Thursday, May 30, 2013

Rashamon - உலக சினிமா

****************************************முன் குறிப்பு************************************************
என்னை மிகவும் கவர்ந்த உலக சினிமா திரைப்படங்களை பற்றிய விமர்சனத்தை 'சாகும் முன் காண வேண்டிய உலக சினிமா' என்ற பகுதியில் எழுதி வருகிறேன். என்னைப் போன்ற உலக சினிமா பைத்தியங்களுக்காக.
*********************************************************************************************************

ஆங்கிலம் மற்றும் தமிழ் படங்களை மட்டும் பார்த்துக்கொண்டு இருந்த எனக்கு  பிற மொழி படங்களின் மீது ஈர்ப்பு வர முக்கிய காரணம் இந்த படம். ராஷோமோன் என்பது ஜப்பானிய மொழியில் ஒரு நகரின் வாயிலை குறிக்கும். படம் தொடங்குவதும் முடிவதும் அங்கு தான், மழைக்காக ஒதுங்கும் ஒருவன் அங்கு இருந்த சாமியார் மற்றும் மர வெட்டி இருவரிடம் பேச்சு கொடுக்க கதை ஆரம்பிக்கிறது.

ஒரு கொலையின் முக்கிய சாட்சி தான் இந்த மர வெட்டி, அவன் வழக்கு விசாரணையில் நடந்த ஆச்சரியங்களை சொல்ல, மழைக்கு ஒதுங்கியவன் முழு கதையை கேட்பான். அந்த பிணத்தை முதலில் கண்ட மர வெட்டி காவல் ஆட்களுக்கு தகவல் சொல்லியவுடன், விசாரணைகள் தொடங்கும். 

ஒரு கணவன் மனைவி இருவரும் காட்டு வழியில் செல்ல, அதைக் கண்ட ஒரு கள்ளன் அந்த பெண்ணின் மீது காதல் கொண்டு அந்த கணவனை கொன்றான் என்பதே கதை. ஆனால், எப்படி அந்த கொலை நடந்தது, அதை சுற்றிய நிகழ்வுகள் என்ன என்பதை நான்கு பேர் நான்கு கதையாக விசாரணையில் சொல்வர். ஒரு கதைக்கு நான்கு கோணங்கள், இதுவே இந்த படத்தின் சிறப்பு அம்சம்.    

அந்த கள்ளன் ஒரு கதை சொல்லுவான், அந்த இளம் மனைவி ஒரு கதை சொல்லுவாள், இறந்தவன் ஆவியாக வந்து ஒரு கதை சொல்லுவான். எதுதான் உண்மை என்று நாம் குழம்பி இருக்கும் நிலையில், நான்காவதாக ஒரு கதையும் வரும். யார் அந்த கதை சொல்கிறார்கள் என்பதை நான் சொன்னால் உங்களுக்கு சுவாரசியம் கிட்டாது. நான்கில் எது உண்மை கதை என்று படம் பார்த்து நீங்களே தெரிந்து கொள்ளுங்கள்.

படத்தில் நான் ரசித்தவை:

ஒரே காட்சியை திரும்பத் திரும்ப காட்டினாலும்,சலிக்காத விதத்தில் திரைக்கதை அமைத்து இருப்பதே படத்தின் பலம்.


கேமரா ஆட்களின் பின் அவர்களை வேகமாக தொடர்ந்து செல்வது போல் இருப்பதும், பின்னணி இசை படத்தின் விறுவிறுப்பை  கூட்டும் விதம் இருப்பதும் கதைக்கு வலிமை சேர்க்கின்றன.    
  
அந்த இளம் மனைவியின் நடிப்பு, நான்கு முறையும் மூன்று விதமாக இருப்பது நமக்குள் ஏற்படும் குழப்பத்திற்கு மூல காரணம்.
மனைவி 

அந்த கள்ளனின் கதாபாத்திரம் மிகவும் எதார்த்தமாக சித்தரித்து இருப்பார் இயக்குனர் அகிரா. அவன் உடல் மொழிகள், பேச்சு, நடை எல்லா வற்றிலும் கள்ளனுக்கு ஏற்ற ஒரு திமிர் இயல்பாக அமைந்து இருப்பது அருமை. இந்த கள்ளன் கதாப்பாத்திரத்தில் நடித்தவரை மற்ற அகிரா படங்களிலும் நான் கண்டு ரசித்ததுண்டு. 
   
கள்ளன் 

படத்தில் மொத்தம் ஆறு பேர் தான், முக்கிய கதாபாத்திரங்கள் மூன்று மட்டுமே, மூவரை மட்டும் வைத்து கதையை நகர்த்துவது இயக்குனரின் தனித்திறமை. 

விசாரணை காட்சிகளின் போது கதாபாத்திரங்கள் நம்மை பார்த்து, நம் கேள்விகளுக்கு பதில் சொல்லுவது போல் படமாக்கப்பட்டு இருப்பது நம்மை கதையுடன் இணைக்கும்.

உண்மைக்கு என்றுமே பல கோணங்கள் உண்டு என்பதே இந்த படத்தின் மூலம் நான் புரிந்தது. 

நீங்க கேட்களாம் 'ஒரு கதையை பல கோணத்தில் சொல்லும் விதத்தில் ஆயுத எழுத்து, Vantage Point போன்ற  எத்தனையோ படங்கள் வந்து விட்டன, இதில் என்ன சிறப்பு இருக்க போகுது?' என்று.

என் பதில், நகல் எத்தனை வந்தாலும் அசல் என்றுமே ஒசத்தி தான், இந்த பாணியில் கதையை நகர்த்த முதன் முதலில் 1950களிலேயே   விதை போட்டவர் அகிரா.
அகிரா குரோசோவா 
*****************************************************************************************
ஆண்டு : 1950
மொழி   :  ஜப்பானிய மொழி
என் மதிப்பீடு : 4.4/5
மேலும் விபரங்களுக்கு இங்கு சொடுக்கவும் imdb
*****************************************************************************************

19 comments:

  1. நான்கு கதை என்றால் சுவாரஸ்யம் தான்...


    நன்றி...

    ReplyDelete
    Replies
    1. முதல் கருத்துரைக்கு மிக்க நன்றி

      Delete
  2. குறைந்த கதாபாத்திரங்களை வைத்து ஒரே இடத்தில் படம் எடுப்பது என்பது மிகவும் சிரமம் தான். அந்த விதத்தில் இயக்குநருக்கு ஒரு பெரிய பாராட்டு... இணைப்புக்கு நன்றி...

    ReplyDelete
    Replies
    1. சரி தான், எல்லா புகழும் இயக்குனரையே சேரும். கருத்துரைக்கு நன்றி நண்பரே.

      Delete
  3. ‘அந்த நாள்’ திரைப்படம் துவங்கி ‘ஆய்த எழுத்து’ ஈறாக அகிரோ குரோசேவாவின் இந்தப் பாணியைக் கையாண்டு வந்த படங்களைப் பட்டியலிட்டால் பக்கம் பற்றாது ரூபக். உலக சினிமாவிற்கு பலப்பல புது உத்திகளை கற்றுத் தந்த மகாகுரு அகிரா. இந்தப் படத்தை நீங்கள் ரசித்ததில் வியப்பேதுமில்லை. அதென்ன சாகும்மு்ன் காண வேண்டிய திரைப்படம்? செத்தபின் காண முடியுமா என்ன? ஹி... ஹி...

    ReplyDelete
    Replies
    1. நல்ல கேள்வி... கேட்க நினைத்த கேள்வி...

      Delete
    2. 'அந்த நாள்' படம் பார்த்தது இல்லை. தாங்களும் என்னைப்போல் அகிராவின் ரசிகர் என்பதில் பெருமை.

      // அதென்ன சாகும்மு்ன் காண வேண்டிய திரைப்படம்? செத்தபின் காண முடியுமா என்ன? ஹி... ஹி...//

      //நல்ல கேள்வி... கேட்க நினைத்த கேள்வி...//

      ஒரு ஆங்கில தொலைக்காட்சியில் '50 movies to watch before you die' என்ற தலைப்பில் சில படங்களை வெளியிட்டனர், அந்த தாக்கம் தான் இந்த தலைப்பு.

      இந்தப் படங்களை காணாமல் உயிர் உடலை பிரியக் கூடாது.

      Delete
  4. Yov Dhanabala! irukkura athanai bloglayum comments podriyae! unnala epdiya mudiyuthu! apdi ennathan velai pakkraya nee!

    ReplyDelete
    Replies
    1. எம்மைப் போன்ற வளரும் மற்றும் அனைத்து பதிவர்களையும் ஊக்குவிக்கும் பொதுநல பணி.

      Delete
  5. பழைய படமானாலும் விமர்சனம் புதுசு...

    ReplyDelete
    Replies
    1. கருத்துரைக்கு மிக்க நன்றி :)

      Delete
  6. DVD இருந்தா குடுப்பா. ரொம்ப நாளா பாக்கணும்னு நெனச்சிட்டு இருக்கேன்.

    ReplyDelete
    Replies
    1. கண்டிப்பா, ஆனா என்னிடம் டவுன்லோட் செய்ததே உள்ளது, அடுத்த சந்திப்பில் பகிர்கிறேன்.

      Delete
  7. நான் ரசித்துப் பார்த்த,பார்த்து ரசித்த படம்.குராசோவா சூப்பர்!

    ReplyDelete
    Replies
    1. நீங்கள் ரசித்ததை கருத்துரையிட்டு பகிர்ந்தமைக்கு மிக்க நன்றி

      Delete
  8. நான் மிகவும் ரசித்த சினிமா இது.
    Youtube-ல் இப்படம் உள்ளது.

    ReplyDelete
    Replies
    1. கருத்துரைக்கு நன்றி

      Delete
  9. பார்க்க வேண்டும் என்று ஆவலை தூண்டி விட்டீர்கள்.

    ReplyDelete
    Replies
    1. மகிழ்ச்சி , கட்டாயம் பாருங்கள்.

      Delete