Pages

Monday, September 23, 2013

ஸ்மார்ட் போன் அவசியமா?

பதிவுலகின் 'காதல் மன்னன்', 'மேடவாக்கம் மாஸ்ட்ரோ', 'கிரைம் பதிவர்' என்றெல்லாம் அழைக்கப் படும் ஒரு பிரபல பதிவர், ஒரு நாள் மதியம் தன் புதிய ஆண்டிராய்ட் போனுக்கு உயிர் ஊட்ட சார்ஜர் தேடி அலைந்து கொண்டு இருந்த போது, என்னுள் தோன்றிய கேள்வி இது. ஸ்மார்ட் போன் அவசியமா? 


பல நாள் தன்னிடம் இருந்த நோக்கியா w101 மாடலை வைத்து கொண்டு மாருதட்டிக்கொண்டிருந்தவர் ஆண்டிராய்ட் போன் வசம் திரும்ப காரணங்கள் என்னவாக இருக்கலாம்?

ஆண்டிராய்ட் போன்களுக்கு தேவையான ஆப்ஸ் பற்றி பதிவு போடும் போது அதில் சென்று கிண்டல் செய்து கொண்டிருந்த அவர் இன்று அதே ஆப்ஸ்களை தரவிறக்கம் செய்வது ஏன்?

எவ்வளவு மழை வந்தாலும் அசராது தன் ஸ்பிளென்டரில் சிங்கம் போல் சீறிப் பாய்ந்தவர், இன்று தன் போனை காக்க மழைக்கு ஒதுங்குவது ஏன்?

எத்தனையோ ஆயிரம் ரூபாய் காசு கொடுத்து கைபேசி வாங்கினாலும் அதில் ஒரு பொத்தான் கூட இல்லையே.

முன்பெல்லாம் ஆடை தான் மரியாதை சின்னம்மாக இருந்தது, ஆனால் இன்றோ நம் கையில் இருக்கும் கைபேசி எவ்வளோ மதிப்போ அதுதான் நம் மதிப்பு என்று காலம் மாறிவிட்டது.

சினிமா டிக்கெட், ரயில் டிக்கெட் போன்றவற்றிக்கு வரும் குறுந்தகவலை உரியவரிடம் காட்டும் பொழுது என்னை மேலும் கீழும் பார்க்கின்றனர். நான் தட்டிய குறுந்தகவல்களால் கீபேட் சேதமானது என் தவறா? 

பலரும் என் கைபேசியைக் கண்டு, துப்பாத குறையாக, திட்டிவிட்டனர். ஊரோடு ஒத்து வாழாமல் நான் மட்டும் எதிர்த்து தனியாக கொடிபிடிக்க முடியாமல், நானும் ஒரு ஸ்மார்ட் போன் வாங்க வேண்டிய கட்டாயத்துக்கு தள்ளப் பட்டுள்ளேன், என்று சோகத்துடன் இங்கு சொல்லிக் கொள்கிறேன். 

பல மாதங்களுக்கு முன்னரே ஸ்மார்ட் போன் வாங்கி, அசத்திக் கொண்டிருக்கும் அண்ணன்மார்களே! அக்காமார்களே! , இந்தச் சிறுவனுக்கும் ஒரு நல்ல ஸ்மார்ட் போனை பரிந்துரை செய்யுங்களேன்.

பின் குறிப்பு: iPhone 5S மற்றும் 5C வெளியாக உள்ள நிலையில், iPhone 4Sஇன் விலை குறைய வாய்ப்புகள் இருப்பதால், மனதில் ஒரு சின்ன மூலையில் iPhone மீது ஆசை தோன்றியுள்ளது.     

22 comments:

  1. smart phone வாங்கி சீனுவுடன் களத்தில் இறங்கி கலக்கு ரூபக்
    வாழ்த்துக்கள்

    ReplyDelete
  2. பொறுத்திருந்து iPhone வாங்கவும்...

    ReplyDelete
  3. //ஆண்டிராய்ட் போன்களுக்கு தேவையான ஆப்ஸ் பற்றி பதிவு போடும் போது அதில் சென்று கிண்டல் செய்து கொண்டிருந்த // பயபுள்ள என்னம்மா நோட் பண்ணிருக்கான்யா... பதினோரு பேர் கொண்ட குழு இயங்குராயிங்கன்னு நினைக்கிறன்... இதுக்கு பின்னாடி இருக்க தீவிரவாத சக்திகளையும் அமானுஷ்ய சக்திகளையும் முதல்ல விரட்டி அடிக்கணும்

    ReplyDelete
    Replies
    1. பிரபல பதிவர் தானே பொதுமக்கள் முன்பு சரணடைந்தார்.

      Delete
  4. //அதில் ஒரு பொத்தான் கூட இல்லையே.// தம்பி அந்த பொத்தான் இல்லாத போன் என்ன பண்ணினது தெரியுமா.. ஒருத்தன் தூங்கும் போது ரகசியமா உளவு பார்த்தது :-))))

    ReplyDelete
  5. எப்படியும் உளவுப் படை வரும் அதுக்கு அப்புறமா வாரேன் :-))))

    ReplyDelete
    Replies
    1. தம்பி நீங்க வர வர ஸ்மார்ட்டா தான் இருக்கீங்க

      Delete
  6. எந்த போன் வாங்கினாலும் இரண்டு அல்லது மூன்று வருடங்களுக்கே பயன்படுத்த முடியும். பின்னர் அது Outdated ஆகிவிடும் என்பதால் அதிகம் விலை கொடுத்து வாங்கவேண்டாம். Karbonn அல்லது Micromax போன்ற நிறுவனங்களின் போன்கள் குறைந்த விலைக்கு அதிக பயன்பாட்டுடன் வருகிறது. என் தேர்வு இம்மாதிரியான போன்களே...

    ReplyDelete
  7. ஐபோன் வாங்குவதே சிறந்தது...! :)

    ReplyDelete
    Replies
    1. நோக்கியா, சாம்சங், மைக்ரோமேக்ஸ்,
      சோனி, கார்பன், லெனோவோ,
      எல்ஜி, வீடியோகான், நெக்சஸ், ஜி-பைவ்

      இவை எல்லாவற்றையும் விட ஐ-போனே சிறந்தது.. ஏன் என்பதை ஓரிரு நாட்களில் என் வலைத்தளம் வந்து தெரிந்து கொள்ளுங்கள்!! :-)

      Delete
  8. ஐ ­­போ­னோ ­இ­யர் ­போ­னோ... எ­­தை ­நீ ­வாங்ங்­கி­னா­லும் ­அ­து ஸ்மார்ட் ­போ­னா­யி­டும்... ஏன்­னா ­நீ ஸ்மார்ட்டா­ன ­ஆ­­ளுங்­கி­ற­தா­ல..! (ஹை­யா! வெற்ற்­றி­க­ர­மா ­ஐஸ் ­வெக்­க­ற­து ­எப்­ப­டின்­னு ­கத்­துக்­கிட்டாச்­சு!)

    ReplyDelete
    Replies
    1. ஆமாமா ..!

      ஐ போனோ , இல்ல கை போனோ எது வாங்குனாலும் இயர் போனுலதான் பேசனும் ....!

      நோ...! நோ...! அழப்புடாது ...! அண்ணனுக்கு அஜிங்கம்ல...!

      Delete
    2. //ஏன்­னா ­நீ ஸ்மார்ட்டா­ன ­ஆ­­ளுங்­கி­ற­தா­ல..! //

      இன்றுமுதல் தம்பு ரூபக் "ஸ்மார்ட்டீ" என்று அழைக்கப்படுகிறார் ....றார் ...றார்....!

      Delete
  9. இந்த போனைப் பற்றியெல்லாம் எனக்குத் தெரியாது....ஆனால் இதைப் பயன்படுத்தும் போது மழைக்கு ஒதுங்கணும்னு சொன்னீங்களே...தூறலுக்கே ஒதுங்கணும்பா...என் மகன் தலை துடைத்துக் கொண்டே போன் பேசியதில் 20000 மதிப்புள்ள போன் பணால் ....

    ReplyDelete
  10. புது இம்சையோடு வாழ்க்கையை ஆரம்பிக்க போறீங்க. வாழ்த்துகள். எதுக்கும் விலை கம்மியானதே வாங்கிக்கோங்க, அப்புறம், கல்யாணம் ஃபிக்ஸ் ஆகிட்டா நிச்சயத்தார்த்தம் போது உங்க ஆளு செல்போன் கிஃப்டா தருவாங்க.

    ReplyDelete
  11. ஒருத்தன் வைச்சிகிட்டு பண்ணுற அலப்பரைய தாங்க முடியல, இதுல நீங்களுமா ? என்னடா அரசா உனக்கு வந்த சோதனை ...

    ReplyDelete
  12. யோவ் ரூபக் ராஜி அக்கா என்ன சொல்றாங்க ? எனக்கு வெளங்கல கொஞ்சம் சபீனா போட்டு போனில் விளக்கவும் ...

    ReplyDelete
  13. //கல்யாணம் ஃபிக்ஸ் ஆகிட்டா நிச்சயத்தார்த்தம் போது உங்க ஆளு செல்போன் கிஃப்டா தருவாங்க.//


    புதூசால்ல இருக்கு ....! பொண்ணு கெடைக்குறதே ஹார்ஸ் கொம்பா இருக்கு இதுல போனு வேறயா...!

    தம்பி ரூபக்கு அக்கா பேச்ச நம்பி ஆசைய வளத்துடாத கண்ணு அப்புறம் தாடியதான் வளக்கோனும் ...!

    ReplyDelete
  14. எனக்கும் தொலைபேசிக்கும் தொலை தூரம்!

    ReplyDelete
  15. பொறுத்திருந்து, அவசரப்படாமல் ஐபோன் 9, 10 வரும் போது வாங்குங்கள்.

    ReplyDelete