Thursday, December 26, 2013

சாப்பாட்டு ராமன் - முட்டை காளான் பிரை

பல நாட்கள் அலுவல் மிகுதியால் பட்டினியாக இருந்த ராமனுக்கு அவன் நண்பன் மூலம் இந்த மாதம் ஒரு கையேந்தி பவன் அறிமுகமானது. 

பாடியில் இருந்து செங்குன்றம் நோக்கி செல்லும் சாலையில், செந்தில் நகர் பேருந்து நிறுத்ததிற்கு அருகில் இருக்கும் இந்தியன் ஆயில் பெட்ரோல் பங்கை ஒட்டியது போல் செல்லும் விவேகானந்தா நகர் மெயின் ரோட்டில் இருப்பது தான் யெகோவா பாஸ்ட்புட். நூடுல்ஸ், ப்ரைட் ரைஸ், மற்றும் சில சிக்கென் சைடுகள் கிடைப்பது விலைப்பட்டியலுடன், வண்டியில் ஜொலித்தது.     



 ராமன் அவன் நண்பனுடன் ஆர்டர் செய்தது, சிக்கன்  ப்ரைட் ரைஸ், பெப்பர் சிக்கென், சிக்கென் லாலிபாப் மற்றும் முட்டை காளான். ஆர்டர் தயாராகும் நேரத்தில் கடையை சற்று நோட்டமிட நேரம் கிடைத்தது. உள் பக்கம் மிகவும் சுத்தமாக இருந்தது. பொதுவாக மக்கள் தள்ளு வண்டிக் கடைகளை  விரும்பாதது சுத்தம் இல்லை என்று தான். ஆனால் இந்தக் கடை ஒரு விதி விளக்கு தான். பார்சல் வாங்குபவர்களுக்கு கூட அலுமுனியம் பாயில் கொண்டு, தரமான உணவகங்களில் தருவது போலவே உணவு கொடுக்கப் பட்டது கூடுதல் சிறப்பு. 



முதலில்   ப்ரைட் ரைஸுடன், ஆறு துண்டுகளுடன் சிக்கென் லாலிபாப் வந்தது.  இரண்டும் திடமான சூட்டுடன் சுவைக்க நன்றாக இருந்தது. அடுத்து வந்த முட்டை காளான் பிரை, எழுதும் பொழுதும் சுவை நினைவில் தோன்றி நாவை ஊறச் செய்கின்றது. 

சிக்கென் லாலிபாப் + முட்டை காளான் ப்ரை

முன்பே வேக வைத்த சிறிய காளான் துண்டுகளை, வெங்காயம், உப்பு, காரம், சில மசாலாக்கள், சேர்த்து ஒரு கடாயில் முட்டை உடைத்து ஊற்றி செய்த அந்த உணவு வகை, ஒரு மாறுபட்ட முட்டை பொடிமாஸ் போலவே இருந்தது. முட்டை, காளான், வெங்காயம் இவற்றின் கலவை நாவிற்கு புத்துணர்ச்சி தந்தது.இதை பார்சல் வாங்கிக்கொண்டு சப்பாத்தி,தோசை போன்ற டிபன்களுக்கு சைடாகவும் சுவைக்கலாம்.        
        
பெப்பர் சிக்கென் 

இறுதியாக வந்த பெப்பர் சிக்கென் மீது தான் இம்முறை ராமன் கொண்ட தீராக் காதல். காளான் போலவே சிறிதாக வெட்டப்பட்ட சிக்கென் துண்டுகள், மசாலாக் கலவையுடன், பெப்பர் சேர்க்கப்பட்டு கொடுக்கப்பட்டது. மெதுவாக இருந்த எலும்பு இல்லாத அந்த சிக்கென், மேலே இருந்த மிளகுத் தூள் கலவை மற்றும் எண்ணெயில் பொறிக்கப்பட்ட கருவேப்பிலை, இவை மூன்றும் சேர்ந்து சுவை அரும்புகளுக்கு ஒரு உன்னத சுவையை அளித்தன. 



விலை விவரங்கள் படத்திலேயே இருக்கும். அந்தப் பக்கம் சென்றால்,   யெகோவா பாஸ்ட்புடில் சுவைத்துவிட்டு ராமனிடம் சொல்லுங்கள்.

ராமன்ஸ் காம்போ

நீங்கள் பெருமாள் கோயில் புளியோதரை உண்டதுண்டா! அதன் சுவையே தனி. என்னதான் நாஸ்திகம் பேசினாலும் நம் ராமன் பிரசாதங்களை விடுவதில்லை! பயணங்களின் சிறந்த உணவான புளியோதரையுடன் அவித்த முட்டை சேர்த்து உண்டு பாருங்கள். அவித்த முட்டையும் புளியோதரையும் ஒரு விசேஷமான கூட்டணி.            
   

11 comments:

  1. சுவையான விஷயங்களைச் சொல்கிறீர்கள். புளியோதரையுடன் முட்டையா...? என்ன காம்பினேஷன் இது!

    ReplyDelete
  2. அவித்த முட்டையும் புளியோதரையும் ஒரு விசேஷமான கூட்டணி. //

    அட ராமா, ராமா, நான் இதை எங்க போய் சொல்லுவேன்?

    ReplyDelete
  3. arumaiya pathivu...ippove taste pannanum pola irukku thala

    ReplyDelete
  4. புளியோதரையோடு முட்டை சேர்த்தா புளியன்பிரியாணி ஆகிடுமே!!

    ReplyDelete
  5. உங்க உடம்பைப் பார்த்தா பெப்பர் சிக்கன், சிக்கன் லாலிபாப், காளான் ஃப்ரைலாம் சாப்புடுறா மாதிரி இல்லியே

    ReplyDelete
  6. //அவித்த முட்டையும் புளியோதரையும் ஒரு விசேஷமான கூட்டணி. //சாப்பிட்டு பார்கோனும்,...காம்போவா? கோம்போவா??

    ReplyDelete
  7. பெருமாள் கோயில்ல இப்பெல்லாம் புளியோதரை நல்லாவேயில்லை

    ReplyDelete
  8. சாப்பாட்டு ராமனின் ஊர்வலம் தொடங்கிவிட்டது..... நல்லது!

    ReplyDelete
  9. ரூபக், உங்களோடும் ஆவியோடும் ஒரு பயணம் மேற்கொள்ள வேண்டும் என்று ஆவலாய் இருக்கிறது, அடுத்த முறை செல்லும்போது சொல்லுங்கள் !

    ReplyDelete
  10. சூப்பரு...!!!

    ReplyDelete
  11. சூப்பரு...!!!

    ReplyDelete