முந்தைய பதிவுகளுக்கு
இதுவரை
காரில் விரைந்த பாஸ்கர் அன்று இரவே அந்த ஊரைச் சென்றடைந்தான், இரவு வேளை என்பதால் அவனால் அந்த வீட்டைக் கண்டுபிடிக்க முடியவில்லை. இரவும் தனிமையும் அவன் மனதில் பலக் கேள்விகள் எழுப்ப, அந்தக் கேள்விகளுடனேயே தன் இரவை ஒரு விடுதியில் கழித்தான். சிறிய டவுன் என்பதால் அனைவருக்கும் எல்லாம் தெரிந்திருக்கவே காலையில் எளிதாக அந்த வீட்டைக் கண்டு பிடித்தான்.
இதுவரை
சவரம் செய்ய அவன் பயன் படுத்தும் கண்ணாடி முன் சென்று, நின்றான். எடிசன் மின் விளக்கு கண்டு பிடித்த பொழுது அவர் முகம் ஒரு வேளை இப்படித் தான் பிரகாசமாக மின்னியிருக்கும் என்று எண்ணும் அளவுக்கு அவன் முகத்தில் மகிழ்ச்சி ததும்பியது. கண்ணாடியில் தெரியும் அவன் முகத்திற்கு முத்தம் கொடுத்துக் கொண்டு கீழ் இருக்கும் வரியை, அவன் பிரதிபலிப்பிற்குச் சொன்னான்.
'பாஸ்கரா! you are a genius!'
இனி
என்ன தான் பாஸ்கர் நோய் தொற்றிய முறையை கண்டறிந்த போதும், அது அவனுடைய யூகம் மட்டும் தான் என்பது அவனை வருத்தியது. மற்றவர்களை நம்ப வைக்க அவனுக்கு போதிய ஆதாரங்கள் வேண்டும் என்று முடிவு செய்து ஸ்வேதாவிற்கு கால் செய்தான். அந்த உரையாடலின் ஒரு முனை (பாஸ்கர் பேசியது ) பின்வருமாறு.
'ஸ்வேதா நான் பாஸ்கர் ... எனக்கு சில தகவல் தேவைப் படுது. உங்க வீட்டுல நீங்களும் நித்ராவும் இருக்கற அந்தப் படம் எங்க எடுத்தது... அப்படியா . அங்க உங்களுக்கு தெரிஞ்சவுங்க யாரவது இருக்காங்களா... நேர்ல எல்லாம் சொல்றேன் .... நான் இப்பவே அந்த ஊருக்கு கிளம்பறேன்... எனக்கு அந்த போட்டோவ மெயில் அனுப்பிடுங்க... ரெண்டு நாள்ல திரும்பிடுவேன்... வந்து நித்ராவப் பார்கறதா சொல்லிடுங்க' என்று ஸ்வேதாவின் மனதில் புதிரை விட்டுச் சென்றான்.
Image Courtesy - Google |
அந்த வீட்டில் இருப்பவர்களிடம் எதோ கேள்விகள் கேட்டான், பதில்கள் கிடைக்க அங்கிருந்து புறப்பட்டு அந்த ஊர் அரசு மருத்துவமனைக்கு சென்றான். அங்கு இருந்த தலைமை மருத்துவருடன் பேசி சில ஆவணங்களை வாங்கிப் பார்த்தான். அவன் தேடிச் சென்றது அவனுக்கு கிடைத்தது போல் தோன்றியது. சில ஆவணங்களை நகல் எடுத்துக் கொண்டு மீண்டும் சென்னை திரும்பினான்.
வரும் வழியிலேயே ஸ்வேதாவிற்கு அழைத்து அவளை நித்ரா வீட்டிற்கு இன்னும் முப்பது நிமிடங்களில் வரச் சொன்னவன், நித்ராவையும் தயாராக இருக்கச் சொல்லி தகவல் கொடுத்தான். அவள் வீட்டை அடைந்து அழைப்பு மணியை அடித்தான், பதில் இல்லை. தானே கதவு திறந்து உள்ளேச் சென்றான். முன்பை விட அந்த வீட்டில் அந்த ஈரத் துணி வாடை அதிகம் இருந்ததுடன், தரை எங்கும் குப்பைக் கூளங்கள். வீட்டினுள் நிலவிய ஒரு வகை மயான அமைதி பாஸ்கரின் வயிற்றில் புளியைக் கரைத்து.
படுக்கை அறையினுள் நுழைய முற்பட்ட பொழுது திடீரென அழைப்பு மணி அடிக்க, பாஸ்கர் சற்று திடுக்கிட்டான். உள்ளே ஸ்வேதா வர, நித்ராவின் கைபேசிக்கு அழைத்தான், கைபேசி சோபாவின் மேல் இருந்தது. 'நித்ரா' என அலறிய ஸ்வேதாவின் குரல் வந்த திசை கேட்டு பாஸ்கர் பதற்றத்துடன் ஓடினான். குளியல் அறையில் நிதானம் இன்றித் தரையில் விழுந்து கிடந்தாள் நித்ரா.
அவளை உடனே அவன் ஆராய்ச்சி கூடத்திற்கு அழைத்துச் சென்றான். அவளை பரிசோதித்து விட்டு, அவள் நிலை மிகவும் மோசமாக இருக்க, treatment துவங்குவது மட்டுமே ஒரே வழி என்று ஸ்வேதாவிடம் கூறினான். ஸ்வேதா 'நித்ரா கேட்ட கேள்விக்கு பதில் கிடைத்ததா?' என்று ஏக்கத்துடன் கேட்க, அவளை தனியே ஒரு அறைக்கு அழைத்துச் சென்று, அவன் சேகரித்த தகவல்களை ஒன்றன் பின் ஒன்றாக அடுக்கினான். ஸ்வேதாவின் முகம் அதிர்ந்து இருந்தது. அவன் சொல்லி முடித்தவுடன் தன் கன்னத்தில் கை வைத்து ஒரே ஒரு கேள்வி தான் கேட்டாள்.
"Oh my god. Is this possible?"
தொடரும்....
Tweet | ||
சில இடங்கள் தெளிவாக இல்லை.விஷுவலாக காட்ட வேண்டிய சில விஷயங்களை எழுத்துக்குள் அடைக்க முயலும் போது ஏற்படும் குழப்பம் தான் அது. மற்றபடி கிளைமாக்ஸை நெருங்கி விட்டதாய் மனசு சொல்லுது.. பார்ப்போம். வீ ஆர் வெயிட்டிங்!
ReplyDeleteம்ம்ம்ம்.... அடுத்தது என்ன... இன்னும் சஸ்பென்ஸா இருக்கே!
ReplyDelete