களவு - பகுதி ஒன்று :
அன்று - 1983
இயற்கை
வளம் விரைவாக குன்றி வந்தபோதும், மக்கள் விவசாயத்தையே வாழ்வாதாரமாகக்
கொண்ட காலகட்டம். மாரி பொழியா நிலை, நிலத்தடி நீர் மட்டம் வேர்கள் எட்டா
தூரம் சென்றுகொண்டிருந்தது. மரங்களைக் காப்பாற்ற அறிவியலை நோக்கி
செல்வதுதான் ஒரே வழி என்று முடிவெடுத்தார் கம்பத்துக்காரர் (இடைக்கழி நாடு
பகுதிகளில் மொத்தமாக ஒருவரின் நில புலன்களை கவனிப்பவருக்கு வழங்கப்பட்டு
வரும் பட்ட பெயர் இது).
மெட்ராஸ் சென்று diesel engine உடன்
பொருந்திய pump set ஒன்று order செய்தார். தோட்டத்தில் நீர் வளம் பார்க்க
பட்டு, bore அமைக்க ஏற்பாடுகள் தொடங்க பட்டன. ஊர் மொத்தமும் அந்த தென்னந்
தோப்பில் தான் இருந்தது, பூமியில் இருந்து pipe வழியா நீர் வரப்போகும் அதிசயத்தைக் காண. ஆறு அடி ஆழத்தில் பள்ளம் வெட்ட பட்டது. காலை
ஆரம்பித்த, நிலத்தை துளை போடும், பணி மறுநாளும் தொடர, நாற்பது அடியில் வெற்றி
கிட்டியது. துளையில் இரும்பு pipe இறக்க பட்டது, நிலத்தின் மேல் அரை அடி
நீளம் pipeஐ urea பையால் மூடிய உடன் அன்றைய நாள் முடிந்தது.
ஜோடியாக
வந்து இறங்கியது engine, pump set உடன். Engine - பச்சை நிறம், தலை போன்ற
வடிவம் கொண்ட diesel tank, கால்கள் போல் இரண்டு சக்கரங்கள்
, 750 கிலோ எடை, யானை போன்ற கம்பீரம். Tractorஇல் இருந்து கீழே இறக்க நான்கு பேர் முயன்றும் முடியவில்லை.
கிட்ட தட்ட பொருந்தும் engineஇன் படம்
'இதை இறக்க அவனால தான் முடியும். எட்டிய வரச் சொல்லுங்க' என்றார் கம்பத்துக்காரர்.
மாமிச
மலை வரும் என்று எண்ணி அனைவரும் காத்திருந்த போது வந்தது- ஒல்லியான,ஆனால்
கட்டுக்கோப்பான உடல் அமைப்பு, வீரப்பன் மீசை, அரை போதை- எட்டி. மாயமோ
மர்மமோ, பத்து நிமிடத்தில் engineஐ bore குழியின் அருகில் கொண்டு
சேர்த்தான். இவனை olympics அனுப்பி இருந்தால், பளு தூக்கும் போட்டியில்
அனைத்து பிரிவிலும் தங்கம் நமக்கு தான். நம் நாட்டில் பல ஆற்றல்கள்
இப்படித்தான் வீணாகின்றன.
Pumpஇன் கீழ் பகுதி பள்ளத்தில்
புதைத்திருந்த pipeஇன் மேல் பொருத்தப்பட்டது, மேல் பகுதியில் delivery pipe
இணைக்கப்பட்டது. பள்ளத்தின் மேல் engine, பள்ளத்தின் உள் pump set. Engine
மற்றும் pumpஇன் shaftஐ ஒரு leather belt இணைத்து, மேல் இருந்து கீழ்
சாய்வாக வெட்டப் பட்ட ஒரு கால்வாய் வாயிலாக.
Engineஐ start செய்ய,அதன் ஒரு சக்கரத்தை சுற்றினான் எட்டி, startஆகவில்லை. இன்னொரு முறை
முயன்றும் பலனில்லை. திடீரென்று ஒரு அம்மா வந்து அதன் தலையில் குங்குமம்
இட, குபுக்...குபுக்... என்று இரயில் engine போல சத்தம் போட்டு
கிளம்பியது. இந்தக் காட்சிகளை ஊரே வட்ட மிட்டு, தெருக்கூத்து காண்பது போல் வேடிக்கை பார்த்து
கொண்டிருந்தது. Delivery pipe முதலில் லேசாக ஆடியது. பின் கூழாங் கற்கலுடன் நீர்கலந்த மணலை கக்கியது. சற்று நேரத்தில் மணல் தெளிந்து தண்ணீர்
சீறிப் பாய்ந்தது. Pipe அடியில் மணலை ஆராய்ந்து கொண்டிருந்த எட்டி
நனைந்தான், போதை தெளிந்தது. நிலத்தடி நீரை பார்த்த ஊர் மக்கள் நிம்மதி
பெருமூச்சி விட்டனர். கற்பூர தீபாராதனையும் நடந்தது.
சில நாட்களுக்கு பின்.
அதிகாலை
. வழக்கம் போல் கம்பத்துக்காரர் தன் காலை ரோந்து பணிகளை பார்க்க
தயாராகினார். கதவை திறக்க முயன்ற போது தாழ்ப்பாள் கையுடன் வந்தது, சகுனம்
சரி இல்லை என்று சற்று அமர்ந்து, பின் சென்றார். வாசல் வெளியில் வந்த போது
எட்டி (தெளிவாக) வேகமாக அவரை நோக்கி ஓடி வருவதைக் கண்டார்.
'எசமான் ,சீக்கரம் வாங்க '
'எங்கடா வர சொல்ற '
' Engine கொட்டாக்கு'
'என்ன ஆச்சு'
'வாங்க தெரியும்'
சென்று
பார்த்தால், ஓர் நல்லிரவு களவு. Engineஐ திருட வந்து, அதை தூக்க
முடியாமல், pump set மற்றும் leather belt இரண்டையும் திருடிச்
சென்றுள்ளனர். இந்தச் செய்தி ஊர் எங்கும் பரவியது.
அன்று மாலை
கம்பத்துக்காரர் வீட்டுக்கு போலீஸ் வந்தது. புதிதாக பவன் சிங் inspectorஆக
பொறுப்பேற்றிருந்தார். அவருக்கு தமிழ் தெரியவில்லை. அவர் ஆங்கிலத்தில்
பேசியதை குமாஸ்தா மொழி பெயர்க்க பின் வருமாறு,
'சமீபமா இந்த
ஊர்ல நெறைய திருட்டு நடக்குது. ஆனா யாரும் complaint கொடுக்கறது இல்ல.
உங்களுக்கு உதவத்தான் அரசாங்கம் எங்கள அனுப்பி இருக்கு. நீங்க எல்லாரும்
எங்களுக்கு இந்த திருட்ட கண்டுபிடிக்க ஒத்துழைக்க வேண்டும்.'
போலீஸ் jeepஐ கண்டு வீட்டு வாசலில் கூட்டம் கூடியது.
'ஹா
...ஹா.. நீங்க கண்டுபிக்க போறிங்களா ...ஹா ...ஹா. இது என் ஊர், என்ன மீறி
இங்க எதுவும் நடக்காது. நான் பார்த்துகரேன். அவர போக சொல்லுங்க ஐயரே '
'You crazy village folks' என்று சிங் கூற, அதைக் கேட்டு கம்பத்துக்காரர் பொங்கி
'Mind
your words mister. Do not lose your way here. Do not middle in our
ways, just sign the register daily and get your pay. We will catch the
thief in seven days.'
அதிர்ந்து போனார் குமாஸ்தா.
Jeep சென்றவுடன் ,எட்டி 'எப்படி எசமான் கண்டுபிடிக்கறது?'
'Engine
கொட்டாய்ல ஒரு கால் அடி மண் எடுத்து கொடுத்த இல்ல. அவன்தான் திருடன். அவன்
கால் அடி மண்ண வச்சி முட்டை மந்திரம் வச்சிருக்கேன். இன்னும் ஒரு வாரத்துல
அவன் வாயால இல்ல வயத்தால கண்டிப்பா இரத்தம் கக்கிடுவான். அப்ப
தெரிஞ்சுடும் அவன் யாருன்னு.'
கூட்டம் கலைந்தது .
முட்டை
மந்திரத்துக்கு பின் நான்கு நாட்கள் கழிந்தன. ஐந்தாம் நாள் காலை,
கம்பத்துக்காரர் வீட்டு வாசலில் இருந்தது காணாமல் போன beltஉம் pumpஉம்.
எட்டி ஒருவன் கையை முதுகின் பின் மடக்கி இழுத்துகுட்டு வந்தான்.
'எசமான் நீங்க சொன்ன மாதிரி ராத்திரி பூரா மரத்து மேலே இருந்தேன், இவன்தான் வந்து pumpஅ போட்டுட்டு ஓடிட்டான்.'
'என்னடா
அம்மாவாசை, ஆட்ட கடிச்சி மாட்ட கடிச்சி, கடைசில என் கிட்டயே உன் வேலைய
காட்டறியா. இவன அந்த தென்ன மரத்துல கட்டி போடு, policeகு சொல்லி அனுப்பு
jailல இருந்தாதான் இவனுக்கு எல்லாம் புத்தி வரும்'
Inspector சிங் ' How did you know it was him ? '
'திருடு
போன ராத்திரியே கொட்டாய சுத்தி தேடுனோம். எல்லா காலடி தடத்தையும் தெறமையா
கலைச்சி இருந்தான். ஆனா, இருட்டுல ஒரு கல்லுல இடிச்சி ரத்தம் கொஞ்சம் செதறி
இருந்துச்சி, மறுநாள் எல்லாரையும் நீங்க வந்தப்ப நோட்டம் விட்டுட்டு
இருந்தேன். இவன் முழியே சரி இல்ல. கால கொஞ்சம் ஊனி நடந்தான். அவன் காதுல கேட்கற மாதிரி முட்ட மந்திரத்த பத்தி
சொன்னேன். அவன் இல்லாதப்ப அவன் குடிசைக்கு போய் பார்த்தேன், எதுவும் இல்ல- மீன் கொழம்பு வாசம் தவிர. பணமும் இல்ல, இவன் உன்னம் பொருள விக்கலன்னு தெரிஞ்சுது. கொஞ்சம் முடி எடுத்து, பொடியாக் கிள்ளி அதுல கலந்தேன். ரெண்டு நாளா அவனுக்கு
வயிறு முடியாம போச்சு. பய மந்திரம்னு பயந்துட்டான் .Pump வெளிய வந்துடுச்சி. Mister Pawan , this is how we deal thefts here. '
குமாஸ்தா மொழி பெயர்க்க, சிங் 'Sorry about earlier. You are a GENIUS!'
இன்று 2013
கம்பதுக்காரருக்கு இப்போது வயது 68. உடல் நலம் குன்றி, இருதயம் பாதித்ததால், தன் மகன் இல்லத்தில் தங்கி மருத்துவ ஆலோசனை பெறவேண்டிய கட்டாயம். தன் கிராமம்தான் சொர்க்கம் என்று எண்ணுபவர். அவர் மகன் அலுவலகம் செல்லும் போது அவரையும், அவர் மனைவியையும் மருத்துவமனையில் carஇல் அழைத்து சென்று விட்டுச் செல்வான், பிறகு இருவரும் பேருந்தில் வீடு திரும்புவர். இது தினமும் வழக்கம். இன்றும் அனைவரும் புறப்பட தயாராக இருந்தனர், கம்பத்துக்காரர் கதவை திறக்க முயலும் போது, தாழ்ப்பாள் கையுடன் வந்தது. அவர் மனதில் அசரிரீ ஒலித்தது.
களவு - பகுதி ஒன்று :
அன்று - 1983
இயற்கை
வளம் விரைவாக குன்றி வந்தபோதும், மக்கள் விவசாயத்தையே வாழ்வாதாரமாகக்
கொண்ட காலகட்டம். மாரி பொழியா நிலை, நிலத்தடி நீர் மட்டம் வேர்கள் எட்டா
தூரம் சென்றுகொண்டிருந்தது. மரங்களைக் காப்பாற்ற அறிவியலை நோக்கி
செல்வதுதான் ஒரே வழி என்று முடிவெடுத்தார் கம்பத்துக்காரர் (இடைக்கழி நாடு
பகுதிகளில் மொத்தமாக ஒருவரின் நில புலன்களை கவனிப்பவருக்கு வழங்கப்பட்டு
வரும் பட்ட பெயர் இது).
மெட்ராஸ் சென்று diesel engine உடன் பொருந்திய pump set ஒன்று order செய்தார். தோட்டத்தில் நீர் வளம் பார்க்க பட்டு, bore அமைக்க ஏற்பாடுகள் தொடங்க பட்டன. ஊர் மொத்தமும் அந்த தென்னந் தோப்பில் தான் இருந்தது, பூமியில் இருந்து pipe வழியா நீர் வரப்போகும் அதிசயத்தைக் காண. ஆறு அடி ஆழத்தில் பள்ளம் வெட்ட பட்டது. காலை ஆரம்பித்த, நிலத்தை துளை போடும், பணி மறுநாளும் தொடர, நாற்பது அடியில் வெற்றி கிட்டியது. துளையில் இரும்பு pipe இறக்க பட்டது, நிலத்தின் மேல் அரை அடி நீளம் pipeஐ urea பையால் மூடிய உடன் அன்றைய நாள் முடிந்தது.
ஜோடியாக வந்து இறங்கியது engine, pump set உடன். Engine - பச்சை நிறம், தலை போன்ற வடிவம் கொண்ட diesel tank, கால்கள் போல் இரண்டு சக்கரங்கள்
, 750 கிலோ எடை, யானை போன்ற கம்பீரம். Tractorஇல் இருந்து கீழே இறக்க நான்கு பேர் முயன்றும் முடியவில்லை.
கிட்ட தட்ட பொருந்தும் engineஇன் படம் |
'இதை இறக்க அவனால தான் முடியும். எட்டிய வரச் சொல்லுங்க' என்றார் கம்பத்துக்காரர்.
மாமிச
மலை வரும் என்று எண்ணி அனைவரும் காத்திருந்த போது வந்தது- ஒல்லியான,ஆனால்
கட்டுக்கோப்பான உடல் அமைப்பு, வீரப்பன் மீசை, அரை போதை- எட்டி. மாயமோ
மர்மமோ, பத்து நிமிடத்தில் engineஐ bore குழியின் அருகில் கொண்டு
சேர்த்தான். இவனை olympics அனுப்பி இருந்தால், பளு தூக்கும் போட்டியில்
அனைத்து பிரிவிலும் தங்கம் நமக்கு தான். நம் நாட்டில் பல ஆற்றல்கள்
இப்படித்தான் வீணாகின்றன.
Pumpஇன் கீழ் பகுதி பள்ளத்தில்
புதைத்திருந்த pipeஇன் மேல் பொருத்தப்பட்டது, மேல் பகுதியில் delivery pipe
இணைக்கப்பட்டது. பள்ளத்தின் மேல் engine, பள்ளத்தின் உள் pump set. Engine
மற்றும் pumpஇன் shaftஐ ஒரு leather belt இணைத்து, மேல் இருந்து கீழ்
சாய்வாக வெட்டப் பட்ட ஒரு கால்வாய் வாயிலாக.
Engineஐ start செய்ய,அதன் ஒரு சக்கரத்தை சுற்றினான் எட்டி, startஆகவில்லை. இன்னொரு முறை
முயன்றும் பலனில்லை. திடீரென்று ஒரு அம்மா வந்து அதன் தலையில் குங்குமம்
இட, குபுக்...குபுக்... என்று இரயில் engine போல சத்தம் போட்டு
கிளம்பியது. இந்தக் காட்சிகளை ஊரே வட்ட மிட்டு, தெருக்கூத்து காண்பது போல் வேடிக்கை பார்த்து
கொண்டிருந்தது. Delivery pipe முதலில் லேசாக ஆடியது. பின் கூழாங் கற்கலுடன் நீர்கலந்த மணலை கக்கியது. சற்று நேரத்தில் மணல் தெளிந்து தண்ணீர்
சீறிப் பாய்ந்தது. Pipe அடியில் மணலை ஆராய்ந்து கொண்டிருந்த எட்டி
நனைந்தான், போதை தெளிந்தது. நிலத்தடி நீரை பார்த்த ஊர் மக்கள் நிம்மதி
பெருமூச்சி விட்டனர். கற்பூர தீபாராதனையும் நடந்தது.
சில நாட்களுக்கு பின்.
அதிகாலை
. வழக்கம் போல் கம்பத்துக்காரர் தன் காலை ரோந்து பணிகளை பார்க்க
தயாராகினார். கதவை திறக்க முயன்ற போது தாழ்ப்பாள் கையுடன் வந்தது, சகுனம்
சரி இல்லை என்று சற்று அமர்ந்து, பின் சென்றார். வாசல் வெளியில் வந்த போது
எட்டி (தெளிவாக) வேகமாக அவரை நோக்கி ஓடி வருவதைக் கண்டார்.
'எசமான் ,சீக்கரம் வாங்க '
'எங்கடா வர சொல்ற '
' Engine கொட்டாக்கு'
'என்ன ஆச்சு'
'வாங்க தெரியும்'
சென்று
பார்த்தால், ஓர் நல்லிரவு களவு. Engineஐ திருட வந்து, அதை தூக்க
முடியாமல், pump set மற்றும் leather belt இரண்டையும் திருடிச்
சென்றுள்ளனர். இந்தச் செய்தி ஊர் எங்கும் பரவியது.
அன்று மாலை
கம்பத்துக்காரர் வீட்டுக்கு போலீஸ் வந்தது. புதிதாக பவன் சிங் inspectorஆக
பொறுப்பேற்றிருந்தார். அவருக்கு தமிழ் தெரியவில்லை. அவர் ஆங்கிலத்தில்
பேசியதை குமாஸ்தா மொழி பெயர்க்க பின் வருமாறு,
'சமீபமா இந்த
ஊர்ல நெறைய திருட்டு நடக்குது. ஆனா யாரும் complaint கொடுக்கறது இல்ல.
உங்களுக்கு உதவத்தான் அரசாங்கம் எங்கள அனுப்பி இருக்கு. நீங்க எல்லாரும்
எங்களுக்கு இந்த திருட்ட கண்டுபிடிக்க ஒத்துழைக்க வேண்டும்.'
போலீஸ் jeepஐ கண்டு வீட்டு வாசலில் கூட்டம் கூடியது.
'ஹா
...ஹா.. நீங்க கண்டுபிக்க போறிங்களா ...ஹா ...ஹா. இது என் ஊர், என்ன மீறி
இங்க எதுவும் நடக்காது. நான் பார்த்துகரேன். அவர போக சொல்லுங்க ஐயரே '
'You crazy village folks' என்று சிங் கூற, அதைக் கேட்டு கம்பத்துக்காரர் பொங்கி
'Mind
your words mister. Do not lose your way here. Do not middle in our
ways, just sign the register daily and get your pay. We will catch the
thief in seven days.'
அதிர்ந்து போனார் குமாஸ்தா.
Jeep சென்றவுடன் ,எட்டி 'எப்படி எசமான் கண்டுபிடிக்கறது?'
'Engine
கொட்டாய்ல ஒரு கால் அடி மண் எடுத்து கொடுத்த இல்ல. அவன்தான் திருடன். அவன்
கால் அடி மண்ண வச்சி முட்டை மந்திரம் வச்சிருக்கேன். இன்னும் ஒரு வாரத்துல
அவன் வாயால இல்ல வயத்தால கண்டிப்பா இரத்தம் கக்கிடுவான். அப்ப
தெரிஞ்சுடும் அவன் யாருன்னு.'
கூட்டம் கலைந்தது .
முட்டை
மந்திரத்துக்கு பின் நான்கு நாட்கள் கழிந்தன. ஐந்தாம் நாள் காலை,
கம்பத்துக்காரர் வீட்டு வாசலில் இருந்தது காணாமல் போன beltஉம் pumpஉம்.
எட்டி ஒருவன் கையை முதுகின் பின் மடக்கி இழுத்துகுட்டு வந்தான்.
'எசமான் நீங்க சொன்ன மாதிரி ராத்திரி பூரா மரத்து மேலே இருந்தேன், இவன்தான் வந்து pumpஅ போட்டுட்டு ஓடிட்டான்.'
'என்னடா
அம்மாவாசை, ஆட்ட கடிச்சி மாட்ட கடிச்சி, கடைசில என் கிட்டயே உன் வேலைய
காட்டறியா. இவன அந்த தென்ன மரத்துல கட்டி போடு, policeகு சொல்லி அனுப்பு
jailல இருந்தாதான் இவனுக்கு எல்லாம் புத்தி வரும்'
Inspector சிங் ' How did you know it was him ? '
'திருடு
போன ராத்திரியே கொட்டாய சுத்தி தேடுனோம். எல்லா காலடி தடத்தையும் தெறமையா
கலைச்சி இருந்தான். ஆனா, இருட்டுல ஒரு கல்லுல இடிச்சி ரத்தம் கொஞ்சம் செதறி
இருந்துச்சி, மறுநாள் எல்லாரையும் நீங்க வந்தப்ப நோட்டம் விட்டுட்டு
இருந்தேன். இவன் முழியே சரி இல்ல. கால கொஞ்சம் ஊனி நடந்தான். அவன் காதுல கேட்கற மாதிரி முட்ட மந்திரத்த பத்தி
சொன்னேன். அவன் இல்லாதப்ப அவன் குடிசைக்கு போய் பார்த்தேன், எதுவும் இல்ல- மீன் கொழம்பு வாசம் தவிர. பணமும் இல்ல, இவன் உன்னம் பொருள விக்கலன்னு தெரிஞ்சுது. கொஞ்சம் முடி எடுத்து, பொடியாக் கிள்ளி அதுல கலந்தேன். ரெண்டு நாளா அவனுக்கு
வயிறு முடியாம போச்சு. பய மந்திரம்னு பயந்துட்டான் .Pump வெளிய வந்துடுச்சி. Mister Pawan , this is how we deal thefts here. '
குமாஸ்தா மொழி பெயர்க்க, சிங் 'Sorry about earlier. You are a GENIUS!'
இன்று 2013
கம்பதுக்காரருக்கு இப்போது வயது 68. உடல் நலம் குன்றி, இருதயம் பாதித்ததால், தன் மகன் இல்லத்தில் தங்கி மருத்துவ ஆலோசனை பெறவேண்டிய கட்டாயம். தன் கிராமம்தான் சொர்க்கம் என்று எண்ணுபவர். அவர் மகன் அலுவலகம் செல்லும் போது அவரையும், அவர் மனைவியையும் மருத்துவமனையில் carஇல் அழைத்து சென்று விட்டுச் செல்வான், பிறகு இருவரும் பேருந்தில் வீடு திரும்புவர். இது தினமும் வழக்கம். இன்றும் அனைவரும் புறப்பட தயாராக இருந்தனர், கம்பத்துக்காரர் கதவை திறக்க முயலும் போது, தாழ்ப்பாள் கையுடன் வந்தது. அவர் மனதில் அசரிரீ ஒலித்தது.
Tweet | ||
தொடர்ந்து எழுத வேண்டும் என்ற உனது ஆர்வத்திற்கு முதல் வாழ்த்துக்கள்....
ReplyDeleteசிறுகதை சற்றே பெரிதாய் நீளும் நிலையில் அதனை ஒன்றிற்கும் மேலான பாகங்களாக பிரித்தது அருமை. சில இடங்களில் எழுத்துக்கள் கவனம் ஈர்த்தன...
//நிலத்தடி நீர் மட்டம் வேர்கள் எட்டா தூரம் சென்றுகொண்டிருந்தது. //
// நம் நாட்டில் பல ஆற்றல்கள் இப்படித்தான் வீணாகின்றன.// சிறுகதையின் ஊடே நீ கூற விரும்பிய விஷயத்தை புகுத்தியது அருமை...
//தாழ்ப்பாள் கையுடன் வந்தது. அவர் மனதில் அசரிரீ ஒலித்தது. // சஸ்பென்ஸ் சூப்பர்... தொடர்ந்து எழுதவும் அடிகடி எழுதவும்...
சிறு குறுந்தொடருக்கான சிறப்பான தொடக்கம்... தொடர்ந்து உற்சாகமுடன் எழுத வாழ்த்துக்கள்
தொடர்ந்து சிறுகதை எழுதும் ஆர்வத்தில் இருப்பதால் என்னால் முடிந்த சில டிப்ஸ்...
வலையுலகில் பலரும் தொடர்ந்து பலவிதமான சிறுகதைகளை எழுதி வருகிறார்கள், எண்ணம் மற்றும் எழுத்து மேம்பட அவர்களையும் தொடர்ந்து படிக்கவும்...
நன்கு படித்து சுவைத்தமைக்கு நன்றி. டிப்ஸ்கும் நன்றி. கண்டிப்பாக படிக்கவும் திட்டங்கள் உள்ளன.
ReplyDeleteHi Rubak,
ReplyDeleteIppa enaala tamizhla elutha mudiala... seekaram eluthuva...athuku manichudu
Coming to u r short story,
yaerkanave unoda siru kathaiya naa padichu iruka.. ovoruvaatiyum atha padikum bothu, enaala antha kathaila vara character maathiri imagine panna mudiyum,,especially the story about the guys giving money to police and in this kambathukaarar. ethaartha kathaiya karuvaa eduthathuku muthalla nanri.Kathaila ulla chinna chinna vichayangal ninaivul ullathu. sila vaarthaigal english la iruku...athuvum tamil la irunthaa, enna maari tamil mulusaa theriyaama, ippa irukura samuthaayathaala therinja tamizhum marakum nelamayula ullavangaluku tamil kathukarathuku oru vazhiya irukum. narration is extraordinary. A person who has come from an village can easily relate these type of incidents. As Mr. seenu said the ending suspense was very good. It resembles me of a story of Legend Sujatha which was told by my friend. Waiting to read more short reality stories..all the best for u r creativity.
கருவை ரசித்தமைக்கு நன்றி. கதாப்பாத்திறங்கள் மனதில் நிற்பதில் பெருமிதம்.
ReplyDeleteசில வார்த்தைகள் மட்டும் ஆங்கிலத்தில் வைப்பது பேச்சு வழக்கு மாறாமல் இருக்கவே.
அருமையான சிறுகதை. ஒரு தேர்ந்த எழுத்தாளர் போல் எழுதியுள்ளீர்கள். ஆங்கிலக் கலப்பைக் குறைத்திருந்தால் இன்னும் கொஞ்சம் பழமையும் உண்மைத்தன்மையும் கிடைத்திருக்கும். வாழ்த்துக்கள்...
ReplyDeleteகாட்சிகள் கண் முன் தெரிந்தன... எழுத்து நடைக்கு பாராட்டுக்கள்...
ReplyDeleteமுடிவில் நல்ல முத்தாய்ப்பு... தொடர வாழ்த்துக்கள்...
சமிபத்தில் எங்கள் வீட்டில் நடந்த திருட்டுக்கு கூட இதே முட்டை மந்திர டெக்னிக்கை தான் பயன்படுத்தினோம். . . .
ReplyDeleteஅருமையாம கதை. . .தொடரட்டும். . .
அருமையான சிறுகதை வாழ்த்துக்கள்...!
ReplyDeleteவாழ்த்துக்கள் நண்பரே தொடருங்கள்
ReplyDeleteதொடர்கிறோம்
வாழ்க வளமுடன்
ReplyDeleteIt's really good to see u writing in Great language TAMIL. Keep it up. I loved the story. U made the reader to feel him to be in the story. Congrats Rup for the great success u gonna achieve from your close hearts(SDSVR).
ReplyDeleteperumaiyudan, Siru garvamum kolven en Nanbanin Tamil pulamaium, aatralum kandu:)
HTML குறியீட்டில் சிறு பிழை உள்ளதால், தனித்தனியே கருத்துறைக்கு என்னால் பதில் அளிக்க முடியவில்லை. மன்னிக்கவும். விரைவில் சரி செய்துவிடுகிறேன்.
ReplyDeleteகதையை படித்து, ரசித்து, வாழ்த்திய அனைத்து அன்பு உள்ளங்களுக்கும் என் மனமார்ந்த நன்றி.
உங்கள் ஊக்கம் என்னை வழி நடத்த, இடுகைகள் தொடரும்.