ஹலீம் என்பது மட்டனில் செய்யப்படும், ஒரு வகையான ஹைதராபாதி அசைவ உணவு. பெரும்பாலும் முஸ்லிம் நண்பர்கள் வீட்டில் அதிகம் சமைக்கப் படுவது, அதிலும் குறிப்பாக இந்த ரம்ஜான் நோன்பு காலங்களில் அதிகம் செய்யப்படுவதாக கேள்வி பட்டுள்ளேன்.
கோதுமையுடன் நன்கு வேகவைத்த மட்டன், பட்டை, லவங்கம், பிரிஞ்சு இலை, மிளகு போன்ற வாசனைப் பொருட்களை சேர்த்து, பல மணி நேரம் சமைத்து உருவாகும் கலவை தான் ஹலீம். இதை உண்ணும் பொழுது உங்கள் நாவில் உள்ள சுவை அரும்புகள் தானாக இசை பாடும், உங்கள் வயிறில் ஒரு விதமான முழுமை உணர்வு பிறக்கும்.
இந்த உணவை எனக்கு முதலில் அறிமுகம் செய்தது என் நண்பன் தான். அவன் தந்தை ஹைதராபாத் சென்று வந்த பொழுது, அவர் வாங்கி வந்த இந்த ஹலீமை எனக்கு சுவைக்க கொடுத்தான். முதல் வாயிலேயே அந்த ஆட்டுக் கறியின் மென்மை ராமனை ஈர்த்து விட்டது,அந்த டப்பா முழுவதையும் அவனே உண்டு தீர்த்தான்.
பின் பல நாட்கள் இதை தேடி அலைந்தான், தெரிந்த முஸ்லிம் நண்பர்களிடமும் விசாரித்தான், ஒரு பயனும் இல்லை. சென்ற ஏப்ரல் மாதம் இந்த உணவை சுவைக்க ஹைதராபாத் செல்ல, ரயில் டிக்கெட்டும் வாங்கினான், சில அலுவல்களால் அந்த டிக்கெட்டை ரத்து செய்ய நேரிட்டது. இருப்பினும் ராமன் ஓயவில்லை, முஸ்லிம் பெயருடன் யாரை முதலில் சந்தித் தாலும் அவன் கேட்கும் முதல் கேள்வி 'உங்க வீட்ல ஹலீம் செய்வாங்களா?' என்பதுதான்.
இப்படியே நாட்கள் செல்ல, ஜூன் 24ஆம் தேதி தன் சக அலுவலக நண்பர்களுடன் உரையாடுகையில், ஒருவன் எதார்த்தமாக, அவன் ஹலீமை OMRஇல் எதோ ஒரு உணவகத்தில் கண்டதாக சொல்ல, அவனை நச்சரித்து, அவன் மூளையை பிசைந்து, அந்த உணவகத்தின் பெயரை கக்க வைத்தான். கூகிள் உதவியுடன் அந்த இடத்தையும் கண்டு அவர்களின் தொலைபேசி எண்ணையும் குறித்துக் கொண்டு, மறு நாள் எழுந்தவுடன் அவர்களை தொடர்புகொண்டு, ஹலீம் கிடைப்பதை உறுதி செய்தான்.
கிடைக்கும் இடம் :
Rasavid Multi Cuisine Restaurant, காரப்பாக்கம், OMR (opp. to Aravind theatre)
Rasavid Multi Cuisine Restaurant, காரப்பாக்கம், OMR (opp. to Aravind theatre)
விலைப் பட்டியல்:
பேமிலி பேக் : 175 + VAT
ஜம்போ பேக் : 275 + VAT
ஜூன் 25, மதியம் 12 45 மணிக்கு(வரலாறு மிக முக்கியம்) அந்த உணவகம் சென்றடைந்தான். இவனுக்கு வேற வேலை இல்லையா என்று கேக்கறிங்களா, நம்ம ராமனுக்கு சாப்பாடு தாங்க முக்கியம். அங்கு இருப்பவன் 'பேமிலி பேக் ஆர் ஜம்போ பேக்?' என்று கேட்க, மாசக் கடைசி என்பதால் பேமிலி பேக் வங்கினான். எந்தக் குறையும் இன்றி முதல் முறை உண்ட சுவை நாவில் மீண்டும் இசை பாட, மூவர் சாப்பிட வேண்டிய அந்த பேமிலி பேக்கை ஒற்றை ஆளாக ஆசை அடங்க, ராமன் உண்டு தீர்த்தான்.
நம்ம ராமனுக்கு சாப்பாடு தாங்க முக்கியம்.
ReplyDelete>>
அப்படின்னா, ”ரூபக் ராம்”ன்ற உங்க பேரை சாப்பாட்டு ராமன்னு மாத்திக்கோங்க சகோ!
ஏற்கனவே பில் கட்ற பல பேர் இப்படித்தான் செல்லமா கூப்டுவாங்க அக்கா
Deleteஜூன் 25, மதியம் 12 45 மணிக்கு(வரலாறு மிக முக்கியம்)
ReplyDelete>>
பின்ன, இது அடுத்த வருசம் சிவில் சர்வீஸ் எக்சாம் போது கேக்க போறதா அதிகாரப்பூர்வ தகவல் கிடைச்சிருக்கே!
ஹா ஹா .. அக்காவுக்கு தமாஷ் நல்லா வருது
Deleteபல மணி நேரம் சமைத்து உருவாகும் கலவை தான் ஹலீம். //நண்பனுக்கு கொடுக்காம நீங்க மட்டுமேவா?
ReplyDeleteபிடித்து விட்டால், நமக்கு தான் மொத்தம்..
Deleteசகோதரி ராஜி சரியாத்தான் (சா.ரா.) சொல்லியிருக்காங்க...
ReplyDeleteஹா ஹா ஹா ...
Deleteசாப்பாட்டுப் பதிவுகள் கொஞ்சம் அதிகமாத்தான் இருக்கு.
ReplyDeleteநமக்கு கொஞ்சம் தெரிஞ்சது சாப்பாடு மட்டும் தான்
Deleteசாப்பாட்டு ராமன்.... ரெண்டு கிலோ ஏறி இருக்கணுமே...... :)
ReplyDeleteஹா ஹா... சாப்பிடுவதெல்லாம் சென்னை வெய்யிலில் பறந்து விடுகிறது
Deleteஹலீம் - புதுவகையானா உணவாக'இருக்கிறது, அசைவம் என்றாலே நாக்கு உடனடியாக நாக்கு அசையத் தொடங்கி விடும்..
ReplyDeleteரூபக் தலைமை தாங்க வாருங்கள் காரப்பாக்கம் நோக்கி படையெடுப்போம்
//ரூபக் தலைமை தாங்க வாருங்கள் காரப்பாக்கம் நோக்கி படையெடுப்போம்// கட்டாயம் செல்வோம், பில் கொடுக்கும் பொது மட்டும் நீங்கள் தலைமை எடுத்துக் கொள்ளுங்கள் :)
Deleteநான் ஹைதராபாத்தில் இருக்கிறேன்.
ReplyDeleteதினமும் ஒரு ஹலீம் சாப்பிடுறேன்.
சிக்கன் ஹலீம் விலை 50ரூபாய்.
மட்டன் ஹலீம் விலை 100ரூபாய்.
கேட்கவே மகிழ்ச்சியாக இருக்கிறது, இங்கு விலை இப்படி
Deleteஎனக்குச் சம்பந்தமில்லாதது!
ReplyDeleteஉணவை ரசிக்கவும் ஒரு திறமை வேண்டும்!நீங்கள் ஒரு ரசிகர்!
மிக்க நன்றி ஐயா
Delete