்கு என் பாராட்டுக்கள்.
பல வருடங்கள் கழித்து மேடையில், கண்மணி குணசேகரனிடம் இருந்து அந்த நினைவுப் பரிசை வாங்கிய அந்த நொடி மனம் கிங்பிஷர் ப்ளைட் ஏறி வானில் பறந்தது.
எந்த விழாவானாலும் குறைகளும் நிறைகளும் இருக்கத் தான் செய்யும். வாழ்ந்தாலும் ஏசும் தாழ்ந்தாலும் ஏசும் உலகம் தானே இது. அம்மா செய்த சமையல் சுவையாக இல்லாவிடில் 'அம்மா நல்லா சமைக்கற, உப்பு மட்டும் கொஞ்சம் சேர்த்துக்கோ' என்பது போல் அன்புடன் ஆலோசனைகள் கூறினால் அம்மா அன்புடன் சமைக்க ருசி கூடும்.
எத்தனையோ விஷயங்கள் மற்றும் அனுபவங்கள் எழுத இருப்பினும், எங்கும் பதிவர் திருவிழா பற்றிய பதிவுகளே இருப்பதால், என் பதிவை சுருக்கமாக முடித்துக்கொள்கிறேன். எனது பதிவுலக நட்புக்களைக் கூட்டிய இந்த தமிழ் வலைப் பதிவர் திருவிழா அடுத்த ஆண்டும் சிறப்புடன் பூக்கும் என்ற ஆவலுடன்.
| Tweet | ||