Monday, May 27, 2013

தேன் மிட்டாய் - மே 2013 (அனுபவங்கள்)

தேன் மிட்டாய் 
 நாகரீக மாற்றத்தில் காணாமல் போன பல போக்கிஷங்களுள் ஒன்றான 'தேன்  மிட்டாய்'யை நினைவூட்ட, இந்த தலைப்பில் என் வாழ்வில் நான் கண்டு ரசித்த சிறு அனுபவங்களை ஒரு தொகுப்பாக எழுத உள்ளேன். படித்து கருத்துரையிட்டு மின்னல் வரிகள் பால கணேஷ் சார்  சொல்ற மாதிரி 'தோள்ல தட்டிக் கொடுக்கறதோ..தலையில குட்டுறதோ...உங்க இஷ்டமுங்க!'.


வைரஸ் அட்டாக் 
இம்மாதம் என் கணினிக்கு சனி உக்கரத்தில் இருக்கிறது. கணினியை 'மால்' வைரஸ் பதம் பார்த்து விட்டது. எப்படியோ அலசி ஆராய்ந்து, மென்பொருளில் வல்லமை பெற்ற என் அண்ணன் உதவியுடன், வைரஸை நீக்கினாலும், நோயின் பின் விளைவாக கணினி பல சைடு எபக்ட்டுகளுக்கு உள்ளானது. மிகவும் மந்தமாகவே செயல் படுகிறது. எனவே 'safe mode' இல் உபயோகப் படுத்துவதால், திண்டுக்கல் தனபாலன் பகிரும் அருமையான பாடல்களை கேட்க இயலாத நிலை. நண்பர்களே usb சாதனங்களை உபயோகிக்கும் போது சற்று உஷார்.    

அக்னியில் அக்னி சாட்சி  
என்னவென்று தெரியவில்லை, மே மாதத்தில் ஏகப்பட்ட திருமணங்கள். சொந்தம், நட்பு, அலுவலகம் என்று பத்திற்கும் மேல் அக்னி வெய்யிலில் அக்னி சாட்சியை தேடும் விசித்திர மனிதர்கள். அட ஏன்யா இந்த அக்னி வெய்யில்ல கல்யாணத்த வைக்கறிங்க? என்று என்னால் கேட்க முடியவில்லை. காரணம் எந்த கல்யாணத்துக்கும் நான் செல்ல வில்லை. ஹி.. ஹி... ஒரே நாளில் மூன்று திருமணங்கள் வைத்தால், யாரை விடுவது, எதற்கு செல்வது என்ற குழப்பத்தில், அமெரிக்க அடிமை வேலையை தொடருவதே மேல் என்று அலுவலகம் சென்று விட்டேன்.

மே மாதம் திருமணக் கோலம் கண்ட அனைத்து நண்பர்களுக்கும் இல்லறம் சிறக்க என் மனமார்ந்த வாழ்த்துக்கள். வாழ்க வளமுடன்!

அடுத்த பதிவு தயார் 
ஒரு நாள் தங்கையை கல்லூரியில் விட சென்ற போது, தேர்வு முடித்து வெளியே வந்த மாணவிகள், (மாணவர்கள் அப்போது கண்ணில் படவில்லை, நம்புங்கள்)  'டூ மார்க், 16 மார்க்' என்று பேசி சென்றது காதில் விழ, கல்லூரியில் அடித்த பிட்டுக்கள் நினைவில் வந்தது. அடுத்த பதிவிற்கு கதையும் சிக்கியது.   

அண்ணாச்சி பேசாதிங்க 
தமிழ் மணத்தில் என் வலைப்பூவை இணைத்த செய்தியை மின் அஞ்சலில் பார்த்து,  'அப்பாட இனிமேலாவது நமக்கு கொஞ்சம் ஹிட்ஸ் அதிகம் ஆகும்'  என்று  வானில் பறந்து கொண்டிருந்த சமயம், என் அம்மா பச்சை மிளகாய் வாங்கி வரச் சொன்னாள். ஒரு முக்கிய பிரமுகர் மிளகாய் வாங்கவா என்று பற்களை கடித்து, வண்டி எடுத்து சென்றேன். தெரு முனையில் உள்ள கடை என்றாலும், நடப்பது நமக்கு கடிது.

மணி 5: 35
'அண்ணாச்சி அஞ்சி ருபாய்க்கு பச்சை மொளகா'  என்று சொல்லி அவரையே நான் பார்த்து கொண்டிருந்தேன். பணிவாக, பொறுமையாக கடைக்கு வந்த பெண்கள் கூட்டத்தை சமாளித்து கொண்டிருந்தார். 

மணி 6:45 
வெறும் ஐந்து ரூபாய்க்கு பச்சை மிளகாய் வாங்கி நான் வீடு திரும்பும் போது 'இதுக்கு நானே போய் வாங்கி இருப்பேன்' என்று என்னை திரும்பிக்  கடித்தார். 

இயக்குனர் மற்றும் நடிகர் மணிவன்னன் பல முறை கூறியதுண்டு, நான் தான் முட்டாள் தனமாக இருந்து விட்டேன். 'பொம்பளைங்க இருக்கற கடைக்கு காய் வாங்க போகாத, நம்மள மதிக்க மாட்டாங்க'.                
                                
இறக்கும் வரை உழைத்த உத்தமன் 
நாடே (தமிழ் நாடே) டி.எம்.எஸ். மறைவுக்கு அஞ்சலி செலுத்தும் இந்த வேளையில், என் தெருவில் சென்ற வாரம் காலமான பால் கடை தாத்தாவிற்கு நான் அஞ்சலி செலுத்த விரும்பிகிறேன். தள்ளாத என்பதுகளிலும் கடையில் பாக்கெட் பால் விற்றவர், தான் இறந்த நாள் காலை வரை பால் விற்று கொண்டுதான் இருந்தார் அந்த உன்னத மனிதன்.   

தோற்ற விஞ்ஞானம் 
நண்பரின் பத்து மாத குழந்தை வாந்தி, பேதி என்று அவதிக்கு உள்ளானது. சென்னையில் உள்ள பல முன்னணி மருத்துவமனைகளில் மொய் எழுதியும் பயனின்றி, சொந்த ஊரான நெல்லைக்கு அழைத்துச் சென்றனர். என்னடா இந்த நேரத்துல ஊருக்கு அழைத்து போகிறார்களே என்று வருந்திய எனக்கு ஒரு ஆச்சரியம் காத்திருந்தது. நாட்டு வைத்தியம் அந்த குழந்தையை காப்பற்றியது, அவன் சாவியில் இருந்து விழுங்கிய பாசியை அவன் வாய் வழியே உருவி எடுத்து விட்டனர். ஆச்சரியம் ஆனால் உண்மை.

இது போன்று எவ்வளோ கலைகள் நம் நாட்டில் சரியான முறையில் மற்றவர்களுக்கு கற்று தராததாலும் ஆவணங்களாக மாறாததாலும் அழிந்து போகின்றன.

பூச்சாண்டி 
நண்பர் வீட்டிற்கு சென்ற போது, ஒரு பெண் குழந்தை அடம் பிடிக்க, 'தம்' வருது என்று அந்த குழந்தையை பயம் காட்டினார், அந்த குழந்தையும் அடங்கி விட்டது. இது என்ன 'தம்' என்று கேட்டபோது, தூரத்தில் இருந்த கிரேனை காட்டி, அந்த குழந்தையை நோக்கி 'இந்த தம் அடம் பிடிக்கற குழந்தைகள தூக்கிட்டு போகும்' என்றார்.

ஆமாம் என்ன பண்ண முடியும், சன்னலை திறந்தா  அதுதான் தெரியுது, அத காட்டி தான் பயம் காட்ட முடியும். இப்ப எல்லாம் எங்க இந்த பூம் பூம் மாட்டுக்காரர்கள் வர்றாங்க.          

கியர் பிரச்சனை 
உறவினர் வீடு சென்ற போது, கடைக்கு செல்ல அவர் வண்டியை எடுக்க வேண்டிய கட்டாயம். இதுவரை நம் ஐயா ஸ்ப்ளென்டர் தவிர வேறு வண்டியை தொட்டது கூட கிடையாத ஏக வண்டி விரதன், பஜாஜ் டிஸ்கவர் ஓட்ட எடுத்தால், நியுட்ரல் கொண்டு வரவே முடியலை, என் வியர்வை துளி வண்டி டாங்கை நனைக்க, என் அண்ணன் குரல் மேலிருந்து 'கியர் குறைக்க லீவரை பின்னாடி தள்ளு, ஸ்ப்ளென்டர்க்கு அப்படியே ஆப்போசிட் ', அட ஸ்டார்ட் ஆயிடுச்சி.

என்னைப் போல பயிற்சி ஓட்டுனர்களை ஏனப்பா இப்படி குழப்புரிங்க, எல்லாம் இரு சக்கர வண்டி தான, ஒரே மாதிரி தயாரிக்க கூடாதா?

மாச கடைசி
நேராக பல சரக்கு கடைக்கு சென்றேன், வழக்கம் போல் பழங்கள் மற்றும் ஹார்லிக்ஸ். இந்த ஹார்லிக்ஸ் கொடுக்கற பழக்கத்த கொஞ்சம் மாத்துங்கப்பா, ப்ளீஸ்.

பில் 368 என்றாள்  அந்த பெண், சற்று சுமார் தான். கார்டை எடுத்து நீட்டினேன்.
இந்த கவருக்கும் காசு வாங்கறாங்களே, பிளாஸ்டிக் பையை ஒழிக்கவா இல்லை அதிலும் இலாபம் பார்க்கவா? என்று என்னுள் எண்ணிக் கொண்டிருக்க 'கார்டு டிக்லைன், வேற கார்டு கொடுங்க' என்றாள்.

வேற கார்டுக்கு நான் எங்க போக, திரும்ப தேய்க்க சொன்னேன். திரும்பவும் டிக்லைன், அவள் ஏக்கத்துடன் என்னை பார்க்க, பின்னால் வரிசையில் இருந்தவன் என்னை மொறைக்க, என் மூளையில் மின்னல் மின்னியது. '300 ரூபாய் என்டர் பண்ணுங்க, மீதி கேஷ் தரேன் ' என்றேன், என் நிலைமை புரிந்த ஓரக்கண்ணில் புன்னகைத்தாள்.

உங்க வங்கி இருப்பு இப்ப முப்பத்து நான்கு ரூபாய் நாற்பத்து ஒன்பது பைசா என்று குறுந்தகவல் வந்தது. ஜூன் வர இன்னும் ஐந்து நாட்கள்!

பானி  பூரி  
பானி பூரி வாங்க மேடவாக்கம்-தாம்பரம் சாலையில் காமராஜபுரத்தில் இருக்கும் கையேந்தி கார்னருக்கு சென்றேன். அங்கு மொத்தம் நான்கு தள்ளு வண்டி கடைகள் இருக்கும், எல்லா வகையான சாலை ஒர உணவுகளும் ஒரே இடத்தில கிடைக்கும் இடம் அது என்பதால், நான் வைக்கும் பெயர் இது.

'அண்ணே மூனு பானி  பூரி பார்சல்'

'இல்ல தம்பி .ஒடைஞ்ச பூரி தான் இருக்கு.'

'பரவா இல்லனா, இருக்கரத கொடுங்க.'

'இல்ல தம்பி இன்னைக்கு நான் கொடுத்துடுவேன். நாளைக்கு நீங்க வரணும் இல்ல. எந்த பக்கம் வீடு?'

'கேம்ப் ரோடு போகணும். அட நீங்க எத கொடுத்தாலும் நான் திரும்ப வருவேன்னா'

'எனக்குனு மனசாட்சி இருக்கு, கொஞ்சம் இருங்க ஆள் அனுப்பி கொண்டு வரச் சொல்றேன்' என்று சொல்லி தன் கடை பையனை அனுப்பி, என்னை காக்க வைத்து, நல்ல பூரி கொடுத்து அனுப்பினார்.

சென்னையில் காசுக்கு ஆச படாத நல்லவங்களும் இருக்காங்க, என்ன மழை தான் வருதில்லை .                                 

13 comments:

  1. டைரி படிச்ச feeling! சுவாரஸ்யம்!

    ReplyDelete
    Replies
    1. முதல் கருத்துரையிட்டு வாழ்த்தியமைக்கு என் நன்றிகள்

      Delete
  2. பற்பல சுவைகளுடன் தேன் மிட்டாய்... ரசித்தேன்...

    ReplyDelete
    Replies
    1. என் தேன் மிட்டாயை சுவைத்த உங்களுக்கு என் மனமார்ந்த நன்றி.

      Delete
  3. அடேங்கப்பா... ஏராளமான வெரைட்டில மேட்டர்கள் இருந்தாலும் சலிககவில்லை ரூபக். பென்டிரைவின் பயனாக வைரஸ் வந்து என் கணினி உடல்நலக் குறைவுற்று என்னைக் கெட்ட வார்த்தையில் திட்டியதை நான் மறக்கவில்லை. இப்பல்லாம் டபுள் உஷாரு. நீங்களும் இனிமே அப்டித்தான்னு நினைக்கிறேன். இந்த பைக் ஓட்டற சமாச்சாரத்துல... நீங்க சொன்னது கரெக்ட்! ஏன் இப்படி ஆப்போசிட்டா தயாரிச்சுத் தொலக்கிறாங்க?

    ReplyDelete
    Replies
    1. மிக்க நன்றி சார்.

      // இப்பல்லாம் டபுள் உஷாரு. நீங்களும் இனிமே அப்டித்தான்னு நினைக்கிறேன்.// கண்டிப்பாக, ரொம்பவே அடி பட்டாச்சு.

      //ஏன் இப்படி ஆப்போசிட்டா தயாரிச்சுத் தொலக்கிறாங்க?// நம்பல குழப்பரதையே நாட்டுல பலர் வேலையா வைத்து கொண்டு இருக்காங்க.

      Delete
  4. சுவாராசியமான தகவல்...

    ReplyDelete
    Replies
    1. கருத்துரையிட்டு வாழ்த்தியமைக்கு மிக்க நன்றி

      Delete
  5. // கியர் பிரச்சனை // சேம் பிளட் ....!

    பில் 368 என்றாள் அந்த பெண்,// சற்று சுமார் தான். // ஹார்லிக்ச மட்டும் வாங்குங்க தம்பி , அடிவாங்கிடாதீங்க ...!

    ReplyDelete
    Replies
    1. //ஹார்லிக்ச மட்டும் வாங்குங்க தம்பி , அடிவாங்கிடாதீங்க ...!// haa haa haa அல்டிமேட் தலைவா :-)

      Delete
    2. ஹா ஹா ஹா. உண்மைய பேசியே வளந்துட்டோம்.

      Delete
  6. தேன் மிட்டாய் பெயரே அருமை.. எங்காவது கடையில் பார்த்தால் உடனே எடுத்து விடுவேன்,ஆனால் ஐந்து பைசாவுக்கு வாங்கி சாப்பிட்ட பொழுது இருந்த சுவை இப்போது இல்லை...

    //இறக்கும் வரை உழைத்த உத்தமன் // நெகிழ்ச்சி அடைந்தேன்.. கண்டுகொள்ளப்படாத மனிதர்களை நினைவு கூர்ந்தது அருமை

    //தோற்ற விஞ்ஞானம்// நேற்று தான் இந்தக் கதை அறிந்தேன்... இந்த முறை வைத்தியம் செய்வதில் என் பாட்டி கை தேர்ந்தவர் ஆனால் அவரோடு போயிற்று என்பதே உண்மை

    //மாச கடைசி// இந்த ட்விஸ்ட் எதிர்பார்க்கல

    ReplyDelete
    Replies
    1. படித்து ரசித்தமைக்கு நன்றி

      //இந்த முறை வைத்தியம் செய்வதில் என் பாட்டி கை தேர்ந்தவர்// நீங்களும் பயிற்சி பெற்றிருந்தா, நாங்க எல்லாம் ப்ரீயா ட்ரீட்மென்ட் பார்த்து இருப்போம் .

      Delete