****************************************முன் குறிப்பு************************************************
என்னை மிகவும் கவர்ந்த உலக சினிமா திரைப்படங்களை பற்றிய விமர்சனத்தை 'சாகும் முன் காண வேண்டிய உலக சினிமா' என்ற பகுதியில் எழுதி வருகிறேன். என்னைப் போன்ற உலக சினிமா பைத்தியங்களுக்காக.
*********************************************************************************************************
ஆங்கில கருப்பு வெள்ளைப் படங்களின் மேல் எனக்கு ஈர்ப்பு வர முதல் காரணம் '12 ஆங்ரி மென்' என்கிற படம், அதன் பின் தான் எனக்கு எல்லா கிளாசிக் படங்களின் மேல் ஒரு காதல் வந்தது. இந்த படத்தை விமர்சிக்கும் முன்னோ அல்லது காணும் முன்னோ அமெரிக்க நீதித்துறை பற்றி அறிந்துகொள்வது அவசியம் என்பதால், சில முக்கிய நடை முறைகளை முதலில் கண்டு, பின் படத்தை பற்றி காணலாம். (பின் வரும் தவல்களும் எனக்கு உலக சினிமா கற்பித்தவையே.)
ஒரு வழக்கு நீதி மன்றத்தில் நடுக்கும் போது பன்னிரண்டு பேர் கொண்ட 'jury' நீதிபதிக்கு வலதுபுறம் அமர்ந்து எல்லா விசாரணை நிகழ்வுகளையும் கவனித்துக்கொண்டு இருப்பர். இவர்களை தேர்வு செய்வதே ஒரு பெரிய முறை தான், குற்றவாளிக்கு எந்த வித சம்மந்தமும் இல்லாத, சாதாரண மக்களையே தேர்வு செய்வர். வழக்கு விசாரணை நடக்கும் சமயம் அவர்களுக்கு எந்த வித வெளி உலக தொடர்பும் இருக்காது. விசாரணை முடிந்த பிறகு, அவர்களை ஒரு அறையில் அடைத்து பூட்டி விடுவர். குற்றம் சாட்ட பட்டவர் 'குற்றம் செய்தவர்' என்றோ அல்லது 'குற்றம் அற்றவர்' என்றோ அவர்கள் அனைவரும் ஒருமனதாக தேர்வு செய்ய வேண்டும், அவர்கள் செய்யும் அந்த தேர்வே நீதிபதியின் தீர்ப்பாக அமையும்.
இப்போது உங்களுக்கு இந்த படத்தின் தலைப்பு சற்று விளங்கி இருக்கும் என்று நம்புகிறேன். முதல் இரண்டு நிமிடங்கள் நீதிபதி அந்த வழக்கில் தந்தையைக் கொன்றதாக மகன் மீது சாற்றிய குற்றங்களை சுருக்கமாக கூறுவார், பின் அந்த பன்னிரண்டு jury உறுப்பினர்களும் ஓர் அறைக்குள் அடைக்க படுவர். படம் நடப்பது முற்றிலும் அந்த அறையில் தான். ஒரு அறைக்குள் பன்னிரண்டு பேருக்கு இடையில் நூற்று இருபது நிமிடங்கள் நடக்கும் வசனங்கள் தான் இந்த படம்.
நான் படத்தில் ரசித்தவற்றை பட்டியலிடுகிறேன் :
ஒரு அறைக்குள் படமாக்கப்பட்ட கதை என்றாலும், எந்த ஒரு நொடியிலும் விருவிருப்பு குறையாதபடி வசனங்கள் அமைந்திருக்கும்.
ஒருத்தரை மட்டும் சில இடங்களில் 'Mr. Foreman' என்று அழைப்பர், படத்தில் மற்ற எந்த கதாபாத்திரத்திற்கும் பெயர் வைக்காமலே கதை முடிந்து விடும்.
ஒருத்தரை மட்டும் சில இடங்களில் 'Mr. Foreman' என்று அழைப்பர், படத்தில் மற்ற எந்த கதாபாத்திரத்திற்கும் பெயர் வைக்காமலே கதை முடிந்து விடும்.
கருப்பு வெள்ளை படம் என்றாலும், வெளியில் மழை பொழியும் போது உள்ளே விளக்குகளை ஆன் செய்வதும், அந்த சுவிட்சில் மின்விசிறியும் இணைந்து ஓடும் போது தான், வியர்வையால் சட்டை நனைந்தவர்களுக்கு மின்விசிறி முதலில் ஓடாத காரணம் விளங்குவதும் ரசிக்க வைத்த சிறு விஷயங்கள்.
அறைக்குள் அனைவருக்கும் வியர்வை வரும், ஒருத்தரை தவிர. ஆனால் அந்த ஒருத்தருக்கு வியர்வை வரும் தருணம் உங்கள் வாய் தானாக விசில் அடிக்கும்.
பன்னிரெண்டில் பதினொன்று பேர் மட்டும் உடனே அவன் குற்ற்றவாளி என்று முடிவு செய்துவிடுவர், ஆனால் ஒருவர் மட்டும் அவன் குற்றவாளியாக இல்லாமல், சந்தர்ப்பமும் சாட்சியங்களும் அவனுக்கு எதிராக இருந்தால்?, என்று தனித்து நின்று வாதாட தொடங்குவார்.
ஓர் இடத்தில 'He don't know how to speak English.' என்று ஒருவர் சொல்லும் போது, மற்றொருவர் 'He doesn't know how to speak English.' என்று சொல்லி மிக அழகாக அவர் பிழையை சுட்டிக்காட்டுவார்.
முதல் வாக்கு பதிவு 11/1 'குற்றவாளி' என்று பதிவாகும், வாதங்கள் தொடரும், பின் 9/2 என மாறும். வாதங்கள் சூடு பிடிக்கும், சமன் நிலையை அடையும் 6/6. அதன் பின் சக்கரம் திசை மாறி சுற்ற 2/9 என்று மாறும், இறுதியில் 1/11 'குற்றவாளி இல்லை' என்றே மாறும்.
என்னடா கதையை சொல்லிவிட்டானே என்று மனதிற்குள் கேக்கறிங்களா, அந்த வசனங்களில் தான் சுவாரஸ்யமே இருக்கு. உறுதி செய்யப்பட்ட சாட்சிகள் வாதத் திறமையால எப்படி உடைக்க படுகின்றது என்பதை நீங்க படம் பார்த்து ரசிக்க வேண்டும் என்பதுதான் என் ஆசை.
'கோர்ட் ரூம் சினிமா' என்று ஒரு பிரிவு உண்டு, என் பார்வையில், அந்தப் பிரிவில் '12 ஆங்ரி மென்' படத்திற்கே முதலிடம்.
*****************************************************************************************
ஆண்டு : 1957
மொழி : ஆங்கிலம்
என் மதிப்பீடு : 4.6/5
மேலும் விபரங்களுக்கு இங்கு சொடுக்கவும் IMDB
*****************************************************************************************
Tweet | ||
தேடி பிடித்து வாங்கனும்...
ReplyDeleteமுதல் கருத்துரைக்கு மிக்க நன்றி. தேடும் முதல் கடையிலேயே கிடைக்க வாழ்த்துக்கள்.
ReplyDelete/'சாகும் முன் காண வேண்டிய உலக சினிமா'/
ReplyDeleteஅடேங்கப்பா!!
என் தளத்தில் தாங்கள் பதித்த முதல் கருத்துரைக்கு நன்றி.
Deleteநேர்ல பாக்கும்போது மீச இல்ல. ப்ரொபைல் போட்டோல முறுக்கு மீச இருக்கே. சொந்த ஊரு மணப்பாறையா ரூபக் :)
ReplyDeleteஹா ஹா ஹா. நானும் கல்லூரி வரை பெரிய மீசையுடன் தான் இருந்தேன், பிறகு தான் இந்த மாற்றம்.
ReplyDeleteமணப்பாறை எல்லாம் இல்லைங்க சிவா :) , ECR கடப்பாக்கம் அருகில், புலிய அடித்து விரட்டன சேம்புலிபுரம்.
பட்டியல் ரசிக்க வைத்தன...
ReplyDeletehttp://minnalvarigal.blogspot.in/2013/05/blog-post.html - மின்னல் or பவன் பக்கத்தில்...?
மிக்க நன்றி. மெட்ராஸ்பவன் சிவா பக்கத்தில், படத்தின் வலது புறம்.
Deleteஅருமையான படம்.. என் எம்.பி.ஏ காலத்தில் எனக்கு காடினார்கள்.. படத்தில் மொத்தமே நான்கு சீன் தான் (முதல் கோர்ட் சீன், ரூமில் பேசுவது, சிகரெட் குடிக்கும் அறை, கடைசி கோர்ட் சீன்).. ஆனால் அந்த விறுவிறுப்பும் சுவாரசியமும் ஒரு ஆக்சன் படத்தை பார்ப்பது போல் இருக்கும்.. இந்தப்படத்தை இன்னொரு முறை பார்க்க வேண்டும்.. உங்கள் உலக சினிமாவில் எதாவது தமிழ்ப்படம் பற்றியும் வருமா என ஆவலாக இருக்கிறேன்.. நல்ல விமர்சனம்,... வாழ்த்துக்கள்
ReplyDeleteயோவ் எப்டியா இப்டியெல்லாம் :-)
Deleteமிக்க நன்றி. தமிழ் சினிமா இல்லாம உலக சினிமாவா? ஒரு சுற்றுலா முடித்துவிட்டு மிக விரைவில் தமிழ் சினிமா.
ReplyDeleteஇப்போதுதான் முதல் முறையாக உங்கள் தளத்தை வாசிக்கிறேன்.
ReplyDeleteஅருமையான, தெளிவான நடை.
தொடருங்கள்.
முதல் வருகைக்கும் , மனம் திறந்து பாராட்டியமைக்கும் என் மனமார்ந்த நன்றி. உங்கள் ஊக்கம் தொடர நானும் தொடருவேன்.
Deleteயோவ்... நீ வெசசிருக்கற டிவிடி கவர் படத்துல 12 Angry Man அப்டின்னு இருக்குது. விமர்சனம் பூரா 12 ஹங்ரி மேன்-னு எழுதியிருக்க. Angryக்கும் Hungry-க்கும் வித்யாசம் இல்லையா தம்பி? சரி... விடு! ரசிச்ச படத்தை எங்களுக்கும் ரசனையோட சொல்லியிருக்க. அந்த ரூபக் ரசிச்ச அம்சங்களை நாமளும் பாத்துரசிக்கணும்கற எண்ணத்தையும் விதைச்சுட்ட. பாக்க முயல்கிறேன். (அதென்ன சாகும்முன் பார்க்க வேண்டிய...? செத்தபின் பார்க்கவும் ஏலுமோ? ஹி... ஹி...)
ReplyDelete// Angryக்கும் Hungry-க்கும் வித்யாசம் இல்லையா தம்பி?// அட ஆமா இல்ல....
Deleteஐயா வித்தியாசம் நிறையவே உண்டு, சற்றே கவனக்குறைவு, திருத்திவிட்டேன். சுட்டிக் காட்டியதற்கு மிக்க நன்றி.
Deleteநீங்க கண்டிப்பா பார்த்து ரசிக்கணும்.
சிலருக்கு சாகும் முன் பல கோவில்களை பார்க்கணும்னு ஆசை இருக்கும், அதுபோல தான் என்னை போன்ற பைத்தியங்களுக்கு சில படங்களை பார்க்காம சாவு வராது.
விமர்சனம் படிக்கும் பொழுதே பார்க்க வேண்டும் என்ற ஆர்வம் வருகிறது ரூபக், படம் முழுவதும் வசனங்களால் நிறைந்தது என்றாலும் விறுவிறுப்புக்கு குறைவில்லை என்று எழுதி இருப்பது தான் காரணம்... வரம் தரும் தெய்வம் அருகில் இருக்க நான் ஏன் படம் தேடி எங்கெங்கோ அலைய வேண்டும் :-)
ReplyDeleteஹா ஹா, அலையவே வேண்டாம். உங்களுக்கு இந்த படத்தை பார்க்க வேண்டிய ஆசையை தூண்டவேண்டும் என்ற என் நோக்கம் நிறைவேரியதில் மகிழ்ச்சி. கருத்துரைக்கு நன்றி.
Deleteஹார்ட் டிஸ்கில் கிடக்கிறது இன்னும் பார்க்கவில்லை.வித்தியாசமான படமாக இருக்கிறதே.விரைவில் பார்க்கிறேன் .
ReplyDeleteபாருங்கள், உங்கள் எல்லா சுவைகளுக்கும் விருந்தாக அமையும்
Delete