T151உம் நானும்
இம்மாதம் அலுவலகத்தில் இருந்து வீடு திரும்பும் பொழுது, மூன்று நாள் hat-trick சாதனையாக T151 கிடைத்ததைவிட, மகிழ்ச்சிக்குரிய விசயம் அந்தப் பேருந்தில் இடம் கிடைத்தது தான். அப்படி நான் பேருந்தில் அமர்ந்து வீடு திரும்பிக் கொண்டிருக்கும் பொழுது ஒரு லாவகரமான சிந்தனை தோன்றியது. சென்னை மாநகரப் பேருந்துகளில் வலது புறம் ஆண்கள், இடது புறம் மற்றும் இறுதியாக இருக்கும் ஒரு வரிசை பெண்களுக்கு ஒதுக்கப் பட்டது என்பது அனைவரும் அறிந்ததே. இதில் பெண்கள் இருக்கையில் ஆண்கள் அமர்ந்தால், குழாய் அடி சண்டை போட ஒரு கூட்டமே உள்ளது, பல முறை நானும் பாதிக்கப் பட்டுள்ளேன். நான் இருந்த பேருந்தில் வலது புறம் ஒன்பது இருக்கைகள் (கை விட்டு எண்ணினேன்) பெண்களால் ஆக்ரமிக்கப் பட்டிருந்தது. பேருந்து முழுக்க ஆண்கள் கூட்டம் நின்று கொண்டிருந்த பொழுதும் ஒருவர் கூட அவர்களை எழுப்ப வில்லை. ஆண்கள் எவளோ சாதுக்கள் !
T251 - புதிதாய்
இது என் அலுவலகத்தில் இருந்து என் வீடு வரை செல்லும் புதிய நேர் பேருந்து. இந்த பேருந்து OMRஇல் செல்லாமல், ஊர் வழியே சித்தாலப்பாக்கம், மாடம்பக்கம் வழியாக தாம்பரம் அடைகிறது.ஒன்பது ரூபாய் பயணச்சீட்டில்,சென்னையின் புறநகரில் ஒழிந்து இருக்கும் கிராமங்களைக் காணும் காட்சி இந்த வழியில் செல்லும் பொழுது கிடைத்தது.
சாவித்திரி படும் பாடு
சாவித்திரி படும் பாடு
என் தோழி ஒருவர் முகநூலில் பகிர்ந்த ஸ்டேடஸ்:
Men identify only two types of women : the Satya savitri and the Slutty savitri ....But what if u were neither? ??
Live happily unnoticed
Live happily unnoticed
Toni & Guy
முன் ஒரு காலத்தில் முடி திருத்தும் தொழிலில் இருப்பவர்கள் தாழ்வாகவே நடத்தப் பட்டனர். புது யுக மாடர்ன் சலூன்களால் இன்றைய நிலையே வேறு. இங்கிலாந்தின் பிரபல முடி திருத்தும் நிலையமான Toni & Guy சென்னையிலும் பல கிளைகளுடன் செயல்பட்டு வருகிறது. இங்கு முடி திருத்துவதற்கான விலை, நமது முடியை வெட்டுபவரின் அனுபவத்தை பொருத்து உயரும் ஆச்சரியத்தைக் கண்டேன். ஆண்களுக்கு 400 ரூபாய் முடிதிருத்த கட்டணம் என்று Stylistஇல் துவங்கி Senior Stylist, Style Director, Manager என படிப் படியாக உயர்ந்து ஆயிரம் ரூபாயை தொட்டுவிடுகிறது.
IIT - Chennai
சென்னை வந்திருந்த ஆவியின் உதவியால் முதல் முறை IITயினுள் செல்ல முடிந்தது. சென்னையின் மையப் பகுதியில் பல நூறு ஏக்கர் பரப்பளவில் ஒரு காட்டுக்கு உள்ளே ஒரு கல்லூரியும் பல ஆயிரம் மக்களும் வாழ்வது கண்டேன். கல்கியின் கதைகளில் மான்கள் மனிதர்களுடன் உலவுவது போல், இங்கு மான்கள் மிகவும் இயல்பாக வீதிகளில் துள்ளி விளையாடுகின்றன.
கைபேசி
திடீரென்று கைபேசி வேலை செய்யாமல் போன பொழுது, உலகமே இருண்டது போல் ஆனது. அந்தக் கணம் தான் நாம் கைபேசியிடம் எவ்வளவு அடிமைத்தனமாக இருக்கிறோம் என்பதை உணர்ந்தேன். பத்து ஆண்டுகளுக்கு முன் கைபேசி இல்லாத பொழுது, சொன்ன இடத்தில சொல்லிய நேரத்தில் நண்பர்களை சந்திப்பது நினைவுக்கு வந்தது, கைபேசி வந்த பின் தான் மனிதர்கள் அசாதாரணமாக நேரம் தவற தொடங்கினரோ என்ற கேள்வியும் என்னுள் எழுந்தது.
நான் ரசித்த வசனம் - மூடர் கூடம்
நூறு மாம்பழம் இருக்கற ஒரு மாமரத்துக்கு கீழ நூறு பேர்பசியோட நின்னாங்கன்னா, அங்க ஆளுக்கு ஒரு பழம் சேரனும்கிறது இயற்கையோட தர்மம்.
ஆனா அந்த நூறு பேர்ல உங்கள மாதிரி திறமையும் பலமும் அதிகமா இருக்கற அஞ்சு பேர், மத்தவங்களவிட ஆளுக்கு அதிகமா அஞ்சு பழம் எடுத்துட்டாங்கன்னா
இருபது பேர் ஒரு பழம் கூட கிடைக்காம பசியில வாடி வேற வழியே இல்லாம அதிகமா பழம் வச்சிருக்க அஞ்சு பேர் கிட்ட பிட்சை கேட்டு நிப்பாங்க.
இப்ப அந்த அதிகமா பழம் வச்சிருக்கவன், இந்த ஒன்னுமே இல்லாதவங்கள வச்சி அஞ்சி மாமரம் நட்டு, ஒவ்வொரு மரத்துல இருந்தும் நூறு நூறு பழங்கல பறிக்க வச்சி
அவங்களுக்கு சம்பளங்கர பேர்ல அவங்க எடுத்து கொடுத்த நூறு பழத்துல இருந்து ஒரு பழத்தை கூலியா எடுத்து கொடுப்பான்.
இதுதான் இங்க நடக்குறது. ஒருத்தன் கிட்ட இருந்து எடுக்கறது மட்டும் திருட்டு தனம் இல்ல, ஒருத்தன எடுக்க விடாம பண்றதும் திருட்டுத்தனம்.

சமீபத்தில் நான் கண்டு ரசித்த இரண்டு குறும்படங்களின் இணைப்பை இங்கு பகிர்கிறேன்.
நிழல் படம் - thriller
புதியவன் - comedy drama
சல்வார் கமீஸ் vs சுடிதார்
பல ஆண்டுகளாக சல்வார் கமீஸ் மற்றும் சுடிதார் இரண்டுமே ஒன்று என்று எண்ணிக் கொண்டிருந்த எனக்கு, சமீபத்தில் தான் தெளிவு கிடைத்தது. என்னைப் போல் அனைவருக்கும் தெளிவு கிடைக்க அந்தத் தகவல்களை இங்கு பகிர்கிறேன்.
சல்வார் கமீஸ்: துப்பட்டா, கமீஸ்(மேலாடை), லூசான காற்சட்டை (சல்வார்) இந்த கலவை தான் சல்வார் கமீஸ்.
சுடிதார்: இறுக்கமான காற்சட்டையுடன் அணிவது தான் சுடிதார். நீளமான காற்சட்டை இறுதியில் சுறுண்டு, சுடி(ஹிந்தி - வளையல்) போல் இருப்பதால் இந்தப் பெயராம்.
தெளிவு வேண்டும்
ஔவையார் சொன்னார்: திரைகடல் ஓடியும் திரவியம் தேடு
கண்ணதாசன் கேட்கிறார்: என்ன வளம் இல்லை இந்தத் திருநாட்டில் ஏன் கையை ஏந்த வேண்டும் அயல் நாட்டில் ?
யாரைத்தான் பின் பற்றுவது ? குழப்புறாங்க!
இனிய பிறந்தநாள் வாழ்த்துக்கள்
உங்களுக்கு யாரேனும் பிறந்தநாள் வாழ்த்து சொல்லும் பொழுது 'Thank you. wish you the same' என்று மறுமொழி சொல்லியதுண்டா?. இந்த 29ஆம் தேதி என் பிறந்தநாள் அன்று இருவரிடம் நான் அப்படி மறுமொழி சொல்லியது என் வாழ்வில் ஒரு இனிமையான அனுபவம்.

Tweet | ||
சுடிதார், சல்வார் கமீஸ் விளக்கம் படத்துடன் சூப்பர்.பெண்களுக்கே தெரியாத விளக்கம். ஆண்கள் நின்று கொண்டு வந்தால் ஒன்னும் குறைஞ்சிட மாட்டீங்க. பெண்களுக்கு எத்தனை அவஸ்தைகளோ யோசித்து பாருங்க.
ReplyDeleteசுவையான தேன் மிட்டாய் தகவல்கள்... நன்றி...
ReplyDeleteவாழ்வில் ஒரு இனிமையான அனுபவம் - வாழ்த்துக்கள்...
இனிய தீபத்திருநாள் நல்வாழ்த்துக்கள்...
ஸ்பெஷல் பகிர்வு : http://dindiguldhanabalan.blogspot.com/2013/10/charity.html
தேன் மிட்டாய் சுவைத்தது...!
ReplyDeleteகல்யாணத்துக்கு முன்னாடியே சல்வார் & சுடிதார் வித்தியாசத்தை கற்றுணர்ந்த உமக்கு நல்ல எதிர்காலம் காத்திருக்கின்றது ...!
ReplyDeleteஅதெப்படிப்பா நான் சொல்ல நினைக்கரத எல்லாம் எனக்கு முன்னாடி வந்து சொல்லிடற??? பேட் பாய்!! ;-)
Deleteகைபேசி வந்த பின் தான் மனிதர்கள் அசாதாரணமாக நேரம் தவற தொடங்கினரோ என்ற கேள்வியும் என்னுள் எழுந்தது
ReplyDelete>>
நிஜம்தான்
பல ஆண்டுகளாக சல்வார் கமீஸ் மற்றும் சுடிதார் இரண்டுமே ஒன்று என்று எண்ணிக் கொண்டிருந்த எனக்கு, சமீபத்தில் தான் தெளிவு கிடைத்தது.
ReplyDelete>>
கல்யாண ஆசை வந்துட்டுதா!? அதை வீட்டுக்கு சூசகமா சொல்லுறியோ!?
அக்கா, நீங்க சரியா புரிஞ்சிக்கலீங்கோவ்!!
Deleteஇருவரிடம் நான் அப்படி மறுமொழி சொல்லியது என் வாழ்வில் ஒரு இனிமையான அனுபவம்.
ReplyDelete>>
அது என்ன யாருன்னு சொல்லலாமே!
என்ன மாதிரியான. பெண்ணாதிக்க சமூகத்தில். வாழ்கிறோம் நாம்?
ReplyDeleteசல்வார் பத்தி போட்டாச்சு, அடுத்தது எதைப் பற்றி.. பார்த்து விவகாரம் ஆகிடப் போகுது..:-)
ReplyDelete