Monday, June 17, 2013

களவு - பகுதி ஐந்து

*******************************************முன் குறிப்பு *********************************************
இதுவரை என் தொடரை படித்து ஆதரித்து வரும் அன்பு உள்ளங்களுக்கு என் மனமார்ந்த நன்றி. புதிய வாசகர்கள் இப்பகுதியை படிக்கத் தொடங்கும் முன், சுவாரசியம் குறையாமல் இருக்க, சிரமம் பாராமல் முதல் நான்கு பகுதிகளை படித்து விட்டு, பின் தொடரவும். படிக்க கீழ் உள்ள வரிகளை சொடுக்கவும், நன்றி.
களவு - பகுதி ஒன்று
களவு - பகுதி இரண்டு
களவு - பகுதி மூன்று
களவு - பகுதி நான்கு

*********************************************************************************************************

இதுவரை :
கம்பத்துக்காரரின் பெயரன் வேலுவை என்ஜின் மோகன் கடத்தி, இருபது லட்சம் பணம் கேட்க, கம்பத்துக்காரர் பவன் மற்றும் கே.கே. உதவியுடன், வேலுவின் GPS வாட்ச் மூலம் அவன் இருப்பிடத்தை அறிந்து அங்கு சென்றார். அங்கு கம்பத்துக்கரர் அருகில் வந்து, பவன் சிங் 'உங்க பேரன் இங்க இல்லையாம், அவனோட டிரஸ், வாட்ச் மட்டும் தான் இருக்கு' என்று கூற, உள்ளே சென்று ஏமாற்றத்துடன் திரும்பிய கம்பத்துக்கரர் படியில் இறங்கும்போது, படியின் முனையில் இருந்த தாமரை போன்ற கை பிடியை பிடிக்க, அது அவர் கையுடன் வர, ஒரு கையால் தன் இடது மார்பை பிடித்த படி மயங்கி விழுந்தார்.

இன்று - 2013 

மயங்கி விழுந்த கம்பத்துக்காரரை, பவன் சிங் மற்றும் கே.கே. அம்பத்தூரில் இருக்கும் Dr.ரபீன்திரநாத் மருத்துவமனைக்கு அழைத்துச் சென்றனர். அவசர சிகிச்சை பிரிவில், ICUவில் உடனடியாக அனுமதிக்கப்பட்டு சிகிச்சை கொடுக்கப்பட்டது. சீப் டாக்டர், 'இது ப்ர்ஸ்ட் அட்டாக், அவர கரெக்ட் டைம்ல அட்மிட் பண்ணதுனால பிழைத்துவிட்டாரு இனிமேல் தான் கவனமா இருக்கணும்' என்று தன் கண்ணாடி பிரேமில் இருந்த தூசியை துடைத்தவாறு சொல்லி முடித்தார்.              

கே.கே. தன் கைபேசியை பார்த்துக்கொண்டே பவன் சிங்கை நோக்கி வந்து, அவர் காதை கடித்தார், கம்பத்துக்காரர் மனைவி, மற்றும் மகன் வர, இருவரும் பிகோவில் பறந்தனர். ஆவடி வழியாக, பூந்தமல்லி நோக்கி அறுபதில் சென்று கொண்டிருந்த வண்டி, NH45ஐ தொட்டவுடன் , ஸ்பீடோமீட்டர் நூறை காட்டியது, எந்த மனித அடையாளமும் இன்றி இருவருமே மௌனமாகத்தான் இருந்தனர்.                     

வாலாஜா கடந்தவுடன், சாலை ஓரம் சும்மா இருந்த  காவல் துறை 'சுமோ', பவன் சிங் வந்த பிகோவைக் கண்டவுடன், தன் கொண்டை சிவப்பு விளக்கு எரிய சைரன் ஒலி வீச, கே.கே. வின் பிகோ முன் சீறிக்கொண்டு செல்ல, காட்பாடி வழியே காந்தி நகரை அடைந்தனர். காந்தி நகர் 'முதல் கிழக்கு மெயின் ரோட்டில்' இருக்கும் டாஸ்மாக் அருகில் சுமோவின் பின் பகுதியை முத்தமிட்டவாறு வண்டி நின்றது. சுமோவில் இருந்து வெளியே வந்த இன்ஸ்பெக்டர் சிவா, பிகோவின் முன் இருக்கையில் அமர்ந்து கொண்டு இருந்த பவன் சிங்கிற்கு புன்னகையுடன் சலாம் வைத்தார். 

இந்த சிவா துணிவு நேர்மை என்று இருப்பதால் பல ஊர்களுக்கு மாற்றப் பட்ட வாலிபர், பவன் சிங்கின் நம்பிக்கைக்கு பாத்திரமானவர். பவன் 'என்னய்யா சிவா? இந்த முறை சொதப்பிவிடாதே' என்று சலிப்புடன் கேட்க, சிவா தன் தொப்பியை சரி செய்து கொண்டு ' ஸ்ட்ராங் லீட்ஸ் சார். இந்த டாஸ்மாக்ல தான் நேத்து 'என்ஜின்' மோகனோட மச்சான் கோபால ஸ்பாட் பண்ணி இருக்காங்க, ரொட்டின் செக்ல அவன் பயந்து ஒலரிட்டான்' என்று கூறி இருவரையும் உள்ளே அழைத்துச் சென்றார். அங்கு மூலையில் இருந்த ஸ்டோர் ரூமில் இரு காவலர் கண்காணிப்பில் இருந்த கோபாலிடம், கே.கே. வேலுவின் புகைப்படத்தை தன் டாப்லட்டில் காட்டி 'இவனா?' என்று கேட்க, 'ஆம்' என்றபடி  அவன் தன் தலையை ஆட்டினான்.   

சிவா 'செகண்ட் மெயின் ரோட்ல இருக்கற பழைய பங்களா வீடு, இவங்க மொத்தம் ஆறு பேர், அந்த பயன கட்டி ஒரு அறையில பூட்டி வைத்துவிட்டு, காலை-மாலை  சாப்பாடு தரப்ப மட்டும் உள்ள பொவாங்களாம். சோ தி ஹாஸ்டேஜ் ஸ் செக்யூர்.' என்று விபரங்களை பவன் முன் கொட்டினார். கே.கே. பவனை நோக்கி 'பிரேக் இன்' என்றார், சிவா குறுக்கிட்டு 'அதில் கொஞ்சம் ரிஸ்க் அதிகம், அந்த பங்களாவின் அருகில் ஒரு ஸ்கூல் இருக்கு' என்றார். பவன் 'ஸ்கூல் முடியும் வரை காத்திருப்போம், பிரிங் இன் தி ஷூட்டர்ஸ்' என்று ஆணையிட்டார். ஒய்வு பெற்றவர் என்றபோதும், காவல் துறையில் பவன் சிங்கிற்கு என்று தனி செல்வாக்கு உள்ளதை, சிவாவின் அடிபனியலில் கே.கே. கண்டு வியந்தார்.

மாணவர்கள் மணி அடித்த அடுத்த நொடி உற்சாகமாக தம் வீடுகளை நோக்கி பயணத்தை தொடங்ககினர். அருகில் இருந்த பங்களா பராமரிப்பு இன்றி செடி கொடிகள் சூழ, பெயிண்ட் உதிர்ந்து, மிகவும் மோசமாக இருந்தது. கே.கே. அந்த பங்களாவின் வரலாறை ஆராய்ந்த போது, அந்த வீட்டு மருமகள், மாமியார் கொடுமையினால் தூக்கில் தொங்கி இறந்து, பேயாக வந்து அந்த குடும்பத்தை அழித்ததாக அந்த தெரு வாசிகள் பயத்துடன் சொல்லியதை எந்த வித ஆச்சரியமும் இன்றி கேட்டார். அந்த பங்களாவை ஒட்டி இருந்த மாமரத்தின் வழியே மாடி சென்று, அவர்களை சுற்றி வளைப்பது என்று முடிவானது. வாசல் வழியே யாரேனும் தப்பினால் சுடுவதற்கு இரு ஸ்னைபர்கள் தயார் நிலையில் ஸ்கூல் மாடியில் இருந்தனர்.


கதிரவன் அடுத்த பாதி உலகை சுட்டெரிக்க செல்ல, இருள் இந்த பாதி உலகை சூழ, ராக்காலச் சிறப்பு  கண்ணாடிகளுடன் அதிரடிப்படை சிவா தலைமையில், வீட்டினுள் இறங்கியது. பத்து நிமிட தொடர் துப்பாக்கி சத்தத்தின் பின், கயிலி அணிந்த ஒருவன் மட்டும் முன் வாசல் வழி வர, ஆகாயத்தில் இருந்து வினாடிக்கு எழுநூற்று தொண்ணூற்று ஏழு மீட்டர் வேகத்தில் பறந்து வந்த தோட்டா அவன் துடையை துளையிட்டது. சிவா வலுவிழந்த வேலுவை தன் தோளில் தூக்கியபடி வெளியே வர, தொடையில் சுடப்பட்ட 'என்ஜின்' மோகன் கையில் விலங்கிடப்பட்டு, காவல் துறை வண்டியில் ஏற்றப்பட்டான்.

பவன் சிங் மற்றும் கே.கே. வேலுவை CMC அழைத்துச் சென்று தேவையான முதலுதவி வழங்கி, அவனை சென்னை அழைத்து வந்தனர். அம்பத்தூரில் இருக்கும் Dr.ரபீன்திரநாத் மருத்துவமனையில் மூன்றாம் மாடியில் இருந்த  கம்பத்துக்காரரை காண, மின் தூக்கியினுள் சென்று  வேலு மூன்றாம் எண் பதிந்த பொத்தனை அழுத்த, அது அவன் கையுடன் வர, அவன் உடலினுள் மின்சாரம் புக, பவனும் கே.கே. வும் செய்வதறியாது அவன் அருகில் நின்றனர்.

களவு தொடரும்........                                                                                

2 comments:

  1. Action + Thriller... எதை தொட்டாலும் அது கையுடன் வர... !!! திகைப்புடன் சுவாரஸ்யமாய்...

    ReplyDelete
  2. முதல் வருகைக்கு மிக்க நன்றி D.D

    ReplyDelete