Friday, August 2, 2013

முதல் பதிவின் சந்தோசம் - தொடர் பதிவு

முன்னுரை 

சமீபத்தில் 'எனது முதல் கணினி அனுபவம்' என்று ராஜி அக்கா தொடங்கிய தொடர் அலையில் திண்டுக்கல் தனபாலன் மூழ்கிய பின், அவரிடம் இருந்து 'முதல் பதிவின் சந்தோசம்' என்று பெயர் மாறி, அந்த அலை ராஜி அக்காவை தாக்கி, அவர் அந்த அலையை என் மீது திருப்ப, நான் எழுதும் பதிவு இது.

பொருளுரை 

அலுவலகத்தில் அறிமுகமான சீனு, தமிழில் எழுதுவது அறிந்து, முகநூலில் அவர் தோழமை பெற்றேன், முகநூல் வழியாக 'திடங்கொண்டு போராடு' அறிமுகம் கிடைத்தது, அவர் எழுதிய  தனுஷ்கோடி அழிந்தும் அழியாமலும் என்னை மிகவும் கவர்ந்தது. எப்படி தமிழில் டைப் செய்வது என்று கேட்டு அறிந்தேன். அன்று தான், தட்டச்சு இருந்தால் மட்டுமே எழுத முடியும் என்ற என் எண்ணம் மாறியது.

ஜனவரியில் ஒரு நாள் புத்தகக் கண்காட்சிக்கு சீனு என்னை அழைத்துச் செல்ல, அங்கு விகடன் 'வட்டியும் முதலும்' புகழ் ராஜீவ் முருகன் சிறப்பு பேச்சாளராக வந்திருந்தார். அவர் 'கதைக்கு எங்கும் தேடிச் செல்ல வேண்டாம், சுற்றி உள்ள மக்களைப் படித்தால் போதும்' என்று சொன்னார். அது என் மனதில் எதோ செய்தது. ஏன் நம்மளும் ஒரு கதை எழுதக் கூடாது என்று யோசித்து, கூகுள் தந்த விலையில்லா தளத்தில் 'கனவு மெய்ப்பட' என்று பெயர் சூட்டி உருவானது என் தளம். என்ன கதை எழுதலாம் என்று யோசித்த பொழுது தான், உடன் பணி புரிந்த லலிதா அக்கா சொல்லிய அவர் தம்பியின் கதை நினைவில் வர, அதை பட்டி பார்த்து, 'தொ(ல்)லைபேசி' என்ற தலைப்புடன் என் முதல் கதையாக ஜனவரி 28-2013 அன்று வெளியானது. 

என் முகநூலில் 'நான் எழுதும் முதல் கதை' என்று அந்த லிங்கை பகிர்ந்து பொழுது,எனக்குள் எதோ ஒன்று பெரிதாய் சாதித்த மகிழ்ச்சி தோன்றியது. எனக்கு தெரிந்த அனைவரையும் படிக்கச் சொல்லி தொல்லை  செய்தேன், ஒரு சிலர் லைக் கொடுத்தனர். திடீரென்று அடுத்த நாள் நிறைய கருத்துரைகள் வந்து என் moderationனுக்காக காத்திருந்தன. அதுவரை என் வாழ்வில் அறியாத பெயர்கள், யார் இவர்கள் என்று ஒரே குழப்பம். 

(நண்பர்) ஹாரி என்பவரிடம் இருந்து 'please add follower widget in your blog ' என்பது தான் எனக்கு கிடைத்த முதல் கருத்துரை. பின் பழனி கந்தசாமி, பால கணேஷ், ஞானம் சேகர், ரஞ்சனி நாராயணன், சசிகலா, உஷா அன்பரசு, ரூபன், ராஜராஜேஸ்வரி இவர்கள் அனைவரும் 31ஆம் தேதி கருத்துரையிட்டவர்கள். சுரேஷ் மற்றும் வெங்கட் நாகராஜ் பிப்ரவரி ஒன்றாம் தேதி கருத்துரையிட்டனர். இவர்களுக்கு நான் எழுதியது எப்படி தெரியும் என்று என்னுள் தோன்றிய கேள்விக்கு ஒரு பின்னூட்டில் விடை இருந்தது.
  
'Comment moderation, word verification' அவற்றை பற்றி திண்டுக்கல் தனபாலன் சில கருத்துக்கள் சொல்லி இருந்தார்.

 பிழைகளை திருத்த சொல்லியும் கருத்துரையிட்டிருந்தனர். நாம் எழுதுவதில் இருக்கும் பிழை ஏனோ நம் கண்ணில் தெரிவதில்லை. லலிதா அக்கா தான் அவற்றை திருத்த எனக்கு உதவினார். ஏழு ஆண்டுகள் கழித்து தமிழில் எழுத நான் எடுத்த முயற்சி, நிறையவே பிழைகள் இருந்தன. இன்றும் தொடர்ந்து கொண்டுதான் உள்ளன, கொட்டு வாங்கியே திருத்தி வருகிறேன்.  

பலர் நல்ல தொடக்கம் தொடருங்கள் என்று வாழ்த்தி இருந்தனர். என்னை மிகவும் கவர்ந்த பின்னூட்டு என்றால், அது ரஞ்சனி அம்மா எழுதியது தான். அவர்களின் பின்னூட்டு அடங்கிய படம் கீழே. 

   

புகழ் போதையில் 'வலைச்சரம்' என்ற வார்த்தை என் கண்ணுக்கு தெரியவில்லை. முதல் முறை என் முயற்சியை பலரும் பாராட்டியதில், பர்ஸ்ட் ரேங்க் எடுக்கும் போது கிடைத்த சந்தோசம் எனக்கு மீண்டும் கிடைத்தது.

எப்படி இவர்கள் வந்தார்கள் என்று சொல்லலாமலே மொக்கை போடுகிறான் என்று திட்டரிங்களா? (நோ நோ! ரூபக் பாவம்.) மீண்டும் மறுநாள் படிக்கும் பொழுது தான், ராஜராஜேஸ்வரி அவர்கள்  'வலைச்சர அறிமுகத்திற்கும் அருமையான கதைக்கும் வாழ்த்துகள்.'என்று எழுதியது மனதை உறுத்தியது. என்னய்யா இது வலைச்சரம் ? ஒன்றும் புரியவில்லை.

எனக்கு தெரிந்து, பதிவுலகில் அனுபவம் உள்ள  சீனுவை அழைத்தேன், பின்பு தான் உண்மை விளங்கியது. அந்த வாரம் அவர் வலைச்சரத்தின் ஆசிரியர் பொறுப்பில் இருந்தமையால் என்னை அறிமுகம் செய்துள்ளார் என்று. 

முடிவுரை 

இந்த அனுபவத்தை பகிர அழைத்த ராஜி அக்காவிற்கு நன்றி சொல்லி, மேலும் இந்த அலையில் இருந்து என்னை மீட்டு, ஐந்து திசைகளில் அலைகளை திருப்ப நான் அழைக்கும் ஐவர்,  

ஹாரி  -  IDEAS OF ஹாரி
அரசன் -  கரைசேரா அலை
ஜீவன்சுப்பு - வண்ணத்துப்பூச்சி
ஸ்கூல் பையன் - ஸ்கூல் பையன்

29 comments:

  1. முதல் பதிவின் சந்தோசம் -

    இனிய பகிர்வுகள்..பாராட்டுக்கள்...

    ReplyDelete
    Replies
    1. முதல் வருகைக்கு மிக்க நன்றி

      Delete
  2. சொல்லிய விதம் இனிமை... என்னையும் அழைத்தமைக்கு நன்றி.... இந்த மாதிரி யாராவது கூப்பிட்டாத்தான் பதிவே எழுதுறேன்.....

    ReplyDelete
    Replies
    1. மிக்க நன்றி .

      //இந்த மாதிரி யாராவது கூப்பிட்டாத்தான் பதிவே எழுதுறேன்.....// ஹா ஹா ஹா . தொடர்ந்து எழுதுங்கள்

      Delete
  3. சுவை படச் சொல்லியிருக்கிறீர்கள்.என்னையும் மாட்டி விட்டாச்சா?ஏற்கனவே வே.நடனசபாபதி ஐயா வேறு கோத்து விட்டுட்டாரு!

    ReplyDelete
    Replies
    1. நான் கவனிக்க வில்லை, எல்லா முறையும் போல் மிக சிறியதாக எழுதிவிடாதீர்கள். இருவர் அழைப்புக்கு சற்று நீளமாக எழுதுங்கள்

      Delete
  4. சீனுவுக்கும் லலிதா அக்காவுக்கும் (ராஜி அக்காவுக்கு அல்ல) உங்களை அறிமுகப்படுத்தி உங்களை செம்மையாக்கி சிறந்த பதிவரா மாற்றியமைக்கு பாராட்டுகிறேன்

    ReplyDelete
    Replies
    1. மிக்க நன்றி கண்ணதாசன்

      Delete
  5. ரஞ்சனி அம்மா அவர்களின் மனம் கவர்ந்த பின்னோட்டம் படத்துடன் குறிப்பட்டது சிறப்பு... மிகவும் மகிழ்ச்சி... நன்றிகள்... வாழ்த்துக்கள்...

    ReplyDelete
    Replies
    1. தங்கள் கருத்துரைக்கு மிக்க நன்றி தனபாலன்

      Delete
  6. அன்பின் ரூபக் ராம் - முதல் பதிவின் சந்தோஷம் - பதிவி நன்று - வலைப்பூவில் நுழைந்து கனவு மெய்ப்பட தளம் துவங்கி முதல் பதிவு எழுதி - அப்பொழுது ஏற்பட்ட மகிழ்ச்சியினை இபொழுது எழுது ஒரு பதிவு வெளியிட்டமை நன்று. திடங்கொண்டு போராடு சீனுவின் ஊக்கத்தாலும் கற்றுக் கொடுத்தலாலும் இன்று வரை 32 பதிவுகள் எழுதி விட்ட்டீர்கள். நடு நெஅடுவே வலைச்சரம் என்று ஏதொ குறிப்பீட்டிருக்கிறீர்கள் - அதிலும் எழுத ஆசையா - 50 பதிவுகள் ஆன பின்னர் தொடர்பு கொள்ளுங்கள் - வாய்ப்புத் தருகிறோம்.

    நல்வாழ்த்துகள் - நட்புடன் சீனா

    ReplyDelete
    Replies
    1. தங்கள் அன்பிற்கு மிக்க நன்றி சீனா ஐயா, தொடர்ந்து எழுதுகிறேன்

      Delete
  7. எழுதுவதன் பேரானந்தம் தொடங்கிய விதத்தினை விவரித்த பாங்கு மிக அருமை.. மேன்மேலும் எழுதுவதில் சிறக்க வாழ்த்துக்கள்.

    ReplyDelete
    Replies
    1. மனம் திறந்து வாழ்த்திய தங்களுக்கு மிக்க நன்றி

      Delete
  8. புகழ் போதையில்
    >>
    இந்த போதையை அப்படியே மனசுல தக்க வச்சுக்கோங்க. அப்போதான் இன்னும் நிறைய எழுத முடியும். இந்த போதை இங்கு தப்பில்லை.

    ReplyDelete
    Replies
    1. ஹ்ம்ம் அதுவும் சரி தான் ..அக்கா சொன்னா மறு பேச்சு ஏது...

      Delete
  9. அழைப்புக்கு மதிப்பு கொடுத்து அனுபவத்தை பகிர்ந்தமைக்கு நன்றி!

    ReplyDelete
    Replies
    1. அழைத்ததிற்கு மிக்க நன்றி

      Delete
  10. அனுபவம் பகிர்ந்த விதம் அழகு. என் அனுபவம் திங்களன்று.

    ReplyDelete
    Replies
    1. மிக்க நன்றி சார்.. உங்கள் பதிவிற்காக காத்துக்கொண்டிருக்கிறேன்.

      Delete
  11. உங்கள் அனுபவம் பகிர்ந்த விதம் நன்று.....

    தொடரட்டும் உங்கள் பதிவுகள்... விரைவில் வலைச்சர ஆசிரியராக பார்க்க நினைக்கிறேன்!....

    ReplyDelete
    Replies
    1. உங்கள் அன்பிற்கு மிக்க நன்றி வெங்கட்

      Delete
  12. This comment has been removed by the author.

    ReplyDelete
  13. மிக நேர்த்தியா எழுதி இருக்கீங்க..
    என்னையும் கோர்த்து விட்டதற்கு நன்றி..

    (நண்பர்) ஹாரி//

    () அடைப்பு குறி நீக்கிட்டே நண்பன் ஹாரின்னு சொல்லுங்க.. :)

    ReplyDelete
    Replies
    1. ஹா ஹா ஹா . அந்த சமயம் அறிமுகம் இல்லாததால் அடைப்புக் குறியில் 'நண்பர்'. இப்பொழுது நண்பன் ஹாரி :)

      Delete