Anniversary:
மிக முக்கியமான தேன் மிட்டாய் எனது உடல் நலக் குறைவால் தாமதமாக வெளியிடுகின்றேன். சென்ற ஆண்டு இதே மே மாதம் தொடங்கியது எனது தேன் மிட்டாய் பகுதி, இந்தப் பதிவுடன் ஓர் ஆண்டுகால சாதனையை நிறைவு செய்கிறது. எனது பார்வையில் எனது வாழ்க்கை அனுபவங்கள் வாசகர்களை எந்த அளவுக் கவரும் என்ற ஒரு சந்தேகத்துடன் தான் 'தேன் மிட்டாயை' தொடங்கினேன். எனக்கு மிகவும் நெருங்கிய தோழி ஒருவர் சென்ற மாத பதிவை படித்து விட்டு, 'தேன் மிட்டாய் நல்லா இருக்கு நீ எழுதற மத்ததை விட. தேன் மிட்டாய் மட்டுமே நீ எழுதலாம்' என்று கூறியதில் எனக்கும் தேன் மிட்டாய்க்கும் பெரும் வெற்றியே. மற்ற பகுதிகள் அவள் பார்வையில் மொக்கையாக உள்ளன என்ற உள் குத்தையும் அந்த வாசகத்தின் மூலம் நான் அறிவேன்.
ஆயிரத்தில் ஒருவன்:
சமீபத்தில் வாத்தியார் நடித்த ஆயிரத்தில் ஒருவன் டிஜிட்டல் வடிவில் மீண்டும் திரையில் தோன்றியதை நான் திரையரங்கம் சென்று கண்ட அனுபவத்தை ஒரு பதிவாக எழுத எண்ணியிருந்தேன். அதற்கான நேரம் இது வரை வராததால், இங்கு சிறு குறிப்பாக பதிகின்றேன். வரலாறு மிக முக்கியம் அல்லவா. சத்தியம் திரையரங்கில் Studio-5 திரையில், MGR வெறுக்கும் எனது தோழனுடன் படத்தை காணச் சென்றேன்.
என் நண்பனோ சிவாஜியை போற்றி MGRயை பழிக்கும் குடும்பத்தில் இருந்து வந்தவன். நானோ என்றும் MGR பக்கம் நிற்கும் குடும்ப சூழ்நிலையில் வளர்ந்தவன். என்னை அவன் பல ஆங்கிலப் படங்களை தமிழ் டப்பிங்கில் பார்க்கச் செய்த கொடுமைக்கு அவனை பழிவாங்க எனக்கு கிடைத்த ஒரு அருமையான சந்தர்ப்பம் இது என்று எண்ணி அகமகிழ்ந்தேன். அவனால் இருக்கையில் அமர முடியவில்லை, MGR திரையில் தோன்றி வீர வசனங்கள் பேசும் பொழுதெல்லாம் நெளிந்து கதறினான்.
எங்களைத் தவிர்த்து உள்ளே இருந்தவர்கள் அனைவரும் நாற்பது வயதிற்கு மேற்பட்டவர்கள். ஒவ்வொரு பாடல் திரையில் வரும் பொழுதும் எனது அருகில் இருந்தவர், பாடத் தொடங்கி விடுவார். 'அதோ அந்த பறவை போல...' என்று TMS குரல் ஒலிக்க, என்னை அறியாமல் எனது உதடுகளும் பாடத் தொடங்கின. ஒரே ஒரு குறை தான். சத்யம் என்பதால் அனைவரும் சற்று அமைதியாகத் தான் படம் பார்த்தார்கள். அடுத்து MGR படம் திரையில் வரும் பொழுது MGR ரசிகர்களுடன் விசில் சத்தம் காதுகளை பிளக்க ஒரு லோக்கல் தியேட்டரில் பார்க்க வேண்டும் என்ற ஆசையுடன் காத்திருக்கிறேன்.
பேருந்து நிழற்குடை
சுட்டெரிக்கும் மதிய வெயிலில் பேருந்திற்காக காத்திருக்கும் சமயம், கருப்பு லெதர் சூவை லென்ஸ் வைத்து எரிப்பது போல் சூரியன் சுடும் சமயம் பலரை எனது வாய் பழிச் சொல்லால் சபிக்கும். 'அவுங்க நாடு குளிர் நாடு, அவன் சூ, கோட்டு எல்லாம் போட்டு வேல பார்ப்பான். இங்க வெய்யில். எங்களால முடியல சாமி'. கணினி முன் செய்யும் வேலைக்கு முழுக்கை சட்டையும் சூவும் எதற்கு என்று பலமுறை நான் சிந்தித்ததுண்டு. இவை அனைத்தும் பொருளாதார அடிமைத்தனத்தின் உச்சகட்டம். அந்த வட்டத்திற்குள் சென்றால் பல சிக்கல்கள் வரும், நாம் திரும்பிவிடுவோம்.
சோழிங்கநல்லூர் ஒரு முக்கிய போக்குவரத்து மையமாக வேகமாக மாறிவருகின்றது. அங்கு ஒரு நாளைக்கு பல ஆயிரம் பேர் பேருந்துகளை உபயோகிக்கின்றனர். அப்படி இருக்க அங்கு நிழல் தரும் ஒரு மரமும் இல்லை, பேருந்து நிலையமும் இல்லை. மதிய வேளைகளில் முடியல.
ஒரு பக்கம் பேருந்து நிலையம் இல்லை என்றால், இருக்கும் இடங்களில் 'மாண்புமிகு .............. அவர்களின் தொகுதி மேம்பாட்டு நிதியில்' என்று ஆரம்பித்து அந்தக் கட்சியின் அடிப்படை உறுப்பினர் பெயர் வரை எழுதிவிடுகின்றனர். ஆனால் அந்தப் பேருந்து நிறுத்தத்தின் பெயர் மட்டும் எங்கு தேடியும் கிடைப்பதில்லை. ஊருக்கு புதிதாய் வருபவர்களின் கதி அதோ கதி தான்.
Vending Machine
அலுவலகத்தில் புதிதாய் மூன்று Vending Machine களை நிறுவியுள்ளனர். இதில் 5,10,20 ரூபாய் தாள்களை செலுத்தி, item-codeஐ என்டர் செய்தால், நமக்கு வேண்டிய பொருள்களை வாங்கிக்கொள்ளலாம். அதனுள் பெரும்பாலும் இந்த டின் கோக்,பெப்சி வகையறா, lays, haldiraams தின்பண்டங்கள், மற்றும் சாக்லேட்கள் இருக்கும்.
இதற்கு முன் இந்த இயந்திரங்களை பயன்படுத்திய அனுபவம் எனக்கு கிடையாது என்பதால் எனது தோழி ஒருவரை அழைத்துக்கொண்டு அதில் ஏதேனும் வாங்க வேண்டும் என்று சென்றேன். முதலில் நாங்கள் செலுத்திய பத்து ரூபாய் தாளை, 'கசங்கிய தாள்' என்று அது துப்பிவிட்டது. அவமானத்தைப் பொறுத்துக் கொண்டு மேலும் நான்கு புதிய பத்து ரூபாய் தாள்களை செலுத்தினோம். தோழி 25 ரூபாய் டின் கோக் வாங்க, நான் 12 ரூபாய் ப்ரூட்டி வாங்கினேன். எனது மனதினுள் '25+12=37. 40-37=3', அப்ப அந்த மூன்று ரூபாய் வராதா என்று ஏங்கிய பொழுது ஒரு அம்மணி அவரசமாக வந்து பத்து ரூபாய் தாளை உள்ளே செலுத்தினார். 'நம்ம மூனு ரூபா போச்சு' என்று நான் நம்பிக்கை இழக்கும் சமயம், அவர் 10 ரூபாய் lays மட்டும் வாங்க, அடுத்த பத்து நொடிகளில் அந்த இயந்திரம் எனது சில்லறையை துப்பியது.
வாழைத் தோட்டம்
வழக்கம் போல் அலுவலகம் செல்லும் ஷேர் ஆட்டோ... சி... கேபில் செல்லும் பொழுது மேடவாக்கம் அருகே ஒரு பெண்மணியை பிக் அப் செய்ய சென்ற வழியில், ஒரு பெரிய கிணறுடன் சுமார் மூன்று ஏக்கர் பரப்பளவு வாழைத் தோட்டம் ஒன்றைக் கண்டேன். கான்கிரிட் காடுகளுக்கு மத்தியில் ஒரு வாழைத் தோட்டத்தைக் கண்டது என்னால் சற்றும் நம்ப முடியவில்லை. அடுத்த முறை அந்தப்பக்கம் சென்றால் ஒரு புகைப்படம் எடுக்க வேண்டும்.
Unibrom
இது எனது பாட்டிக்கு அவரது கண் டாக்டர் புதுவையில் எழுதிக் கொடுத்த சொட்டு மருந்து. அது தீர்ந்து விடவே, சென்னை வந்தப்பொழுது என்னை வாங்கித் தரச் சொன்னார். நானும் பல மருந்துக் கடைகளில் கேட்டு, எங்கும் கிடைக்காததால், எங்கள் வட்டாரத்தில் சற்று பெரிய மருந்துக் கடைக்குச் சென்றேன். அங்கும் கிடைக்கவில்லை. அந்தக் கடை உரிமையாளரிடம் 'இது எங்கு தான் கிடைக்கும்?' என்று வெறுப்புடன் கேட்டேன். அவர் 'இது யார் எழுதியது?' என்று பொறுமையாக கேட்டார். நான் 'புதுவையில் ஒரு டாக்டர்' என்றேன். அவர் சிரித்துக்கொண்டே 'அங்கு மட்டும் தான் கிடைக்கும்' என்றார்.
தனது கிளினிக் உடன் இருக்கும் தனது சொந்த மருந்துக் கடையில் மட்டும் கிடைக்கும் மருந்துகளை மக்களுக்கு எழுதிக் கொடுத்து நல்ல வியாபாரம் பார்க்கும் மருத்துவச் சமுதாயம் பெருகிக் கொண்டுள்ளது.
ஆபாச விளம்பரம்
IPL விளையாட்டுகள் பார்த்த பொழுது என்னை மிகவும் கோபப்படுத்தியது சில விளம்பரங்கள். மிகவும் குறிப்பாக சில ஆணுறை மற்றும் பாடி ஸ்ப்ரே விளம்பரங்கள் சற்று அதிக அளவில் ஆபாசத்தை தொலைகாட்சித் திரையில் தெளிக்கின்றன. தொலைக்காட்சி விளம்பரங்களுக்கு என்று இயங்கும் சென்சார் போர்டின் அளவுகோல் தான் என்ன?
கனவில் யார் தெரியுமா?
மே மாதம் 23 ஆம் நாள், நோய் வாய்ப்பட்டு குணமான எனது தாத்தாவை எங்களது கிராமத்தில் சென்று விட்டு சென்னை திரும்பிய அந்த வெள்ளி இரவு கடும் ஜுரம். மறு நாளும் ஜுரம் தொடர, எனக்கு சில சூட்டுக் கட்டிகளும் உடன் தோன்றின. எங்கள் வீட்டில் அம்மை வந்த அனுபவம் உள்ள எனது அம்மா மட்டும் 'இது அம்மை' தான் என்று உறுதியாக சொன்ன பொழுதும், சில கட்டிகள் முதுகில் மட்டும் இருக்கவே என்னால் அதை ஏற்க முடியவில்லை. மாலை டாக்டரிடம் சென்றால் அவர் ஒரு கட்டியை பார்த்தவுடனே இது அம்மை தான் என்றார். அம்மைக்கு மருந்து எதுவும் இல்லாததால், ஜுரத்திற்கு மட்டும் மருந்து கொடுத்து அனுப்பினார்.
அம்மை என்றவுடன் 'அம்மன்.சாமி' என்று பல அலப்பறைகள் செய்யத் தொடங்கினர். அது அந்தச் சிறுக்கி varicellaவின் வேலை என்றால் யாரும் கேட்கவில்லை. இவர்கள் பண்ண அலப்பறையுடன் உறங்கிய எனது கனவில், அம்மன் வடிவில் நம்ம ரோஜா ஆண்டி எனது வீட்டிற்கு வந்து என் நெற்றியில் கை வைக்கின்றார், சூட்டை குறைக்க.
Tweet | ||
// ஆணுறை மற்றும் பாடி ஸ்ப்ரே விளம்பரங்கள்//
ReplyDeleteஅவங்க எப்படித்தான் பாஸ் விளம்பரம் பண்றது..? நீங்க ஒரு காண்டம் கம்பெனி ஒனர்ன்னு வச்சுக்குவோம் (சும்மா பேச்சுக்குத்தான்) எப்படி விளம்பரம் பண்ணுவீங்க..? அது பெருசுங்களுக்கு மட்டுமே புரியும் வண்ணம் "கல்ச்சரோட" இருக்கு..இன்னும் என்ன சென்சார் எதிர்பார்க்கறீங்கன்னு புரியல..
இங்கிட்டு சண்டைய ஆரம்பிச்சிருவோமா :-)
Deleteஅட போங்க பாஸ் குடும்பத்தோட உட்கார்ந்து பார்கரப்ப இவங்க பண்ற அலப்பறை சரியில்லை. சில விளம்பரம் எல்லாம் சினிமா ல ஒரு சீனா வருதுன்னு வச்சிக்கோங்க.முதல் நாள் முதல் ஷோவ்வுக்கு அப்பறம் கட் பண்ணிடுவாங்க பாஸ்
Deleteதொடங்கட்டும்.. டும்..
Deleteதக்காளி... இந்த மாதிரி ப்ராடக்ட்டுக்கெல்லாம் எதுக்குலேய் விளம்பரம்னு கேக்கேன..? அவனவன் தேவை இருந்தா வாங்கிட்டுப் போறான்...
DeleteThis comment has been removed by the author.
ReplyDeleteபாவம் ஆத்தர் கோச்சுகிட்டாரா :-)
Deleteநான் அவன் (ஆர்தர்) இல்லைங்க :)
Delete//தனது கிளினிக் உடன் இருக்கும் தனது சொந்த மருந்துக் கடையில் மட்டும் கிடைக்கும் மருந்துகளை// அந்த மருந்தின் கெமிக்கல் நேம் கூகிள் பண்ணிட்டு மெடிக்கல் ஷாப்பில் போய் சொன்னா அவங்க அதுக்கு equivalent ஆன மருந்து கொடுத்திடுவாங்க.. அமெரிக்க டாக்டர்கள் எழுதும் மருந்துகளை நாங்க இப்படித்தான் இந்தியாவிலிருந்து வரவழைப்போம்.. ஹிஹிஹி..
ReplyDeleteஆவுன்னா அம்பாசமுத்திரத்தில இருந்துகிட்டு அமெரிக்காவுக்கு போயிற வேண்டியது...
Deleteஇந்த வாட்ஸ்அப் ல இருக்குற punching டூண் இங்கையுமிருந்தா நல்லா இருக்கும் :-)
பாஸ் நீங்க ஒரு அமெரிக்க விஞ்ஞானி. உங்களுக்கு தெரியாத துறையே கிடையாது
Deleteஅனுபவங்களையும் நிகழ்வுகளையும் சுவாரஸ்யமாகச்
ReplyDeleteசொல்லிப்போனவிதம் மனம் கவர்ந்தது
பகிர்வுக்கும் தொடரவும் நல்வாழ்த்துக்கள்
வருகைக்கு மிக்க நன்றி
Deletetha.ma 2
ReplyDeleteதேன் மிட்டாய் அனைத்தும் அருமை.கன்டென்ட் சொல்லிய விதம் அருமை
ReplyDelete******************
சீனு!,ஆவி! கவனிச்சீங்களா?
//எனக்கு மிகவும் நெருங்கிய தோழி ஒருவர் //
//எனது தோழி ஒருவரை அழைத்துக்கொண்டு//
கொஞ்சம் என்னான்னு கேளுங்க
இத அவுங்களே கேப்பாங்கன்னு நினைச்சேன்.நீங்க நோட் பண்ணிடிங்க. ஹி ஹி ஹி . அலுவலகத்தில் உடன் பணி புரிபவர்களில் தோழிகளே சற்று அதிகம்
Deleteமுரளிதரன், கவனிச்சேங்க.. இதுக்கு முன்னாலேயே பல முறை வார்ன் பண்ணிட்டோம், தம்பி கேக்குற மாதிரி தெரியல.. தாம்பரத்தின் Casanova ன்னு பேர் எடுக்காம விட மாட்டாப்ல போலிருக்கு :)
Deleteபொதுவாகவே விளம்பரங்களின் தொல்லை தாங்க முடியவில்லை, இதில் IPL-இல் வரும் விளம்பரங்கள் கொஞ்சம் ஓவர் தான்....
ReplyDeleteபுதுவையில் கிடைக்கும் சில மருந்து மாத்திரைகள் சென்னையில் கிடைப்பதில்லை, நானும் கவனித்திருக்கிறேன்...
//புதுவையில் கிடைக்கும் சில மருந்து மாத்திரைகள் சென்னையில் கிடைப்பதில்லை// நீங்க எந்த மருந்த சொல்ரிங்கன்னே தெரியலையே :)
Deleteஎஸ்கேப் மாலில்தான் நான் ஆயிரத்தில் ஒருவன் பார்த்தேன்.. அங்கயும் கைதட்டலும், விசிலும் அமர்க்களப்பட்டதே... உனக்கு அந்த லக் இல்ல போல...
ReplyDeleteகனவுல ரம்யாகிருஷ்ணன் மாதிரி அழகான அம்ம(ணி)ன் வராம உக்ரமான ரோஜா அம்மனா வந்துச்சு....? என்னமோ போ.. பழைய ஜீனத் அ(ம்)மன் வராத வரை நலம். ஹி... ஹி....
வென்டிங் மெஷின்..? என்னமோ புதுசா இருக்குது எனக்கு... அத்த வுடு... அதென்ன பெண்ணை பிக்கப் பண்ண ஷேர் ஆட்டோல போன கதை... ஃபுல் டீடெய்ல் ப்ளீஸ்...
நான் படம் ரிலீஸ் ஆகி ஒரு ரெண்டு மாசம் கழிச்சு தான் சார் பார்த்தேன்.அதுனால கூட இருக்கலாம்.
Deleteஎப்பவுமே செல்லும் வழியில் சக அலுவலர்களை பிக் அப் செய்து, indica அல்லது sumo வின் கொள்ளவு நிறைந்தால் தான் அலுவலகம் உள் வாகனம் செல்லும். பெரும்பாலும் ஆண்கள் பைக்கில் செல்வதால்,பெண்கள் மட்டுமே cab சேவையை அதிகம் பயன் படுத்துவர்
வெண்டிங் மெஷினுக்கு இருக்கும் நேர்மை பிடிச்சிருக்கு.
ReplyDelete>>
இன்னும் ரோஜா காலத்துலதான் இருக்கீங்களா ரூபக்!?
Vending Machine அட...!
ReplyDeleteIPL-யும் பார்க்கவில்லை...
//வழக்கை அனுபவங்கள்// வாழ்க்கை அனுபவங்கள் ?
ReplyDelete//கணினி முன் செய்யும் வேலைக்கு முழுக்கை சட்டையும் சூவும் எதற்கு என்று பலமுறை நான் சிந்தித்ததுண்டு.// Well said ..
மருந்துகள் பெரும்பாலும் அந்த மூலப்பொருட்களின் பெயர்களின் பாதியையும் , நிறுவனப் பேரோ அல்ல வேறெதுவோ பாதியுமாகவே இருக்கும் . Its all Branding .
Healthkart plus ன்னு ஒரு app இருக்கு அதில் சகல விசயங்களும் இருக்கு .
http://www.healthkartplus.com/
//வழக்கை அனுபவங்கள்// வாழ்க்கை அனுபவங்கள் ?
Deleteஉங்க கண்ணுல எல்லாம் சிக்குது,நான் படிக்கறப்ப மட்டும் ஒன்னும் சிக்கறது இல்ல.
app ப download செய்துடுவோம்
varicella ?
ReplyDeleteit's the virus that causes chicken pox :)
Deleteதேன் மிட்டாய் ஆரம்பித்து ஒரு வருடம்.... பாராட்டுகள் ரூபக்.
ReplyDeleteதேன் மிட்டாயில் சேர்த்திருக்கும் அத்தனை விஷயங்களும் தேன்.....
விளம்பரங்கள் - நல்ல விளம்பரங்களை மட்டும் ரசிப்போம் - மற்றதை விட்டுத் தள்ளுவோம்.....
தங்கள் பதிவு வலைச்சரத்தில் இன்று அறிமுகம் செய்யப்பட்டுள்ளது! //http://blogintamil.blogspot.in/2014/07/cocktail-fizzy-crissppy.html// நன்றி !
ReplyDeleteமைதிலி கஸ்தூரி ரெங்கன் வலைச்சரத்தில் இன்று தங்களைப் பற்றி விவாதிக்கிறார். தங்களின் பதிவைக் கண்டேன். பலதரப்பட்ட செய்திகளைத் தரும் விதம் அருமை. வாழ்த்துக்கள்.
ReplyDeletewww.drbjambulingam.blogspot.in
www.ponnibuddha.blogspot.in