நான் உயற்கல்வி பயில புதுவை செல்ல வேண்டிய கட்டாயம். பத்து, 11, 12 ஆம் வகுப்புகளை அங்கு தான் பயின்றேன். புதுவையில் யார் இருந்தாலும் மூன்று விசயத்துக்கு கண்டிப்பாக அடிமையாக வேண்டும், அதில் ஒன்று ஊர் அறிந்த உண்மை. அதற்கு நான் அடிமை ஆகாவில்லை, சைட் டிஷ் மட்டும் சாப்பிடும் கூட்டத்தின் 'கொ. ப. செ'வாகவே, கட்டுப்பாட்டுடன் வாழ்ந்து வருகிறேன் .
இரண்டாவது நம்மை சுண்டி இழுக்கும் சாலை ஒர உணவுகள், முதலில் நான் அடிமை ஆனது அவற்றிக்கு தான். பானி பூரி, காளான் போண்டா, முட்டை போண்டா, சிக்கன் போண்டா, மட்டன் போண்டா, பஜ்ஜி வகைகள், குல்பி, சூப் வகைகள் என்று பட்டியல் நீளும். ஒரு தெருவில் ஒரு தள்ளு வண்டியாவது இருந்து விடும். சனிக்கிழமைகளில் பள்ளி முடித்து மத்திய வேளையில் லாஸ்பேட்டை கள்ளுக்கடை வழியாக செல்லும் போது, அங்கு இருக்கும் ஒரு தள்ளு வண்டியில் வெங்காய பகோடா வாங்குவது வழக்கம். மந்தாரை இலையில் மடித்து ரூ. 2.50 க்கு ஐம்பது கிராம் பகோடாவுடன், தன் பகோடா பிரான்ஸ் வரை சென்ற புகழையும் சேர்த்து கொடுப்பார். அந்த அளவு சுவை இருப்பதை சாப்பிட்ட யாரும் மறுக்க முடியாது. என்ன செய்வது எல்லோருக்கும் குரு ஒன்பதில் இருப்பது இல்லையே, தள்ளு வண்டியிலேயே அவர் காலம் சென்றுவிட்டது.
இரண்டாவது நம்மை சுண்டி இழுக்கும் சாலை ஒர உணவுகள், முதலில் நான் அடிமை ஆனது அவற்றிக்கு தான். பானி பூரி, காளான் போண்டா, முட்டை போண்டா, சிக்கன் போண்டா, மட்டன் போண்டா, பஜ்ஜி வகைகள், குல்பி, சூப் வகைகள் என்று பட்டியல் நீளும். ஒரு தெருவில் ஒரு தள்ளு வண்டியாவது இருந்து விடும். சனிக்கிழமைகளில் பள்ளி முடித்து மத்திய வேளையில் லாஸ்பேட்டை கள்ளுக்கடை வழியாக செல்லும் போது, அங்கு இருக்கும் ஒரு தள்ளு வண்டியில் வெங்காய பகோடா வாங்குவது வழக்கம். மந்தாரை இலையில் மடித்து ரூ. 2.50 க்கு ஐம்பது கிராம் பகோடாவுடன், தன் பகோடா பிரான்ஸ் வரை சென்ற புகழையும் சேர்த்து கொடுப்பார். அந்த அளவு சுவை இருப்பதை சாப்பிட்ட யாரும் மறுக்க முடியாது. என்ன செய்வது எல்லோருக்கும் குரு ஒன்பதில் இருப்பது இல்லையே, தள்ளு வண்டியிலேயே அவர் காலம் சென்றுவிட்டது.
மூன்றாவது விசயம்தான் சினிமா. புதுவையில் என்னைப் போன்று சினிமா வெறியர்களே அதிகம். 1970களில் மொத்தம் முப்பத்து ஆறு திரையரங்குகள் அங்கு இருந்து இருக்கின்றன, அக்கம் பக்கம் இருக்கும் எல்லா ஊர்களில் இருப்பவர்களும் சினிமா காண (அன்றைய) பாண்டி செல்வதுதான் வழக்கம். ஏன், என் தாத்தா கூட அங்கு சினிமா கண்ட பல கதைகளை என்னிடம் கூறியதுண்டு. இப்படி 'திரையரங்க' நகரமாக இருந்த புதுவை, மற்ற நகரங்களின் வளர்ச்சியால், சினிமா காண வரும் கூட்டம் குறையை, காலப்போக்கில் பெரும்பாலான திரையரங்குகள் மக்களை ஈர்க்கும் விதமாக உல்லாச மற்றும் நட்சத்திர விடுதிகளாக மாறி, நான் இருந்த காலகட்டத்தில் வெறும் ஏழு திரையரங்குகள் மட்டுமே இருந்தன.
ஒரு நாள் சாலை உணவுகளை வேட்டையாட சென்றபோது, தலை முடியை கொண்டை போட்ட படி நடிகர் விக்ரம் எங்கள் சாலை ஓரம் நிட்க, அதை கண்டு ஆச்சரியத்தில் நான் அந்த இடத்தில் அப்படியே நின்று விட்டேன். அந்நியன் படத்தில் துவக்க காட்சிகளில், ஒரு சாலை விபத்தில் அடி பட்டவனை வைத்து 'அம்பி' விக்ரம் போராடியது எங்கள் தெருவில் தான் என்று பின் படம் பார்த்த போது புரிந்தது. தமிழகத்தில் கேளிக்கை வரி அதிகமானதால், பல படங்களின் படப்பிடிப்பு புதுவைக்கு வந்த காலம் அது. கன்னத்தில் முத்தமிட்டால், மௌனம் பேசியதே, காக்க காக்க, ஆயுத எழுத்து, அறிந்தும் அறியாமலும், பட்டியல், சிவாஜி, பீமா , வாரணம் ஆயிரம், யாரடி நீ மோகினி என்ற ஏகப்பட்ட படங்களின் படப்பிடிப்பு அரங்கேறியது இங்கு தான்.
ஒரு முறை பத்தாம் வகுப்பில் வசூல் ராஜா காண வாய்ப்பு கிட்டியபோதும் உடல் நிலை சரி இல்லாத காரணத்தால் அன்று செல்ல முடியவில்லை. பத்தாம் வகுப்பு முடித்த பின்பு, அது வரை ரஜினி படம் பார்க்க மட்டுமே திரையரங்கம் சென்றவன், பதினோறாம் வகுப்பில் அந்நியன் படத்துடன் என் கணக்கை தொடங்கினேன், பார்த்த படங்களின் எண்ணிக்கையில் இன்று வரை காற்புள்ளி கூடிக்கொண்டே இருக்கிறது.
ஒரு நாள் சாலை உணவுகளை வேட்டையாட சென்றபோது, தலை முடியை கொண்டை போட்ட படி நடிகர் விக்ரம் எங்கள் சாலை ஓரம் நிட்க, அதை கண்டு ஆச்சரியத்தில் நான் அந்த இடத்தில் அப்படியே நின்று விட்டேன். அந்நியன் படத்தில் துவக்க காட்சிகளில், ஒரு சாலை விபத்தில் அடி பட்டவனை வைத்து 'அம்பி' விக்ரம் போராடியது எங்கள் தெருவில் தான் என்று பின் படம் பார்த்த போது புரிந்தது. தமிழகத்தில் கேளிக்கை வரி அதிகமானதால், பல படங்களின் படப்பிடிப்பு புதுவைக்கு வந்த காலம் அது. கன்னத்தில் முத்தமிட்டால், மௌனம் பேசியதே, காக்க காக்க, ஆயுத எழுத்து, அறிந்தும் அறியாமலும், பட்டியல், சிவாஜி, பீமா , வாரணம் ஆயிரம், யாரடி நீ மோகினி என்ற ஏகப்பட்ட படங்களின் படப்பிடிப்பு அரங்கேறியது இங்கு தான்.
ஒரு முறை பத்தாம் வகுப்பில் வசூல் ராஜா காண வாய்ப்பு கிட்டியபோதும் உடல் நிலை சரி இல்லாத காரணத்தால் அன்று செல்ல முடியவில்லை. பத்தாம் வகுப்பு முடித்த பின்பு, அது வரை ரஜினி படம் பார்க்க மட்டுமே திரையரங்கம் சென்றவன், பதினோறாம் வகுப்பில் அந்நியன் படத்துடன் என் கணக்கை தொடங்கினேன், பார்த்த படங்களின் எண்ணிக்கையில் இன்று வரை காற்புள்ளி கூடிக்கொண்டே இருக்கிறது.
அந்நியன், கஜினி, வேட்டையாடு விளையாடு என்று பல படங்களை பதினோறாம் வகுப்பில் ஆனந்தா திரையரங்கில் பார்த்தேன். சுருக்கமாக சொல்லவேண்டும் என்றால், சென்னைக்கு எப்படி ஒரு சத்தியமோ அப்படித்தான் புதுவைக்கு ஒரு ஆனந்தா. ஆனால் அந்த ஆனந்தா திரையரங்கமும் இன்று இடிக்க பட்டு ஒரு விடுதியாக உருமாறிவிட்டதைப் பார்க்கும் பொழுது, கவசம் இல்லாத கர்ணன் போலத் தான் பாண்டி எனக்கு காட்சியளிக்கிறது.
புதுவையின் திரையரங்குகளில், நான் அங்கு வசித்தபொழுது, ஐந்து வகையான சீட் வரிசைகள் இருக்கும்.
பாக்ஸ் - 50 ரூபாய்
பால்கனி - 33 ரூபாய்
ப்ர்ஸ்ட் கிளாஸ் - 25 ரூபாய்
செகண்ட் கிளாஸ் - 15 ரூபாய்
தேர்ட் கிளாஸ் - 10 ரூபாய்
நமக்கு என்றுமே தேர்ட் கிளாஸ் தான், அன்றைய நாள் கொஞ்சம் செழிப்பாக இருந்தால் மட்டும் செகண்ட் கிளாஸ். இந்த இரண்டுக்குமே சீட் நம்பர் கிடையாது, முந்தி சென்று இடம் பிடிக்க வேண்டும். என் வீட்டை விட்டு வெளியே வந்தால், தெரு முனையில் இருக்கும் பாலாஜி திரையரங்கிலே தான் பெரும்பாலான படங்களை பார்த்ததுண்டு. படம் வெளியாகின்ற முதல் வாரம் என்றுமே கவுன்டரில் டிக்கெட் வாங்கியதே கிடையாது, எல்லாமே பிளாக் டிக்கெட் தான். என்னதான் ஆன்லைன்ல புக் பண்ணிட்டு ஹாயா போய் படம் பார்த்தாலும், பிளாக்ல பேரம் பேசி, ஓடிப்போய் சீட் பிடித்து, விசில் சத்தத்துல படம் பார்க்கற சுகமே தனி.
இப்ப உங்களுக்கு, புதுவையும் சினிமாவும் எந்த அளவு நெருக்கம் என்று கொஞ்சமாவது புரிந்து இருக்கும் என்று நம்பி நம்ம 'வரலாறு' நிகழ்வுக்கு செல்கின்றேன். ஆஞ்சநேயா, ஜனா, ஜீ, பரமிசிவன், திருப்பதி என்று தொடர் தோல்விகளை சந்தித்த அஜித், வில்லன் படத்தில் வெற்றி கூட்டணி தந்த கே.எஸ். ரவி குமாருடன் இணைந்து உருவானது 'Godfather'. சில பல காரணங்களுக்காக அதிக நாட்கள் பெட்டியிலேயே தூங்கி, தமிழ் பெயர் வைத்தால் வரி விலக்கு என்ற அறிவிப்பால், 'வரலாறு' என்று பெயர் மாறி அக்டோபர் இருபது 2006இல், என் கால் ஆண்டு பரிட்சையின் போது வெளியானது.
பத்து நாட்கள் நரக வேதனைக்கு நடுவில், தேர்வுகளை வெற்றிகரமாக முடித்து விட்டு, அன்று மாலையே என் மிதி வண்டியில் ஆனந்தா திரையரங்கம் நோக்கி சென்று, செகண்ட் கிளாஸ் டிக்கெட் வாங்கி, உள்ளே அடித்து பிடித்து நடுவில் ஒரு இருக்கையில் அமர்ந்து பொறுமையின்றி காத்துக்கொண்டிருந்தேன். புதன் கிழமை என்றபோதும், கள்ள சிடிக்கள் மலிவு விலையில் கிடைத்தபோதும் அரங்கம் நிரம்பியதில் எந்த ஆச்சரியமும் இல்லை. வழக்கமான லக்ஷ்மி விலாஸ், ரஜினி சுபாரி விளம்பரங்களின் மொக்கைக்கு பின் படம் தொடங்கியது. முதல் பத்து நிமிடம் எந்த வசனமும் கேட்காவிட்டாலும், அந்த விசில் சத்தத்தில் எத்தனை ஆனந்தம்.
இடைவேளைக்கு முந்தைய காட்சியில், ஊனமாக இருந்த அப்பா அஜித், தன் காலை எடுத்து கீழே வைத்து நிற்கும் போது, அணு குண்டு வெடித்தால் இவ்வளவு சத்தம் கேட்குமா என்று எனக்கு தெரியவில்லை, அரங்கம் அதிர்ந்தது, பேப்பர் பிட்டுக்கள் பறந்தன. ஒரு அஜித் இருந்தாலே தாங்காது, இதில் மூன்று அஜித் என்றால் சொல்லவா வேண்டும், தனியாக வந்த எண்ணமே வெளியில் வரும் வரை தோன்றவில்லை. பல நாள் பட்டினியில் இருந்த அஜித் ரசிகர்களுக்கு இந்த படம் ஒரு அசைவ விருந்தாக அமைந்தது.
ஐந்து பேர் சினிமா பற்றி பேசுகையில் இருவர் விஜய் பக்கம் என்றால், மற்ற மூவர் கண்டிப்பாக அஜித் பக்கம் இருப்பதை நீங்கள் பல இடங்களில் பார்க்க முடியும். தொடர் தோல்வியை சந்தித்து, பல ஆண்டுகளுக்கு ஒரு முறை ஹிட் கொடுக்கும் போதே இவருக்கு இப்படி ஒரு ஆதரவு என்றால், தொடர்ந்து ஹிட் கொடுத்தால் இவரை அசைக்க ஆளே இருக்காது என்று எண்ணியபடியே வீட்டிற்கு சென்றேன்.
அதன் பின் பல படங்களை சென்னையில் பார்த்து விட்டேன். பில்லா, மங்காத்தா படங்களை சென்னையில் முதல் நாளே பார்த்தபோதும், புதுவையில் அன்று கேட்ட சத்தம் இந்த சென்னை மாநகரத்தில் எந்த திரையரங்கிலும் கேட்கவில்லை. அடுத்து வெளி வர இருக்கும் 'வலை' படத்தை புதுவையில் பார்க்க வேண்டும் என்ற ஆசையுடன், மே ஒன்று எழுத நினைத்த பதிவை ஜூன் ஒன்று எழுதி இன்று வெளியிடுகிறேன்.
ஐ மிஸ் யூ பாண்டி!
ஐ மிஸ் யூ பாண்டி!
Tweet | ||
தல ரசிகர்களுக்கு என்றுமே அவரைப்போல் தன்னம்பிக்கை உண்டு.. இந்த பதிவு அஜித்தை பற்றி மட்டும் இல்லாமல், மக்களின் சினிமா ரசனை, ஒரு நகரம், திரையரங்கம் என பல விசயங்களை தொட்டுச்சென்றது மிக அருமை.. வாழ்த்துக்கள் :-)
ReplyDeleteமுதல் வருகைக்கும், தன்னம்பிக்கை ஊட்டியதற்கும் என் மனமார்ந்த நன்றிகள் :)
ReplyDeleteஆனந்தா தி்யேட்டரில் நானும் இரண்டு மூன்று படங்கள் பார்த்திருக்கிறேன். பொதுவாகவே சினிமா ஷுட்டிங்குகளுக்கு பாண்டிச்சேரி மிக வசதியான இடம். (மற்ற வசதிகளையும் சேர்த்துத்தான்) ‘தல’புராணம் பாடின பதிவு சூப்பர் ரூபக்!
ReplyDeleteஅட நீங்களும் அந்த பக்கம் வந்துதுண்டா !. உலகம் சுற்றும் வாலிபன் சார் நீங்க.
Deleteபுராணத்தை ரசித்து மனம் திறந்து பாராட்டிய உங்களுக்கு என் நன்றி :)
அடிமை ஆகாத உங்களுக்கு முதலில் பாராட்டுக்கள்... வாழ்த்துக்கள் பல... தொடரட்டும்...
ReplyDeleteஉண்மை தான்... விசிலுடன் படம் பார்க்கற சுகமே தனி...
தல ரசிகருக்கு வாழ்த்துக்கள்...
தவறாமல் எல்லாப் பதிவுகளையும் படித்து, தொடர்ந்து கருத்துரையிட்டு வரும் தங்களுக்கு என் நன்றிகள் கோடி
Deleteபுதுவையில் நானும் நிறைய படங்கள் பார்த்திருக்கிறேன்... பேரழகன் தொடங்கி எந்திரன் வரை சுமார் நாற்பது படங்கள் வரை பார்த்திருப்பேன். என் பழைய நினைவுகளைக் கிளப்பிவிட்டீர்கள்...
ReplyDeleteநாளுக்கு நாள் தங்களது எழுத்து நடையில் முதிர்ச்சி தெரிகிறது... வாழ்த்துக்கள்...
தங்கள் புதுவை நினைவுகளை என் பதிவு நினைவூட்டியதில் மகிழ்ச்சி.
Deleteமனமார்ந்து பாராட்டிய தங்களுக்கு என் நன்றி.
உங்கள் அனைவரின் ஊக்கம் என்னை வழி நடத்தும்.
வலை படப்பிடிப்பும் புதுவையில் நடந்தது,ஆர்யா டாப்சி சம்பந்தப்பட்ட காட்சிகள் பாரதி பூங்காவில் எடுக்கப்பட்டன.வலை பாக்க வரும் போது என்னையும் கூப்பிடுங்க.
ReplyDeleteதகவலுக்கு நன்றி. நிச்சயமாக சேர்ந்தே 'வலை' படத்தை பார்ப்போம்.
Deleteசுவாரிசியமான பதிவு...
ReplyDeleteமிக்க நன்றி
Delete//தொடர் தோல்வியை சந்தித்து, பல ஆண்டுகளுக்கு ஒரு முறை ஹிட் கொடுக்கும் போதே இவருக்கு இப்படி ஒரு ஆதரவு என்றால்,//
ReplyDeleteஇது மிக ஆச்சரியம் தான் ........
மிகவும் ஆச்சரியம் தான். கருத்துரைக்கு மிக்க நன்றி
Deleteபாண்டியிலும் இப்படிதானா? நீங்கள் ஒரு முறை மதுரை பக்கம் வந்து "தல" படம் பாருங்கள் , அதற்க்கு பிறகு தல படம் என்றாலே மதுரைக்குத்தான் ஓடி வருவீர்கள்... நீங்கள் வரலாறு இடைவேளை காட்சியில் பெற்ற அதே அனுபவத்தை அசலில் தலையை காட்டுவதற்கு முன் புகையை காட்டும் காட்சியில் மதுரை சினிப்ரியா திரையரங்கில் நானும் அனுபவித்திருக்கிறேன்
ReplyDeleteமதுரை பக்கம் வந்ததில்லை, சமயம் கிடைத்தால் சினிப்பிரியாவையும் தரிசிப்போம்
Deleteசெல்லாது செல்லாது.. அப்போ தென்காசி மட்டும் என்ன கம்மியா... திருப்பதி வந்தா திருப்பம் பாட்டுக்கு என்பது வயசு தாத்தா போட்ட குத்தாட்டம்.. பில்லா படத்துக்கு தியேட்டர் உள்ள போட்ட அணுகுண்டு... தல படம் தென்காசியில பார்த்தா சும்மா பொறி பறக்கும் :-)
ReplyDeleteஏதோ என் பங்குக்கு என்னால முடிஞ்சது ஹா ஹா ஹா
ஹா ஹா. நான் எதோ என் கதையை எழுத, மாவட்ட கலவரம் வெடிச்சிடும் போலயே
Deleteசென்னை ஆனால் என்ன புதுவை ஆனால் என்ன?தல தலதான்!
ReplyDeleteசுவரஸ்யமான நினைவுகள்
எல்லாமே எல்லாவும் தமிழ் சினிமா தான்.
Deleteமிக்க நன்றி குட்டன்.
ரூபக்!நான் சென்னையில் பட்ட மேற்படிப்புப் படிக்கும் காலத்தில் சினிமா டிக்கெட் விவரம்...0.84 பைசா,1.66, 2.50 அதுக்கு மேல் தெரியாது!முக்கால் வாசி நாங்கள் போவது 1.66 தான்.மறாக்க முடியாத நாட்கள் அவை.
ReplyDeleteஉங்கள் நினைவலைகளும் சுவாரஸ்யம்!
காலம் மாற காசின் மதிப்பும் குறைந்துவிட்டாலும், மனிதர்களுக்கு காசின் மேல் பைத்தியம் அதிகமாகி விட்டது.
Deleteஉங்கள் நினைவுகளை இங்கு தாங்கள் பகிர்ந்ததில் எனக்கு மகிழ்ச்சி.
முதல் வருகைக்கு மிக்க நன்றி சென்னை பித்தன் ஐயா.
தொடர் தோல்வியை சந்தித்து, பல ஆண்டுகளுக்கு ஒரு முறை ஹிட் கொடுக்கும் போதே இவருக்கு இப்படி ஒரு ஆதரவு என்றால், தொடர்ந்து ஹிட் கொடுத்தால் இவரை அசைக்க ஆளே இருக்காது என்று எண்ணியபடியே வீட்டிற்கு சென்றேன்.//உண்மை தான் நண்பரே
ReplyDeleteகருத்துரைக்கும் தொடர்பவராக ஆகியமைக்கும் நன்றி
Deleteரசிகர்களின் ரசனைக்கு முதலிடம் கொடுத்து வருமானத்துக்கு கவலை கொள்ளாது வாரத்துக்கு 2 அல்லது 3 படங்களை கொடுத்த நவீனா, நியூட்டோன் தியோட்டரை பற்றி எழுதாதது கண்டிக்கதக்கது மேலும் நீங்கள் சொல்லுவது போல் இங்கு ரசிகர்கள் எவ்வளவு பெரிய சீன்களுக்கு எந்த ஆர்பட்டமும் செய்யமாட்டார்கள். :-)))
ReplyDeleteநான் இருந்த காலக்கட்டத்தில் நவீன திரையரங்கம் செயல்பாடற்று இருந்தது, நியூட்டோன் திரையரங்கம் அந்த சமயம் குடும்பத்துடன் காணும் படங்களை வெளியிட்டது இல்லை.
Delete//நீங்கள் சொல்லுவது போல் இங்கு ரசிகர்கள் எவ்வளவு பெரிய சீன்களுக்கு எந்த ஆர்பட்டமும் செய்யமாட்டார்கள். :-)))// நான் பார்த்த எந்த படமும் ரசிகர்கள் சத்தம் போடாமல் இருந்தது இல்லை.