Monday, November 4, 2013

நித்ரா - 3.தேடல் ஆரம்பம்

முந்தைய பதிவுகளுக்கு 

இதுவரை 

'நித்ரா. நான் உங்களுக்கு எப்படியாவது உதவனும்னு நினைக்கறேன். அதுக்கு நீங்க முதல்ல உங்க மனம் துறந்து பேசணும். இப்ப நீங்க எனக்கு எதுவும் பதில் சொல்ற நிலைமையில இல்லைன்னு எனக்கு தெரியுது. உங்க வலியை என்னால புரிஞ்சிக்க முடியுது. உங்களுக்கு எப்ப என் உதவி தேவை பட்டாலும், நீங்க இந்த நம்பர்க்கு அழைக்கலாம்' என்று தான் கார்டை அவள் மடியில் வைத்து, 'வருகிறேன்' என்று புறப்பட்டான்.

அந்தக் கார்டை கடைக் கண்னால் பார்த்தாள், அதில் அவன் பெயர், கைபேசி எண், மின்னஞ்சல் என எல்லா விபரங்களும் இருந்தாலும். ஒன்று மட்டும் அவள் புருவத்தை உயர்த்தியது....

Institute for AIDS Eradication, Chennai.

இனி 

பாஸ்கர், நித்ரா கைபேசியில் இருந்து கிடைத்த ஸ்வேதாவின் எண்னுக்கான முகவரியை, BPOவில் பணி புரியும் அவன் நண்பன் உதவியுடன் சேகரித்து, அன்று மாலையே பெசன்ட் நகர் சென்றான்.  விசாலமான பங்களா வீடுகளுக்கு இடையில் ஸ்வேதாவின் வீட்டைக் கண்டுபிடிப்பது சற்று எளிமையாகவே இருந்தது. அழைப்பு மணிக்கு கதவை திறந்த வீட்டு வேலைக்காரன், அவனை அமர வைத்து விட்டு ஸ்வேதாவை அழைக்க படி வழியே மாடிக்குச் சென்றான்.

ஸ்வேதா, பெசன்ட் நகர் பெண்களுக்கே உரிதான அனைத்து நடை உடை பாவனைகளுடன் வந்து அமர்ந்தாள். பாஸ்கர் நடந்தவற்றை சுருக்கமாக அவளிடம் சொல்லி முடிக்க "மிஸ்டர் பாஸ்கர், சில பேர் அவள ரொம்ப hurt பண்ணிட்டாங்க, முக்கியமா அவளோட husband. இப்ப அவளுக்கு வாழ்க்கையில இருக்கற நம்பிக்கையே சுத்தமா போயிடுச்சு. அவ உங்க கிட்ட பேசறது ரொம்ப கஷ்டம்" என்று நெற்றியில் வந்த அவள் முடியை ஐந்து கம்மல்கள் குத்திய காதிற்கு பின்னால்  செலுத்தினாள்.

Image Courtesy  - Google
"என்னால் அவங்கள கண்டிப்பா குணப்படுத்த முடியும். நாங்க புதுசா ஒரு மருத்துவ முறை கண்டு பிடிச்சிருக்கோம். ஆனா அத இன்னும் முழுமையா டெஸ்ட் பண்ணல. நித்ரா மட்டும் முழு மனசோட சம்ம்மதிச்சா, அவங்களுக்கு என்னால உதவ முடியும். அதுக்கு நான் அவங்க கிட்ட பேசணும், அவங்க பிரச்சனை என்னன்னு நீங்க சொன்னா, எனக்கு ஒரு ஐடியா கிடைக்கும்' என்று ஆர்வத்துடன் அவள் பதிலை எதிர் பார்த்தான்.

"Alright" என்று ஸ்வேதா சொல்லிய தகவல்கள் பின்வருமாறு. 

அவள் பிறந்து ஒரு வருடத்தில், அவள் தந்தையும் தாயும் விவாகரத்து பெற்று, அவள் தந்தை ஜெர்மனி சென்று வேறு ஒரு திருமணம் செய்து, மாமனார் வழி வந்த பணத்தில் தொழில் தொடங்கி பெரும் செல்வந்தர் ஆனார். நித்ரா தன் தாயுடன் சென்னையில் இருந்தாள், தந்தை ஜெர்மனியில் இருந்து அனுப்பும் பணம் தான் அவர்களுக்கு வருமானம். அவள் ஐந்தாம் வகுப்பு படிக்கும் பொழுது அவள் தாய் மார்பக புற்று நோயால் பாதிக்க பட்டு, சில மாதங்கள் போராடி, பின் இறந்து விட்டாள். அதற்கு பின் நித்ராவுக்கு சென்னையில் ஆதரவு என்று யாரும் இல்லை. தந்தை அனுப்பும் பணத்தில் செல்வச் செழிப்பில், வேலைக்காரர்களுடன் தனிமையில் வாழ்ந்தாள். சிறந்த பள்ளி, சிறந்த கல்லூரி என்று எல்லாமே அவள் வாழ்வில் சிறந்தது தான். ஒரு தனியார் மென்பொருள் நிறுவனத்தில் HR ஆக பணிபுரிந்தவள், அங்கு வேலை செய்யும் வினோத்தை காதலித்து, திருமணமும் செய்து கொண்டாள். திருமணமாகி இரண்டே வாரத்தில் அவன் லண்டன் செல்ல நேர்ந்தது. ஓர் ஆண்டு கழித்து அவன் திரும்பி வருவான் என்று காத்திருந்தவளுக்கு, ஒரு வாரம் முன் ஒரு அதிர்ச்சி கிடைத்தது. தொடர் நோயால் பாதிக்கப் பட்டு, உடல் மெலிந்து வந்தவளுக்கு AIDS இருப்பது உறுதி செய்யப் பட்டது.      

அவளுக்கு இந்த செய்தி தலையில் இடி விழுந்தது போல் இருந்தது. அவள் தந்தையை தொடர்பு கொண்டு இந்த தகவலை சொல்லியபோது  'நான் எக்ஸ்ட்ரா அமௌண்ட் அனுப்பறேன் நல்ல ட்ரீட்மென்ட் எடுத்துக்கோ. உன்ன இங்க கூப்பிட்டு வரமுடியாது, உனக்கே தெரியும் இல்ல சித்திக்கு டிசீஸ்னா அல்லேர்ஜினு. Call me if you need anything. take care' அவள் மறுமொழி கூறும் முன் அழைப்பை துண்டித்தார்.

அவள் கணவனை தொடர்பு கொண்டு இந்த தகவலை கூறியபோது ' நான் இங்க வந்து எட்டு மாசம் ஆகப் போகிறது. நான் நல்லாதன இருக்கேன். நான் இல்லாதப்ப நீ எவன் கூட படுத்த? இனிமேல் உனக்கும் எனக்கும் எந்த தொடர்பும் இல்ல. இப்பவே divorce பண்ணிடறேன்' என்று அவன் சொல்லியது, அவள் மனதை ஒரு கத்தி வைத்து குத்துவது போல் இருக்கவே, அவளால் ஒரு பதிலும் சொல்ல முடியவில்லை. அவன் சொல்லியது போல் ஒரு வாரத்தில் விவாகரத்து கேட்டு வக்கீலிடம் இருந்து அறிவிப்பு வந்தது. அதன் பிறகுதான் அவள் எடுத்து தற்கொலை முடிவு, நீங்கள் அவளை சந்தித்தது எல்லாம். இந்த நிலையில் உங்களால் அவளிடம் இருந்து எந்த ஒத்தழைப்பையும் எதிர்பார்க்க முடியாது என்று சொல்லி முடித்தாள்.
                          
நம்பிக்கை இழந்த பாஸ்கர் , வேலைக்காரன் கொடுத்த காபியை  சோகத்துடன் குடிக்க முயலும் பொழுது, 'மீண்டும் மீண்டும் என்னை வந்து தீண்டும் மன்மதனே' என்று சில்க் ஸ்மிதா அவன் கைபேசியில் பாட, 'புதிய எண்  யாராக இருக்கும்' என்று காதில் வைத்து ' ஹலோ யாரு' என்று இவன் சொல்ல, மறுமுனையில் சில நிமிட மௌனத்திற்குப் பின், ஒரு பெண் குரல் அவள் பெயரை சொல்லியது.

'நித்ரா'.


தொடரும்.....      

19 comments:

 1. ஐம்பதாவது பதிவா???

  வாழ்த்துகள் நண்பா... தொடர்ந்து எழுதுங்கள்... பாராட்டுகள்....!

  ReplyDelete
  Replies
  1. முதல் வருகைக்கும் வாழ்த்துக்கும் மிக்க நன்றி நண்பா

   Delete
 2. 50க்கு வாழ்த்துகள். சீக்கிரத்தில் 500 தொடவும் வாழ்த்துகள்

  ReplyDelete
 3. 50 - மென்மேலும் சிறக்க வாழ்த்துக்கள் நண்பா...

  தொடர்ந்து அனைத்து தளங்களிலும் வருகை தருவதற்கும் பாராட்டுக்கள்...!!!

  நன்றி...

  ReplyDelete
  Replies
  1. தங்கள் வாழ்த்துக்கு மிக்க நன்றி DD

   Delete
 4. ஐம்பதாவது பதிவு
  ஐம்பது போலோவர்ஸ்
  ஐம்பதுல ஐம்பது வீத ஹிட்ஸ்

  வாழ்த்துக்கள் பாஸ்..

  ReplyDelete
 5. ஐம்பதாவது பதிவு க்கு வாழ்த்துகள்..!

  ReplyDelete
 6. விறுவிறுப்பான கதை.... தொடரட்டும்.

  ஐம்பதாவது பதிவு - வாழ்த்துகள்.... மேலும் பல நூறு பதிவுகள் எழுதிட வாழ்த்துகள்.

  ReplyDelete
  Replies
  1. தங்கள் அன்பிற்கு நன்றி வெங்கட்

   Delete
 7. கதை விறுவிறுப்பு... எதிர்பார்த்ததா இருந்தாலும் இப்போ எதுக்கு நித்ரா போன் பண்றா? அடுத்த பதிவுக்காக வெயிட்டிங்...

  ReplyDelete
  Replies
  1. வரும் திங்கள் உங்களுக்கு விடை கிடைத்து விடும்

   Delete
 8. என்ன பாஸ், சொதப்பல் ரோஹித்தே இருநூறு போட்டாச்சு.. சூப்பர் ரூபக் இப்பதான் பிப்டியா? சீக்கிரம் சதமடிக்க வாழ்த்துகள்!!

  ReplyDelete
  Replies
  1. இது எல்லாம் கொஞ்சம் ஓவர் பாஸ்

   Delete
 9. HIV க்கு உடல் உறவு மட்டும் தான் காரணம்னு நினைக்கிற சமூகத்துல தான் நாம் இன்னும் வாழ்கிறோம் என்பதை மறுக்க முடியாது..குட் கோயிங்..

  ReplyDelete
  Replies
  1. நீங்க ஒரு detective பாஸ் ... வருகைக்கு நன்றி :)

   Delete
 10. தமிழ் தளங்கள் வைத்து இருப்பவர்கள் http://ad30days.in விளம்பரங்கள் மூலம் பணம் சம்பாதிக்கும் வாய்ப்பு,

  தமிழ் அட்சென்ஸ் Ad30days.in ல் இணைந்து, உங்கள் தமிழ் தலத்தில் விளம்பரங்கள் காண்பிப்பதன் மூலம் நீங்களும் பணம் சம்பாதிக்கலாம். இப்பொழுதே சேருங்கள் http://publisher.ad30days.in/publishers_account.php . பதிவுசெய்து முற்றிலும் இலவசம் .

  வாரம் ஒரு முறை உங்களின் வருமானத்தை நீங்கள் பெற்றுகொள்ளலாம்.

  ReplyDelete