நான் படித்தது ஆங்கிலப் பள்ளி என்பதால், எனக்கு மிகவும் கடினமான பாடமாக இருந்தது தமிழ் தான். பின்னர் 11 மட்டும் 12ஆம் வகுப்புகளில், சக நண்பர்கள் பொதுத் தேர்வில் அதிக மதிப்பெண் பெறும் நோக்கத்தில் தமிழை பின் தள்ளி பிரெஞ்சு மொழியை தமது மொழிப்பாடமாக தேர்வு செய்தனர். எனக்கு எதோ அச்சமயம் அதில் உடன்பாடு இல்லை. வெற்றியோ தோல்வியோ அது தமிழுடன் தான் என்று தமிழையே என் மொழிப்பாடமாக தேர்வு செய்துகொண்டேன். எனக்கு உயர்க்கல்வியில் தமிழ் ஆசிரியராக வந்த சேகர் ஐயா அவர்களின் வகுப்பறைகளால் தமிழ் மீது எனக்கு இருந்த பற்று அதிகமாகி என்னை தன் மீது காதல் கொள்ளச் செய்தது தமிழ்.
வாலிப வயது முதலே சில (ஆங்கில)நாவல்கள் பட்டிததினால் எனக்குள்ளும் கதை எழுதும் வேட்கை வேரூன்ற, ஏனோ அதற்கான பாதையை நோக்கி நான் பயணிக்கவில்லை. கல்லூரி காலத்தில் நான் படித்த முதல் தமிழ் நாவல் கல்கியின் பார்த்திபன் கனவு, பின்னர் கல்லூரி இறுதி ஆண்டில் என் நண்பன் மூலம் சுஜாதா அறிமுகம் ஆனார். சுஜாதாவின் நாவல்களை படிக்கத் தொடங்கிய பின் ஆங்கில நாவல்கள் படிப்பதை அறவே விட்டு விட்டேன். அவரது தாக்கம் என்னைப் பின்னாளில் தமிழில் எழுதச் செய்யப் போகிறது என்பதை நான் அன்று அறியேன்.
இப்படி நாட்கள் செல்ல, அலுவலகத்தில் சென்ற ஆண்டு உடன் பணிபுரியும் சீனுவின் அறிமுகம் கிடைத்து. அவர் மூலம், எழுத 'வலை' என்னும் மேடை இருப்பதை அறிந்தேன். சென்ற வருட புத்தகக் கண்காட்சிக்கு சீனுவுடன் முதல் முறை சென்ற பொழுது என் மனதில் தோன்றிய எழுத்து ஆசை 'கனவு மெய்ப்பட' என்ற வடிவம் பெற, ஜனவரி இருபத்து எட்டாம் நாள் தொடங்கியது உங்களுடனான என் வலையுலக வாழ்க்கை.
ஆரம்பத்தில் சிறுகதை மட்டுமே எழுதிய நான், பின் 'களவு ' என்ற ஒரு தொடர் கதையை எழுதினேன். களவு என்ற தொடரை தக்க வரவேற்பு இல்லாத காரணத்தால், மேலும் தொடர ஊக்கமின்றி இடையிலேயே நிறுத்தி விட்டேன். எனது வழக்கை அனுபவங்களையும், நான் கண்ட ஊர்களைக் பற்றியும் ஊர் சுற்றல் என்ற பகுதியில் எழுதினேன்.
எனது தளத்தை பிரபலப் படுத்த ஒரே வழி சினிமாதான் என்ற கட்டாயத்தின் பேரில் என்னைக் கவர்ந்த சில உலக சினிமா படங்களை குறித்து எழதத் தொடங்கினேன். அதில் கொஞ்சம் வரவேற்பு கூடியது. (சில மாதங்களாக இந்த பகுதியில் நான் எழுதவில்லை, விரைவில் மீண்டும் தொடருவேன்)
சமீபத்தில் நான் எழுதி நிறைவு செய்த தொடர் நித்ரா. என் நண்பர்களிடையில் பேசும்படியான வரவேற்பு கிடைத்தது. தொடரை முடித்ததில் எனக்கும் ஆனந்தம். மே மாதத்தில் எனது வாழ்கையில் நடக்கும் சின்ன சின்ன சுவாரசியமான சம்பவங்களை தொகுத்து தேன் மிட்டாய் என்ற பகுதியில் எழுதி வருகிறேன். இன்றளவும் எந்த மாதமும் தேன் மிட்டாய் தடை படாது வெளிவருவதே என்னளவில் மிகப்பெரிய வெற்றியே.
இந்த நிலையில் எதுவும் யோசிக்காமல் விளையாட்டாக எழுதிய பதிவு மழை சாரலில் பஜ்ஜி அதிக மக்களால் படிக்கப் பட்ட பொழுது, சாப்பாட்டு ராமன் என்ற புதிய அவதாரம் எடுத்தேன். இன்று வரையில் நான் எழுதி அதிகம் வாசிக்கப் படுவது சாப்பாட்டு ராமன் பதிவுகள் தான். சினிமா மற்றும் உணவகங்களுக்கு தான் மக்களிடையே எத்தனை வரவேற்பு !
சிறுகதை எழுத வேண்டும் என்ற ஆசையுடன் வந்த என் பாதை எப்படியோ மாறி,தொடர்ந்து எழுத எதிர் நீச்சல் போட்டுக்கொண்டு தத்தளித்து இருக்கின்றேன். இன்று வரை பதிவுலகில் எனக்கு வெற்றியா தோல்வியா என்று என்னால் அறியமுடியவில்லை. நான் எதிர் பார்த்ததை விட மிகவும் அதிக நண்பர்களை பதிவுலகில் சம்பாதித்து விட்டேன். புதிய தோழர்கள், சகோதர சகோதரிகள் கிடைத்ததில் மட்டற்ற மகிழ்ச்சி தான்.
சென்ற ஏப்ரல் மாதம் மெட்ராஸ் பவன் சிவா மற்றும் மின்னல் வரிகள் பால கணேஷ் இருவரையும் சந்தித்த பொழுது, வலையில் நீடிப்பது பற்றி நிறைய குறிப்புகள் தந்து எனக்கு என்று ஒரு இலக்கை வைத்துக்கொண்டு அதை நோக்கி பயணிக்கச் சொன்னார்கள். அதன் படி அன்று நான் வகுத்த இலக்கு:
- ஒரு பதிவிற்கு 300க்கு மேற்ப்பட்ட page views.
- தமிழ்மண ரேங்க் பட்டியலில் ஐம்பதிற்கு மேல்.
- ஐம்பதுக்கும் மேற்ப்பட்ட Followers.
முதல் இரண்டு இலக்கை என்னால் அடைய முடிந்தது. சீனு, ராம் குமார், ஸ்கூல் பையன், பால கணேஷ், அகிலா, அரசன், கோவை ஆவி போன்ற நண்பர்கள் என்னை வலைச்சரத்தில் அறிமுகம் செய்தபோது மட்டும் followers எண்ணிக்கை கூடியது. அதன் பின் மந்தமாகத் தான் கூடியது, இன்றளவு 59 followers மட்டுமே உள்ளனர்.
என்னைப் பார்த்து என் நண்பர்கள் இருவர் தமிழில் எழுதத் தொடங்கியதையே எனது இந்த ஓராண்டுக் கால பதிவுலக வாழ்க்கையின் வெற்றியாக என்னால் பெருமிதத்துடன் கூற முடியும்.
இனி வரப் போகும் காலங்களில் சற்றும் சோர்வு இல்லாமல் உற்சாகத்துடன், சுஜாதா சொல்லியது போல், தொடர்ந்து எழுதிக்கொண்டே இருக்க வேண்டும் என்றுதான் ஆசைப்படுகிறேன். காலமும் நேரமும் உதவும் என்ற நம்பிக்கையுடன் என் பதிவுலக பயணத்தை தொடர இருக்கின்றேன்
Tweet | ||
சினிமா சம்பந்தப்பட்ட பதிவுகள் எழுதினால் பக்கப்பார்வைகள் அதிகம் கிடைக்கும். அதுதவிர புதியவர்கள் வரும் வாய்ப்பும் அதிகம். அதனால் அவ்வப்போது சினிமா எழுதலாம்.
ReplyDeleteதேன்மிட்டாய் மற்றும் சாப்பாட்டு ராமன் பதிவுகள் எனக்கு மிகவும் பிடித்தவை.
தொடர் எழுதினால் இடையில் வேறு பதிவுகள் ஏதும் இல்லாமல் தினம் ஒரு அத்தியாமாக தொடர் முடியும்வரை வெளியிடவும். இது தொடர்ந்து படிப்போருக்கு வசதியாக இருக்கும்.
இப்பத்தான் ஒருவருஷம் ஆயிருக்கா? வாழ்த்துக்கள்... தொடர்ந்து கலக்குங்கள்....
தங்கள் அன்பிற்கும் தொடர் வருகைக்கும் மிக்க நன்றி
Deleteஎன்னது... கனவு மேயப்பட...? ப்ளாக் பேரை கொன்னுட்டடியே? அவ்வ்வவ்வ்!
ReplyDeleteஇப்பத்தான் ஒரு ஆண்டு ஆகுதா? ஆச்சரியமாதான் இருக்கு. சாப்பாட்டை ரசிச்சு பதிவுக்கு வர்ற அதே அளவுக்கு புதுசா வர்ற படத்துக்கு விமர்சனம் எழுதினாலும் வருவாங்க. முடியறப்ப அதையும் செய்யி. ஆனா எத்தனை வியூவர்ஸ் வர்றாங்கன்றதை விட, என்ன விஷயத்தை எழுதி உன் வாசகர்களை தக்க வெச்சுக்கறேங்கறதுதான் முக்கியம்கறதை மனசுல வெச்சுக்கோ. மகிழ்வுடன் என் நல்வாழ்த்துகள் ரூபக்!
ஹா ஹா . தங்கள் வாழ்த்துக்களுக்கு மிக்க நன்றி :)
Deleteமுதலில் என் வாழ்த்துகள்..
ReplyDeleteநித்ரா தொடரும், சாப்பாட்டு ராமனும் சிறப்பான தொடர்கள். சிறுகதை வரிசையில் எனக்கு குள்ளன் எப்போதும் ஞாபகத்துக்கு வருவான்., சினிமாவில் நீங்க எழுதிய ராஜபார்வை நினைவில் உள்ளது. தேன்மிட்டாயில் சர்ச்சைக்குரிய பிரச்சனைகளை எழுதிவிட்டு தலைமறைவாகி விடுகிறீர்கள்.. ;-)
நீங்க சொன்னதிலிருந்தே சொல்றேன். தேன்மிட்டாய் தவிர மற்றவை எல்லாம் அவ்வப்போது காணாமல் போகின்றன. வேலைப்பளு மட்டுமே காரணம் என்று நான் அறிவேன். ஆயினும். ஒவ்வொரு நாளும் கொஞ்சம் கொஞ்சமாக பதிவை எழுத முயற்சியுங்கள்.. வாரம் ஒரு பதிவேனும் இடுங்கள்..
கனவு மெய்ப்பட்டுக்கொண்டே இருக்க ஆவியின் வாழ்த்துகள்..
தங்கள் அன்பிற்கும் தொடர் வருகைக்கும் மிக்க நன்றி
DeleteBlooger or g+ followers-யை மறந்து விடுங்கள்... ஏன்... Feed Count ஒரு நாள் அதிக எண்ணிக்கை காட்டும், ஒரு நாள் ஜீரோ...! எல்லா followers-யும் கருத்துரையும் எதிர்ப்பார்க்க முடியாது... தளத்தை Google analytics-ல் இணைத்து விட்டீர்களா...? இணையுங்கள்... தளத்தைப் பற்றிய உண்மையான தகவல்கள் கிடைக்கும்... (Refer : http://www.bloggernanban.com/)
ReplyDeleteசினிமா பற்றி எழுதினால் பத்தோடு 11 என்று உங்களுக்கே புரிந்தால் நல்லது... தேன்மிட்டாய் + சாப்பாட்டு ராமன் போன்று உங்களின் மனதிற்கு பிடித்தவற்றை மட்டும் தொடர்ந்து பகிருங்கள்...
வாழ்த்துக்கள்...
அதுவும் சரிதான் . மிக்க நன்றி
Deleteசீக்கிரம் ஒரு புக் போடுங்க. அப்பறம் பாருங்க நீங்க எங்க இருக்கீங்கன்னு :)
ReplyDeleteஅந்த ஆசை இப்ப இல்லீங்கோ
Deleteவாழ்த்துகள் ரூபக்,
ReplyDeleteசிவா சொன்னதை வழிமொழிகிறேன்.
மிக்க நன்றி :)
Delete'கனவு மேயப்பட'
ReplyDelete>>
கனவு எங்கே மேயப்போச்சு!? எப்ப திரும்ப வரும்!?
போனா வராது அக்கா
Deleteபர்த் டேக்கு வாழ்த்துகள், ஒரு ஸ்வீட் கூட கொடுக்காததை வன்மையாக கண்டிப்பதோடு, எதாவது ஒரு ஃபைவ் ஸ்டார் ஹோட்டலில் சிம்பிளா ட்ரீட் வைக்குமாறு அன்பில்லாம கேட்டுக்குறோம்.
ReplyDeleteதங்கள் சிம்பிள் ட்ரீட் கனவு மெய்ப்பட என் வாழ்த்துக்கள்
Deleteவாழ்த்துக்கள் ரூபக்.. இடையில் தொய்வு சோர்வு ஏற்பட்டாலும் தொடர்ந்து எழுத வேண்டும் என்ற ஆர்வம் இருந்தாலே போதும் மற்றவை தானாக நடந்துவிடும்...
ReplyDeleteசாப்பாட்டு ராமன், தேன்முட்டாய், சாகும் காண வேண்டிய சினிமா மற்றும் சிறுகதை, தொடர்கதை அனைத்துமே பிடித்தவை
அனைத்து பகுதிகளிலும் மாதந்தோறும் ஒரு பதிவாவது வெளியாக முயற்சிக்கிறேன்.
Deleteரூபக்! உங்களுக்கு இனிய பிறந்த நாள் வாழ்த்துக்கள்! இதுவரை நான் உங்கள் எழுத்துக்களின் மீது விமர்சனம் செய்யவில்லை என்றாலும் உங்கள் சாப்பாட்டு ராமன் கட்டுரைகளை ரசித்துப்படித்துள்ளேன் தொடர்ந்து எழுதுங்கள்!
ReplyDeleteதங்கள் தொடர் வருகைக்கு மிக்க நன்றி
Deleteரூபக்! உங்களுக்கு இனிய பிறந்த நாள் வாழ்த்துக்கள்! இனி நான்
ReplyDeleteதொடர்வேன்! கவலற்க!
தங்கள் அன்பிற்கும் தொடர் வருகைக்கும் மிக்க நன்றி ஐயா
Deleteவாழ்த்துகள் ரூபக். நீங்கள் பாட்டுக்கு உங்கள் மனதில் படுபவற்றை எழுதிக் கொண்டே இருங்கள். நிறைய இடைவெளி விடாமல் தொடர்ந்து எழுதுங்கள். எல்லாம் தானே நடக்கும்.
ReplyDeleteஉங்கள் ஊக்கம் என்னைத் தொடர்ந்து எழுதச் செய்யும் :)
Deleteவாழ்த்துகள் ரூபக். தொடர்ந்து எழுதுங்க.....
ReplyDeleteதொடர்ந்து சந்திப்போம்.
தங்கள் அன்பிற்கும் தொடர் வருகைக்கும் மிக்க நன்றி
Deleteஒருவருடத்தில் இவ்வளவு
ReplyDeleteபிரபலமடைந்திருப்பது உண்மையில்
ஒரு பெரும் சாதனைதான்
நான் தங்கள் இந்தநிலைபோல் அடைய
மூன்று வருடங்கள் ஆனது
பகிர்வுக்கும் தொடரவும்
மனமார்ந்த நல்வாழ்த்துக்கள்
தங்கள் அன்பிற்கும் மிக்க நன்றி
Deleteபதிவுலகப் பிறந்த நாளுக்கான மனம் நிறைந்த இனிய வாழ்த்து(க்)கள்.
ReplyDeleteமிக்க நன்றி :)
ReplyDeleteவாழ்த்துக்கள் ரூபக்
ReplyDelete