Friday, April 26, 2013

தொடாமலே தொண்ணூறு - சிறுகதை

'என்னடி ராணி, இது உங்க வீடா? !!' என்று அதிர்ச்சியுடன் கேட்டாள் என் உயிர் தோழி தேன்மொழி, வழக்கமாக வாசலில் கலைந்து கிடக்கும் செருப்புகள் இல்லாததால்.

'இதுக்கே ஷாக் ஆனா எப்படி? .உள்ள வந்து பாரு கலை அலங்காரம் எப்படி நடக்குதுன்னு' என்றேன்.

மூலையில் பல நாள் இருந்த ஒட்டனை, சோபாவுக்கு அடியில் இருந்த குப்பைகள், மின் விசிறியில் இருந்த அழுக்கு, இவை எல்லாம் இன்று காணவில்லை.

எங்களை பார்த்தவுடன் என் அம்மா 'வாம்மா தேனு. எப்படி இருக்கற?. பாத்து ரொம்ப நாள் ஆச்சு.  பையன் நல்லா இருக்கானா ?'

'நடக்க ஆரம்பிச்சுட்டான் ஆன்டி, அவன் பின்னாடி ஓடவே நேரம் சரியா இருக்கு. உங்க ஒடம்பு எப்படி இருக்கு ?'

 'இவ கவலை தான் எங்களுக்கு பெருசா இருக்கு. இருபத்து ஒன்பது ஆயிடுச்சு, இன்னும் ஒரு வழி பொறக்கல. நீ வந்த ராசி இந்த வரன் அமையுதான்னு பாப்போம்.சீக்கரம் போய் ரெடி ஆகுங்க' என்று கூறி விட்டு துவைத்த சன்னல் திரைகளை மாட்டச் சென்றாள்.

'இது எல்லாம் எனக்கு புதுசு இல்ல, வரப்போறது நம்பர் ட்வென்டி செவென். நீ டீ.வி.  பார்த்துட்டு இரு, நான் குளிச்சிட்டு வந்துடறேன்'                   

பள்ளியில் ஏழாம் வகுப்பில் பருவம் அடைந்த பதினாறாம் நாள், என்னுடன் பயின்ற 'ஒல்லி' தினேஷ் பிள்ளையார் சுழி போட்டு ஆரம்பித்து வைத்த காதல் மடல்களின் எண்ணிக்கை, இன்று பேருந்தில் ஒருவன் கொடுத்ததை சேர்த்து, இருநூற்று முப்பத்து ஏழு.  பள்ளியிலே நான் மிகப்  பிரபலம், என் வீட்டு முன்பு காற்றுப் போகாத சக்கரமே கிடையாது. பாலியல்   கொடுமைகள் கண்டு நான் என்றுமே பயந்தது இல்லை, எப்பொழுதும் நான்கு பேர் என்னை பஸ் ஸ்டாபில் இருந்து வீடு வரை, பாதுகாப்பாக பின் தொடர்ந்தே வருவர்.

கல்லூரியில், பருவ மாற்றங்கள் இறுதி நிலையை அடைய, என் ரசிகர்கள் பட்டாளம் அதிகரித்தது. என் வகுப்பு தோழி தான் இந்த தேன்மொழி, இவளுக்கு நான்கு வருடங்களுக்கு முன்பே திருமணம் முடிந்தது, இன்று வரை அவள் தன் திருமண வாழ்க்கை பற்றி என்னிடம் பேசியதே இல்லை, என் மனம் புண்படக் கூடாது என்று.

என் சேலை மடிப்புகளை சரி செய்து கொண்டு, தேன் என்னிடம் 'உனக்கு அந்த பிரசன்னா நியாபகம் இருக்கா?' என்றாள்.

'அவன எப்படி மறக்க முடியும், நமக்கு சண்ட வர காரணமே அவன் தான'

'கொரங்குக்கு பிறந்தவன். என் பின்னாடி சுத்தறான்னு பார்த்தா, உன் கிட்ட லெட்டெர் கொடுக்க என்ன யூஸ் பண்ணிட்டான்.'

'காலேஜ்ல எனக்காக நம்ம டிபார்ட்மெண்ட் பசங்களும் மெக்கானிக்கல் டிபார்ட்மெண்ட்  பசங்களும் சண்ட போட்டது எல்லாம் நினைச்சா இப்பவும் சிரிப்பு தான் வருது.'

'அத சாக்கா வச்சி  அந்த பிரின்சிபால் உன் கிட்ட வழிஞ்சத நினைச்சா எனக்கு எரிச்சல் தான் வருது.'

'வழியாத ஆம்பளை எங்க இருக்கான். என் பின்னாடி அலைஞ்ச  சிலர நானும் ரகசியமா சைட் அடிச்சேன், பேசாம அவங்கள திரும்பி பாத்திருந்தா இன்நேரம் எனக்கு கல்யாணம் முடிஞ்சி  மூனு புள்ள பொறந்து இருக்கும்.'

'அட. தள்ளிப் போறதும் ஒரு நல்லதுக்குன்னு நினைச்சிக்கோ.'

'என் இருபத்து ஐந்தாவது வயசுல ஆரம்பிச்சிது இந்த காட்சி பொருள் அலங்காரம் எல்லாம்.  முதல் முற என்ன பெண் பார்க்க வந்தப்போ நானும் பல வேலைகளை செய்ஞ்சன், நீயும் தனடி கூட இருந்த.  மாப்பிள்ளை வரல, அவர் பெற்றோர் மட்டும் வந்து எங்க வீட்டு square feet கணக்கை பாத்துட்டு போனாங்க. உனக்கு கல்யாணம் ஆகி, நீ இந்த ஊர விட்டு போயிட்ட.  அடுத்து அடுத்து வந்தவங்க எல்லாருமே கேட்டது நகை கணக்கு, சொத்து மதிப்பு, குடிக்க கூல் டிரிங்க்ஸ். அப்படி குறைவாக நகை கேட்பவங்க வந்தால், மாப்பிள்ள என்பவன் என் சித்தப்பா போல இல்லனா என் பெரியப்பா போல இருந்தான் .'

'ஏன்டி இப்ப சோகம், ப்ரீயா விடு.'

'நான் ஒன்னும் பேரழகனை எதிர் பாக்கலையே, பொருத்தமான உயரம், மாநிறம்,  முடி இருக்கற தல,  தொப்பை இல்லாத உடம்பு, இது போதும் எனக்கு.
இந்த சந்தையில நான் ஏன் வில போகல, என் அழகு குறைஞ்சி போச்சா?'

தேன் என் தலை முடியில் சிக்கு எடுத்து கொண்டிருக்க,  என் அத்தை உள்ளே வந்து 'எவ்வளோ அழகு! என் கண்ணே பட்டுடும் போல, இன்னைக்கு அந்த மாப்பிள்ள உன் அழகுல மயங்கி, பொண்ண மட்டும் கொடுத்தா போதும்னு  விழப்போறான் பாரு' என்று தன் பாணியில் சிரித்து விட்டு, எஸ்.வி.சேகர் குழு நாடக நடிகர்கள் போல், இருபத்து ஏழாவது முறையும் வசனம் மாறாமல் அதே பாவனையுடன் சொல்லிச் சென்றாள். 

பையன் நான் எதிர் பார்த்த படி இருக்கவே  எனக்கு உடனே  பிடித்துவிட்டது . தனியாக பேச வேண்டும் என்று அழைத்துச் சென்றான்.

'என்னடி! பையன் என்ன சொல்றான்?'

'அவன் ஸ்கூல், காலேஜ்  அப்பறம் இப்போ பெங்களுருல வேலை பாக்கர  கதைகளைச் சொன்னான்.  அவன் கிட்ட ஒரு  கள்ளம் கபடம் இல்லாத குழந்தத்தனமான சிரிப்பு இருக்கு, அதத்தான் ரசிச்சேன்,  அவன் பேசனது  எதுவும் என் காதுல கேட்கல.'

'இப்பவே லவ் மூட் ஸ்டார்ட் ஆயிடுச்சா. உனக்கு ஒரு ராஜா சிக்கிட்டான்.  நடத்து நடத்து. '

என் அத்தை 'என்ன சொல்லியம்மா அவன மயக்கன?  கல்யாண செலவையும் அவங்களே பாத்துக்கறேன்னு சொல்லிட்டாங்க. உங்க  அம்மாவும் அப்பாவும் வானத்துல பறக்கராங்க.'

வழக்கமான மோதல்கள், நிறை குறைகளுடன் எங்கள் கல்யாணம் இனிதே முடிந்தது. மறுவீடு- மூன்று நாட்கள் என் வீட்டில் தங்க வேண்டும் என்று அழைத்துச் சென்றனர். சாந்தி முகூர்த்தத்திற்கு 'வரும் செவ்வாய் தான் நல்ல நாள்'  என்று ஐயர் தேதி குறித்தார்.  

அவர் வீட்டில் இருந்த  படுக்கை அறை அன்று பூக்களால் அலங்கரிக்க பட்டது, அவர் அம்மா (என் மாமியார்) என்னை அலங்கரித்து உள்ளே அனுப்பினார். உள்ளே நுழையும் போது அடி வயற்றில் பட்டாம் பூச்சி பறப்பது போல் ஒரு உணர்வு, விவரம் தெரிந்த வயதில் இருந்து பல நாள் கற்பனையில் ஒத்திகை பார்த்த இரவு, இதோ என் முன்னால். கமல்ஹாசன் படங்களில் பார்த்த விசயங்களை செய்து பார்க்கும் தருணமல்லவா. என் அத்தை, சித்தி, அக்கா முதலியோர் தம் முதலிரவு அனுபவங்களை என் அம்மாவிடம் ரகசியமாக கூறியபோது ஒட்டுகேட்டது எல்லாம்  நினைவில் வர,  எனக்குள் ஒரு லேசான பயமும் கலந்து இருந்தது.

அவர் படுக்கை மேல் அமர்ந்து தன் மடிக்கணினியை  தட்டிக் கொண்டிருந்தார். நான் வெட்க பட்டு அவர் அருகில் நின்றேன், என்னை பக்கத்தில் அமர வைத்து,
'எனக்கு இந்த சம்பரதாயத்துல எல்லாம் பெரிசா இஷ்டம் இல்ல. மொதல்ல நம்ம நல்லா பேசி பழகுவோம். அதுக்கு அப்பறம் இது எல்லாம் பாத்துக்கலாம். நீயும் இதே தன நினைச்ச, எனக்குத் தெரியும்' என்று அவன் ஒரு அசட்டு சிரிப்பு சிரிக்க, என்  பட்டாம் பூச்சி பறந்தது.

தூக்கத்தில் என்  சேலை கலைந்து இருக்க, அதை அவன் சட்டை பண்ணாமல் தன் மடிக்கணினியையே பார்த்துக்கொண்டிருக்க,  என்னை அறியாமல் மீண்டும் உறங்கினேன்.

காலை என்னைத் தட்டி எழுப்பி, பழைய தமிழ் சினிமாவில் வருவது போல என் பொட்டை அழித்து, கூந்தலை விரித்து, தலையில் இருந்த பூவை சிதைத்து, என் சீலையை சற்று கலைத்து 'என் அம்மா கேட்டா, எல்லாம் நல்லபடியா முடிஞ்சிதுன்னு  சொல்லிடு. அவங்களுக்கு இது எல்லாம் புரியாது.' என்றான்.

நான், அவன் கையால் கலைத்த சேலையை சரி செய்து கொண்டே அறையை விட்டு வெளியே வந்தால், அவன் அம்மா எனக்காக காத்துக்கொண்டிருந்தது போல் ஒரு புன்னகை செய்தார். நான் புன்முறுவலோடு லேசாக வெட்கப்பட்டு (நடித்து), குளியலறைக்குள் நுழைந்தேன்.   இந்த நாடகம் பத்து நாட்கள் தொடர்ந்தது, அதன் பின் அவர் அம்மா நான் வெளியே வர காத்திருப்பதில்லை.

தேனுடன் குறுந்தகவல் பரிமாற்றம்:

'என்னடி ராணி... ராஜாவ முந்தானைல முடிஞ்சிட்டயா...'

'கடுப்ப கெளப்பாத தேனு. முந்தான விலகனாலும் அவனுக்கு ஒன்னும் தோணல. எதோ பழகனும்னு சொன்னான், மூனு மாசமா பழகிட்டே தான் இருக்கான்.'

'என்னடி சொல்ற... அவன் உன்ன சந்தோசமா வச்சிக்கலையா?...'

'பகல் முழுவதும் எங்கயாவது வெளிய கூட்டிட்டு போறான், நிறைய துணிகள் வாங்கித் தரான், couple சீட் புக் பண்றான், கென்டில் லைட் டின்னெர்னு அசத்துறான்,ஆனா ராத்திரி வந்தா விளையாடாமலே என்ன அவுட் ஆக்கிடுறான்.'

'எதுவுமே நடக்கலையா?...'

'உம்... இப்ப வரும் தமிழ் படங்கள்ல  கூட முத்த காட்சிகள கட் செய்றதில்ல, ஆனா அவன் விரல் கூட என்ன இன்னும் தொடல.'

'எப்பயும் அத பத்தியே நினைக்காத... நல்லா தன வச்சிருக்கான்... கொஞ்ச நாள் உங்க வீட்டுக்கு போயிட்டு வா.... கொஞ்சம் அலைய விட்டா... அவனா உன்னத் தேடி வருவான்...'

'இடுப்புல ஒன்னு, வயத்துல ஒன்னு வச்சிக்கொண்டு நீ இப்படி தான் பேசுவ.  ஊருல யாருக்கும் இல்லாத ஆசையா எனக்கு, ஒரு சதாரண கணவன்-மனைவி தாம்பத்தியம் கூட இல்லாம என்ன திருமண வழக்கை.'

'இப்படி எல்லாம் பெசிக்கொண்டு இருக்காத... அவன் நீ அலையரன்னு நினைக்க போறான்...'

'இது எல்லாருக்கும் இருக்கற ஆசை தன. பாவம்னு தெரிந்துதன உன் கடவுள் ஆணையும் பெண்ணையும் படைச்சான்? '

தேன் சொல்லியதைப் போல் ஒரு வாரம் என் அம்மா வீடு சென்றேன்.  என்ன எதாவது காதல் தோல்வி, இல்ல தவறான உடல் உறவு எதாச்சு இருக்கும். எதுவாக இருந்தால் என்ன, இந்த காலத்தில் பெண்களே திருமணத்திற்கு முன், தப்பு செய்யும் போது, பெங்களுருவில் ஆறு ஆண்டுகளாக  வேலை செய்து கொண்டிருக்கும் இவன் எந்த லீலையும் செய்யாமல் இருப்பான் என்று நம்புவது முட்டாள்தனம்.  இன்று அவனிடம் எல்லாவற்றையும் தெளிவாக பேச வேண்டும் என்று எண்ணிக் கொண்டே என்னிடம் இருந்த சாவியால் கதவைத் திறந்து உள்ளே சென்றேன். எல்லா விளக்குகளும் எரிந்து கொண்டே இருந்தன,  டி.வி. தன் தொண்டை கிழிய கத்திக்கொண்டிருந்தது, அதை அணைத்தேன்,  படுக்கை அறையில் இருந்து ஒருவிதமான சத்தம் கேட்டது. என்னவென்று பார்க்க கதவைத் திறந்தேன், நான் கண்டதை என்னாள் நம்ப முடிய வில்லை. அந்த காட்சியை  கண்ட போது, உங்கள் கை கால்களைக் கட்டி விட்டு, இந்த முருங்கை மரத்தில் இருக்குமே கம்பளிப் பூச்சி, அதை  உடல் முழுவதும் ஏற விட்டால் தோன்றுமே ஒரு உணர்வு,  அது போன்ற ஒரு அருவருப்பான உணர்வு தான் என்னுள் தோன்றியது.

என் கணவன் 'டோன்ட் ஸ்டாப்.' என்று முழு போதையில் சொல்ல,

'ஷிட் மென். யுவர் வைப்', அவன் நண்பன் சட் என்று போர்வையை போத்திக் கொண்டான்.

பலர் பேச கேட்டதுண்டு, சினிமாவில் பார்த்ததும் உண்டு, ஆனால் எனக்கு வந்த போதுதான் அதன் கொடுமை புரிகிறது. சோபாவில் அமர்ந்தேன், என் கண்ணில் நீர் தளும்பியது,எல்லாமே இப்பொழுதுதான் எனக்கு புரியத்தொடங்கியது, நங்கள் உடல் உறவு கொள்ள அவன் அம்மா காத்திருந்தது, இவன் விரல் கூட என் மேல் படாதது. இருவரும் ஆடைகளை அணிந்துகொண்டு என் முன் வந்து நின்றனர்.

அவன் என்னை பார்த்து 'ஐ எம் சாரி.' என்றான்.

'ஒரு மயி....... தேவ இல்ல. எப்படி உன்னால என்ன கல்யாணம் பண்ண முடிஞ்சுது?'

'வார்த்தையை அடக்கு டீ.'

'உனக்கு எல்லாம் என்னடா மரியாதை. <*@*#^%^#$% ...&^#$%$&% .>'

'அடிங் ...........என்னடி விட்டா ரொம்ப பேசற. I am and will be GAY. உன்னால முடிஞ்சத பண்ணிக்கோ .'

அதை கேட்டவுடன் அவனைக் கொல்லும் அளவிற்கு ஆத்திரம் என் தலைக்கு ஏறியது, அவன் கழுத்தை நெரிக்க நெருங்கினேன், முடியவில்லை- மூன்று மாதக் கணவன் அல்லவா, ஆத்திரம் உடல் வழியே என் காலுக்கு இறங்க, என் வலது கால் அவன் ஆண் உறுப்பை பதம் பார்க்க, அவன் 'அம்மா' என்று கீழே உட்கார,அவன் கட்டிய தாலியை அறுத்து 'இத உன் ஆம்பளை பொண்டாட்டிக்கே கட்டு' என்று அவன் நண்பன்(?) மேல் எறிந்து  விட்டு வெளியேறினேன், கொண்டு வந்த பையுடன்.

27 comments:

  1. இது போன்ற கிளைமாக்ஸைத்தான் எதிர்பார்த்திருந்தேன்.. அருமையான கதை.... தொடரவும்...

    ReplyDelete
    Replies
    1. வருகைக்கும் முதல் கருத்துரைக்கும் மிக்க நன்றி

      Delete
  2. படிக்கும் பொழுது சற்றும் எதிர்பாராத ஒரு திருப்பம், இதுவரை எழுதிய மற்ற எல்லா கதைகளையும் விட இக்கதையில் எழுத்தின் வடிவம் முற்றிலும் மாறியுள்ளது, மிக சிறந்த முன்னேற்றம், உனக்கான பாதை உனக்கானது மட்டுமே வாழ்த்துக்கள்

    ReplyDelete
    Replies
    1. // உனக்கான பாதை உனக்கானது மட்டுமே // அருமை. மிக்க நன்றி சீனு.

      Delete
  3. //'கொரங்குக்கு பிறந்தவன். என் பின்னாடி சுத்தறான்னு பார்த்தா, உன் கிட்ட லெட்டெர் கொடுக்க என்ன யூஸ் பண்ணிட்டான்.'//

    //கமல்ஹாசன் படங்களில் பார்த்த விசயங்களை செய்து பார்க்கும் தருணமல்லவா.//

    ரொம்ப ரசித்த வரிகள்.. பாக்ய ராஜ் படம் போல முதல் பாதி இருந்தது..

    நல்லா இருந்திச்சு தொடருங்கள்

    ReplyDelete
    Replies
    1. எழுத்தையும் எண்ணத்தையும் ரசித்த உங்களுக்கு என் நன்றி , உங்கள் ஊகம் என்னை தொடர வைக்கும்.

      Delete
  4. வாரேவா ....! சூப்பர்ப் டயலாக்ஸ் ...! ராம் ரெம்ப நல்லா எழுதிருக்கீங்க ...!

    என்ன, கொஞ்சம் சீக்கிரம் பதிவேத்தனும்னு நெனச்சு வேகமா டைப்புனதுல கடசி சில பத்திகள் ல அங்கொன்றும் இங்கொன்றுமாக எழுத்துப்பிழை . அடுத்தமுறை பொறுமையா நாலு மொற வாசிச்சு , எடிட்டிங் கத்தியை நல்லா உபயோகப்படுத்தினால் இன்னும் புரோபசனலான ஒரு சிறுகதை கிடைக்கலாம் .

    எனிவே யூ டன் எ கிரேட் ஜாப் . குட் குட் ...!

    // முடி இருக்கற தல, தொப்பை இல்லாத உடம்பு, இது போதும் எனக்கு.//

    என்னது இது போதுமா ...? இதுக்கு பேர்தாங்க பேராசை ....! இதெல்லாம் ரெம்ப ஓவரான எதிர்பார்ப்பு ....! ஹா ஹா ஹா !

    ReplyDelete
    Replies
    1. மன்னிக்கவும் அடுத்த முறை கத்தியை சரியா தீட்டிடறேன்.

      படித்து ரசித்து வாழ்த்தியமைக்கு என் மனமார்ந்த நன்றிகள்.

      நமது பார்வையில் பேர் ஆசைதான். ஹா ஹா ஹா :)

      Delete
  5. கமல்ஹாசன் படம் தான் ஞாபகம் வருகிறதா...? ஹா... ஹா...

    பாவம் அந்தப் பெண் ஏமாந்து விட்டாள்...! ஆனாலும் அவள் செய்த முடிவு சரியே...

    கதைகள் தொடர வாழ்த்துக்கள்...

    ReplyDelete
    Replies
    1. மிக்க மகிழ்ச்சி.
      உங்கள் கருத்துரையை பார்த்த உடன் தான், ஒரு முழுமையான உணர்வு வருகின்றது.
      நன்றி :)

      Delete
  6. மிக மிக நல்ல நடை.. வார்த்தைகளின் தேர்வு அருமை.. கதையின் கான்செப்ட் சூப்பர்.. வாழ்த்துக்கள்.. அந்த பெண்ணின் உணர்வுகளை (பள்ளி, கல்லூரி காலங்களில் சூப்பர் ஃபிகராக இருந்தும், பல வரன்கள் தள்ளி போவது, கடைசியில் அவனை வேண்டாம் என்று தூக்கி வீசும் அளவுக்கு அவளை தைரியமானவளாக முதலிலேயே சித்தரித்திருக்கலாம்) இன்னும் கொஞ்சம் ஆழமாக சொல்லியிருக்கலாம் என்பது என் கருத்து.. ஆனால் போர் அடிக்காத எழுத்து நடை உங்களுக்கு வருகிறது.. வாழ்த்துக்கள் :-)

    ReplyDelete
    Replies
    1. நன்றி நண்பரே.

      இல்லை என்று ஆன பின்பு எதற்கு அந்த வாழ்க்கை என்று அவள் அந்த நிமிடம் முடிவு செய்யும் கோணத்தில் தான் முடிவை வைத்தேன். அடுத்த கதையில் உங்கள் எதிர்பார்ப்பை முழுமையாக நிறைவு செய்கிறேன்.

      இது ஒரு உண்மை சம்பவத்தை தழுவி எழுந்த கற்பனை கதை.

      கருத்துரையிட்டு வாழ்த்தியமைக்கு நன்றி :)

      Delete
  7. நேற்றே வாசித்தேன்... உடன் கருதிட முடியவில்லை..

    எழுத்து கோர்வை அருமை...
    கதை கிளைமாக்ஸ் எதிர்பார்க்காதது....

    தொடருங்கள்....

    ReplyDelete
    Replies
    1. படித்ததோடு விடாமல், நினைவில் வைத்து கருத்திட்டமைக்கு என் மனமார்ந்த நன்றி.

      Delete
  8. தலைப்பில் இருந்த வித்த்தியாசம் கதையிலும் இருந்தது.யாரும் அவ்வளவாக தொடாத கான்செப்ட்

    ReplyDelete
    Replies
    1. தங்கள் வருகைக்கும், தலைப்பையும் கருவையும் ரசித்து கருத்திட்டமைக்கும் என் மனமார்ந்த நன்றிகள்.

      Delete
  9. மிக வித்தியாசமான கதைக் கரு. கத்தி மேல் நடக்கும் லாவகத்துடன் கையாளப்பட வேண்டியது. அழகாகவே கையாண்டிருக்கிறீர்கள் ரூபக்! எழுத்து நடையும் நன்றாகவே இருக்கிறது. அழகியாக இருந்தும் அவன் அவளைத் தொடாமல் இருந்ததற்குக் காரணம் அவன் ஒரு Impotent என்று எண்ணியபடி படித்தேன். ஆனால் க்ளைமாக்ஸ் வேறு விதமாக... ரசிக்கும் விதமாக! தொடர்ந்து எழுதுங்கள். அடுத்தடுத்த கதைகளில் உங்களின் எழுத்து தன்னாலேயே மெருகேறும்! இனி தொடரும் என் வருகை இங்கும்!

    ReplyDelete
  10. மிக்க நன்றி கணேஷ் சார். என் முதல் பதிவிற்கு பின் தங்கள் வருகையை எதிர் பார்த்து காத்துக்கொடிருந்த எனக்கு இன்று ஒரு இனிய நாள். அருமையான கருத்துரை. உங்கள் ஊக்கம் என்னை வழி நடத்தும்.

    ReplyDelete
  11. thalaipirku yeatrathu pol nalla swarasyam kathai muluvathum,,,padikka padikka kadhai neelam kooda, sirukathai thaana endra oru santhaegam...kathaiyin swaarasyam athai muriyadaithathu... maapillai paarpathum, thirumanathirku piragu nadakum anaithum cliche pol iruka, ipadi thaan mudiyum endru ninaitha pothu, thidir thirupam...ange cliche udainthu puthiya thagaval inaithu kathaiyai veru thalathirku kondu senrathu...miga arumayaana kathai vadivam...naan ninaitha pala vishayangal yearkanave nanbargalaal kooriyatha naal,ithudan en karuthai niruthikkolguraen...

    ReplyDelete
  12. பொறுமையாக படித்து, ரசித்து கருத்துரையிட்டு என்னை ஊக்குவித்தமைக்கு நன்றி :)

    ReplyDelete
  13. கதை மிகவும் அருமை நண்பரே... வாழ்த்துக்கள்.

    ReplyDelete
  14. இப்படி பட்டவர்கள் ஏன் திருமணம் செய்து பெண்ணின் வாழ்வை நாசம் செய்ய வேண்டும்?

    ReplyDelete
  15. அருமையான கதை, குள்ளனும் படித்துவிட்டேன்! வித்தியாசமான கதைக்களங்கள்! சிறப்பான எழுத்துநடை! இதுவரை உங்கள் எழுத்துக்களை படிக்காமல் இருந்ததற்கு வருந்துகிறேன்! தொடர்ந்து வருகிறேன்! நன்றி!

    ReplyDelete