****************************************முன் குறிப்பு************************************************
என்னை மிகவும் கவர்ந்த உலக சினிமா திரைப்படங்களை பற்றிய விமர்சனத்தை 'சாகும் முன் காண வேண்டிய உலக சினிமா' என்ற பகுதியில் எழுதி வருகிறேன். என்னைப் போன்ற உலக சினிமா பைத்தியங்களுக்காக.
*********************************************************************************************************
*******************************************************************************************************
என்னை மிகவும் கவர்ந்த உலக சினிமா திரைப்படங்களை பற்றிய விமர்சனத்தை 'சாகும் முன் காண வேண்டிய உலக சினிமா' என்ற பகுதியில் எழுதி வருகிறேன். என்னைப் போன்ற உலக சினிமா பைத்தியங்களுக்காக.
*********************************************************************************************************
கிளாசிக் சினிமா மேல் வந்த ஈர்ப்பு, என் தேடலை விரிவு செய்தபோது IMDB மூலம் எனக்கு அறிமுகமான படம் இது. கதை நடக்கும் காலம் இரண்டாம் உலக யுத்த சமயம், ஜேர்மன் ஆதிக்கம் உலகெங்கும் பரவி இருந்த நிலையில், ஜெர்மன் கட்டுப்பாட்டில் இல்லாத ஆப்ரிக்க நகரம் தான் Casablanca. அமேரிக்கா செல்லும் கனவுகளுடன் ஐரோப்பா நாடுகளில் இருந்து வருபவர்களின் இறுதி புகலிடம். இங்கிருந்து வீசா கிடைத்தால் மட்டுமே சுகந்திர அமேரிக்கா செல்ல முடியும்.
இந்த நகரத்தில் ஒரு கிளப் நடத்தி வருபவர் தான் ரிக் என்கிற ரிச்சர்ட், கதையின் நாயகன். அந்த நகரை விட்டு வெளியேற, ஜெர்மன் அதிகாரிகளை கொன்று திருடப்பட்ட இரண்டு வீசாக்கள், யாரும் அறியாமல் ரிக்கின் வசம் வருகின்றது. இந்த வீசாவைத் தேடி ஒரு மறைமுக போராட்டக்கும்பலின் தலைவர் விக்டர்(Victor) தன் மனைவி இல்சா(Ilsa)வுடன் Casablanca வருகிறார். அவரை பிடிக்க ஜெர்மன் அதிகாரிகள் அவரைத் தொடர்ந்து வருகின்றனர்.
Casablanca சுகந்திர நகரம் என்பதால், அவர்களால் அவரை நேரடியாக ஒன்றும் செய்ய முடியாவிட்டாலும், அந்த நகர காவல்துறை உதவியுடன், அவருக்கு வீசா கிடைக்காதவாரு ஏற்ப்பாடு செய்கின்றனர். லூயிஸ்(Louis)என்ற Casablanca காவல் துறை உயர் அதிகாரியுடன் ரிக் சாவல் விடுகிறார், விக்டர்(Victor) மற்றும் அவர் மனைவி இல்சா(Ilsa) நிச்சயம் அமேரிக்கா செல்வர் என்று.
விக்டர் - இல்சா - ரிக் |
ரிக், எந்த விலை கொடுத்தாலும் அந்த வீசாக்களை விற்க முடியாது என்று விக்டரிடம் மறுத்து,காரணத்தை அவர் மனைவியிடமே கேட்க சொல்லிவிடுகிறார். இல்சா தான் நாயகன் ரிக்கின் முன்னாள் காதலி என்ற உண்மை திரையில் விரிகிறது. ரிக் மற்றும் இல்சா இடையில் பழையக் காதல் மீண்டும் மலர, ஜெர்மன் கடுபடி அதிகரிக்க, ரிக் லூயிசுடன் அவரும் இல்சாவும் அமேரிக்கா செல்ல ரகசிய ஒப்பந்தம் போட, இறுதியில் ரிக் தான் போட்ட சவாலில் வெல்வார இல்லையா என்று படம் பார்த்து தெரிந்துகொள்ளுங்கள்.
படத்தில் நான் ரசித்தவை
படத்தின் பெரிய பலமே திரைக்கதை தான், ஒவ்வொன்றாக உண்மைகள் வெளி வர, நம்மை படத்துடன் ஒன்றச் செய்துவிடுகிறது.
நாயகனாக வரும் Humphrey Bogartஇன் இயல்பான நடிப்பின் மூலம் படம் முழுவதும் ரிக் என்ற கதாபாத்திரத்திற்கு ஒரு தனித்துவம் கொடுத்து அசத்தியுள்ளார்.
ரிக் |
அடுத்த முக்கிய கதாபாத்திரம் காவல் துறை உயர் அதிகாரி லூயிஸாக வரும் Claude Rains என்பவர். இறுதிக் காட்சியில் என்னை மிகவும் கவர்ந்தார்.
லூயிஸ் |
இரண்டாம் உலக யுத்தத்தை மைய்யமாக வைத்த கதை என்றாலும், எந்த விதமான துப்பாக்கிச் சுடுதலோ, சண்டைக் காட்சிகளோ இல்லாமல் படத்தை இயக்கிய இயக்குனர் Michael Curtizஐ பாராட்டாமல் இருக்க முடியாது.
வசதி இல்லாத ஒரு இளம் மனைவி தன் கணவனுடன் அமேரிக்கா செல்ல வீசா கேட்க லூயிஸிடம் செல்ல, பணம் இல்லையேல் உடல் உறவு என்று லூயிஸ் நிபந்தனை வைக்க, அதை அறிந்த ரிக் அந்த மனைவியின் கணவனை தன் கிளப்பில் நடக்கும் சூதாட்டம் மூலம் போதிய பணம் ஜெயிக்க வைக்கும் காட்சி, நம்மை நெகிழச் செய்யும்.
இந்த விஷயத்தை அறிந்தவுடன் அந்த கிளப்பில் பணிபுரியும் ஒரு ரஸ்சிய சர்வர், மகிழ்ச்சியில் ரிக்கை கட்டிப் பிடித்து முத்தம் கொடுப்பான். இந்த காட்சியை இன்று பார்த்த பொழுது, தன் மனம் கவர்ந்த பதிவுகளை எழுதிய பதிவர்களை 'கட்டி அணைத்து' பாராட்ட வேண்டும் என்று கருத்துரையிடும் ஜீவன் சுப்பு தான் நினைவிற்கு வந்தார்.
படத்தில் நான் ரசித்த வசனங்கள்:
வசனம் 1:
தன் முன்னாள் காதலியைக் கண்ட ரிக், அவன் கிளப் பியானோ பிளேயர் சாமிடம்(Sam) சொல்லும் வசனம்
"Of all the gin joints in all the towns in all the world, she walks into mine."
(இதை பல modulationஇல் பல சினிமாக்களில் கேட்டது போல் இல்லை? )
வசனம் 2:
இறுதிக் காட்சியில் என்னை விசில் அடிக்க தூண்டிய வசனம்
"Louis, I think this is the beginning of a beautiful friendship."
படம் பார்க்கையில், இந்த வசனம் பேசும் காட்சி வரும் போது உங்களுக்கும் நிச்சயம் விசில் அடிக்கத் தூண்டும்.
'ரொமாண்டிக் டிராமா' என்ற பிரிவில், என்றுமே நான் முதலில் பரிந்துரை செய்யும் படம் Casablanca.
*******************************************************************************************************
ஆண்டு : 1942
மொழி : ஆங்கிலம்
என் மதிப்பீடு : 4.6/5
மேலும் விபரங்களுக்கு IMDB
மொழி : ஆங்கிலம்
என் மதிப்பீடு : 4.6/5
மேலும் விபரங்களுக்கு IMDB
*******************************************************************************************************
Tweet | ||
// தன் மனம் கவர்ந்த பதிவுகளை எழுதிய பதிவர்களை 'கட்டி அணைத்து' பாராட்ட வேண்டும் என்று கருத்துரையிடும் ஜீவன் சுப்பு தான் நினைவிற்கு வந்தார்.
ReplyDelete//
அவர் அப்படியா சொன்னார்.. சென்ற வாரம் நான் அவரைப் பார்த்த போது என்னை "கட்டி அணைத்து" பாராட்டவில்லையே.. ஒரு வேளை என் படைப்புகள் அவரைக் கவரவில்லையோ என்னவோ?? ;-)
அது ஒருவிதமான கட்டிபிடி வைத்தியமா இருக்குமோ ?
Delete
Delete@ஆவி
///என்னை "கட்டி அணைத்து" பாராட்டவில்லையே..///
உம்மை கட்டிப்பிடிக்க ஒரு ஜீவன் பத்தாது வோய் ... பல ஜீவன்கள் வேண்டும் ...!வாட் எ பாடி ...!
ஹஹ்ஹஹா..
Deleteயோவ் ஜீவன் உம்ம குசும்புக்கு அளவே இல்லாம போயிருச்சுயா.. :-))))
Deleteஅவருக்கு ஊருக்குள்ள ஜீவன்குசும்புன்னு இன்னொரு பேர் இருக்கிறது தெரியாதா சீனு??
Delete@ஆவி
Deleteலொள் ...!
ஹா ஹா ஹா :) அனைவருக்கும் நன்றி
Deleteநல்ல விமர்சனம். இதுவரை பார்த்ததில்லை.. பார்த்திடுவோம்.
ReplyDelete@ஆவி நல்ல பின்னூட்டன் (உபயம் , ஸ்பை)
Delete:-)
Deleteவிமர்சனமே நெகிழ செய்கிறதே...!
ReplyDeleteமிக்க நன்றி மனோ
Deleteநல்ல விமர்சனம்... பார்த்திடுவோம்... ஜீவன் சுப்பு அவர்களுக்கு பாராட்டுக்கள்...
ReplyDeleteவருகைக்கும் கருத்து பகிர்விற்கும் மிக்க நன்றி
Deleteசுருக்கமான ஆனால் சிறப்பான விமர்சனன்... வாழ்த்துக்கள்.... ஜீவன்சுப்புவை இங்கிருந்தே கட்டிக்கொள்கிறேன்.... நன்றி...
ReplyDelete@ ஸ்பை
Delete//இங்கிருந்தே கட்டிக்கொள்கிறேன்....//
கட்டிக்கொல்லாமல் இருந்தால் சரி ...! ஹி ஹி
//சிறப்பான விமர்சனன்.//
Deleteயோவ் ஸ்.பை. அதென்னப்பா விமர்சனன்?? விமர்சனம் எழுதுறவருக்கு தமிழ்ல இப்படி ஒரு பேரா?
எல்லாம் நேத்து நைட் வசூல் ராஜா பார்த்துட்டு வந்த மாதிரியே பேசுதுங்க.. பாவம்யா ரூபக் ராம் அவன் ப்ளாக கட்டிபிடி வைத்தியசாலை ஆக்கீராதீங்க
Delete//அவன் ப்ளாக கட்டிபிடி வைத்தியசாலை ஆக்கீராதீங்க //
Deleteஹா ஹா ....
ஸ்.பை. கும்மியாச்சா :)
Delete//விமர்சனன்//
ReplyDeleteஅட ஆமால்ல ...!வலையுலகிற்கு புது வார்த்தை தந்த ஸ்.பை க்கு கோட்டான கோட்டி நன்றிகள் ஏசப்பா ...!
கேவி ஆனந்த பட டைட்டில மாதிரி இருக்கு ...!
#ஸ்.பை. மைண்ட் வாய்ஸ்- அடடா, உடனே கலாய்க்க வரலியே..
Deleteஏசப்பா கோட்டான கோட்டி நன்றிகள் ஏசப்பா கோட்டான கோட்டி நன்றிகள்
Deleteகஷ்டப்பட்டு டிரெயின்ல வரும்போது படிச்சு மொபைல்லயே கமென்ட் போட்டா ஒண்ணு ரெண்டு மிஸ்டேக் வரத்தான் செய்யும், அதுக்காக இப்படியா கூடி கும்மியடிக்கிறது... அவ்வ்வ்வ்வ்வ்வ்வ்....
Deleteவரலாற்றில் //விமர்சனன்// என்று ஸ்.பை. கண்டுபிடித்த வார்த்தையை பற்றி சொல்லும் பொழுது, "அது முதலில் தோன்றியது 'கனவு மெய்ப்பட' என்னும் வலையில்", என்று வரலாறில் என் தளத்தை பதிய உதவிய ஸ்.பை. அவர்களுக்கு என் கோடான கோடி நன்றிகள்
Deleteவிமர்சனன்..... :)
ReplyDeleteபின்னூட்டன்.... :))
ரசித்தேன். படம் பார்க்கும் அளவிற்கு இப்போதெல்லாம் பொறுமை இல்லை ரூபக் ராம். இருந்தாலும் சில படங்களை பார்க்க முயலவேண்டும்.
ஹா ஹா ஹா ... நீங்களுமா ... அவசியம் பாருங்கள் :)
Deleteநல்ல, சுவாரஸ்யமான படங்களைத் தேடிப் பிடித்து விமர்சனம் என்ற வடிவத்தில் நமக்கு அறிமுகம் செய்யும் ரசனையன் ரூபக் ராம் வாழ்க! (என்னாலான புது வார்த்தை! ஹி... ஹி...!)
ReplyDelete//ரசனையன்// ஹா ஹா ஹா . மிக்க நன்றி சார் :)
Deleteஇந்த தலைப்பில் புத்தகம் இருக்கிறது என்று நினைக்கிறேன், அதுதான் படமாக வந்ததா?
ReplyDeleteஉங்கள் விமரிசனம் படத்தைப் பார்க்கச் சொல்லுகிறது.
பாராட்டுகள் ரூபக்.
"Everybody comes to Rick's"என்ற நாடகத்தை தழுவி உருவானது தான் இந்த படம் ...படம் வெற்றி பெற்ற பிறகு அதை புத்தகமாக செய்தனரோ என்னவோ, தெரியவில்லை .. தங்கள் வருகைக்கு மிக்க நன்றி :)
Delete